மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seid...

By _meera99

339K 13.1K 6.5K

சக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு.... More

❤ 1 ❤
❤ 2 ❤
❤ 3 ❤
❤ 4 ❤
❤ 5 ❤
❤ 6 ❤
❤ 7 ❤
❤ 8 ❤
❤ 9 ❤
❤ 10 ❤
❤ 11 ❤
❤ 12 ❤
❤ 13 ❤
❤ 14 ❤
❤ 15 ❤
❤ 16 ❤
❤ 17 ❤
❤ 18 ❤
❤ 19 ❤
❤ 20 ❤
❤ 21 ❤
❤ 22 ❤
❤ 23 ❤
❤ 24 ❤
❤ 25 ❤
❤ 26 ❤
❤ 27 ❤
❤ 28 ❤
❤ 29 ❤
❤ 30 ❤
❤ 31 ❤
❤ 32 ❤
❤ 33 ❤
❤ 34 ❤
❤ 35 ❤
❤ 36 ❤
❤ 37 ❤
❤ 38 ❤
❤ 39 ❤
❤ 40 ❤
❤ 41 ❤
❤ 42 ❤
❤ 43 ❤
❤ 44 ❤
❤ 45 ❤
❤ 47 ❤
❤ 48 ❤
❤ 49 ❤
❤ 50 ❤
❤ 51 ❤
❤ 52 ❤
❤ 53 ❤
❤ 54 ❤
❤ 55 ❤
❤ 56 ❤
❤ 57 ❤
❤ 58 ❤
❤ 59 ❤
❤ 60 ❤
❤ மாயவள் அவள் ❤
Thanks for your love and support ❤
♥️

❤ 46 ❤

5.5K 226 164
By _meera99

நிஜமடி பெண்ணே
தொலைவினில்
உன்னை நிலவினில்
கண்டேன் நடமாட..
வலியடி பெண்ணே
வரைமுறை இல்லை
வதைக்கிறாய்
என்னை மெதுவாக...

"ரிசப்ஷன் அவளுக்கு போலயா இருக்கா இடியட்.. இப்ப சரி கொஞ்ச நேரம் வாய மூடிகிட்டு இருந்த தான் என்னா..அப்படி என்ன தான் வாய் ஓயாம இவளுக்கு மட்டும் கதைக்க இருக்கோ.."
தன்னருகில் நின்று கொண்டு வாழ்த்து சொல்லி விட்டு போக போனவரை அரைமணிநேரமாய் இழுத்து பிடித்து வைத்து கதை அளந்து கொண்டிருந்த சாருவை பார்த்து முணுமுணுத்துக்கொண்டிருந்தான் சக்தி.

"டாட்டா சார் கண்டிப்பா வீட்டுக்கு வரனும்.." விடை கொடுத்து அனுப்பிய சாருவிடம் தலையை நன்றாக ஆட்டி விட்டு, விட்டால் போதும் என அவ்விடத்திலிருந்து பறந்தார் சாருவிற்கு பலியாடாய் மாட்டி இருந்தவர்.

முறைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்த சக்தியை பார்த்தவள் அசால்ட்டாக அவன் பார்வையை ஒதுக்கி விட்டு.."சக்தி அதோ இருக்கு அந்த பைய எடுத்து கொடுங்க.." சக்திக்கு அருகில் கதிரையில் இருந்த பையை கேட்டவளை எந்த அசைவும் இன்றி அதே நிலையில் முறைத்துக்கொண்டிருந்தான் சக்தி.

"ப்ச் என்ன சும்மா சும்மா முறைச்சு முறைச்சு பார்க்கிறீங்க..பன்னதெல்லாம் மறந்திடுச்சா.. நான் தான் முறைக்கனும்..கண்ண நோண்டி காக்காக்கு போட்டுறுவன்." இருவிரலால் அவன் கண்ணை நோண்டுவது போல் சைகை செய்து கூறினாள் சாரு. பட்டென அவள் கை இரண்டையும் பற்றி அருகில் இழுத்த சக்தி..அருகில் நெருங்கி நின்றான்..

"உனக்கு தான் ரிசப்ஷன் நினைவு இருக்கா டேமிட்."
பல்லைக்கடித்துக்கொண்டு கேட்டவனை விழி விரிய பார்த்தவள்..

