அத்யாயம் - 8

Comenzar desde el principio
                                    

"ஓஓஓ செப்டிக் டாங்க் கிளீனிங்கா?"

"நான் ஒன்னும் சாக்கடை அல்லல நான் ஆர்க்கியாலஜிஸ்ட்" சிணுங்கியவளை பார்க்க சிரிப்பு மட்டுமே வந்தது...

"ஆமா எரும மேய்க்கிறதுக்கும் சாணி அள்ளுறதுக்கும் கோபுரம் உயரம் எல்லாம் இல்ல"

"என்ன பாத்தா சாணி அள்ளுற மாதிரியா இருக்கு... நீங்க ரொம்ப பேசுற அப்றம் எங்க அப்பா கிட்ட உன்ன சொல்லிடுவேன்டா" கோவமாய் இருக்கிறாளாம்... மரியாதை தேய்ந்தது

"ஆமா உங்க அப்பன் பெரிய CM, வர சொல்லு கரப்பாபூச்சி ஏத்துற மாதிரி வண்டி டயர்ல ஏத்தி நசுக்கிடுவேன்"

"எங்க அப்பா எனக்கு தான் CM... எங்க அப்பா எவ்ளோ நல்லவரு தெரியுமா அவருக்கு நெறய பேன்ஸ் இருந்தாங்க அமெரிக்கால... என் அப்பாகிட்ட பேசுறிங்களா நீங்களும் அவரு பேன் ஆகிடுவீங்க"அவள் ஆசையாக கேட்க...

"கிளி புள்ள மாதிரி உங்க அப்பன் பேரையே ஓதிட்டு இருக்க சுய புத்தி இல்லையா..."

"அப்பா பேர சொல்லாம உங்க பேரயா பெணாத்த முடியு"

"பெணாத்த வைக்கவா" சற்று குனிந்து கண்ணடித்தவன் மீண்டும் நிமிர்த்து நேராக அவள் விருந்திருந்த சிவந்த கண்களை குறும்புடன் பார்த்து, "இப்புடியே பாக்காத நாவாட்டுக்கு லவ் பண்ணி வச்சிர போறேன், அப்றம் அந்த காரப்பாபூச்சிய மாமனாருன்னுலாம் என்னால கூப்புட முடியாது"

'உன்ன ஏமாத்துறான் மேகா கண்டுக்காத' தனக்குலேயே பேசிகொண்டவள், "அப்பாவை பத்தி பேசுனீங்க சாக்கடை வேஸ்ட்ட எடுத்து மூஞ்சில அப்பி விட்ருவேன்"

'அடியேய் லவ், மாமனாருனு எல்லாம் நடுல சொன்னேனே அது கேக்கல உனக்கு? ஆனாலும் பெண்களுக்கு பேச்சை மாற்ற சொல்லியா தர வேண்டும்... எல்லா தெரிஞ்சு தெரியாத மாதிரி பேசுறத பாரு... கேடி டீ நீ'

அவள் கூறியதை கேட்டு வாய் விட்டு சிரித்தவன், "சாக்கடை அல்லி என் மூஞ்சில அப்புவியா, நீ ஒதுக்குட்ட ரோலக்ஸ் சாக்கடை அல்லுறன்னு"

மானசீகமாக தன்னையே அடித்து கொண்டவள், "நீங்க பொய் சொல்றிங்க, நான் அப்டி சொல்லல... ஆமா உங்க பேர் என்ன? சொல்லவே இல்ல நீங்க ... உங்க வீடு இங்க தான் இருக்கா" எங்கே சென்றது இவள் கோவம் என்றிருந்தது ஆதிக்கு.

இணையா துருவங்கள் (Completed)Donde viven las historias. Descúbrelo ahora