மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seid...

By _meera99

339K 13.1K 6.5K

சக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு.... More

❤ 1 ❤
❤ 2 ❤
❤ 3 ❤
❤ 4 ❤
❤ 5 ❤
❤ 6 ❤
❤ 7 ❤
❤ 8 ❤
❤ 9 ❤
❤ 10 ❤
❤ 11 ❤
❤ 12 ❤
❤ 13 ❤
❤ 14 ❤
❤ 15 ❤
❤ 16 ❤
❤ 17 ❤
❤ 18 ❤
❤ 19 ❤
❤ 20 ❤
❤ 21 ❤
❤ 22 ❤
❤ 23 ❤
❤ 24 ❤
❤ 25 ❤
❤ 26 ❤
❤ 27 ❤
❤ 28 ❤
❤ 29 ❤
❤ 30 ❤
❤ 31 ❤
❤ 32 ❤
❤ 33 ❤
❤ 34 ❤
❤ 35 ❤
❤ 36 ❤
❤ 37 ❤
❤ 38 ❤
❤ 39 ❤
❤ 41 ❤
❤ 42 ❤
❤ 43 ❤
❤ 44 ❤
❤ 45 ❤
❤ 46 ❤
❤ 47 ❤
❤ 48 ❤
❤ 49 ❤
❤ 50 ❤
❤ 51 ❤
❤ 52 ❤
❤ 53 ❤
❤ 54 ❤
❤ 55 ❤
❤ 56 ❤
❤ 57 ❤
❤ 58 ❤
❤ 59 ❤
❤ 60 ❤
❤ மாயவள் அவள் ❤
Thanks for your love and support ❤
♥️

❤ 40 ❤

5.6K 225 113
By _meera99

ஒரு பனிபோல்
உந்தன் நினைவு
என் மனதில்
வந்து இறங்கியதே
உன் அருகே
எந்தன் இதயம்
சிறு மெழுகாய் மெல்ல
உருகியதே..

தனக்கு பின்னால் ஒலித்த குரலில் சிலையென
திரும்பாது அப்படியே நின்று கொண்டிருந்தாள் ராஜம்மாள்.

அவளருகில் வந்த ரம்யா.."ஆன்ட்டி நீங்க பொண்ணு வீட்டு பக்கம் தான..ஏன் உள்ளேயே வராம அங்கயே நிக்கிறீங்க..வாங்க எல்லாருக்கும் காபி எடுத்து வச்சிருக்கேன்." அவள் கூறி முடிக்கவும் தான் மூச்சே திரும்பி வர இதோ என்றவாறு அறக்கப்பரக்க வீட்டினுள் ஓடினாள் ராஜம்மாள்.

இவர் நார்மலா இல்லயே எதற்கு இவ்வளோ பதட்டம் என சிந்தித்தவண்ணம் உள்ளே வினோவை தேடி சென்றாள் ரம்யா.

அங்கு சோபாவில் அமர்ந்து யாருனோ போனில் கதைத்துக்கொண்டிருந்தான் வினோத். ரம்யா அருகில் சென்றமர்ந்து கொள்ளவும் அவள் கையுடன் தன் கையை பிணைத்துக்கொண்டே போனில் பேசிக்கொண்டிருந்தான்.

போன் பேசி முடித்து விட்டு அவள் பக்கம் திரும்பியவன் அவள் ஏதோ சிந்தனையில் இருப்பதைக்கண்டு அருகில் சென்று அவள் முகத்தில் தவழ்ந்து கொண்டிருந்த ஒற்றை முடியை ஊதினான். சட்டென அவன் பக்கம் திரும்பியவள் கண்டு புன்னகைத்த வினோ என்ன என்றான்.

"வினோ சாருவ கடத்தினது பத்தி எதாவது தகவல் கிடைச்சிதா? "

அவள் கேட்க பதிலுக்கு இல்லை என தலையை ஆட்டினான்.

