மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seid...

By _meera99

339K 13.1K 6.5K

சக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு.... More

❤ 1 ❤
❤ 2 ❤
❤ 3 ❤
❤ 4 ❤
❤ 5 ❤
❤ 6 ❤
❤ 7 ❤
❤ 8 ❤
❤ 9 ❤
❤ 10 ❤
❤ 11 ❤
❤ 12 ❤
❤ 13 ❤
❤ 14 ❤
❤ 15 ❤
❤ 16 ❤
❤ 17 ❤
❤ 18 ❤
❤ 19 ❤
❤ 20 ❤
❤ 21 ❤
❤ 22 ❤
❤ 23 ❤
❤ 24 ❤
❤ 25 ❤
❤ 26 ❤
❤ 27 ❤
❤ 28 ❤
❤ 29 ❤
❤ 30 ❤
❤ 31 ❤
❤ 32 ❤
❤ 33 ❤
❤ 34 ❤
❤ 36 ❤
❤ 37 ❤
❤ 38 ❤
❤ 39 ❤
❤ 40 ❤
❤ 41 ❤
❤ 42 ❤
❤ 43 ❤
❤ 44 ❤
❤ 45 ❤
❤ 46 ❤
❤ 47 ❤
❤ 48 ❤
❤ 49 ❤
❤ 50 ❤
❤ 51 ❤
❤ 52 ❤
❤ 53 ❤
❤ 54 ❤
❤ 55 ❤
❤ 56 ❤
❤ 57 ❤
❤ 58 ❤
❤ 59 ❤
❤ 60 ❤
❤ மாயவள் அவள் ❤
Thanks for your love and support ❤
♥️

❤ 35 ❤

5.6K 240 130
By _meera99

நான் தனியாய்
தனியாய் நடந்தேனே
சிறு பனியாய்
பனியாய்
கரைந்தேனே
ஒரு நுரையாய்
நுரையாய் நடந்தேனே
காதலாலே...❤

அன்று அங்கேயே தங்கிவிடலாம் என முடிவெடுத்திருந்தான் சக்தி. அவனை சம்மதிக்க வைத்திருந்தாள் சாரு. அங்கு சாருவுடன் பேசுவதற்கு சிவா ஏற்பாடு செய்திருந்த போனில் அவன் பேசுவதற்கே க்யூவில் அரைமணி நேரம் நிற்க வேண்டிய நிலை. இன்னும் எவ்வளவு நேரம் நிற்க வேண்டி வந்திருக்குமோ சாரு வந்து அனைவரையும் விரட்டிப்பிடித்து சக்திக்கு போனை எடுத்து கொடுத்தாள்.

ஒருவாரு பேசி சாரு கிடைத்ததும் கூறிவிட்டு நாளை காலை கார் அனுப்புமாறு கூறினான் சக்தி. பேசிவிட்டு அவன் திரும்பவும் அடித்துப்பிடித்துக்கொண்டு வந்து அவன் இடத்தை அடைத்தாள் சாரு.

"அக்கா இது ஏத்துக்க முடியாது பாரு.. அவர்க்கு மட்டும் தான் கொடுத்தா.. நீ எப்படி வந்து இடையில நிப்ப போ அங்கிட்டு.." ஒரு சிறுவன் இவளை முன்னால் வந்து விரட்ட..சக்தி இங்கு நடப்பது எல்லாம் வினோதமாய் பார்த்துக்கொண்டிருந்தான்.

"டேய் நான் எவ்வளவோ நாள் கழிச்சிடா வந்திருக்கன்.. ஒரே ஒரு கோல்டா..."

"ஆமா நாமளும் பேச இங்க எவ்வளோ நேரமா காத்திட்டு இருக்கோம்..தள்ளு நாங்க எல்லாம் அக்காட்ட பேசின அப்புறம் நீ பேசிக்கோ.."

"ஒரே ஒரு முறை பேசிட்டு கொடுத்துர்ரன்டா.. பாரு அப்புறம் சார்க்கு கோபம் வந்திடும்.. அவர் வச்ச போன்தான் திரும்ப எடுத்துட்டு போய்டுவாறு..நாம சண்ட போட்டு ஒடச்சிடுவோம்ன்னு."

சாரு கூறவும் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு மனமிறங்கி "சரி நான் பேசின அப்புறம் பேசு நீ.." அனுமதி வழங்கினான் கால்வாசி உயரத்தில் இருந்த அவன்.

