மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seid...

By _meera99

339K 13.1K 6.5K

சக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு.... More

❤ 1 ❤
❤ 2 ❤
❤ 3 ❤
❤ 4 ❤
❤ 5 ❤
❤ 6 ❤
❤ 7 ❤
❤ 8 ❤
❤ 9 ❤
❤ 10 ❤
❤ 11 ❤
❤ 12 ❤
❤ 13 ❤
❤ 14 ❤
❤ 15 ❤
❤ 16 ❤
❤ 17 ❤
❤ 18 ❤
❤ 19 ❤
❤ 20 ❤
❤ 21 ❤
❤ 22 ❤
❤ 23 ❤
❤ 24 ❤
❤ 25 ❤
❤ 26 ❤
❤ 27 ❤
❤ 28 ❤
❤ 29 ❤
❤ 30 ❤
❤ 31 ❤
❤ 32 ❤
❤ 33 ❤
❤ 34 ❤
❤ 35 ❤
❤ 36 ❤
❤ 37 ❤
❤ 38 ❤
❤ 39 ❤
❤ 40 ❤
❤ 41 ❤
❤ 42 ❤
❤ 43 ❤
❤ 44 ❤
❤ 45 ❤
❤ 46 ❤
❤ 47 ❤
❤ 48 ❤
❤ 49 ❤
❤ 50 ❤
❤ 51 ❤
❤ 52 ❤
❤ 53 ❤
❤ 54 ❤
❤ 55 ❤
❤ 57 ❤
❤ 58 ❤
❤ 59 ❤
❤ 60 ❤
❤ மாயவள் அவள் ❤
Thanks for your love and support ❤
♥️

❤ 56 ❤

4.3K 182 90
By _meera99

ஒரு நிமிடத்தில்
எத்தனை மயக்கம்..
இந்த மயக்கத்தில்
எத்தனை தயக்கம்..
இந்த தயக்கத்திலும்
வரும் நடுக்கம்..
என்றாலும் கால்கள்
மிதக்கும்..

"சாரூரூரூ.." சக்தியின் குரலே வீடு முழுவதும் ஒலிக்க இருந்தும் அந்த பெயரின் சொந்தக்காரியோ இயன்றளவு தான் படுத்திருந்த கட்டிலில் புதைந்து கையை மட்டும் வெளியே நீட்டி..

"பத்து எண்ணுங்க சக்தி.." என்றுவிட்டு மீண்டும் கையை இழுத்துக்கொண்டாள்.

"இதுவரை பத்து தடவ பத்து வர எண்ணியாச்சி சாரூரூ..இந்த முறை எண்ணிட்டு நான் கண்ண திறக்குறப்போ நீ இதே இடத்துல இருக்க கூடாது..அப்புறம் நடக்குறதே வேற.." என்று விட்டு கண்ணை மூடி எண்ணத்தொடங்கினான் சக்தி.

கடந்த அரைமணி நேரமாய் சாரு படுத்தியதற்கு எல்லாம் பொருமையாக செயல்பட்டுக்கொண்டிருந்தான். பின்ன ஒரு வார்த்தை விடுபட்டாலும் போதுமே இது தான் சாக்கு என உட்கார்ந்து முகத்தை உம் என தூக்கி வைத்து அழுகிறேன் என்ற பெயரில் கண்ணை சொறிந்து சிவப்பாக்கி காலேஜ் கட் அடிப்பாள்.

போதாக்குறைக்கு இலவசமாக அம்மா அப்பாவிடம் வேறு சில பல திட்டுக்கள் சக்திக்கு..அடுத்து அவளுக்கு சக்தியிடன் ஏதாவது தேவை ஏற்படும் வரை நிலா சதீஷுடன் சங்கம் அமைத்துக்கொண்டு சுற்றித்திரிவாள். இதுதான் வழமையாக நடப்பதே என தன்னை இயன்றளவு கட்டுப்படுத்திக்ககொண்டு எண்ணினான் சக்தி.