"அப்போ உங்களுக்கு இல்லையா.." என்றாள் பாவனையோடு.

"சாரு..." சக்தி கோபமாய் பேசத்தொடங்கவும் இடைமறித்தது ஒரு குரல்..

"ஹாய் சக்தி..ஐம் மதன்..ரம்யாவோட கஸின்" புன்னகைத்துக்கொண்டு கை நீட்டிய புதியவனை கண்ட சக்தி யார் என அறிந்து கொண்டு அளவான  புன்னகையுடன் பதிலுக்கு கை குலுக்க போக அடித்துப்பிடித்துக்கொண்டு இடையில் புகுந்தாள் சாரு.

"மதன் சார். நீங்களா.. உங்கள பற்றி ரம்யா நிறைய நிறைய சொல்லிருக்கா... அப்புறம் அம்மா எல்லாம்.. " அனைவரிடமும் கேட்டு கொல்லும் கேள்வியையே சாரு ஆரம்பிக்கவும் தூரத்தில் இருந்து இவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த நிலா.."அண்ணா..." என இடையில் ஓடி வந்து இருவருக்கும் குறுக்காய் நின்றாள்.

மூச்சுவாங்க நின்றவள்.." கார் இல்லாம லைசன்ஸ் ஓட்டினது தப்பு தான்.." மதனைப்பார்த்துக்கொண்டு நிலா கூற சக்தி.."வாட்..?" என்றவாறு கண்களை சுருக்கினான்.

சட்டென யோசித்து.."இல்ல இல்ல லைசன்ஸ் இல்லாம கார் ஓட்டினது தப்பு தான்..இனிமே உங்க கார தொட கூட மாட்டேன் ப்ளீஸ்ணா.. ஜெயில்ர டிவி கூட இருக்காது" அவள் கோர்வையை பேசிக்கொண்டே போக..

இம்முறையும் சக்தி புரியாது.."வாட் லைசன்ஸ் நிலா..என்ன ஜெயில்" கேட்க...திகைத்து விழித்த நிலா." நாமளே வாய் விட்டுட்டோமோ.. இந்த எருமை அப்போ அண்ணாட்ட சொல்ல போறேன்னு வந்தது சும்மாவா..நிக்கிறத பாரு லூசு மாடு..இப்ப எப்படி சமாளிக்கிறது அய்யோ அண்ணா பாக்குறானே.." முழித்துக்கொண்டு நின்ற நிலாவிடம்..

"நீ என் கார எடுத்தியா நிலா.." சக்தி சற்றே கோபமாய் கேட்டான்.

நிலா சட்டென மதனை பார்க்க.. அவனோ எனக்கும் இதுக்கும் எதுவுமில்ல.. நீயே தான்...என்பது போல் தோளை குலுக்கினான். அவனை முறைத்து விட்டு சக்தி பக்கம் திரும்பியவள்..

"ஹிஹி நான் எதுக்கு அண்ணா உங்க கார எடுக்க போறேன்.. அது பாதி ஹய்ட் கூட நான் இல்ல.. அத வச்சி நான் என்ன பன்ன.. இருக்க டாய் காரே போதும்ணா.. அதான் அண்ணா.. இப்போ லைசன்ஸ் இல்லாம கார் ஓட்டுறது ரொம்ப தப்பாம்..நியூஸ்ல சொன்னாங்களா அதா கொஞ்சம் எல்லாரையும் அலார்ட் பன்னிட்டு போகலாம் வந்தன்.. டாட்டா அண்ணா..அண்ணி டாட்டா..have a nice day.." அடுக்கடுக்காய் பட பட என பேசிவிட்டு சக்தி குழம்பித்தெளிய முன் அவ்விடத்தை விட்டு ஓடினாள் நிலா.

புயல் போல் வந்து உலறிக்கொட்டி விட்டு போனவளைப்பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டான் சக்தி.

வானம் முழுவதுமாய் இருட்டத்தொடங்கியிருந்த அந்த நேரம் சட்டென மண்டபம்  இருளில் மூழ்கியது. நடந்தது புரியாது சக்தி இருட்டில் துலாவ தன் கையை யாரோ பலமாக இழுப்பது போல் தோன்றியது. வெளிச்சமில்லாதே அது யார் என புரிந்து கொண்டவன் முகம் இருட்டில் மென்மயாய் மலர சாருவை நெருங்கி நின்று.."பயமா இருக்கா.." என்றான்.

