மறு புறமோ "எப்பேர்ப்பட்ட பரம்பரை அது. அந்த பேரை கெடுக்க தான் சிதம்பரம் இருக்கானே. சந்திர நாராயணன் அய்யாவும் நடராஜா ஐயாவும் இருந்த வர்ற  ஓஹோன்னு இருந்த கிராமம். நம்மளுக்கு ஏதாவது ஒன்னுனா துடிச்சு வர்ற ஐயாங்க வந்த பரம்பரைல சிதம்பரமும் வந்து நாம்ம கஷ்டப்படும்போது கூட கண்டுக்காம தானே இருந்தார். வெட்கத்தை விட்டு கையேந்தி நின்ன போது கூட அவரு நம்மள மதிக்கலையே. அவரால அவுக பரம்பரைக்கே தலைகுனிவு வந்துருச்சு."

"வீட்டுக்கு ஒரு சனியன் மாதிரி. அந்த பரம்பரைக்கு ஒரு சனியன்னு நினைச்சு விடுங்கலேய்."

"ஏய்யா பேச மாட்டீக. இத்தனை வருஷத்துல எத்தனை நாள் நம்ம ஐயாவுகளை நினைச்சு மருவிருப்போம். நமக்காக எத்தனை செஞ்சாங்க. நம்ம கிராமத்தை அடுத்த கடடத்துக்கு கொண்டு போக நினைச்சாங்க. ஆனா அந்த சிதம்பரம் நம்மளயே அடிமைப்படுத்தி நம்ம நிலத்தை குத்தகைக்கு எடுத்து அடுத்த வேளை சோத்துக்கு கடன் வாங்குற நிலைமைக்கு கொண்டு போனதெல்லாம் மறந்திருச்சாலே."

"விடுலேய். அதா நம்ம நடராஜய்யா மக வந்திருக்காருல. அந்த வயசுலயே அத்தனை பொறுமையா மருவாதயா இருக்கும். இப்போ இல்லாமலா  போயிடும்."

தன் சித்தப்பாவால் கிராமமே நிம்மதியை தொலைத்து இருக்கிறது என உணர்ந்தவன் மனம் ஏனோ பாரமானது.

அவன் அறிந்த சிதம்பரம் சித்தப்பா இவ்வாறு இருந்ததில்லை. சிவபெருமானின் சூழ்ச்சியால் வந்த விணை என உணர்ந்தவன் தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டான்.

இளசுகள் தன் குடும்ப பெரியவர்களிடம் அரவிந்தின் பரம்பரை கதைகளையும், காதல் கதையும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

யாரோ தன்னை  உற்றுப் பார்ப்பதை உணர்ந்த அரவிந்த் திரும்ப,யாரோ மறைவது சரியாக தெரிந்தது.

யாராக இருக்கும் என எட்டிப் பார்க்க அவர் அணிந்திருந்த உடை தெரிய யார் என கணித்தவன் ஆனந்தியை அழைத்து தன் அருகில் நிறுத்திக் கொண்டான்.

You've reached the end of published parts.

⏰ Last updated: May 02, 2023 ⏰

Add this story to your Library to get notified about new parts!

நீயே என் ஜீவனடிWhere stories live. Discover now