தேடல் - 9

359 24 2
                                    

பிரபா மிதுவை சென்னைக்கு அழைக்க மிது வர மாட்டேன் என்று கூறி விட்டாள். அதனால் பிரபா ஆதவையும் யாதவையும் மடியில் அமர்த்தி நான் தான் உங்களின் தந்தை என்று கூற இருவரும் பிரபா மடியில் இருந்து இறங்கி "நாங்க வரல நீங்க போலாம்" என்று கோரஸாக கூற அனைவரும் அதிர்ந்தனர்.

"ஏன் வர மாட்டிங்க" என்று பிரபா கேட்க "நாங்க பிறந்த அப்போ நீங்க எங்க போனிங்க அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டாங்க அம்மாவையும் எங்களையும் தனியா விட்டுட்டு நீங்க எங்க போனிங்க இப்ப மட்டும் எதுக்கு வந்திங்க" என்று யாதவ் கேட்க

"இந்த வயசுலே என்னா பேச்சு பேசுதுங்க பாரு டா" என்று வாசு கூற பிரபா புன்னகையுடன் "நா ஒரு பொருளை தொலச்சிட்டன்னு சொன்னன் இல்லை ஆதவ் அது உன் அம்மா தான் உன் அம்மாவ தேடி தான் நா இங்க வந்தன் உங்கள தேடி தான் நா வந்தன் நா உங்கள ரொம்ப மிஸ் பன்னன் நீங்க எங்க இருக்கிங்கன்னு கண்டுபிடிக்க எனக்கு லேட் ஆகிருச்சி இந்த அப்பாவ மன்னிக்க மாட்டிங்களா சாரி இனி அப்பா உங்கள விட்டு போகவே மாட்டன் ஒரே ஒரு முறை என்னை மன்னிச்சிருங்க" என்று தன் கையால் தன் இரு காதின் நுனியையும் பிடித்து கெஞ்சலாக ஆதவ் யாதவை பார்த்து கூறினான்.

"அப்போ நாங்க இங்க இருக்கறது உங்களுக்கு தெரியாதா" என்று ஆதவ் கேட்க "இல்ல டா கண்ணா" என்று பிரபா கூற "இனி அம்மாவ அழுக வைக்க மாட்டிங்க இல்லை எங்கள விட்டு போக மாட்டிங்க இல்லை" என்று யாதவ் முறைப்புடன் கேட்க "என் செல்ல பசங்க மேல ப்ராமிஸ்ஸா நா உங்கள விட்டு எங்கையும் போக மாட்டன்" என்று பிரபா உறுதியளிக்க ஆதவும் யாதவும் ஒருவரை ஒருவர் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு பின் அப்பா என்று அழைத்தவாறு பிரபாவை அணைத்துக் கொண்டனர்.

பிரபாவிற்கு ஆதவ் யாதவ் அழைத்த அப்பா என்னும் அழைப்பு உயிர் வரை தீண்டியதை போல் இருந்தது. தன் பிறவி பயணை அடைந்தது போல் ஓர் மகிழ்ச்சி இருவரையும் கழுத்தோடு அணைத்தவன் கண்கள் அவர்களின் அப்பா என்னும் அழைப்பில் கலங்கியது.

கண்மணியின் காதலை தேடிWhere stories live. Discover now