Completed - Marukkathe Nee Ma...

By niharikanivas

29.2K 3.3K 5.3K

Sudum Nilavu Sudatha Suriyan - Part 2 More

Marakkathe Nee Marukkathe Nee - Prologue
Marukkathe Nee Marakkathe Nee - 1
Marukkathe Nee Marakkathe Nee - 2
Marukkathe Nee Marakkathe Nee - 3
Marukkathe Nee Marakaathe Nee - 4
Marukkathe Nee Marakkathe Nee - 5
Marukkathe Nee Marakkaathe Nee - 6
Marukkathe Nee Marakkathe Nee - 7
Marukkathe Nee Marakkathe Nee - 8
Marakkathe Nee Marukkathe Nee - 9
Marukkathe Nee Marakkathe Nee - 10
Marukkathe Nee Marakkathe Nee - 11
Marukkathe Nee Marakkathe Nee - 12
Marukkathe Nee Marakkathe Nee - 13
Marukkathe Nee Marakkathe Nee - 14
Marukkathe Nee Marakkathe Nee - 15
Marukkathe Nee Marakkathe Nee - 16
Marukkathe Nee Marakkathe Nee - 17
Marukkathe Nee Marakkathe Nee - 19
Marukkathe Nee Marakkathe Nee - 20
Marakkathe Nee Marukkathe Nee -21
Marukkathe Nee Marakkathe Nee - 22
Marakkathe Nee Marukkathe Nee -23
Marakkuthe Nee Marakkathe Nee 24
Marukkathe Nee Marakkathe Nee - 25
Marukkathe Nee Marakkathe Nee - 26
Marukkathe Nee Marakkathe Nee - 27
Marukkathe Nee Marakkathe Nee - 28
Marukkathe Nee Marakkathe Nee - 29
Marukkathe Nee Marakkathe Nee - 30
Marukkathe Nee Marakkathe Nee - 31
Marukkathe Nee Marakkathe Nee - 32

Marukkathe Nee Marakkathe Nee - 18

696 101 214
By niharikanivas

மறக்காதே நீ மறுக்காதே நீ - 18
பன்னிரண்டாம் நாள்...

காலை பத்து மணி..

"ஹாய் ஸ்ம்ரு" என உள்ளே வந்த யதுநந்தன் அடர்ந்த நீலத்தில் வெள்ளை கோடுகள் போட்ட டீ ஷர்ட் அணிந்திருந்தான்.

"ஹலோ" என அவனை நிமிர்ந்து பார்த்து சொன்ன ஸ்மிருதி, தனது எதிரே இருந்த இருக்கையை காட்டினாள்.

தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து இரண்டு டைரி மில்க் சாக்லேட் பாரை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அதை கையில் வாங்காமல் அவனையே கூர்மையாக பார்த்தாள்.

"சாக்லேட்ஸ்..." என சொன்னவனிடம், "எதுக்கு" என்ற நிதானமான குரலில் கேட்டாள்.

"நேத்து ஃபிளவர்ஸ் எடுத்திட்டு வந்தேன், இன்னிக்கு நீ சொல்ல போற ஸ்வீட் நியூஸ்ஸை செலிபரேட் செய்யறதுக்கு சம்திங் ஸ்வீட்" என தோளை குலுக்கினான்.

"நான் என்ன பதில் சொல்ல போறேனு உங்களுக்கு எப்படி தெரியும்?" என உணர்ச்சியற்ற குரலில் கேட்டாள்.

"உனக்கு என்னை பிடிக்கலைனா, உங்க ஆபிஸ் வாசலில் இருக்கிற செக்யூரிட்டியே என்னை திருப்பி அனுப்பிச்சியிருப்பான். உள்ளே வரும் போது ஃபிரண்ட் டெஸ்கில் இருந்த பொண்ணு, பிங்க் லிப்கிளாஸ் போட்ட்ருந்தாளே அவ பேரு என்ன? ஹம்ம் மேக்னா, அவ என்னை உள்ளே விட்டிருக்க மாட்டாள்" என் சாய்ந்து அமர்ந்தபடி சொன்னான்.

