அத்தியாயம் - 32

1.1K 30 52
                                    




ஒரு வாரம் கடந்திருந்தது சஹானாவிற்கு அந்த கோரமான விபத்து நடந்தேறி. மருத்துவ வளாகத்திலே ஆதவன் தங்கிவிட, ஆதியோ சகோதரியிருந்த அறையிலே தங்கிவிட்டான். கை கால்கள் எங்கும் செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்க எவர் பேச்சும் காதில் வாங்காமல் சகோதரியின் முகம் பார்த்தே அமைதியாக இருந்தான்.

பேச வில்லை எவரிடமும். பேசவும் மனம் வரவில்லை.

ஆறு நாட்கள் நெருப்பில் நிற்பது போல் இருந்தது அவனுக்குச் சகோதரியின் நிலை கேட்டு. மூன்று நாட்களுக்கு முன்னர் வரை சஹானா காதிற்கு அவள் கால் பற்றிய செய்து செல்லாமல் இருந்தது. ஆதியை நிறுத்தி வைத்திருந்தனர் என்று தான் கூற வேண்டும்.

ஆனால் அதற்கு மேல் சகோதரிக்குப் பொய் வார்த்தைகள் கூற மனம் ஒப்பாமல் கலங்கிய மனதோடு சென்று எவரது அபிப்பிராயமும் கேட்காமல் ஒரே மனதோடு அவளது நிலையை உடைத்தான் அண்ணன். சகோதரி அழுது வருந்துவாள், அவளுக்குத் தோள் கொடுக்க சகோதரனானவன் நினைத்திருக்க அதற்கு வேலையே உனக்கு வேண்டாம் என்று எண்ணினாள் போலும்.

"ஓ..." அமைதியாய் இருந்தவள் கால் கட்டை பார்த்து, "நான் ப்ராக்சர்-னு நெனச்சேன் ண்ணா" அவளது அமைதியான வார்த்தையில் சகோதரனான ஆதி துடிதுடித்துப் போனான்.

அழுபவளைக் கூட கட்டி தழுவி ஆறுதல் கூறிவிடலாம் ஆனால் அமைதியாகச் சிரிப்பவளுக்கு எந்த வகையில் ஆறுதல் கூற இயலும்? அவ்வளவு தான்...

துயரம் அடைந்த மனதைப் புகை வைத்து ஆற்றலாம் என்று செல்லும் அவனது இரண்டு நிமிடங்களும் அதன் பிறகு அவளை விட்டுச் செல்லாமல் மொத்தமாய் அந்த அறையிலேயே நிறுத்திக்கொண்டது.

ஷீலா, ஆதவனின் அன்னை உணவை மருத்துவமனை அனுப்பிவிட ஆண்கள் நாளில் இரண்டு முறை சஹானாவை வந்து பார்த்துச் சென்றனர். தமிழ், கெளதம் கட்டிட வேலைகளை நிறுத்தாமல் தொடர்ந்து செய்துகொண்டிருந்தனர்.

ஆதவன் தன்னவள் மேல் முழு உரிமையைக் காட்டக் கூட முடியாமல் கனமான இதயத்தோடு வளம் வந்தான். அதே நேரம் தன் பார்வை வட்டத்திற்குள் சஹானாவை வைத்திருக்கும் ஆதி மீதும் வருத்தமே வந்தது. என்ன பாடு படும் அவன் இதயம்?

இணையா துருவங்கள் (Completed)Opowieści tętniące życiem. Odkryj je teraz