சாரு ஏதோ இருந்ததற்கு இந்த யோசனை பரவாயில்லை என போனை அவனிடம் கொடுக்க..காதில் போனை வைத்து அந்த பக்கம் பேசுவதற்காக காத்திருந்தவனை வினோதமாய் பாத்திருந்தான் சக்தி. யார்க்கு அப்பிடி பேச போறாங்க அதுவும் ஊரே பேசுற அந்த அக்கா யாரு என்று ஆர்வமாய் பாத்துக்கொண்டிருக்க..."ஹலோ அக்கா.. ஆமா அக்கா இருக்கேன் அக்கா..நீங்க..சாரு வந்திருக்கா தெரியுமா.. கூடவே இருங்க இருங்க..." போனை கையில் பிடித்துக்கொண்டு சக்தியை ஒரு பார்த்து விட்டு..

"ரொபார்ட் சார்ர் அக்கா.. இதோ சார் தான இருக்காரு இருக்காரு.. என்ன அக்கா எப்போவும் போலவே நான் பேசுறதுக்கு சம்பந்தம் இல்லாமயே பேசுறீங்க.. என்னது இலக்கம் தப்பா.. அதெல்லாம் சரியாதான் போட்டோம்கா.. இருங்க சார்ட்ட கொடுக்குறன்.." சம்மந்தம் இல்லாமலே பேசி முடித்தவன் சக்தி பக்கம் திரும்பி போனை கொடுத்தான்.

"சார் அக்காட்ட பேசுங்க.."

சக்தியோ யாரென்று தெரியாமல் என்ன பேசுவது என எண்ணிவிட்டு சரி பார்ப்போம் என போனை எடுத்து காதில் வைக்க அடுத்த பக்கம் கேட்ட குரலில் விழிபிதுங்கி நின்றான்.

"நீங்கள் அழைத்த தொலைபேசி இலக்கம் தவறானது. தயவு செய்து இலக்கத்தை சரிபார்த்து மீண்டும் அழைக்கவும்."

சக்திக்கு அழுவதா சிரிப்பதா என்று கூட தெரியவில்லை இவன் இந்த நிலையில் இருக்க அவனை உற்று நோக்கிய அந்த சிறுவன்..பட்டென சக்தியிடம் இருந்து போனைப்பிடுங்கி மீண்டும் கதைக்கத்தொடங்கினான்.

சக்தி நகர பின்னால் ஓடி வந்த சாரு.."சார் சார் அக்கா என்ன சொன்னாங்க.." என்று கேட்டு விட்டு சிரிக்க.. இவன் பார்த்த பார்வையில் "என்னாச்சி அக்கா திட்டிடாங்களா.." என மீண்டும் சிரித்தவாரே விலகிச்சென்றாள்.

சக்திக்கு மரியாதையும் கவனிப்பும் மிஞ்ச இவன் திணறித்தான் போனான். மதிய சாப்பாடு முடிய கொஞ்சம் காலாற நடக்கலாம் என்று வீட்டிற்கு பின்னே இருந்த வயலின் வரம்பில் நடக்க ஆரம்பித்தான் சக்தி.
புது அனுபவமாக இருக்க அதை இரசித்து நடந்து கொண்டிருந்தவன் முன் வந்து நின்றான் வேலு.

சரியான சந்தர்ப்பத்திற்காய் காத்திருந்த வேலுவிற்கு இது வாய்ப்பளிக்க சக்தி எதிரே வந்து நின்று ஸ்டைல் என வாயை ஒரு பக்கமாய் இழுத்துவைத்தான் அவன். அவனை கண்டாலே ஏனோ சக்திக்கு பிடிக்கவே இல்லை.

பதிலுக்கு கடமைக்காக கொஞசமாய் சிரித்து விட்டு சக்தி அவனை சுற்றிக்கொண்டு நகரப்போகவும்...

"தம்பி தம்பி ஒரு முக்கியமான சமாச்சாரம்.."

இவன் பதிலளிக்காது என்ன என்று கண்களாளே கேட்டு நிற்கவும் அருகில் வந்தான் வேலு.

"தம்பி நான் வெளியூருல வேல பார்க்கிறேன்."
பெருமையாக அவன் கூறினான்.

"ரொம்ப சந்தோஷம்.. இப்ப அதுக்கு நான் என்ன பன்னனும் நினைக்கிறீங்க.." கோபம் குரலில் வெளிப்படையாகவே தெரிய பட்டென கேட்டான் சக்தி.

அவன் பதிலில் கோபம் வர இருந்தாலும் கோபத்தை காட்ட வேண்டிய நேரம் இது அல்ல என்று உணர்ந்தவன்.."அட தம்பிக்கு ரொம்ப கோபம் வரும் போல.. அது என்னன்னா.." இவன் இழுக்கவும்...

