அத்யாயம் - 3

1.5K 60 66
                                    

"அண்ணா... ப்ச்... சொல்றதக் கேளு,  தேவ இல்லாத வேலையபப் பாக்குற" பல்லவி நடுங்கிக் கொண்டே  சுற்றும் முற்றும் எவரேனும் உதவிக்கு வர மாட்டார்களா என்ற ஏக்கத்தோடுப்  பார்த்தாள். ஆனால் ஒருவரையும் காணவில்லை.

"அட..!  இரு மா பயப்படாத நான் பாத்துக்குறேன்"  நெஞ்சை நிமிர்த்திப் பேசியது வீர தீர விஷ்ணு தான்.

"அண்ணா ப்ளீஸ் வா இப்ப கூட ஒன்னும் இல்ல ஓடிறலாம்" - பல்லவி

எவ்வளவு கெஞ்சினாலும்  கண்டுக்கொள்ளாமல் தான் எடுத்த காரியத்தில் கண்ணாய் இருந்தான் விஷ்ணு. வேறு வழி இல்லாமல்  திவ்யாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பியபடியே சகோதரனை இயலாமையுடன்  மீண்டும் கெஞ்சினாள் பல்லவி.

சகோதரனின் அறைக்குள் நுழைந்து கார் சாவியினை திருடவே இந்த வேலை. 

"கொஞ்ச நேரம் பேசாம மட்டும் இரு. ஐஞ்சே அஞ்சு நிமிஷம் தான்.  சாவி அய்யா கைல தான் இருக்கு" 

அவன் உள் நுழைத்து 4 வது சாவியை முயற்சி செய்ய அதுவும் திறக்க மறுக்க, 'ப்ச்' எரிச்சலோடு அடுத்த சாவியை நுழைத்தவன் பின்னால் இருந்து ஒரு குத்து விழுந்தது.

"டேய் முட்டா பயலே ஏண்டா இங்க திருடிட்டு இருக்க?"

ஹரி  ஹஸ்கி குரலில் கேட்க, "அவன் கார் கீய ஒளிச்சு வச்சிருக்கான் டா அதான் எடுக்க போறேன், உன் பைக் கீ  வேணுமா?" - என்றான் விஷ்ணு

"அஹ்ஹ்... அப்டியே கல்லாச் சாவியும் எடு" ஹரி கேலியாக கூற,

பல்லை காமித்து, "ஹ்ம்ம் .. இதுவும்  நல்லா இருக்கே" என பதிலளித்த விஷ்ணுவை அடித்து துவைக்கும் வேகம் ஹரிக்கு.

"நீ ரொம்ப ஓவரா பண்ற மாட்டுனோம் செத்தோம் டா" - ஹரி

ஹரி எச்சரிக்கை எல்லாம் காதில் கேட்டால் தானே விஷ்ணுவிற்கு, "ஒழுங்கா என் கார் சாவிய குடுத்திருந்தா நான் ஏன் இப்டி திருடன் மாறி போகப்  போறேன்? இல்ல ஒரு அண்ணனா நடந்துருந்தா நான்  உரிமையோடு உள்ள போயிருப்பேன்" 

விஷ்ணுவிற்கு சகோதரன், சகோதரனாக நடக்கவில்லை என்பது வருத்தம் இல்லை, கோவம், "புடிக்கலைனா நீ  கிளம்பு" என்றான் முறைப்போடு.

இணையா துருவங்கள் (Completed)Donde viven las historias. Descúbrelo ahora