"ப்ச்..என்ன செய்யுறது அவள எதுக்கு கடத்தினாங்க என்று ஒன்னுமே புரியாம இந்த விஷயத்த எப்படி சும்மா விட்றது.. அவள் நார்மல் ஒரு பெண்ணா இருந்தா பயப்படவே தேவையில்ல..ஆனா அவ ரொம்பவே innocent வினோ..சக்தி வேற இந்த பிரச்சனை நடுவுல தாலிய வேற கட்டி கூட்டிட்டு வந்துட்டான். அவன் தான் இந்த விஷயத்துல என்ன நடந்தது என்று விசாரிக்கனும்.. அவனும் சாருவ விட மோசமாவல்ல இருக்கான். இது ரெண்டையும் வச்சிகிட்டு.." ரம்யா கோபத்தில் பொரிந்து கொண்டே இருக்க வினோவோ கூலாக அவள் காதோர முடிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தான்.

பொறுமையிழந்தவளாக.."வினோ நான் சொல்லுறத கேட்குறயா இல்லயா..?"

அவள் கைகளை தன் கைகளுக்குள் எடுத்து வைத்துக்கொண்டவன்.."பேபி கூல்.. முதல்ல நீ சொல்லு..சாரு கிட்ட நீ பேசினயா?" அவன் கேட்க இல்லை என்றாள் ரம்யா.

"ஹ்ம் அப்போ எப்படி நடந்தது தெரியும். அவள் நார்மல் கேர்ள் இல்லன்னு நீ சொல்லலாம். ஆனால் ஒரு பெண்ணிற்கு தன்ன ஒரு விஷயத்துல இருந்து ஆபத்து அப்போ பாதுகாத்துக்க தெரியும். கண்டிப்பா நடந்தது சாருவிற்கு மட்டும் தான் தெரியும். நீ அவகிட்ட பேசு அப்போ தான் இனிமே நடக்க இருக்க ஆபத்துக்கல்ல இருந்தும் அவள காப்பாத்தலாம்..."

"ஹ்ம்ம்ம்.." சம்மதமாய் சிந்தனையுடனே தலையாட்டினாள் ரம்யா.

"சரி அதைவிடு நான் சொன்னது பற்றி யோசிச்சயா ரமி..?"

அவன் கேட்கவும் என்ன என்று சிந்தித்தவள் பின்தான் அவன் நேற்று இரவு தன்னிடம் பேசியது நினைவில் வர முகத்தில் கடுமை ஏற எழுந்து செல்ல முயன்றாள்.

"ரமி.." அவள் கைபற்றி இழுத்த வினோ அவளை தன்னருகில் அமர்த்தி தோளோடு அணைத்துக்கொண்டான்.

"பேசாம போனால் என்ன அர்த்தம்டா.."

"இது பற்றி பேச விருப்பம் இல்லன்னு அர்த்தம்.." முகத்தை அவன் பக்கம் இருந்து திருப்பிக்கொண்டாள்.

அவள் முகம் பற்றி தன்பக்கம் திருப்பியவன்.."இங்க பாருடா.. மனிஷங்கள்ள தப்பு செய்யாதவனே இல்ல அப்படி இருந்தா அவன் மனிஷன் இல்ல.. சிறியதோ பெரியதோ எல்லாமே தப்பு என்ற ஒரு வர்க்கத்துல தான் சேரும்..அது பார்க்கும் கண்களை பொருத்தது...தப்பு செய்ய செய்ய தான் அனுபவம் வந்து தங்களை சரி செய்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்குது. அந்த வாய்ப்ப கொடுக்குறது தப்பு செய்யிறவங்கள சுற்றி இருக்க மற்றவங்க தான். அதேநேரம் நீ செய்யிறது தப்புன்னு சுட்டி காட்டி புரிய வைக்கிறதும் அவங்களே தான்.
தப்பு செய்தவங்க சரி செய்து கொள்ள நேரம் வேணும்ல அதுபோல தான் மன்னிக்கவும் நேரம் வேணும்.. நான் இல்ல சொல்லல.. ஆனால் அந்த நேரம் வந்தத புரிஞ்சிகிட்டா மன்னிக்காம இருக்கது நம்ம பக்கம் மட்டும் தான்டா தப்பு.."

