அத்தியாயம் - 21

Start from the beginning
                                    

"ஓஓ உங்களுக்கு எவ்ளோ வேலை இருக்கு மறந்துட்டீங்களா?" மனம் ஆறாமல் கேள்வி கேட்டவள், "ஆமா மறந்துருப்பீங்க" தன் கேள்விக்கு தானே பதில் கூறியவள், "நான் வர்றேன் சார்" என்று வேகமாக வெளியில் சென்றுவிட்டாள்.

உதயின் அறையை விட்டு வந்தவள் நேராகச் சென்றது ஜெயன் அறைக்குத் தான்.

"கன்ஸ் எல்லாம் யூஸ் பண்ண வேணாம் அல்போஸ். ப்ராடக்ட் கைக்கு வரலைனா அதுக்கு அப்றம் பாத்துக்கலாம்..."

துப்பாக்கி எல்லாம் உதய்யிடம் வேலைக்குச் சேர்வதற்கு முன்னால் கேட்டிருந்தால் நிச்சயம் மயங்கிச் சரிந்திருப்பாள் ஆனால் இப்பொழுது தண்ணீரைக் குடிப்பது போல் தான் துப்பாக்கியும் தெரிந்தது. வழக்கமாய் கதவை தட்டி வரும் யாழினி இன்று அனுமதியே வாங்காமல் வருவதைக் கண்ட ஜெயனுக்கு மட்டும் இல்லை அவனுடன் அதே அறையிலிருந்த ஜெயன் உதவியாளர் மூவருக்கும் புரிந்தது ஏதோ உதயிடம் சண்டையிட்டு வந்திருப்பாள் என்று அமைதியாகச் சிரிப்பை உதட்டில் காட்டாமல் கண்களைத் தாழ்த்திக்கொண்டனர். அவளிடம் ஒரு நிமிடம் என்று சைகை செய்தவன் ஏவ வேண்டிய வேலைகளை முடித்து அவளுக்கு ஒரு நாற்காலியையும் போட்டான்.

"நீங்க ஒக்கார சொல்றிங்க. உங்க சார் என்ன வெரட்டி விடுறதுலயே இருக்காரு"

"வேலை இருக்கும் யாழினி அவருக்கு" தன் இருக்கையிலிருந்து எழுந்து தன்னுடைய பி.எ ஒருவனிடம் ஒரு கோப்பை கொடுத்து, "நீரஜ் தழல் கைல நாளைக்கு இந்த டாக்குமெண்ட் இருக்கனும்"

மற்றொரு பார்சலை கொடுத்து, "இந்த பார்சல் ஈஸ்வரன் சார்க்கு போகணும் பட் எப்படி போச்சு யார் குடுதான்னு அவர் கண்டு பிடிக்கக் கூடாது. ரெண்டும் ரொம்ப கவனமா பண்ணிடுங்க" எச்சரிக்கையோடு அவர்களை அனுப்பி வைத்து யாழினியிடம் வந்தான்.

"என்ன பெரிய வேலை? அவர் வேலையை மட்டும் பாக்க வேண்டியது தான எதுக்கு என் வேலையும் சேத்து பாக்குறாரு. ஏன் காலைல அவ்ளோ லேட்டா ஆபீஸ் வந்திங்க? அங்க தான் என்னமோ நடந்துருக்கு. சந்தோசமா இருக்காரு" உறுதியாகக் கூறினாள் யாழினி.

இணையா துருவங்கள் (Completed)Where stories live. Discover now