மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seid...

By _meera99

339K 13.1K 6.5K

சக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு.... More

❤ 1 ❤
❤ 2 ❤
❤ 3 ❤
❤ 4 ❤
❤ 5 ❤
❤ 6 ❤
❤ 7 ❤
❤ 8 ❤
❤ 10 ❤
❤ 11 ❤
❤ 12 ❤
❤ 13 ❤
❤ 14 ❤
❤ 15 ❤
❤ 16 ❤
❤ 17 ❤
❤ 18 ❤
❤ 19 ❤
❤ 20 ❤
❤ 21 ❤
❤ 22 ❤
❤ 23 ❤
❤ 24 ❤
❤ 25 ❤
❤ 26 ❤
❤ 27 ❤
❤ 28 ❤
❤ 29 ❤
❤ 30 ❤
❤ 31 ❤
❤ 32 ❤
❤ 33 ❤
❤ 34 ❤
❤ 35 ❤
❤ 36 ❤
❤ 37 ❤
❤ 38 ❤
❤ 39 ❤
❤ 40 ❤
❤ 41 ❤
❤ 42 ❤
❤ 43 ❤
❤ 44 ❤
❤ 45 ❤
❤ 46 ❤
❤ 47 ❤
❤ 48 ❤
❤ 49 ❤
❤ 50 ❤
❤ 51 ❤
❤ 52 ❤
❤ 53 ❤
❤ 54 ❤
❤ 55 ❤
❤ 56 ❤
❤ 57 ❤
❤ 58 ❤
❤ 59 ❤
❤ 60 ❤
❤ மாயவள் அவள் ❤
Thanks for your love and support ❤
♥️

❤ 9 ❤

5.6K 235 73
By _meera99

❤சிதறிடும் மழைத்துளியிலும்
உன் முகம்...
வான் நிலாவிலும்
உன் முகம்...
நிஜங்களும்
நிழலாய் தோன்றிட..
மாயங்கள் செய்கிறாயே
என்னுள்...❤

உள்ளே வந்து நிமிடங்கள் கடந்த போதும் அவன் திரும்பவில்லை..சாரு அவனது விறைத்த உடலையும் முறுக்கிய கைகளையும் பார்த்துவிட்டு போய்விடலாமா என தோன்ற எதற்கும் அழைத்துப்பார்ப்போம் என யோசித்தவள்..

ரம்யா சொல்லிக்கொடுத்தது போல்..
"சார்ர் பைல்"என்று கூற பதிலின்றி சில கணங்கள் கடந்த பின் அவனும் "டேபிள்ள வை" என்று கூறிய அதே வேளை இருவருக்கும் ஒன்றாகவே அந்த குரல் என தோன்ற சட்டென இவள் பக்கமாய் திரும்பினான் சக்தி.

சாருவும் அதிர்ந்து.."கடவுளே இவன்கிட்டயா வந்து மாட்டினம்..அபோ இவன் தான் சிவா ஐயா மகனா..அவருக்கு இப்படி ஒரு மகனா.." என பலவாரும் யோசித்தவள் தீம்பிழம்பாய் எரிந்து கொண்டிருந்த அவன் கண்கள் சட்டென அவள் காலை நோக்கி நகர.. மீண்டும் அங்கிருந்து மீண்டு அவளது முகத்தில் வந்து நிலைத்தது கோபமாய்..

"எதுக்கு இப்போ இப்படி பாக்குறான்.." அவனது பார்வையில் புரியாது யோசித்தவள் அப்போதுதான் கால் பற்றிய நினைவு வர.."ஐயோ காலு மறந்துட்டேனே" என சட்டென ஒரு காலை தூக்கிக்கொண்டு ஒற்றைக்காலால் நொண்டிக்கொண்டே நின்றாள் சாரு.