"வினோ நான் இப்போ மன்னிக்கலன்னு சொன்னேனா..நான் மன்னிச்சிட்டேன்." எங்கோ பார்த்துக்கொண்டு கூறினாள் ரம்யா.

"அப்போ உன் அத்தைய ஏத்துக்கலாமே ரமி...ஏன் மறுக்குற?"
அவன் கேள்வியில் மௌனம் காத்தாள்.

"ரமி அவங்க செய்தது பெரிய, ரொம்பவே பெரிய தப்பு அதுக்காக அவங்க எத்துனையோ வருஷம் தண்டனைய அனுபவிச்சிட்டாங்க.. இனிமேலும் வேணாம்டா.. உனக்கு இருக்க ஒரே சொந்தம்.. இரு நான் பேசிர்ரன்.. நீ உனக்கு இருக்க சொந்தம் நான் தான்னு சொல்லுவ தெரியும்..இப்ப உனக்கு நான் எனக்கு நீ..ஆனால் நாளைக்கு நம்மளுக்குன்னு  குழந்தைகள் வரும் போது அவங்களுக்கு பாட்டி மாமா இந்த உறவுகள் இருந்தும் இல்லாம நம்மள போல வளரனும் நினைக்கிறயாடா?..." வினோ கூற வருவது புரிந்தது போல் தன் கைவிரல்களையே பார்த்துக்கொண்டிருந்தாள் ரம்யா.

"போ ரமி அவங்களுக்கு கால் போட்டு நாளைக்கு ரிசப்ஷன் வர சொல்லிடு.. இன்னக்கே இங்க வர சொல்லு. நீ பேசிட்டு சாவித்ரி அத்தைகிட்ட போன கொடு கேட்டுகிட்டே இருந்தாங்க பேசனும்னு. " அவள் கையில் நம்பரையும் அழுத்தி போனை திணித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான் வினோ.

ரம்யாவிற்கு தன்னவனை நினைத்தால் பெருமையாக இருந்தது. எவ்வளவு இயல்பாக அதே நேரம் சரியாகவும் ஒரு ஒரு பிரச்சனையையும் கையால்கிறான். காதில் வைத்து அந்த பக்கம் அழைப்பை ஏற்பதற்காக காத்திருந்தாள்.

வினோவிற்கும் மனம் முழுக்க சந்தோஷமே நிறைந்திருந்தது. இனிமே யார் வாழ்க்கையிலும் எந்த பிரச்சனையும் கண்டிப்பாக இருக்காது. சிந்தித்துக்கொண்டே அவன் மாடிப்பக்கம் திரும்ப அங்கிருந்து ஒழிந்து ஒழிந்து பார்த்துக்கொண்டிருந்தது ஒரு உருவம்.

அட இது சக்தி தானே என்று எண்ணியவாறு இவன் உற்று நோக்க அவன் கை காட்டி வினோவை அழைத்தான். சாருவின் ஊர் முழுவதும் உணவறையில் தங்கள் ஆராய்ச்சியை தொடங்கியிருக்க சுற்றி பார்த்து விட்டு அவன் பக்கமாய் சென்றான் வினோ.

அருகில் சென்றதும் இவன் கைபற்றி சுவர் பின்னால் இழுத்துச்சென்றான் சக்தி. அப்போதுதான் அவனை முழுவதுமாக பார்த்த வினோ.."டேய் என்னடா இது இப்படி என்ன ஆச்சி.." என்றான் அவனைப்பார்த்து. மேலே அழகாய் வெள்ளை நிற ரிச் சார்ட் போட்டு கீழே டவல் அணிந்திருந்தவனை பார்த்து சிரிப்பு பீறிட்டாலும் கட்டுப்படுத்திக்கொண்டான்.