"உங்கள்கிட்ட பேசிட்டு இருக்க முடியாது நான் போகனும் சுற்றி வளைக்காம விஷயத்துக்கு வாங்க."கராராய்க்கூறினான் சக்தி.

வாடா நேரடியா விஷயத்துக்கு வரனுமோ இதோ வாரன்..அப்புறம் உன் மூஞ்சி போற வாக்க நானும் பார்க்க தான போறன். கொஞ்சம் விட்டு சொல்லலாம் பார்த்தா ரொம்ப துள்ளுர..எண்ணியவாறு.. " தம்பி நானும் சாருவும் உயிருக்கு உயிரா காதலிக்கிறோம்.. நான் இருக்கப்போ அவளுக்கு வெளியூருல வேல செய்ய எந்த அவசியமும் இல்ல.. அவள் போகும் போது நான் இருக்கல்ல இங்க...இல்லன்னா இது எல்லாம் நடந்து இருக்காது நடக்க விட்டிருக்க மாட்டன்.."இது எல்லாம் என்பதில் அழுத்திக்கூறினான் வேலு.

"இனிமே அவள் வர மாட்டா உன்னோட இது தான் சொல்லனும்..நேரடியா கேட்டல்ல சொல்லிட்டன்.. நாளைக்கு நீ மட்டும் ஊருக்கு போற வேளைய பாரு. சாருவுக்கும் எனக்கும் வார முகூர்த்தத்துல கல்யாணம். இது பெரியவங்க எல்லா பேசி முடிவெடுத்தது. என் சாரு எப்பவும் எனக்கு தான் தம்பி வீணா சிரமம் எடுத்துக்காத சரியா " பேசி முடித்து விட்டு அவன் சக்தி தோளை தட்டி விட்டு நகர்ந்து சென்றான்.

"ஒரு நிமிடம்.." சக்தி அழைக்க இப்போது என்ன என்று கண்களாளே கேட்டு இவன் நிற்கவும்..

"நீங்க சாருவ காதலிக்கிறீங்க.. சாரு உங்கள காதலிக்கிறாங்களா?" சக்தி சற்றே சாய்ந்து பக்கமாய் அவனை பார்த்து கேட்டான்.. பின்ன நாற்பதை தொடும் வயது பார்வைக்கு கூட சாருவுக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லையே..

"ஹாஹாஹா.." ஏதோ சக்தி பெரிய ஜோக் சொன்னது போல் சிரித்தான் வேலு.

"என்ன தம்பி இது அதுதான் நான் முன்னவே சொன்னேனே.. நாங்க இரண்டு பேரும் காதலிக்கிறோம்.. என்ன சாரு புள்ளக்கி கொஞ்சம் வெக்கமா அதான் என்கிட்டே சொல்லி வீட்டுல பேச சொல்லிச்சி.  எல்லாம் பேசி நாளும் குறிச்சாச்சி."

அவன் நடந்து மறையும் வரையும் பார்த்துக்கொண்டு நின்றவன் கோபம் தலைக்கேற சாருவைத்தேடி சென்றான். சாருவைத்தேடி இவன் வீட்டினுள் நுழையவும் பக்கத்து அறையில் பேச்சுக்குரல் கேட்டது. ஒட்டுக்கேட்பது தப்பு என்றாலும் அங்கு பேசிக்கொண்டிருந்தது சாருவல்லவா சக்தி கதவருகில் நின்று மறைந்து கொண்டான்.

"வேலு உண்மையாவா சொல்லுற.. சார் சம்மதிச்சிட்டாங்களா..? " இவள் சந்தோஷமிகுதியில் கேட்டாள்.

"அட ஆமா புள்ள நான் சம்மதிக்கவச்சிட்டேன்னா பாரேன்.இப்ப சந்தோஷமா..?"
வேலு பதிலுக்கு கேட்க..."ரொம்ப ரொம்ப நன்றி வேலு." துள்ளிக்குதித்தாள் சாரு.

"என்ன புள்ள நீ நன்றி எல்லாம் சொல்லிக்கிட்டு.. சரி நிறைய வேல இருக்குல்ல வா பார்க்கலாம்." அவன் கூற தலையாட்டிவிட்டு சாரு வெளியில் வருவது தெரிய விருட்டென வாசல் தாண்டி வெளியேறினான் சக்தி.
அவன் செல்வதை திருப்தியுடன் பார்த்துக்கொண்டு இருந்தான் வேலு.