சக்தி நிதானமாய் இவளருகில் வர இவளும் நொண்டிக்கொண்டே பின் நகர்ந்தாள். அவன் முன்னே வர இவள் பின் நகர..ஒரு கட்டத்தில் சுவரில் தட்டி இவள் நிற்க..நெருங்கி வந்த சக்தி ஒரு கையை சுவற்றில் வைத்து அவளருகே குனிந்து.." உனக்கு வலது கால் தான் அடிபட்டதாக எனக்கு ஞாபகம்" அதே நிதானத்தோடு கூறினான்.

அதிர்ந்து விழித்தவள் குனிந்து நோக்க அப்போதுதான் உறைத்தது தான் வலது காலில் நின்று கொண்டிருப்பது. மற்றைய கால் தானாகவே கீழிறங்கிவிட அவனை தயக்கத்துடனே நிமிர்ந்து நோக்கினாள். அவனும் அவன் கூர் விழிகளால் அவள் விழிகளினுள் ஆழ்ந்து நோக்க..அவன் விழிகளுக்கு கட்டுப்பட்டது போல் இவளும் அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். கணங்கள் நிமிடமாக கடக்க சட்டென அவள் அருகில் சுவரில் பதித்திருந்த கையால் அவளருகில் சுவரில் பலமாக தட்டியவன்.."டேவிட்..." என கர்ஜிக்க அந்த கட்டம் முழுவதுமே எதிரொலித்தது அவன் குரல்.

பயத்தில் நடுங்கியவாரே கைகளால் காதிரண்டையும் மூடிக்கொண்டு கண்களையும் இறுக்க மூடிக்கொண்டாள் சாருமதி.. இவன் குரல் கேட்டு டீம் நால்வரும் அறையில் இருக்க..அவர்கள் பக்கம் திரும்பியவன் "என்ன நீங்க எல்லாருமே டேவிட்டா" என்க பயத்தில் தலையை ஒன்றாக ஆட்டிய அனைவரும் அவனது அடுத்த கேள்விக்கு இரையாகும் முன் அங்கு வந்தான் சக்தியின் பி.ஏ டேவிட்...

"சார்.." டேவிட் அங்கிருந்த அனைவரும் குழப்பத்துடனே பார்த்தவாறு மெதுவாக அழைக்க..

"இடியட் உனக்கு என் பி.ஏ ன்னு ஒரு போஸ்ட் எதுக்கு கொடுத்திருக்கேன். இப்பிடி பொறுப்பில்லாம இருக்க. இவள எதுக்கு உள்ள விட்ட..இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங் டேவிட்..இதுக்கப்புறம் இது போல் நடந்தா நான் பேசிட்டு இருக்க மாட்டேன்"

டேவிட்டை பேச விடாது தானே பேசி முடித்தவன் சாரு பக்கமாய் திரும்பினான்.
அவள் இன்னும் சுவருடன் ஒன்றியவாரு இருக்க அவள் கையை இறுக்க பற்றிய சக்தி..
"யார்டி உன்ன இங்க அனுப்பினது..பணம் பறிக்க வந்திருக்க..வெக்கமா இல்ல.." தர தர என அவளை அறையில் இருந்து இழுத்துக்கொண்டு  வெளியே வந்தான்.

" விடுங்க கைய..நீங்க நினைக்கிற போல எல்லாம் இல்ல.."
அவள்.. அவன் பின்னே கூறிக்கொண்டே செல்ல..ஆனால் அவனுக்கோ காதிலே விழவில்லை..
இழுத்துக்கொண்டே அவன் போக சாருமதிக்கு பொறுமை பறந்தது.

"ஏய் சிடுமூஞ்சி..கை வலிக்குது விடுடா கைய" அவள் சத்தமாய் குரல் எழுப்ப அங்கு எல்லோருமே அதிர்ந்து தான் போனார்கள் சக்தி உட்பட..

நின்று திரும்பியவன் அவள்பக்கமாய் நெருங்கி "என்னடி மரியாத இல்லாம என்னயே பேசுற..?" கூறியவாறே கழுத்தை பற்றி அவளை சுவரில் சாய்க்க அதேநேரம் அங்கு வந்தார் சிவா.