"எல்லாம் அந்த ராட்சசி தான்டா.. முதல்ல நீ  நம்ம கடையில போய்.." அவன் கூறிக்கொண்டிருக்கும் போதே "சார் சக்தி சார்.."கூவிக்கொண்டு அங்கே வந்து சேர்ந்தாள் சக்தியின் ராட்சசி.

சக்தி இருந்த கோபத்திற்கு.."இப்படி சார் சார்னு கூவிட்டு வந்தன்னா பல்ல தட்டிருவேன் பாரு.." என்றான் கோபமாய்.

ஒரு அடி பின்னகர்ந்தவள்.. பின்பு சிலிப்பிக்கொண்டு.. "ஆமா நீங்க தட்டினா விழுக அத என்ன ஒட்ட வச்சா இருக்கோம்.." சண்டைக்கு நின்றாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு சில கணங்கள் நிற்க.. தானாக பார்வை கையிலிருந்த துணியை தொட்டு விட்டு நகர அப்போதுதான் மீண்டும் நினைவு வந்தவளாக..

"இதோ இருக்கு பாருங்க நான் கண்டு பிடிச்சிட்டேன்..." என்றாள் அந்த துணியை விரித்துக்காட்டியவாறு, அவள் விரித்துக்காட்டிய காற்சட்டையில் ஒரு காலில் வட்டமாய் தெரிந்த ஓட்டை வழியே சக்தியின் முகம் அழகாய் தெரிந்தது.

"ஓஹ் சின்ன ஓட்ட தான் இதோ இப்ப தச்சி தந்துர்ரன் சார்." அவள் நகரப்போக.."ஏம்மா சாரு.."

"ஹய் வினோ நீ எப்போ வந்த ரமி வரல.. " அப்போதுதான் அவனைக்கண்டவளாய் விசாரிக்க கோபம் கொப்பளிக்க நின்று கொண்டிருந்தான் சக்தி. அவனைப்பார்த்து விட்டு.."வந்திருக்கா..ஆமா நீ சொல்லு இதுக்கு என்ன பன்ன..?"
அவன் அவள் கையிலிருந்த சக்தியின் ஆடையை காட்டி வினவ..

"அதுவா அது வினோ நேத்து என்னோட பொம்ம எல்லாத்துக்கும் உடுப்பு தச்சி போட்டேன். ஆனால் ஒன்னுக்கு மட்டும் துணி பத்தல.. அப்போ தான் இதோ இது அங்க ஒரு பையில போட்டு இருந்தது. அது சும்மா தான இருக்குன்னு சார்ட்ட கேட்டேன்..அவரும் தலைய ஆட்டினாரு..நானும் அவளுக்கு அதான் என் பொம்மைக்கு இதால உடுப்பு தச்சி போட்டன் வினோ..பாவம்ல விழாவுக்கு அவங்களுக்கும் புது உடுப்பு போட வேணாம். அதுக்கு என்னடான்னா இந்த சார் சும்மா குதிக்கிறாரு.. அவருக்கும் உடுப்பு வேணும்ணா நேரா என்கிட்டே கேட்டிருந்தா நான் இதோ இதே போல தச்சி கொடுத்திருக்க மாட்டனா என்ன."

அவள் விரித்து காட்டிய பொம்மை ஆடையை பார்த்து..இதை சக்திக்கு என்று கற்பனை செய்து பார்த்த வினோவிற்கு இம்முறை சிரிப்பை அடக்க முடியாது போக விழுந்து விழுந்து சிரித்தான்.

சக்தியின்.."ஷட் அப்.." என்ற சத்தத்தில் வாயை மூடிக்கொண்டவன்.."இதோ கொண்டு வாரன் இரு சக்தி.." என்றவாறு சிரிப்புடனே நகர்ந்தான்.

