விடாமல் துரத்துராளே!!

Da RajalakshmiM6

81K 2.5K 628

திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா... Altro

விடமால் துரத்துராளே
விடாமல் துரத்துராளே 1
விடாமல் துரத்துராளே!! 2
விடாமல் துரத்துராளே!! 3
விடாமல் துரத்துராளே!! 4
விடாமல் துரத்துராளே!! 5
விடாமல் துரத்துராளே!! 6
விடாமல் துரத்துராளே!! 7
விடாமல் துரத்துராளே!! 8
விடாமல் துரத்துராளே!! 9
விடாமல் துரத்துராளே!! 10
விடாமல் துரத்துராளே!! 11
விடாமல் துரத்துராளே!! 12
விடாமல் துரத்துராளே!! 13
விடாமல் துரத்துராளே 14
விடாமல் துரத்துராளே 15
விடாமல் துரத்துராளே 16
விடாமல் துரத்துராளே 17
விடாமல் துரத்துராளே 18
விடாமல் துரத்துராளே 19
விடாமல் துரத்துராளே 20
விடாமல் துரத்துராளே 21
விடாமல் துரத்துராளே 22
விடாமல் துரத்துராளே 23
விடாமல் துரத்துராளே 24
விடாமல் துரத்துராளே 25
விடாமல் துரத்துராளே 26
விடாமல் துரத்துராளே 27
விடாமல் துரத்துராளே 28
விடாமல் துரத்துராளே 29
விடாமல் துரத்துராளே 30
விடாமல் துரத்துராளே 31
விடாமல் துரத்துராளே 32
விடாமல் துரத்துராளே 33
விடாமல் துரத்துராளே 34
விடாமல் துரத்துராளே 35
விடாமல் துரத்துராளே 36
விடாமல் துரத்துராளே 37
விடாமல் துரத்துராளே 38
விடாமல் துரத்துராளே 39
விடாமல் துரத்துராளே 41
விடாமல் துரத்துராளே 42
விடாமல் துரத்துராளே 43
விடாமல் துரத்துராளே 44
விடாமல் துரத்துராளே 45

விடாமல் துரத்துராளே 40

1.6K 68 9
Da RajalakshmiM6

விடாமல் துரத்துராளே 40

மறு நாள் ஹரிணி தன் அறையில் அமர்ந்து எதையோ படித்து கொண்டு இருந்தாள்.. அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்க எழுந்து போய் திறக்க,
அடுத்த செகண்ட் விழிகள் அதிர்ச்சியில் கோழி முட்டை சைஸ் விரிந்தது‌‌.. 

கதவை திறந்த மாத்திரத்தில் உள்ள வந்த ஹர்ஷா அவளின் இடுப்பை வளைத்து அன்று பாதியில் விட்ட முத்தத்தை தொடர ஆரம்பித்தான்.. இவன் எப்புடி இங்க என்ற அதிர்ச்சியில் அவளுக்கு மூளையே வேலை செய்ய மறுத்தது.‌..

ஹர்ஷாவோ நிறுத்தி நிதானமாக இதழை சுவைத்து முடித்து அவள் மூச்சு விட சிரமப்படும் போது அவளை விட்டவன், அவளை அணைத்தப்படியே இன்னும் அதிர்ச்சி விலகாமல் நின்றவளை தன் முகம் பார்க்க செய்தவன்,

அன்னைக்கு சொன்னியே ஒரு வார்த்தை நான் உன்னை அப்புடி நினைச்சு தொடுறது இல்லை.. உன்னை நான் என் லவ்வரா வொய்ஃப்பா நினைச்சு தான் தொடுறேன். அதை நான் உணர்ந்ததே நீ என்னை அடிச்சிட்டு போன அப்புறம் தான்… இந்த மாதிரி உன்கிட்ட நடந்ததுக்க எனக்கு எல்லாவிதமான உரிமையும் இருக்கு, எனக்கு மட்டும் தான் இருக்கு, உன்னை நெருங்க எனக்கு  யாரோட பர்மிசனும் தேவையில்லை உன் பர்மிசன் உள்பட என்றவன் சிலையாக நின்றிருந்தவளின் கன்னத்தில் மீண்டும் முத்தமிட்டு வெளியேறினான்…

அவன் செய்த செயல் பேசிய வார்த்தைகள் புத்திக்கு உரைக்கவே சில நொடி பிடித்தது… அச்சோ என்று  தலையில் அடித்த ஹரிணி பயத்துடன் பக்கவாட்டில் திரும்பி பார்த்தாள்‌.. ஏனெனில் தியாவும் அவளுடன் அந்த அறையில் இருந்தாள்.. நடந்தது அனைத்தையும் அவள் பார்த்து இருப்பாளே என்ன நினைப்பாளோ என்ற பயம்‌.. ஹரிணி நினைத்தது போலவே தியா பயங்கர கோவத்துடன் ஹரிணியை முறைத்து கொண்டு இருந்தாள்..

