தேடல் - 17

415 22 3
                                    

ஆதவ் யாதவை தன் குழந்தைகள் என்று கூறிக் கொண்டு வந்த புதியவன் யார் என்று தெரியாமல் அனைவரும் குழப்பத்தில் இருக்க அவன் ஒருவரை வீட்டினுள் வர கூற அங்கு வந்தது சாரு...

அனைவரும் அதிர்ந்து நிற்க மிது சாரு என்று ஓடி சென்று சாருவை அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள். தன் குடும்பத்தில் இருந்து ஒருவர் கூட உயிருடன் இல்லை என்று எண்ணி வருந்திக் கொண்டிருந்த மிது இன்று சாருவை கண்டதும் மிகுந்த சந்தோஷம் அடைந்தாள்.

சாருவும் புன்னகையுடன் மிதுவை அணைத்துக் கொண்டாள். "நீ ... நீ ... இறந்துட்டதா சொன்னாங்க இப்போ ... இப்போ எப்படி உயிரோட உனக்கு எதும் இல்லை இல்லை" என்று கேட்க சாரு "இல்லை மிது நா நல்லா இருக்கன் எனக்கு ஒன்னுமே இல்லை" என்று கூற

"எப்படி இது சாத்தியம் ஆகும் நாங்க தான் உன்னை எரிச்சோமே" என்று பிரபா அதிர்ச்சி விலகாமல் கேட்க "அதுக்கு பதில் நா சொல்ரன்" என்று அந்த புதியவன் கூற அனைவரின் பார்வையும் அவன் புறம் திரும்பியது.

"உங்களுக்கு என்னை தெரியும்... பிரபா வாசு இரண்டு பேருமே என்னை பார்த்திருக்கிங்க உங்களுக்கு ஞாபகம் இல்லை நானே சொல்ரன் ஐம் எ டாக்டர். வினோத் சாரு தலையில அடிப்பட்டு ஹாஸ்பிடல்ல சேர்த்திங்களே அப்போ அவள அட்டன் பன்னது நான் தான்" என்று கூற

பிரபா நினைவு வந்தனாக "ஹான் சாரி டாக்டர் அது மூனு வருஷம் ஆச்சா அதான் உங்கள நினைவு இல்லை ஆனா நீங்களும் சாருவும் ஒன்னா எப்படி நீங்க தான சாரு இறந்துட்டதா சொன்னிங்க ஆனா இப்போ சாரு உயிரோட..." என்று கூற "இட்ஸ் ஓகே... உண்மைய சொல்லனுன்னா அன்னைக்கு சாருக்கு எதுமே ஆகல சாரு உங்க கிட்ட பொய் சொல்ல சொன்னாங்க" என்று வினோத் கூற

"எதுக்கு" என்று வாசு கேட்க "பிரபா மிதுவ லவ் பன்றது அவங்க பழக ஆரமிச்ச கொஞ்ச நாள்லே எனக்கு தெரியும் நா பிரபா மேல கோவப்பட்டா அவர் அந்த கோவத்துலையாவது மிதுவ லவ் பன்றத ஒத்துப்பாருன்னு தான் சண்டை போட்டன் நா நினைச்ச மாதிரியே அவரும் ஒத்துகிட்டாரு அதுக்கு அப்பறம் அவங்க வாழ்கையில நா குறுக்க நிக்க விரும்பல அதான் டிவோர்ஸ் பேப்பர்ல சைன் பன்னிட்டன் ஆனா அதுக்கு அப்பறம் அப்பா அம்மா இறப்பு மிது காணாம போனது எல்லாம் பிரபாவ தடுமாற வச்சிருச்சி அவர் என்னை தனியா விட கூடாது எனக்கு ஒரு நல்ல வாழ்கைய அமைச்சி வைக்கனுன்னு அதுலே கான்சன்ட்ரேட்டா இருந்தாரு அப்போ தான் நா மாடியில இருந்து விழுந்து தலையில அடி பட்டது இது ஒரு சந்தர்ப்பமா ஏத்துகிட்டு நா இறந்துட்டதா உங்க கிட்ட சொல்ல சொன்னன் அப்போ தான் என்னை பத்தி கவலை இல்லாம மிதுவ தேடுவாறுன்னு நினைச்சன் நா நினைச்ச மாதிரி தான் எல்லாமே நடந்துச்சி சரின்னு நானும் மறைஞ்சி இருந்து உங்கள பார்த்துட்டு இருந்தன்" என்று சாரு கூறி முடித்தாள்.

கண்மணியின் காதலை தேடிWhere stories live. Discover now