அவன் முகத்தை ஆராய்ந்தவள், "மிஸ்டர் யதுநந்தன், நீங்க பிரபோஸ் பண்ண விதம் பிடிச்சிருந்தது" என்றவளிடம், "என்னை எல்லாருக்கும் பிடிக்கும். உனக்கும் என்னை பிடிக்கும்னு தெரியும் ஸ்வீட்டி. நான் அப்பா அம்மாவை உங்க வீட்டுக்கு இன்னிக்கு போக சொல்றேன்" என கண்கள் மின்ன சொன்னான்.

"ஸாரி, உங்க பிரபோஸ பண்ண ஸ்டைல் தான் பிடிச்சிருக்கு என்று சொன்னேன். பிரபோஸல் பிடிச்சிருக்கு என்று சொல்லலை" என ஆழ்ந்த குரலில் சொன்னாள்.

"என்னை ஏன் பிடிக்கலை ஸ்மிருதி. நல்லா படிச்சிருக்கேன், வொர்க் பண்ணறேன், உன்னை நல்லா வைச்சிக்கிற அளவு வசதியிருக்கு. எல்லாத்துக்கும் மேலே, ஐ லுக் ஹான்ட்சம். என்னை பிடிக்கலைங்கிறதுக்கு ஒரு காரணம் சொல்லுங்க" என அமர்த்தலாக சொன்னான்.

"நந்தன், இன்னும் உங்களை ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுட்டிங்க. நீங்க ரொம்ப நேர்மையானவர். மத்தவங்களுக்காக நடிக்கறதில்லை. உங்க இணைய விவரங்களை எனக்கு கொடுத்திருந்தீங்க. அதிலே என்ன இருக்குனு உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சும் தைரியமா ஷேர் பண்ணிங்க" என பாராட்டும் விதமாக சொன்னாள்.

"தாங்க்ஸ், ஸ்மிரு. அப்பறம் என்ன பிரச்சனை?" என கண்கள் மின்ன கேட்டான்.

"நந்தன், நாளைக்கு சம்யுவிற்கும் சித்தார்த்துக்கும் கல்யாணம் நடந்தா நாம் நிறைய மீட் செய்ய வேண்டியிருக்கும். உங்களை கல்யாணம் செஞ்சுக்க தான் முடியாதே தவிர, நாம நல்ல நண்பர்களா இருக்கலாம்" என புன்னகையுடன் முடித்தாள்.

"ஸ்மிருதி, உங்களுக்கு என்னை ஏன் பிடிக்கலை?' என ஆழ்ந்த குரலில் கேட்டான்.

"நந்தன், உங்களை பிடிக்கலை என்று சொல்லவே இல்லை. ஐ லைக் யூ, வீ கேன் பீ குட் ஃபிரண்ட்ஸ்" என்றான்.

"ஸ்மிருதி" என இளகிய குரலில் அழைத்தவன், "நான் பிரண்ட் ஷிப்புக்காக இங்கே வரலை. நான் உன்னை கல்யாணம் செஞ்சிக்க தான் கேட்டேன். வேண்டாம்னு மறுக்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. என்ன காரணம் என்று தெரிஞ்சா, நல்லாயிருக்கும்" என்றான்.

"ஒகே, எனக்கு உங்க ஹானஸ்ட்டி ரொம்ப பிடிச்சிருக்கு நந்தன்" ஏன சொன்னவளிடம், "அதை ஏற்கனவே சொல்லிட்டே. அது தான் என்னை பிடிக்காம இருக்கிறதுக்கு காரணமா?" என நமப முடியாமல் கேட்டான்.