அதேநேரம் இன்று வீட்டுக்கு காலையில் மதன் வருவதாக சாவித்ரி இரவு கூறியதிலிருந்து நிலா சதீஷ் இருவரும் தீட்டி இருந்த திட்டத்தை செயல்படுத்த காலை ஆறு மணிக்கெல்லாம் தொலைநோக்கி சேற்று நீர் பக்கெட் என மாடியில் கூடியேறி இருந்தனர்.

இவர்களுக்கு பொழுது போக்குக்கென சக்தியை சாரு படுத்தும் பாடு வேறு துல்லியமாய் மாடி வரை ஒலிக்க இடையிடையே சிரித்து சிரித்து ஹை பை போட்டுக்கொண்டனர். இங்கு அறையில் பத்து எண்ணி விட்டு சக்தி கண் திறக்க அவனை வரவேற்றது வெறும் கட்டில் தான். குட் என வாய்விட்டே கூறியவன் வெளியே செல்ல திரும்பி விட்டு ஏதோ தோன்ற கட்டில் அருகில் வந்து குனிந்து பார்த்தான். அங்கு போர்வையில் சுருண்டு குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தாள் சாரு.

"சாரூரு.."

"ப்ச் என்ன சக்தி ஆ ஊன்னா சாரு சாருன்னு இப்படி பக்கத்துல வந்து சத்தம் போடுறீங்க.. நான் இங்க தான இருக்கன்..அடுத்த தடவ போனதும் அம்மாட்ட சொல்லி பெயர மாத்தனும்.." காதை தேய்த்து விட்டு மறுபக்கம் திரும்பிக்கொண்டாள். பொறுமை பறக்க அவள் கையை பற்றி வெளியில் இழுத்தவன்.." உன்கிட்ட என்ன சொன்னன்.."என்றான் சக்தி கடுமையான் குரலில்.

அவன் இழுப்பிற்கே வெளியில் வந்து எழுந்தமர்ந்து நிதானமாய் வாயை அசைபோட்டு விட்டு.." கண்ண திறக்கும் போது அதோ அந்த இடத்துல இருக்க கூடாது சொன்னீங்க.." என்றாள் சாரு அப்பாவியாய்.

கோபப்படுவதா இல்லை சிரிப்பதா என தெரியாது போக இருந்தாலும் கோபம் பறந்து தான் விட்டது சக்திக்கு. சிரிப்பை அடக்கிக்கொண்டவன் சாருவை எழுப்பி நிறுத்தி நேராய் பாத்ரூமிற்கு கைபிடித்து இழுத்துச்சென்றான். அவன் இழுப்பிற்கே கண்ணை மூடிக்கொண்டு நடந்த சாரு..." காபியா.. ஹான் நல்லா சக்கரை போட்டு கொஞ்சமா.. இல்ல இல்ல கப் புல்லா..பெரிய கப்.." என ஏதோ புலம்பிக்கொண்டே இருந்தவளை ஷவரினடியில் நிறுத்தி அடுத்த அட்டார்க்கிற்கு தயாராக நின்று கொண்டே ஷவரைத்திறந்து விட்டான்.

திடுமென குளிர் நீர் தலையில் விழவும்..."சக்தி ச...த்.." பதறிக்கொண்டு பாயப்போனவளை சத்தமிட்டு சிரித்துக்கொண்டே இறுக்கப்பற்றிக்கொண்டான் சக்தி. துள்ளிக்குதித்து முடிந்தவள் குளிரிற்கு தன் உடல் பழகிவிட அங்கேயே நின்று கண்ணைத்திறந்து சக்தியை முறைத்துக்கொண்டு நின்றாள்.