பின் மீண்டும் நினைவு வந்தவன் பின்னகர்ந்து வந்து.." நீ ஏன் சக்தி தலைய ஆட்டின.." கேட்டான். "டேய் நான் ரொம்ப பிசியா இருந்தேன். இவ ஏதோ ஆட்டுக்குட்டி நாய்க்குட்டின்னு கதை கதையா சொல்லிட்டு இருந்தா.. நானும் தலைய ஆட்டிட்டு இருந்தேன்.. இந்த கதை அதுல எப்போ வந்தது தெரிலடா.. " என்றான் சக்தி அப்பாவியாய். வினோ சிரிப்பை அடக்கிக்கொண்டு.. "இரு வரேன்.. " என தோளில் தட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் சென்றதும்.."என்ன முறைக்கிறீங்க சும்மா.." சாரு மல்லுக்கு நிற்க..அவளருகில் வந்த சக்தி.."முறைக்க கூடாது என் தப்பு தான்.. உன்ன கொன்னு புதைக்கனும் பர்ஸ்ட்."

"அப்புறம் பக்கத்துல உங்கள புதைக்கனும்.." இவளும் முறைக்க..

"ஏன் அங்கயும் வந்து என் உயிர வாங்க போறியா.."சக்தி கடுப்பாய் கேட்டான்.

"பச்ச புள்ளய இப்படி எல்லா பேசாதீங்கோ சார் நான் அம்மா அப்பாக்கு ஒரே பொண்ணு..என்ன ஒரு வார்த்த திட்டினது இல்ல நீங்க என்னடான்னா இப்படி திட்டிட்டே இருக்கீங்க..இருங்க என் அம்மா கீழதான் இருக்காங்க போய் கூட்டிட்டு வாரன்..." இந்த எரும செய்தாலும் செய்யும் என்று அவளை தர தர என இழுத்துக்கொண்டு அறைக்குள் சென்றான் சக்தி. கதவை மூடிவிட்டு இவளை அதே கதவில் சாத்தி நிற்க வைத்தவன்.

"அம்மா கிட்ட அப்பா கிட்டன்னு போன அப்புறம் தெரியும்ல அந்த சுறா நினைவு இருக்குல பிடிச்சி குடும்பதோட போட்டுறுவன்." இவன் எச்சரிக்க..

உதடுபிதுக்கி வழியின்றி பயத்தில் மாட்டேன் என தலையாட்டினாள்.

"ஹ்ம் குட்.. அப்புறம் இந்த ரூம்ல இருக்க உன் பொருட்கள் தவிர வேறு எதுலயும் கை வைக்க கூடாது. மீறி வச்ச.."

"மாட்டன் மாட்டன்.." அவன் முடிக்கும் முன்னே முந்திக்கொண்டு பதில் அளித்தாள் சாரு.

"குட் குட்.. எப்பவும் இப்படியே இருந்துகிட்டா நல்லது..."என்று இடைவெளி விட்டு அவளைப்பார்த்தவன்.."உனக்கு.." என்று விட்டு சென்று கட்டிலில் அமர்ந்து டிவியை ஓன் செய்தான்.

Continue Reading

You'll Also Like

110K 4.8K 37
இது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.
150K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
23.1K 672 14
"நீ என்ன லவ் பண்ணலனாலும் பரவால்ல. இருக்க ஒன் இயர எனக்கே குடுத்திரு. அது போதும்." அவன் கூற... அவள் அவனை உற்று நோக்கினாள். "ஏன் அப்டி பாக்குற?" அவன் பு...
156K 6K 26
சின்ன சின்ன சீன்ஸ் of romance:-) கொஞ்சோண்டு கற்பனை:-) எதார்த்தமா இயல்பா ஒரு கதை. Photo credits: Sarika Gangwal