தேடல் - 15

437 26 2
                                    

சாரு மிதுவை பிரபாவிடம் இருந்து விலக கூறி விட்டு சென்றதும் மிதுவும் பிரபா அழைப்பை மறுத்தாள். பிரபா மிதுவிடம் பேச இயலாததால் அடுத்த நாள் காலையிலே அவளை தேடி வீட்டிற்கு சென்றான். ஆனால் அங்கும் மிது இல்லை சாருவின் தாய் தந்தையிடம் அவள் வந்தாள் அங்கே வீட்டிற்கு வர கூறி விட்டு சென்று விட்டான்.

மிது கடற்கரையில் அமர்ந்து அலையை வெறித்தவாறு அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தாள். "ஏன் பிரபா ஏன் என்னை தேடி வர ப்லீஸ் என்னை விட்டு போ நா உன்னை விலகனுன்னு நினைச்சன் நீ நெருங்கி வந்த இப்பவும் நா விலகி இருக்கன் இப்பவும் தேடி வர என்னால சாரு வாழ்க்கை கெட்றது எனக்கு விருப்பம் இல்லை நீங்க சந்தோஷமா இருக்கனும் அதான் எனக்கு வேணும் இனி நா உன்னை பார்க்க மாட்டன் பேச மாட்டன்" என்று நினைத்தவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

அவள் அருகில் யாரோ அமருவது போலே இருக்க சற்று பயந்தவள் திரும்பி பார்க்க அங்கு வாசுவை கண்ட பிறகே நிம்மதியடைந்தாள்.

"நீங்க என்ன அண்ணா இவ்வளவு காலையில இங்க" என்று மிது சாதாரணமாக கேட்க "நீ இங்க ஏன் காலையிலே வந்த" என்று வாசு அதே கேள்வியை மிதுவை பார்த்து கேட்டான்.

"வரனுன்னு தோனுச்சி" என்று மிது கூற வாசு "அண்ணன் கிட்ட பொய் சொல்லக்கூடாது மிது" என்று வாசு கூற மிது அதன் பிறகு பொய் சொல்லுவாளா அவள் காதலை ஆரம்பத்தில் இருந்து ஒப்பித்தாள்.

"நீ பெரிய தப்பு பன்னிட்ட மிது உன் காதல பிரபா கிட்ட சாரு கூட கல்யாணம் ஆகறதுக்கு முன்னமே சொல்லி இருக்கனும் அப்படி சொல்லி இருந்தா இப்போ உங்க மூனு பேரோட வாழ்க்கையும் அழகா இருந்திருக்கும்" என்று வாசு கூற

"இல்லை அண்ணா பிரபா என்னை ப்ரண்ட்டா தான் பாக்கறாரு" என்று மிது கூற "அட பைத்தியமே ஒரு பையன் உன்னை எப்படி பாக்கறான்னு கூடவா புரிஞ்சிக்க தெரியல உனக்கு ... அவன் உன்னை லவ் பன்றான் மிது அதனால தான் சார் நைட் புல்லா நீ பேசலன்னு தூங்காம எனக்கு கால் பன்னி டார்ச்சர் பன்னிட்டு இருந்தான் இது வரைக்கும் அவன் சாரு பேசலன்னு கூட பீல் பன்னது இல்லை ஆனா நீ அவனை விட்டு விலகனத அவனால ஏத்துக்கவே முடியல" என்று வாசு கூற

கண்மணியின் காதலை தேடிOù les histoires vivent. Découvrez maintenant