"ம்ம்.." என்று மட்டுமே பதில் வர அவளை நன்றாக ஒட்டிக்கொண்டு நின்றவன்.."மதி.." என அழைத்துக்கொண்டே அவள் முகத்தை கையில் பூ போல் ஏந்தினான். இருளில் அவள் கண்களின் ஒளி அவனுள் ஏதோ செய்ய மெதுவாக நெருங்கி அவள் கன்னத்தில் அழுத்தமாய் தன் முத்திரையை பதித்தான்.

சட்டென அதே நேரம் மண்டபம் முழுவதும் ஒளி பரவ பதறிக்கொண்டு விலகினான் சக்தி. என்ன நடந்தது என்றே புரியாத சாரு சக்தியின் திடீர் விலகலிலும் பயத்திலும் கைகள் நடுங்க நின்று கொண்டிருந்தாள்.

"டேய் டேய் கொஞ்ச நேரம் கரன்ட் கட் ஆகினா என்னடா பன்னுற..அடடா இன்னக்கி ரிசப்ஷன் வந்தவங்களுக்கு நல்ல chance தான் ஹிஹி.."

தன் அருகில் வந்து கெக்க பெக்க என இளித்துக்கொண்டிருந்த வினோவை தன் பக்கமாய் இழுத்த சக்தி அவன் காதில்..
"யாரும் பார்க்கல்லலடா.." மெதுவாய் கேட்க அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு.."இதோ கீழ இருக்க ஒரு ஆயிரம் பேர் தவிர வேற யாருமே பார்க்கலடா சக்தி.." கூறிவிட்டு சிரித்தவனை இடித்துத்தள்ளியவனுக்கு அப்போதுதான் ஹாலில் தாங்கள் மேடையில் இருப்பது உறைக்க கீழே பார்க்க அங்கே இருந்த கூட்டத்தில் சிலர் இவர்களையே ஆவென பார்த்துக்கொண்டிருக்க சிலர் வெட்கப்புன்னகையிலும் என எல்லார் கண்ணும் இவர்களையே மொய்த்திருந்தது. சக்தி கையால் முகத்தை மூடிக்கொண்டு மறுபக்கம் திரும்பிக்கொண்டான்.

"சரி சரி வெட்கப்பட்டது போதும் இந்தா என்னோடதும் ரம்யாவோடதும் ஒரு சின்ன கிப்ட்.." ஒரு மோதிரத்தை எடுத்து சக்தியின் கையிலும் இன்னொரு மோதிரத்தை சாருவின் கையிலும் கொடுத்தான் வினோத்.

சக்தி மெதுவாய் சாருவின் விரலில் shakthi என பொறிக்கப்பட்டிருந்த மோதிரத்தை அணிவிக்க அவளும் கைகள் நடுங்க குனிந்த தலை நிமிராது அதே போல் charu என பொறிக்கப்பட்டிருந்த மோதிரத்தை அவனுக்கு அணிவித்து விட்டு மீண்டும் திரும்பிக்கொண்டாள்.

அனைவரும் கைதட்ட சக்தி கொஞ்சம் சாதாரணமாக இருக்க முயன்றான் ஆனால் சாரு தான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாய் பதட்டத்துடன் இருந்தாள். அன்றைய தினம் முழுவதும் இவர்கள் இரவு வீடு வந்து சேரும் வரையும் கூட சாரு மறந்தேனும் சக்தி பக்கம் திரும்பவில்லை.

சக்தி அறைக்குள் வந்ததும் பின்னோடு சாருவும் வந்தாள். சக்தி குளியலறைக்குச் செல்லப்போக முன்னால் வந்து வழியை மறைத்தவள்.."எதுக்கு அப்பிடி பன்னீங்க.." என்றால் குரலை உயர்த்தி.

"எப்பிடி.." என்றான் சக்தி கூலாக.