தியாமா நான் உன்கிட்ட ஹரிணி விளக்கம் கொடுக்க ஆரம்பிப்பதற்குள் தியா தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கோவமாக அறையை விட்டு வெளியேறினாள்…

ஹாலில் போடப்பட்டு இருந்த ஷோபாவில் நடுநாயகமாக அமர்ந்து இருந்தான் ஹர்ஷா.. ஹரிணி அறையிலிருந்து வெளி வந்த தியாவை பார்த்து அவனுக்குமே சிறு அதிர்ச்சி தான்.  இவ்வளவு நேரம் இவளும் உள்ள தான் இருந்தாளா, அப்ப எல்லாத்தையும் பார்த்து இருப்பாளா, ச்சே பக்கத்தில்ல யாரு இருக்காங்கன்னு கூட கவனிக்காம ஹர்ஷா என்று  ஒரு மாதிரி முதலில் கூச்சமாக இருந்தாலும், தியா முன்பு அதை காட்ட கூடாது என்று தெனாவட்டாக அமர்ந்து இருந்தான்.. அவனை விட தெனாவட்டாக  பார்த்தாள் தியா..

இந்தாங்க டாக்டர் தம்பி காபி என்றபடி கிச்சனில் இருந்து ஹாலுக்கு வந்தார் ஹரிணியின் பாட்டி… ஹர்ஷாவுக்கு காபி கோப்பை கொடுத்து விட்டு திரும்பியவர் அங்கு நின்றிருந்த தியாவையும் ஹரிணியையும்  பார்த்தவர்,

ஹரிணி தியா இரண்டு பேரும்  இங்க வாங்க என்று அழைத்தார்

தம்பி இது என் பேத்தி ஹர்ஷாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்

தெரியுமே, அன்னைக்கு உங்க கூட வந்தது இவங்க தானே நல்லா நியாபகம் இருக்கு பாட்டி என்று ஹர்ஷா கூறியதும் சிரித்த பாட்டி,

ஆஹா அப்பறம் இது தியா என் பேத்தியோட ப்ரெண்ட் இரண்டு பேரும் சின்ன புள்ளைங்கள இருந்து ஒன்னாவே தான் இருப்பாங்க என்ற பாட்டி தியாவிடம்,

தியாமா உனக்கு இவங்க யாருன்னு தெரியாதுல்ல, இவர் பெரிய டாக்டர் பேர் என்னவோ அர் அர் ஹர்ஷா என்ற பெயர் பாட்டிக்கு சொல்ல வரவில்லை..

ஹர்ஷா என்று தன் பெயரை இந்த பாட்டி கொலை செய்வதற்கு முன்பு தானே சொல்லி கொண்டான்..

ஆ…. அது தான் பேரு தம்பி ரொம்ப நல்ல தம்பி தெரியுமே, டாக்டர்ன்னு பந்தா கொஞ்சம் கூட கிடையாது.. இப்ப நான் வெளியே போய் இருந்தேன்ல, வீட்டுக்கு வரதுக்கு ஆட்டோ எதுவும் கிடைக்கலைன்னு வீடு பக்கம் தானேன்னு நடந்து வந்துட்டு இருந்தேன். அப்ப கார்ல போய்டு இருந்த தம்பி என்னை பார்த்ததும் காரை விட்டு இறங்கி வெளியில்ல ஏன் பாட்டி நடக்குறீங்க.. வாங்க நான் கொண்டு போய் வீட்டுல விடுறேன்னு சொல்லி வம்படியா கூட்டிட்டு வந்துட்டாப்புல,

அவன் எப்புடி வீட்டுக்கு வந்தான் என்பது ஹரிணிக்கு புரிந்தது…

தான் கிட்ட  வைத்தியம் பார்க்கிறவங்க மேல்ல டாக்டர் தம்பிக்கு எவ்வளவு அக்கறை இருக்கு பார்த்தியா தியா என்றார் பாட்டி..

ஆமா ஆமா ரொம்ப அக்கறை தான் பாட்டி ஹரிணியை முறைத்தபடி இழுவையாக கூறிய தியா நானீ கிளம்புறேன் பாட்டி எனக்கு வேலை இருக்கு என்று பாட்டியிடம் கூறி விட்டு ஹரிணியை முறைத்தபடி அங்கிருந்து கிளம்பிய கதையை தான் தன் அண்ணன் சூர்யாவிடம் கூறி முடித்தாள்…

கதையை கேட்டு முடித்த சூர்யா என்னது வில்லன் குரூப்ல இருக்க ஹர்ஷா ஹீரோ குரூப்ல இருக்க ஹரிணியை லவ் பண்றான்னா என கேட்டான்.