அங்கு நடப்பதை அதிர்ந்து நோக்கிய சிவா "சக்தி" சத்தமிடவும் அங்கு அப்போது அப்பாவை எதிர்பார்க்காத சக்தி சட்டென அவளை விட்டு விட்டு சிவாவின் பக்கம் திரும்பினான்.

சிவாவைககண்ட சாருமதி ஓடிச்சென்று அவர் பின்னே ஒழிந்து கொண்டு சக்தியை முறைக்க.. அவளை ஆறுதலாய் தோளோடு அரவணைத்துக் கொண்ட சிவா "ஏன்டா அறிவு இல்ல இப்படித்தான் ஒரு பொண்ணுகிட்ட நடந்துகிறதா.?"

"இல்லப்பா இவ.."

கையை உயர்த்தி சக்தியை இடைமறித்த சிவா
"இவ சாருமதி இனிமேல் இங்க டிசைங்னர் குழுவுல இருப்பா..இதுக்கு மேல யாரும் எதுவும் பேச தேவையில்ல..சக்தி உனக்கும் சேர்த்து தான்."
முடிவாய் கூறி முடித்தவர் "நீ வாம்மா" சாருவை அழைத்துக்கொண்டு திரும்ப..அவரிடம் சரி என தலையை ஆட்டிவிட்டு அவர் முன்னே நகரவும் இவள் நின்று பின்னால் திரும்பி சக்தியைப்பார்த்து கண்களை சுருக்கி நாக்கைத்துருத்திக்காட்டி விட்டு ஓடினாள்.

அவளது செயலில் அங்கிருந்த அனைவரும் சக்தி அறியாது சிரிக்க..பொங்கி வந்த சினத்துடன் உள்ளே சென்று கதவை படாரென சாத்தினான் சக்தி.

"வினிதா மேடம் அங்க என்ன பார்வை பாஸ் போய் அரைமணிநேரம் ஆகுது"
வினோத் அவள் தோளில் தட்டி நடப்பிற்கு கொண்டுவர...

"இல்லடா பாரு பாஸயே டா போட்டு பேசிட்டா..அதுல வேற சிடுமூஞ்சின்னு...ஹிஹி நோ வோரி இனிமே நம்மளுக்கு பலமா ஆள் வந்தாச்சுசு"
வினிதா குதிக்க..

"ஓவரா குதிக்காத இதுகப்புறம் தான் புயலே இருக்கு.."
அவன் கூறிவிட்டு நகர..வினிதாவுக்கும் சிந்தனை ஓடியது..

"பாஸ் சின்ன விஷயத்துக்கே மேலயும் கீழயும் குதிப்பாரு ஆனா இந்த விஷயத்துல வந்த கோபம் பத்தாதே..எதுக்கும் நாம இரண்டு பேர்கிட்ட இருந்தும் தள்ளியே இருக்கலாம்"
முடிவோடு அவளும் தன்னிடம் சென்றாள்.

******************

அரைமணிநேரமாக மெத் என அவள் அமர்ந்ததுமே உள்வாங்கிக்கொண்ட அந்த சொகுசு மெத்தையில் அமர்ந்து இருந்த நகத்தை எல்லாம் கடித்து துப்பியாகிவிட்டது..

இருந்தும் இதற்கு வழிதான் அவளுக்கு தெரியவில்லையே..சாவித்ரியும் சிவாவும் சாருவை வெளியே எங்கேயும் அனுப்ப மறுத்தனர்.. இங்கேயே தான் அவள் இருந்து கம்பனி சென்று வர வேண்டும் என்பது அவர்களது அன்பு கட்டளை.. இவர்களுக்கு சிரமம் என்பது ஒரு பக்கம் இருக்க காலையில் பார்த்த அந்த சிடுமூஞ்சு இருக்க அவனோடு ஒரே வீட்டில் எப்படி.. இதையே தான் சாருவின் மனம் ஒளியை சுற்றும் ஈசலென சுற்றி வந்தது.