சிரித்து முடித்த சக்தி அப்பபோதுதான் அவளைப்பார்க்க அவளது பார்வையும் அவள் நின்றிருந்த நிலையும் அவனுள் ஏதோ செய்ய சிரிப்பு மறைய அவன் பார்வை மாறியது. அதே நேரம் தன் குட்டி மூளையை வைத்து யோசித்து அவனை பழிவாங்குவதாக எண்ணிய சாரு அவனையும் பிடித்து ஷவரினடியில் இழுத்து விட்டு கைதட்டி சிரித்தாள். ஆனாலும் அவன் எந்த மாற்றமும் இன்றி தண்ணீர் வலிந்து செல்ல சாருவை அப்படியே பார்த்துக்கொண்டிக்க சாரு பயத்தில் மெதுவாய் நெருங்கி நின்று அவன் நெற்றியில் கைவைத்து பார்த்தாள்.

அவளது நெருக்கம் இருந்த குளிரிற்கு மாறாக அவனை தணலாய் எரிக்க கண்ணை இறுக்க மூடிய சக்தி தன் நெற்றியின் மேல் இருந்த அவள் கையை பற்றி இறக்கி விட்டு கண்ணை திறந்தான். சாரு இன்னும் சக்திக்கு என்ன ஆகிவிட்டது என பயந்து விழித்துக்கொண்டிருந்தாள். நீண்ட ஈர முடி அவளது முகத்தில் பாதியை மறைத்திருக்க அவளது அழகில் தன்னை தொலைத்திருந்தவன் அந்த முடியை ஒதுக்கி விட்டு குனிந்து அவள் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டான் சக்தி. சாரு செயலற்று நின்றவண்ணம் அவனை நிமிர்ந்து பார்க்க.. சற்றே ஆச்சரியத்தில் விரிந்திருந்த அவளது மொட்டு இதழ்கள் அவன் கவனத்தை ஈர்த்தது. சற்றே அழுத்தமாய் வருடி விட்டவன்.. ஒரு கையால் அவளை தன்னோடு மேலும் இறுக்கியவண்ணம் மறுகையால் அவளது முகம் பற்றி அழுத்தமாய் தன் உதடுகளால் அவள் இதழ்களை மூடினான் சக்தி. என்னவென்று தெரியாத ஒரு மாயைக்குள் கட்டுப்பட்டது போல் இருந்தது சாருவிற்கு.. அவளது இதழ்களின் நடுக்கத்தை வெளிப்படையாகவே சக்திக்கு உணர முடிந்தது. மெதுவாய் அவற்றை உள்வாங்கிக்கொண்டான்.

எவ்வளது நேரம் கடந்ததோ சக்தியின் அறைக்கதவை யாரோ தட்டும் ஒலியில் சட்டென தன்னிலை உணர்ந்தவன் சாருவை விட்டு விலகி சிரிப்புடனே மீண்டும் ஒரு முறை தன் இதழை ஒற்றிவிட்டு பின்னோக்கி நகர்ந்து தன் தலையை அழுந்த கோதிக்கொண்டான். சாரு விழித்து விட்டு சக்தியை நிமிர்ந்தும் பார்க்காமல் சுவர் பக்கம் திரும்பி நின்று கொண்டாள்.

கதவை தட்டிய சாவித்ரியிடம் சாரு தயாராகுவதாக கூறிவிட்டு அறைக்கு வந்து தன் ஈர உடையை மாற்றி தயாராகி கண்ணாடி முன் நின்று தலையை துவட்டிக்கொண்டு நின்றான் சக்தி. நேரம் கழித்து குளியலரைக்கதவு திறப்பதை கண்ணாடி வழியே பார்த்தவன் தனக்குள் சிரித்துக்கொண்டு அங்கேயே நின்று கொண்டான். உள்ளிருந்த சாருவோ.."எப்படி இப்போ ட்ரெஸ் கேட்குறது.. " என்று எண்ணி நின்று கொண்டிருந்தாள்.

ஒருவாரு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.."ச..எஹ்ம்.." சக்தி என அழைக்க ஆரம்பித்தவள் ஏதோ தடுக்க வெறுமனே தொண்டையை செறுமினாள்.

"என்ன.." என்றான் வேண்டும் என்றே தெரியாதது போல்.

