அத்தியாயம் - 25

Start from the beginning
                                    

"தோடா... கேப்டன் சார் சொன்னா நாங்க கேட்கணுமா? ஏன் இவன் அன்னைக்கு எங்களை அடிச்சது உங்க ஸ்கூல்ல வச்சு தான, அப்ப அவன் தைரியம் இல்லாத மயிறுனு நெனச்சுக்கவா?" - சாலமன், ஆதியை சுட்டிக்காட்டி பேசி அமைதியாய் இருந்தவனை மேலும் தூண்டிவிட்டான்.

ஆனால் ஆதியோ உதய்யின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு சிவந்த கண்களுடன் நின்றிருந்தான் முறுக்கிய கைகளோடு.

"பேச விட்டு வேடிக்கை பாக்க சொல்றியா உதய்? மூஞ்சி மொகரை எல்லாம் கிழியிற அளவு செய்யணும் இவனுகள"

எகிறிக்கொண்டு சென்ற கௌதமை பிடித்தி நிறுத்தி, "இப்டி எல்லாம் நடக்கணும்-னு தான் அவனுக பேசுறானுக. அமைதியா எல்லாரும் கிளம்புங்க"

ஆணையாய் உதய் கூற அந்த மாணவர்களை முறைத்துக்கொண்டு சென்ற நண்பர்களை பார்த்து ஏளன சிரிப்போடு, "கிரௌண்ட்ட தாண்டி போறவன் ஆம்பள இல்லனு அர்த்தம்" சிவாவின் நக்கல் பார்வையில்  வெளியில் செல்ல சென்ற ஐவரும் அப்டியே நின்றனர்.

ஆதி உதய்யை திரும்பி பார்க்க அவனுக்கு பதில் எதுவும் கூறாமல் தங்களை சீண்டிய அந்த மாணவர்களிடம் சென்றவன், "தோத்துட்டா நான் சொல்றத செய்வியா?" சிவாவிடம் தீவிரமாய் கேட்டான் உதய்.

"அட்றா சக்கனான... இன்னைக்கு ஒரு சம்பவம் பண்ணாம இங்கேயிருந்து போறதா இல்ல..." நரம்பெல்லாம் புடைத்தது கௌதமின் கழுத்தில்.

"டேய் நீங்க ஜெயிப்பீங்க-னு நம்பிக்கை எல்லாம் இருக்கா?" நக்கலாய் சிரித்துக்கொண்டே பேசினான் சிவா.

"கேக்குறதுக்கு பதில் சொல்லாம சிரிச்சிட்டே ஏண்டா பயத்தை மறைக்கிற?"

படு நக்கலாய் அவனை விட உதய் பேச முகத்தை சீரியஸாக வைத்தவன் உதய் முன்னால் வந்து நின்று, "உங்க எல்லாரோடக் கால்லயும் நான்ன்ன் விழுகுறேண்டா" நான் என்பதில் அழுத்தம் அதிகம் வைத்து சிவா பேச, 

"சிவா..." சிவாவின் மொத்தக் கூட்டமும் பதறிக்கொண்டு அவனை எச்சரித்தது.

அவர்கள் கோரஸில் வாய் விட்டு சிரித்த உதய், "டேய் மச்சான் பயந்துட்டானுக டா" நண்பர்களை பார்த்து சிரித்து மீண்டும் அந்த கூட்டத்தின் பக்கம் திரும்பி, "முடிவு கண்ணு முன்னாடி வந்து நிக்கிது போல?"

இணையா துருவங்கள் (Completed)Where stories live. Discover now