எதுவோ கழுத்தில் சுள்ளென இழுக்க தடவிப்பார்த்தவளுக்கு அப்போதுதான் நினைவு வந்தது காலையில் அவன் பிடியில் சிக்குண்டது.. "சிவா ஐயா மட்டும் வந்தில்லன்னா நம்மலுக்கு சமாதி தான்.. முடியவே முடியாது இதுக்கு மேல.. சாவித்ரி அம்மாகிட்ட சொல்லிடலாம்.." உறுதியாய் எண்ணியவண்ணம் அந்த அறைகதவை திறந்தாள் சாரு.

அவளது கெட்ட நேரமோ இல்லை எரிமலை நெருப்பை வடித்து விட அவளையே காலை முதல் தேடிக்கொண்டிருந்த அவனது நல்ல நேரமோ நேராய் எதிர் அறை கதவை திறந்து உள்நுழைய போய் திரும்பி பார்த்த இருவிழிகள் சக்தியுடையது தான்.

"ஆத்திதி மறுபடியும் இவனா..முருகா காப்பாத்து.. கத்தி வேற வச்சிருக்கானோ.." சக்தி கையில் பாதி வெளிச்சத்தில் மினுங்கிய எதையோ உற்று பார்த்தாள்.

அவள் பார்வையில் ஒரு நிமிடம் குழம்பி சக்தி தன் கையில் இருந்த பேனாவை தூக்கி பார்க்க.."ஓஹ் பேனாவா.." சத்தமாகவே பெருமூச்சு விட்டாள் சாரு.

அவள் செயலில் இது கத்தியாக இருந்திருக்கலாம் என யோசித்த சக்தி வேகமாக சாரு பக்கமாய் நகர அவன் வருவதை ஊகித்த சாரு அடுத்த நிமிடம் அங்கிருந்து சிட்டாய் பறந்திருந்தாள்.

மூச்சை பிடித்துக்கொண்டே படிகளில் தடதட என இறங்கி வந்தவள் முன் அவளை அதிசமாய் பார்த்தவண்ணம் நின்றிருந்தார் சாவித்ரி.

அவரை கண்டதும்.. முதலில் கூறி விட்டு இடத்தை காலி செய்ய வேண்டும் பார்வையாலே சாம்பலாக்கிடுவான் போல என..

"அம்மா என்ன எங்காவது தங்குற இடம் பார்த்து சேர்த்து விட்டுறுங்க..இங்க இருக்க முடியாது.." அவர் அன்பு அறிந்தவளாதலால் அவரை நேராய் பார்த்து அவளால் மறுக்க முடியாது போக கீழே குனிந்தவாறு கூறினாள் சாரு.

"சாருமா..சக்திய நினைச்சிதான பயம் உனக்கு.. சிவா என்கிட்ட நடந்தத எல்லாம் சொன்னாரு.. அவன் பார்க்க தான்மா கொஞ்சம் முரடனா தெரிவான்..அவன் மனசு ரொம்ப இளகினது.. அவனால் இந்த வீட்ல உனக்கு எதுவும் தீங்கு நடக்காது..நானும் சிவாவும் இருக்கோம்ல.. இதுக்கு மேல எதுவும் பேச இல்ல போய் தூங்கு போ.." அன்பாய் தொடங்கி பொய் அதட்டலோடு முடித்து விட்டு நகரப்போனவரை மீண்டும் பிடித்துக்கொண்டாள் சாரு..

"போங்கம்மா முடியவே முடியாது. என்ன ஏதாவது ஒரு தங்குற இடத்துல சேர்த்து விடுங்க.."