கால்போன போக்கில் நடந்து வந்தவன் அங்கிருந்த ஒரு படிக்கட்டில் அமர்ந்தான். "சின்ன கொழந்த போல கொஞ்சிகிட்டே இருந்துட்டு எப்பிடி ஒரு துரோகம் செஞ்சிட்டா ச்சே இவள் எல்லாம் ஒரு பொண்ணு..எல்லாம் கேவலம் பணத்துக்காக போட்ட நாடகம்..விட மாட்டேன்டி இந்த சக்திய யாருன்னு நினைச்ச.. அந்த பணத்துக்காக தான என்ன வளைச்சி போட்ட விட மாட்டன்..இந்த சக்தி யாருன்னு உனக்கு காட்ட வேணாம். அதுகாக தான் காணாமல் போன உன்ன கூட என் கண்ணுல கடவுள் காட்டியிருக்காரு போல.." இவன் சிந்தனையை கலைத்தது ஒரு குரல்..

"இப்பிடி பொண்ண இந்த பக்கம் அழச்சிட்டு வாங்கோ.."

சக்தி குரல் வந்த திசையை நோக்கி போக அப்போதுதான் பார்த்தான் அது ஒரு கோயில் என்று.

அங்கு தட்டில் தங்க தாலி மின்னிக்கொண்டிருக்க அதன் முன்னே வேட்டி சட்டையில் ஒருவனும் அவன் பக்கத்தில் கல்யாணப்பெண் அழங்காரத்தில் ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தாள்.

சுற்றி வேறு யாரும் இல்லை. இவன் ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருக்க அங்கு வந்த ஐயர் ஒருவர் தாலியை எடுத்து மணமகன் கையில் கொடுக்க அவன் அதனை எடுத்து மணமகள் கழுத்தில் முடிச்சிட்டான. சக்திக்கு ஒன்றும் புரியவில்லை. திருமணம் என்றால் நிறைய பேர் இருப்பார்களே ஆனால் இவர்கள் ஏன் இப்படி எண்ணிக்கொண்டிருந்தவன் அருகில் வந்து நின்றார் ஐயர்.

"என்ன தம்பி.."
அவர் கேட்கவும் அவரிடமே தன் சந்தேகத்தைக்கேட்டான் சக்தி.

"அது தம்பி இது இந்த கிராமத்துல இருந்து ஒதுக்குப்புறமா இருக்குற ஒரு கோயில். இந்த ஊர் வழக்கப்படி முதல்லயே கல்யாணம் இங்க தான் நடக்கும் அந்த கல்யாணத்துல மணமக்களையும் நடத்தி வைக்கிறவரையும் தவிர வேறு யாரும் பங்கு பற்ற மாட்டாங்க. அப்புறம் தான் ஊருக்குள்ள போவாங்க இரண்டு பேரும் வலது கால் வச்சி...அப்போ அவங்க குடும்பம் ஊர் மக்கள் எல்லாரும் வரவேற்று அதுக்கப்புறம் தான் எல்லா சடங்கும் நடக்கும்...அதோடு இவங்களுக்கான தாலிய இவங்களே வாங்கிக்க மாட்டாங்க.. இப்போ இவங்க வாங்கின தாலி அடுத்த திருமணம் போது உதவும். இப்போ இவங்க கட்டின தாலியும் இதுக்கு முன்ன நடந்த திருமண தம்பதிகள் பரிசளித்தது. இதுவே தான் தொடர்ந்து போகும்.. இது ஊர் வழக்கம் தம்பி " அவர் கூறி முடிக்க வித்தியாசமாக இருக்குதே என்று எண்ணியவனிற்கு சட்டென எண்ணம் உதித்தது. அங்கு தட்டில் இருந்த தாலியைப்பார்த்தவன் கண்களில் ஏதோ தோன்ற அதைப்பார்த்தவாறே ஐயரிடம் விடைபெற்றான்.

அந்த மணமக்களையும் வாழ்த்தி விட்டு அவன் நன்றி கூறி விட்டு செல்ல..எதற்கு நன்றி என்று புரியாது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

Continue Reading

You'll Also Like

255K 9.7K 40
கனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..
12.5K 832 22
இதயத்தை கொய்த கொலையாளி - பாகம் 2
429 71 7
சிறுகதைகளின் தொகுப்பு!
107K 3.3K 40
Mull methu vizhuntha panni thuzhi udaiuma karaiuma??? aduthu enna nadakum yennru theriyamal payanikum eru thuruvangal:-) onnru seruma???