ம்… ஆமா என்பது போல் தியா தலை அசைத்தாள்…

அப்ப ஹரிணியும் அவனை லவ் பண்ணுதா,

தெரியல

என்ன பாப்பு தெரியலைன்னு சொல்ற, ஏன் ஹரிணி உன்கிட்ட சொல்லலையா?

டேய் லூசு அண்ணா நீ என்ன கதை கேட்ட,  அவ என்கிட்ட இதை  மறைச்சிட்டாங்கிற கோவத்தில்ல தானே நானே வந்தேன்…

அதுக்கு அப்புறமா ஹரிணி கிட்ட நீ கேட்கலையா?

நான் அவ மேல்ல கோவமா இருக்கேன் பேசியே இரண்டு மூணு நாளாச்சு

பாப்பு ஹரிணி பாவம்ல நீ பேசலைன்னு வருத்தப்படுவா

நல்லா வருத்தப்படட்டும் என்கிட்ட  இருந்து மறைக்க தெரிஞ்துல்ல. அதை விஷயத்தை விடு நேர்ல பார்க்கும் போது நாங்களே சமாதானம் ஆகிருவோம் என்றாள்..

நண்பர்களுக்குள் ஏற்படும் வருத்தம் சண்டைகளுக்கு ஆயுள் குறைவு என்பது அவன் அறிந்தது தானே அவனும் தேவாவும் போடாத சண்டையா என்று நினைத்தான்…

சரி விஷயத்துக்கு வா பாப்பு இந்த கதைக்கும் நீ மகேஸ்வரன் கிட்ட ஹர்ஷா ஹெல்ப் பண்ண போறான் சொன்னியே அது எப்புடி?
ஒரு வேளை நீ எங்களுக்கு ஹெல்ப் பண்ணி தான் என் ப்ரெண்ட்டை உனக்கு கட்டி தருவேன்னு நேரம் பேச போறீயா பாப்பு

என்னை பார்த்தா என் ப்ரெண்ட் வாழ்க்கையை வச்சு நேரம் பேசுறவ மாதிரியாடா அண்ணா  தெரியுது என்று சூர்யா தலையில் கொட்டினாள்..

ஆ… என் தன் தலையை தடவிய சூர்யா அப்புறம் என்ன பாப்பு பண்ண போற ஹர்ஷாவுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் கேள்வியாக தியா முகத்தை பார்த்தான்…

ஒரு சம்பந்தமும் இல்லடா அண்ணா… அது எப்புடி டா அண்ணா ஹர்ஷா அவங்க மாமாவுக்கு எதிரா செயல்படுவான். அது எல்லாம் பண்ண மாட்டான்… நான் சும்மா தான்டா அந்த ஹிந்தி சீரியல் வில்லன் மகேஸ்வரன் கிட்ட ஹர்ஷா தான் எனக்கு உதவி பண்ண போறான்னு சொன்னேன்…

என்னை ரொம்ப குழப்புற பாப்பு

இப்புடி தான் அந்த ஆளும் குழம்பி போகனும்னு தான் அப்புடி பேசிட்டு வந்தேன்டா அண்ணா… உன்னை போலவே தான் அந்த மகேஸ்வரனும் நான் ஏன் ஹர்ஷா பேரை சொன்னேன் ஹர்ஷாவுக்கும் இந்த விஷயத்திற்கும் என்ன சம்மந்தம் அப்புடின்னு யோசிச்சு யோசிச்சு குழம்பி போய் இருப்பார்ல..

பொதுவா இந்த மனசு இருக்கே மனசு அது ஒன்னும் இல்லாத விஷயத்தையே யோசிக்க யோசிக்க அது இப்புடி இருக்குமோ அப்புடி இருக்குமோன்னு சின்ன விஷயத்தை கூட பூதாகரமாக காண்பிச்சு நம்மளை குழப்பும்… அந்த மாதிரி தான் மகேஸ்வரனும் ஹர்ஷா விஷயத்தை யோசிச்சு யோசிச்சு குழம்புவார்… ஹர்ஷாவை மேல்ல சந்தேகம் வரும்… பத்தாகுறைக்கு ஹர்ஷா ஹரிணியை லவ் பண்றான்… அதனாலயே அவர் ஹர்ஷா நம்ம பக்கம் சாஞ்சிருவானோன்னு பயங்கரமா குழம்புவார்… அப்புடி அவர் குழப்புற சமயம்  குழப்பத்தில்ல ஏதாவது சின்ன தப்பை செய்வார்… அதை மட்டும் நாமா கெட்டியா புடிச்சிக்கிட்டோம் வையேன்… அதை வச்சே பாவா மேல்ல விழுந்த பழியை துடைக்குறோம்.. 

