அத்தியாயம் - 30

997 37 37
                                    


"எனக்கு மணிய கல்யாணம் பண்ணி தர்றிங்களா?"

செந்தமிழ் அரசனுக்கு சிறு வயதில் இருந்தே எதிலும் பொறுமையாய் இருக்கும் உதய் மீது சொல்ல முடியாது பிரியம். தன்னுடைய உடன் பிறந்த சகோதரியின் பிள்ளைகள் மீது இருப்பதாய் விட, உதய் மீது பாசம் அதிகம் வைத்திருப்பார்.

உதய்க்கும் ஈஸ்வரன் மீது எந்த காலத்திலும் பாசம் இருந்தது இல்லை. அவர் பேச்சில் இருக்கும் ஊசி வார்த்தைகளும் ஒளிவு மறைவான பேச்சும் எதிலும் சரியாய் அமைதியாய் இருக்க நினைக்கும் உதய்க்கு புடிக்காமலே போய்விட்டது. அவனது விருப்பம் அறிந்து காயத்திரி கூட எதுவும் பேசியதில்லை.

ஈஸ்வரனுக்கு நேர் எதிர் செந்தமிழரசன். அவர்கள் குடும்பம் செல்வாக்கில் சொல்லும்படி இல்லை என்றாலும் எந்த நாளும் சகோதரியின் வீட்டிற்கு ஒரு வேளை உணவை மீறி இருக்க மாட்டார். தன்னுடைய சொந்த முயற்சியை வைத்தே அமெரிக்காவில் இருந்த மிக புகழ்பெற்ற தி யூனிவர்சிட்டி ஆப் டெக்சாஸ்-ல் தமிழ் பேராசிரியராக வேலை செய்யும் அளவிற்கு உயர்த்திருந்தார்.

டெக்சாஸ் சென்றால் மாமனின் இல்லத்தில் ஒரு விசிட் போடாமல் உதய் வந்தது இல்லை. காரணம், செந்தமிழரசனும் மணிமேகலையும் தான். உதய் அதிகம் பேசுவதும் இவரிடம் தான், அதுவும் நாட்டுநடப்பை பற்றி மட்டுமே இருக்கும். எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் உதய்யின் பணிவு அந்த தமிழ் ஆசிரியரை அவன் பக்கம் சாய்த்திருந்தது. இப்பொழுது கூட உதய் கேட்ட கேள்வியில் பேச்சற்று இருந்த அவர் மனதினுள் அத்தனை அத்தனை மகிழ்ச்சி.

மகளை தான் பாதுகாப்பது போல் பத்து மடங்கு அவனிடம் பாதுகாப்பாய் இருப்பாள் என்பது உறுதி. இந்த எண்ணம் அவர் மனதில் பல நாட்களாகவே இருந்ததும் தான் ஆனால் வசதியை எண்ணி அந்த எண்ணத்தை கிடப்பில் போட்டுவிட்டார். இன்று அவனே வந்து கேட்டதும் தயக்கம் காற்றில் பறந்தது.

"உனக்கு பொண்ணு குடுக்கலானா நான் தான் உதய் முட்டால். உன்ன விட என் பொண்ண வேற யார் நல்லா பாத்துக்குவா சொல்லு... என் பொண்ணு அத்ரிஷ்டசாலி தான்" திரும்பி அவர் மகளை பார்க்க, நெருடலோடு உதய்யும் மணிமேகலையை தான் பார்த்தான்.

இணையா துருவங்கள் (Completed)Where stories live. Discover now