அத்யாயம் - 8

1K 50 41
                                    

போக்கே இல்லமால் ஓடிக்கொண்டிருந்த வண்டியை ஓரமாக நிறுத்தி அவன் கண் சென்று நின்ற இடத்திற்கு கால்களும் தானாக நரகர்த்தது. அவனுடைய வீட்டிற்கு அவனுடைய உயிரான ராயல் என்பீல்ட் வண்டியில் தடதடக்க வந்து கொண்டிருந்தவன் வழியில் பார்த்தது மணிமேகலையை தான்.

கடந்து போகும் பெண்களில் அவளும் ஒருத்தியாக இருந்திருந்தால் பிழை இல்லை ஆனால் அவள் அவனுக்கு தனியே... அவளை பார்த்து ஒரு வராம் ஆகிவிட்டது அந்த ஒரு வாரத்தில் எங்கேனும் அவள் கண்ணில் பட்டு விட மாட்டாளா என்று ஏங்கி தவித்த இதயத்தை எந்த வகையில் சேர்க்க வேண்டுமென்று தெரியாமல் விழித்திருந்தான்... இன்று அவன் கண்ணில் பட்டது ஒரு வீட்டிற்கு வெளியில் இருந்த மூடபத்திருந்த சாக்கடையின் வெகு அருகில் முட்டி போட்டு அமர்த்திற்கும் மணிமேகலையை தான்... 

அவளுடைய நிறத்திற்கு தகுந்தாற்போல் அடர் நீல நிற லெக்கிங்ஸ் மற்றும் வெள்ளை நிற டாப், கையில் முட்டி வரை இருந்த கையுறைகள்(gloves) முகத்தில் ஒரு மாஸ்க்... அந்த மாஸ்க்கையும் தாண்டி அவனுக்கு அவளை அடையாளம் காட்டியது அந்த குண்டு கண்களும் அவளுடன் அவள் அசைவிற்கிணங்க ஆடும் அந்த ஜமுக்கிகளே... 

ஆங்காங்கே அந்த பளீர் வெண்மை சட்டையில் பட்டிருந்த மணலும், சாக்கடை அழுக்கும் பொருட்படுத்தாது அவள் அருகில் இருந்த ஒரு பெண்ணுடன் பேசி சிரிக்கையில் சுருங்கிய அந்த கண்கள் தன்னை இம்சிப்பது அறிந்து வண்டியிலிருந்து இறங்கி அவளை நோக்கி நடந்தவன் அவளை தன்னுள் புதைத்து கொள்ள பேராசை கொண்டான்...

"என்ன ரோலக்ஸ் உங்கப்பன் வாட்ச் தொலச்சத்துக்கு சாக்கடை தள்ள அனுப்பி விட்ட மாதிரி இருக்கு... பரவால்ல நல்ல வேலை தான் பாரு பாரு அப்டியே ரெண்டு தெரு தள்ளி தான் எங்க வீடு, க்ரெ கலர் பெயிண்ட்... வந்து தள்ளி விடுறியா அடைச்சு போய் நாறுது"

அவனை பார்த்ததில் ஆசிரியத்தில் விரிந்த விழிகள் அவன் கூற்றுக்கு கோவமாய் மாறி "என்ன பாத்தா சாக்கடை தள்ளுற மாதிரியா இருக்கு உங்களுக்கு?"

இணையா துருவங்கள் (Completed)Where stories live. Discover now