அத்தியாயம் - 15

1K 33 53
                                    

Book cover epdii iruku?? Kasta patu panathupaa.... nalla iruka?

செவி மடல்களை கிழிக்கும் அளவிற்கு மேல்நாட்டு பாடல் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்க தன் முன்னே இருந்த மதுபானத்தை தொடவும் கை கூசியது ஆனாலும் மனம் அதை ஏற்க கூறி அழுத்தம் கொடுத்தது... கண்கள் கூசும் டிஸ்கோ விளக்குகள் அவ்வவ்வபொழுது மின்னி மறையும் நேரம் தன்னை சுற்றி இருந்த மனிதர்களை பார்த்து அலுத்துக்கொள்ளும் மனது... வலிகளுக்கும் வேதனைகளும் இடையில் கேலிக்காகவும் பொழுது போக்கிற்காகவும் மட்டுமே மதுவினை தொடும் கைகள் ஏராளம்...

"வாட் வுட் யு லைக் டு ஹவ் சார்?" பார்டெண்டர் ஒருவன் டிப் டாப்பாக கருமையான ஷர்ட் பாண்ட், பௌ டை ஒன்று அணிந்து பார்க்க பக்கா பட்டதாரியாக காட்சி அளித்தான்...

"ஏண்டா பீட்டரு என்ன பாக்க வெள்ள காரன் மாதிரியா இருக்கு இல்ல வட நாட்டு காரன் மாதிரி வெள்ளையா இருக்கேனா... எதுக்கு இப்ப இங்கிலிஷ்ல புளிப்பு காட்டிட்டு இருக்க?"

அசௌகரியமாக புன்னகை சிந்தியவன் மன்னிப்பாயாக ஒரு சிரிப்பை சிந்தி, "என்ன ட்ரிங்க்ஸ் குடுக்க சார்?" என்றான் அவன்...

"அப்டி வா வழிக்கு..." பார்வையை அங்கு கச்சிதமாக அடுக்கியிருந்த மது பாட்டில்கள் மீது படர விட்டவன் கண்களுக்கு ஒரு குவளை கவர்ச்சியாக தெரிந்தது, "ஆஹ்... அந்த ஊதா பாட்டில் எவ்ளோ?"

ஆதியை ஒரு மாதிரி பார்வை பார்த்து அவன் கூறிய இடத்தை பார்த்தவன், "சார் 75 % ஆல்கஹால் கன்டென்ட் இருக்க வோட்கா, இது பிரேசில் இம்போர்ட்டட் பிராண்ட்..." 

"டேய் நிறுத்து... இத அடிச்சா போதை ஏறுமா? ஏறாதா?" - சற்று குளறலாகவே வந்தது ஆதியின் வார்த்தைகள்.

"நல்லாவே ஏறும் சார். அந்த பாட்டில் ஐம்பதாயிரம் வரும் சார் பட் அதோட பிராண்ட்ல ஸ்டார்டிங் ரேட் டென் தொளசண்ட்ல இருந்து இருக்குது" - பார்டெண்டர்

"ஏண்டா இங்க ரெண்டு பெக் அடிச்ச ஒடனே போதை ஏரும்ன்னு சொன்னாங்க... ஆனா நீங்க இவ்ளோ காசு கேக்குறீங்க? இந்த காச வச்சு நான் வைன் ஷாப்பயே வாங்கிருவேனே" ஐம்பதாயிரத்தில் எத்தனை மதுபான கடைகளை வாங்கலாம் என்ற சிறு கணக்கே நாயகனின் மனதினுள் ஓடியது,.

இணையா துருவங்கள் (Completed)Where stories live. Discover now