தேடல் - 2

554 30 6
                                    

பிரபா மிதுவை காண ஆவலாக இருக்க வாசு ஒரு வீட்டின் முன் காரை நிறுத்தி பிரபாவை பாவமாக பார்க்க பிரபா சரி என்று புன்னகையுடன் தலையசைக்க வாசு வேகமாகவும் உற்சாகமாகவும் வீட்டினுள்ளே ஓடினான்.

வீட்டின் உள்ளே யாரையும் கண்டுகொள்ளாமல் மாடிக்கு ஓடியவன் ஓர் அறையை திறந்தான். உள்ளே ஓர் பெண் கட்டிலில் அமர்ந்து பாடல் கேட்டுக் கொண்டிருந்தாள். வாசு நேராக அவள் அருகில் சென்று அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

முதலில் அதிர்ந்தவள் பின் அந்த அணைப்பின் உரிமையாளனை உணர்ந்து புன்னகையுடன் அவளும் அணைத்துக் கொண்டாள்.

"இங்க என்ன நடக்குதுன்னு நாங்க தெரிஞ்சிக்கலாமா" என்று இருவரின் கோரஸ் குரல் வாசலில் கேட்க வாசுவும் அவளும் பதறி விலகி நின்று வாசலை பார்த்து அதிர்ந்தனர்.

அங்கு அவளின் தாயும் தந்தையும் இருவரையும் முறைத்துக் கொண்டு நின்றிருந்தனர். "அத்தை அது வந்து நாங்க சும்மா பேசிட்டு" என்று வாசு உலர அவள் சிரிக்க அவளின் தாயும் தந்தையும் சிரிக்க தொடங்கினர்.

வாசு மூவரையும் குழப்பமாக பார்த்துக் கொண்டு "எதுக்கு சிரிக்கிறிங்க" என்று கேட்க "பயந்துட்ட தான" என்று அவள் கேட்க வாசு "இல்லை லைட்டா" என்று கூற மூவரும் மீண்டும் சிரிக்க தொடங்கினர்.

"சரி என்னை கிண்டல் பன்னது போதும் நா தாரணி கிட்ட பேசனும் சோ ப்லீஸ் மாமனார் மாமியார் அவர்களே கொஞ்சம் தனியா விட்றிங்களா" என்று வாசு கூற

"நாங்க கீழ இருக்கறது கூட கண்ணுக்கு தெரியாத அளவுக்கு அப்படி என்ன சந்தோஷமான விஷயம் சொன்னா நாங்களும் சந்தோஷப்படுவோம் இல்லை" என்று தாரணியின் தந்தை கேட்க

"மிது கிடைச்சிட்டா மாமா" என்று வாசு கூற தாரணியின் தாயும் தந்தையும் ஆனந்த அதிர்ச்சியில் நிஜமாவா என்று நம்ப முடியாமல் கேட்க வாசு "ஆமா மாமா கிடைச்சிட்டா அவள தேடி தான் நானும் பிரபாவும் கிளம்பறோம் அவளோட தான் திரும்பி வருவோம்" என்று கூற "சரி ப்பா நீங்க பேசிட்டு வாங்க நாங்க கீழ வெய்ட் பன்றோம்" என்று கூறி தாரணியின் தாயும் தந்தையும் கீழே சென்று விட்டனர்.

கண்மணியின் காதலை தேடிWhere stories live. Discover now