தியா கூறியது போன்று தான் மகேஸ்வரனும் முதலில் தியா பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவர் நேரம் போக போக எதுவும் இல்லாமா எப்புடி அந்த பொண்ணு இவ்வளோ கான்ஃபிடன்ட்டா பேசுவா என்று யோசித்தவர் கைகள் தானாக ஹர்ஷாவின் கேபின்  சிசிடிவி புட்டேஜ்ஜை செக் செய்தது… அதில் ஹர்ஷா ஹரிணியை முத்தமிட்டது பதிலுக்கு அவள் அறைந்தது என அனைத்தையும் பார்த்தவர், ஹர்ஷா இந்த பொண்ணுக்கிட்ட ஏன் இப்புடி நடந்துக்கிறான்.. ஒரு வேளை அந்த பொண்ணை லவ் பண்றான்னா, இதை வச்சு தான் அந்த தியா அவ்ளோ தைரியமா வந்து என்கிட்ட பேசிட்டு போனாளோ, ஹர்ஷா இந்த பொண்ணுக்காக அவங்க கூட சேர்ந்து ஹாஸ்பிடலுக்கும் நமக்கும் எதிரா மாறிடுவானோ என்ற எண்ணம் எழுந்தது.. ச்சே ச்சே ஹர்ஷாவுக்கு  என் மேல்ல ரொம்ப நிறைய அன்பும் மரியாதையும் இருக்கு அதனால்ல நம்மளை மீறி போக மாட்டான்… நான் இந்த பொண்ணு உனக்கு வேண்டாம் நான் சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ சொன்னா அந்த வார்த்தையை அவன் கண்டிப்பா மீற மாட்டான் என்ற ஹர்ஷா மீது எவ்வளவு அளவு கடந்த நம்பிக்கையை  வைத்தாலும் அடி மனதில் தியா கூறியது போன்ற குழப்பமும் இருக்க தான் செய்தது..

எப்புடி என் ஐடியா இரண்டு  புருவத்தையும் உயர்த்தி தியா சூர்யாவிடம்  கேட்டாள்…

பாப்பு உனக்குள்ள இம்புட்டு அறிவா இத்தனை நாளா இந்த அறிவா எங்கடா ஒளிச்சு வச்சு இருந்த,

எனக்குள்ளேயே தான் இருந்துச்சு நேரம் வரும் போது வெளிய விடலாம்ன்னு வச்சு இருந்தேன்டா அண்ணா என்றவளின் தலையை பிடித்து ஆட்டியவன்

பாப்பு இன்னும் இரண்டு நாள்ல உன் பர்த் டே தானே

ம்… ஆமா

உன் பாவாவுக்கு சொல்லிட்டியா?

இன்னும் இல்ல இந்த கொடுமையை பார்த்தியாடா அண்ணா உன் ப்ரெண்ட்டுக்கு பொண்டாட்டி பிறந்த நாள் கூட தெரியலை நானே சொல்ல வேண்டியதா இருக்கு

தெரிஞ்சா மட்டும் அப்புடியே சர்ப்ரைஸ் பார்ட்டி பண்ணி கிஃப்ட் மழையில்ல உன்னை நனைக்க போறா மாதிரி பேசுறீயே பாப்பு என்றவனின் வயித்தில் குத்தியவள் என் பாவா கிண்டல் பண்ணுனே கொன்றுருவேன் ஓடிரு…

இரண்டு நாள் கழித்து தியா பிறந்த நாளன்று

கண்ணாடி முன்பு நின்று தலையை வாரி மொத்த முடிக்கும் சேர்த்து ஒரு கிளிப் மாட்டியவள்  பேக்கை மாட்டி கொண்டு  அறையை விட்டு வெளி வந்தவள் ஹாலில் இருந்த தேவாவின் ஒரு வார்த்தை கூட சொல்லாமால் ஏன் அவனை திரும்பி கூட பார்க்கமால் விடிய விடிய அழுது வீங்கி போன முகத்துடனும் சிவந்த கண்களோடும் காலை ஏழு மணிக்கே கல்லூரிக்கு கிளம்பினாள்.. இதுக்கு எல்லாம் காரணமான தேவாவோ செல்லும் அவளை கண்டு கொள்ளாமல் தன் வேலையில் கவனமாக இருந்தான்…

Continua a leggere

Ti piacerà anche

204K 5.4K 131
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...
18.7K 464 8
காதல் கொண்டு மனம் புரிந்த கணவன் திடீரென்று இறக்க கயல்விழிக்கு ஏற்படும் திகில் நிறைந்த நிகழ்வுகளே இக்கதை.
150K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
255K 9.7K 40
கனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..