தலையசைத்து மறுத்தவள், "எல்லா பொண்ணுங்க மாதிரி, எனக்கும் என் ஹப்பி எப்படியிருக்கணும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கு நந்தன்" என இழுத்தபடி சொன்னாள்

"அதிலே ஒண்ணும் தப்பில்லை ஸ்ம்ரு. எனக்கும் என் வைஃப் பத்தி அப்படி ஒரு கனவு இருந்தது. மித்ரன் கல்யாணத்தில் உன்னை முதல் தடவை பார்த்ததுமே அது நீ தான் என்று தெரிஞ்சிடிச்சு" என உணர்ச்சிகள் நிறைந்த குரலில் சொன்னான்.

"நான் என் வருங்கால கணவர் எப்படியிருக்கனும் என்று என் மனசில் ஒரு உருவம் இருக்கு நந்தன். ஸாரி, நீங்க அந்த உருவத்தோட ஒத்துக் போகலை" என அழுத்தமாக சொன்னாள்.

ஒரு நொடி அவளது கண்களையே பார்த்தவன், கண்களை மூடி தன் தலையை சிலுப்பி கொண்டான்.

"எந்த விதத்தில் நான் அந்த உருவத்தோட ஒத்து போகலை ஸ்மிருதி? ஹைட்டா, வெயிட்டா, கலரா, படிப்பா?" என கேட்டவனது கண்களில் வலி தெரிந்தது.

எப்படி சொல்வதென்று ஒரு நொடி தடுமாறியவள், "நான் பொசஸிவ் டைப் நந்தன்" என மெதுவான குரலில் சொன்னாள்.

அவன் அவளைக் குழப்பமாக பார்க்க, "நான் எங்கப்பா அம்மாவுக்கு ஒரே பொண்ணு நந்தன். எனக்கு பிரதர்ஸ், ஸிஸ்டர்ஸ் யாருமே இல்லை. சம்யுக்தா தவிர, எனக்கு பிரண்ட்ஸு கூட நிறைய பேர் கிடையாது. எல்லா பொண்ணுங்களுக்கு இருக்கிறது தான். ஆனா எனக்கு அது கொஞ்சம் அதிகமாகவே இருக்கு. என் கணவரா வர போறவர் எனக்கு மட்டும் தான். கொஞ்சம் கூட அதில் காம்பரமைஸே கிடையாது" என தன் விரல்களைப் பார்த்தபடி சொன்னாள்.

அவளையே ஒரு நிமிடம் எதுவும் சொல்லாமல் ஆழ்ந்து பார்த்தவன், கண்கள் மின்ன, உதடுகள் புன்னகையில் வளைய, "ஒ காட், ஐ ஆம் ஸோ லக்கி" என கண்களை முடி திறந்தவன், "ஐ லவ் யூ ஸ்மிருதி. யூ ஆர் மை பெட்டர் ஹாஃப்" என சிரித்தபடி சொல்லி விட்டு கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான்.

எதுவும் புரியாமல் அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்மிருதி.

நாளைக்கு பதிப்பிக்க வேண்டிய முக்கியமான அரசியல் கட்டுரையில் கவனம் செலுத்தியிருந்த சம்யுக்தாவை செல்போன் சத்தம் கலைத்தது.

செல்போனில் ஒளிர்ந்த சசிதரனின் எண்ணை பார்த்து சற்றே குழப்பமடைந்தாலும், போனை எடுத்து, "ஹாய் சசி" என்றாள்.

சசிதரன் மாதத்திற்கு ஒரு தடவையோ, இரண்டு தடவையோ அவளுடன் இன்னும் தொடர்பிலிருந்தான். திருமணத்தைப் பற்றி ஒன்றும் பேச விட்டாலும், பொதுவாக பேசி கொண்டு தான் இருந்தனர்.

"ஹாய் சம்யு, வொர்க் எப்படியிருக்கு" என எப்போதும் போல அவர்களது பேச்சு தொடர்ந்தது.

"சம்யு, உன்னை மீட் பண்ணி பேசி ரொம்ப நாளாச்சு. இந்த வீக் ஃப்ரியா இருந்தா சொல்லு" என்றான்.