"திமிரு உடம்பு முழுக்கா திமிரு..இருங்க மாமா கிட்ட நான் போய் சொல்ல போறன் நீங்க பன்னத.." விருட்டென கூறி விட்டு திரும்பி நடந்தாள் சாரு.

"மாமாகிட்டயா...."
அவள் கூறியது தாமதமாய் சக்திக்கு புரிய அவள் பின்னோடு ஓடினான். அறைக்கதவை லாக் செய்யாது விட்டதால் அவள் முதலே சென்றிருக்க தட தட என படிகளில் இறங்கிக்கொண்டு அவளைத்தேடி ஓடினான் சக்தி.

வீட்டில் அனைவரும் உறங்கியிருக்க நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது.சக்தி பின்னால் விரட்டிக்கொண்டு வருவதைக்கண்டு வேகத்தை கூட்டினாள் இருந்தும் அரைவாசிப்படிகளில் சாருவைப்பற்றிக்கொண்டவன் "உஷ்..சத்தம் போட்ட அப்புறம் நாளைக்கு உன் ஊர்க்காரங்க போற பஸ்ல வெடிகுண்டு வச்சிடுவேன்." அவள் வாயை இறுக்க மூடி பெரிய அளவில் வாய்க்கு வந்ததை கூறி எச்சரித்த சக்தி அவளை தூக்கிக்கொண்டு படியேறி அறைக்கு வந்தான்.

வெடிகுண்டு என்றதும் கப் சிப் என வாயை மூடிக்கொண்டு இருந்தவளை பார்க்க சிரிப்பு தான் வந்தது சக்திக்கு.

"குட் இப்படியே இரு அப்புறம் மாமாட்ட சொல்ல போறன் அம்மாட்ட சொல்ல போறனு போன.." இவன் முடிக்க முன்னமே தலையை இருபுறமும் ஆட்டினாள் சாரு.

அவள் அருகில் வந்த சக்தி ஒரு பறக்கும்  முத்தத்தை அவளை நோக்கி பறக்க விட்டு விட்டு சென்றான் குளியலறைக்கு.

ரம்யா இருந்த அறையையே பல முறை சுற்றி வந்திருந்தாள் நிலா. ஒருவாரு மனதை பலப்படுத்திக்கொண்டு கேட்க வேண்டியதை மனதினுள் ஒத்திகை பார்த்துக்கொண்டவள் கதவை தட்டினாள். தட்டி விட்டு காத்திருக்க இவள் சற்றும் எதிர்பார்க்காதவண்ணம் கதவை வந்து திறந்தான் மதன்.

அவனைக்கண்டு இவள் திகைக்க அவனோ இவளைக்கண்டு புரியாது ஒற்றை புருவம் உயர்த்தி என்ன என்றான். தலையை உலுக்கிக்கொண்டவள்.."ரம்யா அக்காட்ட பேசனும்." என்றாள் மெதுவாக.

"ஹ்ம் கேட்கல்ல..." தன் காதை அவள் அருகில் கொண்டு செல்ல மூச்சு விட மறந்தவள்.."ரம்ம்..ம்யா.." என்றாள் திக்கியவண்ணம் ஒற்றைச்சொல்லாக..

"ஆஹ் அவங்களுக்கு என்னா இப்போ.." அவன் மீண்டும் கேட்டுக்கொண்டு நெருங்கி வர.."ஒன்னுமில்ல.." என்று விட்டு ஓடினாள் நிலா. அவள் ஓடும் திசையை பார்த்த மதன்.."funny girl.." சிரித்து விட்டு உள்ளே சென்றான்.

Continue Reading

You'll Also Like

49.9K 2.1K 16
தன் வீட்டில் தங்கி இருக்கும் அஷ்வின் என்னும் இளைஞன் வினோதமாக நடந்து கொள்வதை கவனிக்கிறாள் சஞ்சனா.அவன் மர்மத்தை தெரிந்து கொள்ளும் போது அவனை வெறுப்பாளா...
110K 4.8K 37
இது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.
67.2K 3.6K 65
உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுப...
2.8K 494 25
முஸ்லிம்கள் என்று பெயருக்குச் சொல்லிக் கொண்டாலும் இஸ்லாமியச் சூழல் மருந்துக்கும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்றாவது மகள் ஜாஸியா. இஸ்லாத்தின் அ...