"சாரு இங்க பாரு..நீ சின்ன பொண்ணு அதோட நான் உங்க அப்பா அம்மாகிட்ட ஏன் உன் ஊர்கிட்டயே உன்ன நல்லா பார்த்துக்கிறதா வாக்கு கொடுத்திருக்கேன். நீ இங்கதான் இருக்க போற..உனக்கு படிக்கிறதுக்கும் எல்லாம் ஏற்பாடு ஆரம்பிச்சாச்சி..பேசாம போய் தூங்கு போமா" முடிவாக அங்கு வந்த  சிவா கூறிவிட்டு செல்ல சாவித்ரியும் அவர் பின்னே சென்றார்.

"படிக்கிறதா..அதுகெல்லாம் நிறைய செலவாகுமே..அதெல்லாம் எப்படி திருப்ப கொடுக்குறது.." புதிதாக முளைத்த பிரச்சனையை தனக்குள்ளே பேசிக்கொண்டு அவள் படியேற இருட்டில் கால் தடுமாறியவள் விழப்போகவும் தாங்கியது இரு கரங்கள்..

கண்களை இறுக்க மூடியிருந்த சாரு.. மெதுவாக திறந்து கீழே பார்த்து விட்டு "நல்லவேள விழல்ல.. ஆமா யாரு பிடிச்சாங்க?" என்றவாறு நோக்க அந்த இருளிலும் அந்த கண்களின் சொந்தகாரன் யார் என சாருவிற்கு தெளிவாய்ப்புரிந்தது.

"என்ன இதுதான் பிளானா.. இப்படி நான் வாரத பார்த்து விழுவது போல நடிச்சி..என்ன வலையில சிக்க வைக்கலாம் பார்க்குறயா.. உன்ன பார்த்தாலே தெரியுதே பணத்த கண்டதும் எங்க அப்பாவ உன் பக்கம் இழுத்து கம்பனிக்குள்ளயே வந்துட்ட...அடுத்து என் அம்மாவ வலைச்சி எங்க வீட்டுக்குள்ள.. then இப்போ என்கிட்ட.. இங்க பாரு என்கிட்ட இதெல்லாம் வேளைக்காகாது. " பல்லைக்கடித்துக்கோண்டு இவள் முகத்தருகில் வந்து பேசினான் சக்தி.

"வலயில சிக்குறதுக்கு நீ என்ன மீனா.. ஆமா இவர் பெரிய இளவரசரு.. இது இவரோட கோட்ட.. நாங்க வலச்சி போட்டுட வந்துட்டம்..நான் நடிச்சி விழுந்தேன்னா நீ எதுக்கு என்ன பிடிச்ச வந்து.?"
அவள் கேட்ட அடுத்த கணம் தொப்பென படியில் இருந்தாள் சாரு..

"மைன்ட் இட் இன்னும் ஒரு வாரத்துல நீ யாருன்னு எல்லாருக்கும் காட்டி உன்ன இங்க இருந்த விரட்டல்ல என் பெயர் சக்தி இல்ல"
அவன் அவளருகில் குனிந்து கையை தட்டி கூறிவிட்டு தொடர்ந்து படியேற..விழுந்ததில் அடிபட்ட வலியில் இருந்தவளுக்கு இன்னும் கோபம் வர..

"ஆமா பேசாமா இடியட்ன்னே மாத்திக்கோ.." இவள் பின்னால் முனுமுனுக்க..நல்லவேளை அவன் அவள் கூறியாது கேட்காத தொலைவிற்கு மேல்தளத்தை அடைந்திருந்தான்.

Continue Reading

You'll Also Like

107K 3.3K 40
Mull methu vizhuntha panni thuzhi udaiuma karaiuma??? aduthu enna nadakum yennru theriyamal payanikum eru thuruvangal:-) onnru seruma???
18K 1.6K 42
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
49.9K 2.1K 16
தன் வீட்டில் தங்கி இருக்கும் அஷ்வின் என்னும் இளைஞன் வினோதமாக நடந்து கொள்வதை கவனிக்கிறாள் சஞ்சனா.அவன் மர்மத்தை தெரிந்து கொள்ளும் போது அவனை வெறுப்பாளா...
255K 9.7K 40
கனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..