"இந்த வீக் பிஸியா இருக்கு சசி, நாம அடுத்த வாரம் பார்க்கலாம்" என அவனை இயல்பாக தவிர்த்துவிட்டு, அவனது தந்தையில் உடல்நிலையைப் பற்றி விசாரித்து விட்டு இணைப்பை துண்டித்தாள்.

திடீரென்று சசிதரன் தன்னை ஏன் சந்திக்க வேண்டுமென்று சொல்கிறான் என யோசித்தவள், ஒரு வேளை சித்தார்த் அன்று காரில் சொன்னது போல் இவனுடன் டின்னருக்குச் சென்று, சசிதரனிடம் இவள் திருமணத்தைப் பற்றி பேசியிருப்பானா என யோசித்தாள். சசிதரனை காதலிக்க வில்லை என்று தான் உளறினோமே, அப்படியும் போய் சசியிடம் பேசியிருப்பானா என நினைக்கும் போதே தலை வலிப்பது போலிருந்தது.

சித்தார்த்திடம் நேரடியாகவே கேட்டு விடுவது என நினைத்தவள், அவனது எண்ணை தேடினாள். இன்று அவனிடமிருந்த வந்த குறுஞ்செய்தையை திறந்தாள்.

'குட்மார்னிங் மிஸ் சம்யுக்தா வசந்தன், ஜஸ்ட் ஒன்பது நாட்கள்'

என்று வந்த செய்தியை படித்தவள், இதையும் அனுப்பி விட்டு, ஏன் சசிதரனிடம் போய் பேசினான் என நினைத்தபடி, அவனுக்கு போன் செய்தாள்.

ரிங் போய் கொண்டேயிருக்க, போனை எடுக்காமல் என்ன செய்கிறான் என மனதிற்குள் சித்தார்த்தை சபித்தபடி இணைப்பை துண்டிக்க நினைக்கும் போது, "ஹாய் யுக்தா" என்ற அவனது குரல் மறுமுனையில் கேட்டது.

"வாட் எ சர்ப்ரைஸ் ஹனி. என்னால நம்பவே முடியலை" என அவனது குரலில் வழிந்த மகிழ்ச்சி அவளை ஏதோ செய்தது.

சசியைப் பற்றி கேட்டால் இந்த மனநிலையில் பதில் சொல்வானா மாட்டானா என யோசித்தாள். அவனை பற்றி கேட்பதற்காகவ போன் செய்தாய் என இணைப்பைக் கூட துண்டித்து விடலாம். ஹனி என்று வேறு சொல்கிறான்,, அப்படியானால் இவன் சசியுடன் பேசவில்லையா என நினைக்கும் போதே அவளுக்கு மண்டை காய்ந்தது.

"ஸ்வீட்டி, உன்னை நேத்து நைட் கனவில் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?" என சொன்னவனது குரலில் ஒவ்வொரு வார்த்தையிலும் காதல் தெரிந்தது.

"சித்தார்த்..." என சொன்னவள், அதற்கு மேல் அவனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் மெளனமானாள்.

"ஹ்ம்ம். நேரில் பார்க்கும் போது மட்டும் தான் சித்துவா?" என அவன் கொஞ்சலாக கேட்க, வேகமாக துடித்த இதயத்தை தனது கையால் பற்றி கொண்டாள்.

தன்னை சமன்படுத்தியவள், "நீங்க.." என சொல்லிவிட்டு, வார்த்தைகளுக்காக தடுமாறியவள், "டின்னர்.. போனீ.." என அவள் முடிப்பதற்குள், "யுக்தா, எனக்கு ஹார்ட் அட்டாக் வந்திடும் போலிருக்கு. நானே உன்னை எப்படி டின்னருக்கு கூப்பிடறதுனு யோசிச்சிட்டிருந்தேன். யூ ஆர் மை ஏஞ்சல்" என் சொன்னான்.

"இல்லை சித்தார்த், நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க" என வேகமாக நடுங்கும் குரலிடம் சொன்னவளிடம், "எஸ் க்யூட்டி, நீ ரொம்ப டிரேடிஷ்னல் என்று நான் தான் தப்பா நினைச்சிட்டிருக்கேன். எங்கே போகலாம், உன்னோட ஃபேவரட் இரஸ்டாரண்ட் ஆலிவிஸ் போலாமா? நான் டேபிள் புக் செய்யட்டுமா?" என துள்ளலுடன் அவனது குரல் ஒலித்தது.

சசியிடம் என்ன சொன்னாய் என்று கேட்பதறகாக போன் செய்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டது போல் சித்தார்த்திடம் மாட்டிக் கொண்டாமே என சலிப்படைந்தாள். இப்போது இவன் இருக்கும் மனநிலையில் சசிதரன் என்று சொன்னாலே கட் செய்து விடுவானே என கடுப்பானவள், "சித்தார்த், எனக்கு உங்களோட பேசணும், எங்க ஆபிஸ் பக்கத்திலிருக்கிற காபி ஷாப்பில் மீட் பண்ணலாமா?' என தயங்கியப்படி கேட்டாள்.

இரண்டு நிமிடம் சித்தார்த்திடமிருந்து எந்த பதிலும் வராமல் போக, "சித்தார்த், ஆர் யூ தேர்?" என மெதுவாக கேட்டாள்.

அதற்கும் பதிலில்லாமல போக, "சித்தார்த்.." என சற்று உரத்த குரலில் கூப்பிட, "எஸ் யுக்தா" என்றவனது குரல் எங்கிருந்தோ கேட்பது போல் ஒலித்தது.

"ஆறு மணிக்கு வரேங்களா?" என நிதானமாக கேட்டாள்.

"ஒய் நாட் டின்னர் யுக்தா? உங்க வீட்டில் ஏதாவது சொல்லுவாங்கனு நினைக்கிறியா? நான் ஆண்ட்டி கிட்ட பேசட்டுமா?" என உணர்ச்சியற்ற குரலில் கேட்டான்.

"இல்லை சித்தார்த், எனக்கு இன்னிக்கு" என சொன்னவள், அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியாமல் திக்கியவள், "வீட்டில் வேற வேலை இருக்கு" என கஷடப்பட்டு சொல்லி முடித்தாள்.

"ஒகே ஃபைன், வேலையிருந்தா என்ன செய்ய முடியும், நீ வீட்டுக்குப் போ" என கடுப்பான குரலில் சொன்னான்.

இவனிடமிருந்து எப்படியாவது விஷயத்தை வாங்க வேண்டுமென்று நினைத்தவள், "சித்தார்த், நான் உங்களை இப்பவே பார்க்கணும்" என என்ன சொல்கிறோம் என தெரியாமல் கெஞ்சும் குரலில் சொன்னாள்

"வாவ், ஹனி, என்னாச்சு உனக்கு இன்னிக்கு? டின்னருக்குப் போகலாமானு கேட்கிறே? உடனே பார்க்கணும்னு சொல்றே? ஏதாவது ரொமாண்டிக் படம் பார்த்தியா?' என உல்லாசமான குரலில் கேட்டான்.

தான் நன்றாக சொதப்பியதை உணர்ந்தவள், "இன்னிக்கு காப்பி ஷாப் வரீங்களா?" என மறுபடியும் கெஞ்சலாக கேட்டாள்.

"ஸாரி ஸ்வீட்டி, நீ இன்னிக்கு பிஸியா இருக்கே. இத்தனை நான் காத்திருந்திட்டேன். ஜஸ்ட் இன்னும் ஒரு நாள் தானே. நாளைக்கே நாம ரிலாகஸ்டா டின்னர் போகலாம். இப்பவே டேபிள் புக் பண்ணிடறேன். ரூஃப் டாப் கார்டன், காண்டில் லைட் டின்னர்" என சிரித்தபடி சொன்னான் சித்தார்த்.

Continue Reading

You'll Also Like

52.1K 2.9K 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்...
200K 5.3K 130
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...
46.5K 1.5K 35
உதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்...
643K 17.1K 53
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்கள...