தேடல் - 7

461 21 3
                                    

பிரபா மிதுவின் பழைய நினைவிற்குள் செல்ல வாசு "அவ்வளவு தான் ட்ரீம் போய்ட்டான்" என்று நினைத்தவன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு பாவமாக அமர்ந்து விட்டான்.

பிரபா அவன் வீட்டு தோட்டத்தில் சோகமாக அமர்ந்திருக்க அவன் அருகில் சாரு அமர்ந்து அவனை சமாதானம் செய்ய என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தாள். ஆனால் பிரபாவின் மனம் சற்றும் சமாதானம் ஆகவில்லை.

"என்ன மாமா நீங்க நா இவ்வளவு சொல்ரன் நீங்க என்னடான்னா இன்னமும் இப்படியே இருக்க சரி நா உங்கள கூல் ஆக்க நா உங்களுக்கு பிடிச்ச ஜுஸ் எடுத்துட்டு வரன்" என்று சாரு வீட்டிற்குள் செல்ல மிது வீட்டின் கேட்டில் நுழைந்தாள்.

உள்ளே செல்ல போனவள் பிரபா தனியா தோட்டத்தில் அமர்ந்திருப்பதை கண்டு அவன் அருகில் சென்றாள்.

"என்ன சிங்கர் இங்க தனியா உட்காந்து என்ன பன்றிங்க ஏதோ அவார்ட் பங்கஷனுக்கு போனிங்களே என்ஜாய் பன்னிங்களா" என்று மிது கேட்க பிரபா பதில் கூறாமல் சோகமாகவே இருக்க மிது பொறுமையாக அவன் அருகில் அமர்ந்தாள்.

"என்ன ஆச்சி பிரபா ஏன் இப்படி சோகமா இருக்க யாராவது எதாவது சொன்னாங்களா" என்று மிது கேட்க பிரபா "நா ஒரு அவார்ட் பங்கஷனுக்கு போனன் இல்லை அங்க எனக்கு அவார்ட் கிடைக்கும்ன்னு நா எவ்வளவு ஆசையா இருந்தன் தெரியுமா ஆனா கிடைக்கல ஒவ்வொறு வருஷமும் ஆசையா போறன் ஆனா கிடைக்றதே இல்லை" என்று சோகமாக கூற

"பொறாமை பட்றியா பிரபா" என்று மிது கேட்க பிரபா அவளை முறைத்தான். "சரி சரி முறைக்காத உனக்கு பொறாமை இல்ல தான் ஒத்துக்றன் ஆனா நீ ஏன் இவ்வளவு சின்ன விஷயத்துக்கு சோகமா இருக்கன்னு தான் தெரியல" ஒன்றும் இல்லா செய்தி என்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு மிது கூற பிரபா கடுப்பாகினான்.

"நா எவ்வளவு சோகமா சொல்ரன் நீ என்ன ஒன்னும் இல்லாத விஷயம்ன்னு சொல்ர போ உனக்கு நா ஜெய்ச்சி அவார்ட் வாங்கரதுல விருப்பம் இல்லை அதான் இப்படி சொல்ர மத்தவங்க எல்லாம் எவ்வளவு வருத்தப்பட்டாங்க தெரியுமா" பிரபா கூற

கண்மணியின் காதலை தேடிWhere stories live. Discover now