"ப்ளீஸ்..ச..ம்.." அவளது நிலை பாவமாக இருக்க..சிரித்தவன்.."ஓகே நான் கீழ வெயிட் பன்னுறன்..சீக்கிரம் வா மதி." என்று விட்டு வெளியில் சென்றான் சக்தி.


"கரக்ட்டா சொதப்பாம செஞ்சிடுவ தான?" ஆயிரமாவது முறையாக சதீஷிடம் கேட்டாள் நிலா.

"எத்தன தடவ சொல்லுறது நான் கரக்ட்டா மதன் அந்த பொஸிஷன்க்கு வந்ததும் ஓகே ன்னு சொல்லுவன். நீ அந்த பக்கட்ட அப்படியே கீழ கவில்க்குற.."சதீஷ் கூறிவிட்டு தொலைநோக்கியூடாக பார்க்க..

"அப்போ நீ ஓகே சொன்னதும் நான் போடனும் ஓகே..?" நிலா மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள கேட்க..

"யெஸ் ஓகே.." என்றான் சதீஷ் கீழே பார்த்தவண்ணம்.

தொலைநோக்கியில் நடப்பதைப்பார்த்தவன் பட்டென அதை கண்ணில் இருந்து எடுத்து விட்டு நிலா பக்கம் திரும்பினான். "எருமயே அதை எதுக்கு இப்போ தூக்கி போட்ட.."

"நீதானடா ஓகே சொன்ன இப்போ.."

"ஹய்யோயோ..மொதல்ல பின்னாடி வா..எதையாவது உருப்படியா பன்னுறயா பாரு.." என்று கீழிருந்தவன் கண்ணிற்கு தெரியாதவாறு புலம்பிக்கொண்டு நிலாவை இழுத்துக்கொண்டு படியிறங்கினான் சதீஷ்.

"என்னடா ஆச்சி..சொல்லிட்டு கூட்டிட்டு போ.." அவனிடம் கேட்டுக்கொண்டே அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றாள் நிலா.

"நீயே வந்து பாரு.." என்று அவளையும் இழுத்துக்கொண்டு தானும் வெளி வாசல் வரை வந்தான் சதீஷ்.

அங்கு சக்தி தலையிலிருந்து கால் வரை சேற்று நீர் வடிய நின்று கொண்டிருந்தான். அப்போது தான் வெளியில் வந்த சாரு.. விழித்துக்கொண்டே வானத்தை அண்ணாந்து பார்த்தாள். வீட்டு கேட்டருகில் ஹார்ன் கேட்க, கேட் திறக்க காரை உள்ளே கொண்டு வந்து நிறுத்தி விட்டு ஓட்டுனர் இருக்கையிலிருந்து இறங்கினான் மதன்.

நிலா சதீஷைப்பார்த்து முறைக்க..
"எதுக்கு இப்போ என்ன முறைக்கிற..நீ தான் ஒழுங்கா பன்னல்ல.. போ போயி உன் ஆளுக்கு ஒரு பக்கட் நிறைய ரோஜாவ கொட்டி வெல்கம் பன்னு.." என்று விட்டு அவன் செல்ல திரும்ப அவனை பிடித்து இழுத்தவள்..

"டேய் அண்ணா சாரிடா.. ஆனா டோன்ட் வொரி ப்ளான் நம்பர் டூ இருக்கே.." என்றாள் குதூகலத்தோடு..

"அதாவது ஒழுங்கா நடந்தா சந்தோஷம்.." என்றான் சதீஷ்.

"வாங்க வாங்க சாரதா..வாப்பா மதன்..
டேய் சக்தி என்னடா இப்படி வயல்ர உருண்டுட்டு வந்த போல நிற்கிற..இப்போ தான வெளில நல்லா போன அதுக்குள்ள எப்படி.." பட பட என பேசிக்கொண்டே போன சாவித்ரி சந்தேகமாய் சதீஷையும் நிலாவையும் திரும்பிப்பார்த்தார்.

அவர் பார்ப்பதை புரிந்து கொண்ட சதீஷ் விசிலடித்துக்கொண்டே மேலே வானத்தை பார்த்து..."அம்மா ஒரு வேள சேற்று மழை பெய்திருக்குமோ.. என்ன நிலா..?" என்றான்.

"ஆஹ் ஆமா நேற்று கூட லன்டன்ல பெய்திச்சாம்மா..."அண்ணணுடன் ஒத்து ஊதினாள் நிலா.

"ஓஹ்ஹோ அங்கயும் யாரவது ஒருத்தர் மேலதான் பெய்திச்சோ.. " என்று அவர்களிருவரையும் முறைத்து விட்டு.."சக்தி நீ போப்பா போய் ப்ரஷ் ஆகிட்டு வா.. "என்று சக்தியையும் உள்ளே அனுப்பி வைத்து விட்டு..

"சாரி சாரதா...இந்த பிசாசுகளே இப்படித்தான்.. நீங்க வாங்க உள்ள..மதன் வாப்பா..டேய் சதீஷ் அண்ணனுக்கு அந்த ட்ரெஸ்ஸ எடுத்து கொடு.." கூறிவிட்டு சாரதாவை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார் சாவித்ரி. சதீஷும், சக்தி பின் வால்பிடித்து சென்ற சாருவுடன் தானும் இன்னொரு வாலாக இணைந்து கொண்டான்.

என்ன மட்டும் தனிய விட்டு போறானே.. என எண்ணிக்கொண்டு முழித்துக்கொண்டு நின்ற நிலா தன் முன்னால் நின்று கொண்டிருந்த மதனின் கால்களிலே பார்வையைப்பதித்திருந்தாள்.

தன்னை நெருங்கி வருவதை உணர்ந்தவள் மெது மெதுவாய் பின்னகர.."எல்லா சீன்லயும் போல பின்னால சுவர் மட்டும் இருந்திட கூடாது கடவுளே.." எண்ணிக்கொண்டே நடந்தவள் தான் நினைத்தது போலவே பின்னால் எதுவும் இடிக்காது போக குதூகலத்துடன் அவன் நெருங்க நெருங்க இன்னும் வேக வேகமாக நகர்ந்தாள்.

மழை பெய்து ஓய்ந்து இருந்த அந்த காலைப்பொழுதில் நீர் நிறைந்திருந்த குழி தனக்கு செய்ய போகும் சதி அறியாது நிலா தொடர்ந்து நகர..
"என்ன அந்த வலை எனக்கு விரிச்சதோ..?" என்றான் மதன்.

"அப்படியா தெரியுது..அப்போ அப்படிதான்.." என்றாள் நிலா துடுக்காய்.

மதன் சட்டென தன் நடையை நிறுத்த.. நிலாவும் நின்றாள்..பின் என்ன நினைத்தானோ ஒரு சிரிப்புடன் ஒரு அடி இவன் முன் வைக்க..நிலா பின் வைக்க.. அடுத்த நொடி கால் தடுக்கிட நாலாபுறமும் சேற்று நீரை இரைத்துக்கொண்டு குழியில் விழுந்தாள் நிலா.

Continue Reading

You'll Also Like

49.9K 2.1K 16
தன் வீட்டில் தங்கி இருக்கும் அஷ்வின் என்னும் இளைஞன் வினோதமாக நடந்து கொள்வதை கவனிக்கிறாள் சஞ்சனா.அவன் மர்மத்தை தெரிந்து கொள்ளும் போது அவனை வெறுப்பாளா...
430 71 7
சிறுகதைகளின் தொகுப்பு!
23.1K 672 14
"நீ என்ன லவ் பண்ணலனாலும் பரவால்ல. இருக்க ஒன் இயர எனக்கே குடுத்திரு. அது போதும்." அவன் கூற... அவள் அவனை உற்று நோக்கினாள். "ஏன் அப்டி பாக்குற?" அவன் பு...
358K 9.2K 46
நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி...