விடாமல் துரத்துராளே!!

By RajalakshmiM6

81K 2.5K 628

திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா... More

விடமால் துரத்துராளே
விடாமல் துரத்துராளே 1
விடாமல் துரத்துராளே!! 2
விடாமல் துரத்துராளே!! 3
விடாமல் துரத்துராளே!! 4
விடாமல் துரத்துராளே!! 5
விடாமல் துரத்துராளே!! 6
விடாமல் துரத்துராளே!! 7
விடாமல் துரத்துராளே!! 8
விடாமல் துரத்துராளே!! 9
விடாமல் துரத்துராளே!! 10
விடாமல் துரத்துராளே!! 11
விடாமல் துரத்துராளே!! 12
விடாமல் துரத்துராளே!! 13
விடாமல் துரத்துராளே 14
விடாமல் துரத்துராளே 15
விடாமல் துரத்துராளே 16
விடாமல் துரத்துராளே 17
விடாமல் துரத்துராளே 18
விடாமல் துரத்துராளே 19
விடாமல் துரத்துராளே 20
விடாமல் துரத்துராளே 21
விடாமல் துரத்துராளே 22
விடாமல் துரத்துராளே 23
விடாமல் துரத்துராளே 24
விடாமல் துரத்துராளே 25
விடாமல் துரத்துராளே 26
விடாமல் துரத்துராளே 27
விடாமல் துரத்துராளே 28
விடாமல் துரத்துராளே 29
விடாமல் துரத்துராளே 30
விடாமல் துரத்துராளே 31
விடாமல் துரத்துராளே 32
விடாமல் துரத்துராளே 33
விடாமல் துரத்துராளே 34
விடாமல் துரத்துராளே 35
விடாமல் துரத்துராளே 36
விடாமல் துரத்துராளே 37
விடாமல் துரத்துராளே 39
விடாமல் துரத்துராளே 40
விடாமல் துரத்துராளே 41
விடாமல் துரத்துராளே 42
விடாமல் துரத்துராளே 43
விடாமல் துரத்துராளே 44
விடாமல் துரத்துராளே 45

விடாமல் துரத்துராளே 38

1.5K 55 12
By RajalakshmiM6


விடாமல் துரத்துராளே 38

11 மாதங்களுக்கு முன்பு

டேய் அண்ணா வேற வழியே இல்லையாடா

ம்ஹூம் எதுவும் இல்லை என்பது போல சூர்யா தலை ஆட்டினான்.. தேவா மீது தப்பு இல்லை என்பதை நிரூபிக்க ஏதாவது வழி இருக்கா என தியா கேட்டதற்கு தான் சூர்யா இல்லை என தலை அசைத்தான்..

ப்ம்ச் என் தியா சலித்து கொண்டாள்.. 

 பாப்பு ஊசி நுழையுற அளவு சின்ன இடம் இருந்தா கூட நான்  இத்தனை வருஷமா விட்டு வச்சு இருப்பேனா சொல்லு பார்க்கலாம்.

ஹாஸ்பிடலுக்குள்ள  இப்புடி ஒரு ஒரு தப்பு  நடக்குதுன்னே எனக்கு தேவா சொல்லி தான் தெரியும்.. அதுவரை அங்கே இப்படி ஒரு தப்பு நடந்ததுன்னு எனக்கு ஏன்  யாருக்குமே தெரியாது பாப்பு…  அந்த சம்பவம் நடக்கும்போது அந்த ரூம்ல இருந்தவங்க ஜீவா இறந்து போயிட்டான்…  திவேஷ் பையன் கழுத்தை அறுத்து கேட்டா  கூட எந்த ஒரு விஷயத்தையும் சொல்ல மாட்டான்… காரணம்  வெண்ணிலாவுக்கு விஷயம் வெளியே தெரிஞ்சுட்டா தன்னை விட்டு போயிடு வான்னு பயம். அதனால்ல அவனை கொன்றே போட்ட கூட  அவன் வெளிய சொல்ல போறது கிடையாது..‌ அப்புறம் அங்கிருந்த மத்த டாக்டர் நர்ஸ்  எல்லாரையும் அந்த மகேஸ்வரன் எங்கு எங்கேயோ அனுப்பியிருக்கான். அவங்க எங்க இருக்காங்கன்னு டீடைல் கூட யாருக்குமே தெரியாது… அப்படியே அவங்க இருக்குற இடம் தெரிஞ்சுனாலும் போய் அவங்க கிட்ட நீ செஞ்ச தப்பை ஒத்துக்கோன்னு சொன்னாலும் யாரும் ஒத்துக்க போறதில்லை.  இன்னொன்னு மகேஸ்வரன் அவன் எந்த ஜென்மத்திலும் அங்கு நடந்தது அவன் வெளியே வெளியே சொல்ல போறது கிடையாது.. அந்த மகேஸ்வரன் சரியான கேடி பையன் பாப்பு கேஸ் முடிஞ்ச உடனே அந்த அந்த சம்பவம் நடந்த பில்டிங்கிலேயே ஆல்ட்ரேஷன் பண்றேன் ஆல்ட்ரேஷன் பண்றேங்கிற பேரில்ல இடிச்சு புதுசா கட்டிட்டான்…  அதனால நீ நினைக்கிற மாதிரி தேவா மேல்ல தப்பு இல்ல அப்படின்னு சொல்லி நிரூபிக்கிறது என்கிறது ரொம்ப கஷ்டம் பாப்பு..

அண்ணா பாவா காப்பத்துனாங்களே அவங்க தியா முடிப்பதற்குள்,

அதை தானே பாப்பு இப்ப சொன்னேன் அது யார்னு அந்த ரூம்ல இருந்தவங்களுக்கு மட்டும் தான் தெரியும்.. அது ஒரு பொண்ணுங்கிறது மட்டும் தான் தேவாவிற்கே தெரியும்.. அவனும் சரியா பார்க்கலைன்னு தான் சொன்னான். அதை விட அந்த பொண்ணை இவனுங்க உயிரோட விட்டுருப்பானுங்கிற நம்பிக்கையே எனக்கு இல்ல பாப்பு..

அட போடா அண்ணா நீ சுத்த வேஸ்ட்.. ஏய் போலீஸ் என்ன வந்ததிலிருந்து கல்லு மாதிரி உக்காந்துட்டு இருக்க ஏதாவது ஒரு ஐடியா கொடுடா அருகில் இருந்த சபரியிடம் கேட்டாள்.  

அதை தான் மச்சான் நானும் யோசிச்சிட்டு இருக்கேன்.. ஒரு ஐடியாவும் கிடைக்க மாட்டேங்குது.

தூ… நீயெல்லாம் போலீஸ்ன்னு வெளிய சொல்லிக்காத,

மச்சான் ஆரோக்கியம் ஹாஸ்பிடல்ல ஐந்து வருஷத்துக்கு முன்னாடி தப்பு நடந்து இருக்குன்னு மட்டும் தான் நமக்கு தெரியும்..  அந்த தப்பு நடந்து ஐந்து வருஷத்துக்கு மேலாகுது.. தப்பு செஞ்சவன் இப்ப  உயிரோட இல்லை. அவனால்ல பாதிக்கப்பட்டவங்க யார் யாருன்னு நமக்கு தெரியாது.. அவங்களும் இப்ப உயிரோட இல்லை. அவங்க குடும்பத்து ஆளுங்க யார் யார்னு நமக்கு தெரியாது.. தப்பு நடந்த இடத்திற்கு நம்ம யாரலையும் போக முடியாது. ஏன் தப்பு நடந்த  இடத்தையே அழிச்சு புதுசா மாத்திட்டாங்க.‌. இப்புடி எல்லா பக்கமுமே சுவர் வச்சு அடைச்ச மாறி இருக்கும் போது நாமா எங்கிருந்து மச்சான் தொடங்குறது… எனக்கு நீ நினைக்கிறது நடக்குமாங்கிறது டவுட்டா தான் மச்சான் இருக்கு.

அடச்சீ ஆரம்பத்தில்லே அபசகுணமா வாயை வைக்காதடா… நீ சொன்ன மாதிரி எல்லா பக்கமும் சுவர் வச்சு தான் அடைச்சு இருக்கு தான்… நான் இல்லைன்னு சொல்லல… ஆனா எங்க சார் ஒரு விஷயத்தை அடிக்கடி சொல்லுவாங்க…  தப்பு செய்றவங்க அவங்க எவ்வளவு பெரிய மூளைக்காரன் அதிபுத்திசாலியா இருந்தா கூட ஏதாவது ஒரு சின்னதா ஒரு நூல் அளவு மிஸ்டேகாவது பண்ணி இருப்பாங்க.. அந்த சின்ன நூல் எதுங்கிறதை கண்டுபிடிச்சு  சரியா பிடிச்சிட்டா போதும் அந்த கேஸே முடிச்சிரும்னு சொல்வாங்க. அதே போல தான்டா இதுலையும் ஏதாவது ஒரு சின்ன விஷயம் இருக்கும் அதை மட்டும் நாமா பிடிச்சிட்டா போதும்.. எல்லாமே சால்வ் பண்ணிடலாம்.. 

அந்த நூல் எங்க இருக்கும் இப்போது கேட்டது ஹரிணி. 

அதை தான் நாமா இப்ப கண்டுபிடிக்கனும்… சூர்யா அண்ணா சொல்ற மாதிரி ஹாஸ்பிடலுக்குள்ள எந்த சாட்சியும் நமக்கு கிடைக்காது… 

அப்புறம் வேற எங்க தேடுறது ஹரிணி கேட்டாள்..

ஜீவா வீடு, கண்டிப்பா ஜீவாவோட திங்க்ஸ் எல்லாம் அங்க தானே இருக்கும்.. அதுல நமக்கு ஏதாவது ப்ரோயஜனமா கிடைக்கும்ல உற்சாகமாக கேட்டவள், 

ஆனா நாமா எப்புடி அவங்க வீட்டுக்குள்ள போகறது சோர்வுடன் முடித்தாள்..

தியாமா நீ ஏன் வருத்தப்படுற, அதான் நம்ம சபரி இருக்கானே, அவனோட வருங்கால மாமனார் வீடு தான அது, உனக்காக கண்டிப்பா வீட்டுக்குள்ள போய் செக் பண்ணி ஆதாரத்தை கையோட எடுத்துட்டு வருவான் என்று சபரியின் முறைப்பையும் பொருட்படுத்தாது கூறி சிரித்தவள் மீது அருகில் கிடந்த பொருளை தூக்கி அடித்தான்..

தியாவும் கூட வந்த சிரிப்பை அடக்கி விட்டு ஹனிமா அவனே அந்த சௌமி அவனை ரிஜெக்ட் பண்ண வருத்ததில்ல இருக்கான் நக்கல் பண்ணாத என்று கூறவும்,

தியாமா எப்ப இருந்து நீ இவ்வளவு நல்லவளா மாறுன, நேத்து ஃபுல்லா அவனை கதற கதற கலாய்ச்சு சிரிச்சிட்டு இப்ப வந்து பாவம்ங்கிற, 

மச்சான் இவளை அமைதியா இருக்க சொல்லு, இல்லைன்னா அவ்ளோ தான் என்றபடி ஹரிணியை அடிக்க போனவனை தடுத்த தியா 

அடச்சீ சின்ன புள்ளைங்களா நீங்க எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கோம். இப்ப போய் அவுட் ஆஃப் டாபிக் போறீங்க. நம்ம பேசிட்டு இருக்க விஷயதுக்கு வாங்க..

நம்ம இப்ப என்ன பேசிட்டு இருந்தோம் என்றவளை தியா முறைக்க


ஆஹாங் ஜீவா வீட்டுக்குள்ள எப்புடி போறது அப்புடிங்கிறதை பத்தி தானே, எனக்கு ஒரு யோசனை

என்ன சொல்லு 

படத்தில்ல எல்லாம் வர மாதிரி நாமா மாறு வேஷம் போட்டுக்கிட்டு நாங்க விஜிலென்ஸ் ஆபிசர் உங்க வீட்டுக்கு ரெய்டு வந்து இருக்கோம்னு சொல்லி வீட்டுக்குள்ள போய் செக் பண்ணலாமா என்று கூறி முடிப்பதற்குள் தியா சபரி தூ என் துப்பினார்கள்..

நீங்க என்ன வேஷம் கட்டிட்டு போனாலும் அங்க எதுவும் கிடைக்க போறதில்லை என சூர்யா கூறியதும் ஏன் என மற்ற மூவரும் ஒரு சேர கேட்டனர்…

ஏன்னா அந்த வீட்டுல ஜீவா துணிகளை தவிர மத்த எல்லா பொருளையும் அந்த மகேஸ்வரன் ஏற்கெனவே எடுத்துட்டு போய்ட்டான். அங்க எதுவும் உங்களுக்கு கிடைக்காது..

உனக்கு எப்புடி டா அண்ணா தெரியும்…

நீங்க இப்ப யோசிக்கிற எல்லா கேவலமான ஐடியாவையும் ஐய்யா ஆல்ரெடி அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே என் நண்பனுக்காக  ட்ரை பண்ணிட்டேன் பாப்பு. ஆனா எந்த சாட்சியும் கிடைக்கல பாப்பு. நான் பர்ஸ்ட்டே சொன்ன மாதிரி அந்த மகேஸ்வரன் கேடி பய அவன் கூட இருக்கே அந்த திவேஷ் அது  அதை விட கிரிமினல் அதுங்க இரண்டும் மாட்டிக்க கூடாதுன்னு பக்கவா எல்லாம் பண்ணி வச்சு இருக்குங்க..

இப்ப என்னடா பண்ணறது அண்ணா இப்புடி சொல்றாங்க ஹரிணி கேட்டாள்..

டேய் அண்ணா பரவாயில்லை அப்ப நீ தனி ஆளா முயற்சி பண்ண, இப்ப நானும் இருக்கேன் மறுபடியும்  முடிச்ச வரை முயற்சி பண்ணுவோம். எதுவுமே கிடைக்கலைன்னு வை. புதுசா ஒரு சாட்சியை உருவாக்குவோம்..

எப்புடி மூணு பேரும் தியாவை பார்த்து ஒரு சேர கேட்க. தெரியவில்லை என்பது போல உதட்டை பிதுக்கினாள்..

என்ன தெரியலையா?

ஆமா தெரியலை. இப்போதைக்கு எந்த ஐடியாவும் வரல. வர அப்ப சொல்றேன். நீங்களும் உங்க துருபிடிச்ச மூளையை வச்சு யோசிங்க..  


அந்த தினத்திலிருந்து சரியாக ஒரு வாரம் கடந்து பின்பு ஆரோக்கியம் மருத்துவமனை மகேஸ்வரனை பார்ப்பதற்காக சென்று இருந்தாள் தியா.

ஹே தியா வாம்மா உக்காரு எப்படி இருக்க? கண்ணா எப்புடி இருக்கான்? அவர் நலம் விசாரிக்க.

நான் நல்லா இருக்கேன். பாவாவும் நல்லா இருக்காங்க என்றபடி அவருக்கு எதிர்ப்புறம் இருந்த சேரில் அமர்ந்தாள்…

என்னடாமா தீடிர்னு வந்து இருக்க என்ன விஷயம்.. அச்சோ நான் வேற பர்ஸ்ட் நீ என்ற சாப்பிடுறேன்னு சொல்லு கொண்டு வர சொல்றேன் மகேஸ்வரன் கேட்டதும்,  

ஐய்யயோ உங்க ஹாஸ்பிட்டலையா எனக்கு எதுவும் வேண்டாம்ப்பா. ஜுஸ்லையோ காபிலையோ ஏதாவது மயக்க மருந்தை கலந்து கொடுத்து என் கிட்னியோ இதயத்தையோ உருவிட்டிங்கன்னா என்ன பண்றது.‌ நான் இன்னும் கொஞ்ச நாள் உயிரோட வாழனும்ப்பா என்று பயந்த மாதிரி கூறிய தியா தனது கைப்பையில் இருந்த ஜுஸ் பாட்டிலை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள்..

மகேஸ்வரன் எதுவும் பேசாது அமைதியாக தியாவை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தார்..

அந்த அறையை சுற்றி பார்த்தவள் இந்த உயிரில்லாத கட்டிடம் தான் உங்க உயிராமே, இந்த கட்டிடத்தை காப்பத்துறத்துக்காக தானே என் பாவாவ நீங்க இவ்வளவு கஷ்டப்படுத்துனீங்க..

என் புருஷன் கஷ்டப்படுறதுக்கு காரணமான இந்த ஹாஸ்பிடல்ல நான் எப்புடி சும்மா விடுவேன் என்றவளை மகேந்திரன் புருவத்தை சுருக்கி பார்க்க..

நீங்க ஸ்கூல்ல சிலப்பதிகாரம் படிச்சு இருக்கீங்களா.. படிக்கலைன்னா நான் சொல்றேன் கேளுங்க. கண்ணகி இருக்காங்களே கண்ணகி அவங்க கணவர் கோவலன் மேல்ல பொய்யான பழி போட்டு தண்டனை கொடுத்துருவாங்க. அதுக்காக கண்ணகி அவங்க வீட்டுக்காரருக்கு தப்பான தீர்ப்பு சொன்ன அரசனையும் ஏன் அந்த நகரத்தையே அழியனும் சொன்னதும் மதுரையை தீ பிடிச்சு அழிஞ்சதாம். அவங்கள மாதிரி சக்தி எனக்கும் இருந்திருந்தா என்னைக்கோ இந்த ஹாஸ்பிட்டலையும் உங்களையும் எரிச்சு இருப்பேன்..

ப்ம்ச் இப்ப எரிக்க முடியாது.. ஆனா சீல் வைக்க முடியுமே, இங்க நடந்த எல்லா தப்பையும் வெளிய கொண்டு வந்து என் பாவா மேல்ல தப்பு இல்லைன்னு நிரூபிச்சு இந்த ஹாஸ்பிடல்ல ஒன்னுமே இல்லாமா ஆக்குறேன் பாருங்க தீர்க்கமாக தியா கூற அவள் உறுதியான குரலில் மகேஸ்வரனுக்கே சிறு பயம் தோன்றினாலும், சின்ன பொண்ணு என்ன பண்ணிடுவா, எந்த ஒரு சின்ன தடயத்தையுமே நாமா விட்டு வைக்கலையே என்ற அலட்சியமும் தோன்ற,

ஆல் த பெஸ்ட்மா நக்கலாக கூறினார்.. 

தாங்க்ஸ் அங்கிள் சின்ன பொண்ணு என்ன பண்ணிடுவாங்கிறன்னு அசலாட்டா இருந்துட்டாதீங்க. ஏன்னா இந்த விஷயத்தில்ல எனக்கு ஹெல்ப் பண்ண போற ஆளே உங்க சைட்டு ஆளு தான். அதுவும் உங்க மேல்ல ரொம்ப அன்பு வச்சு இருக்க உங்களை கடவுளா பார்க்கிற ஆளு தான் என்றதும் 

மகேஸ்வரன் திவேஷா இருக்குமோ என யோசிக்க.

அதெப்படி அங்கிள் திவேஷ் அண்ணா ஹெல்ப் பண்ணுவார். ஏன்னா இதுல உள்ள போக போறதும் அவர் தானே அவர் இல்லை. நானே சொல்லட்டா யாருன்னு


ஹர்ஷா டாக்டர் ஹர்ஷவர்த்தன் என்றதும் மகேஸ்வரன் திகைத்து நின்றார்…

தொடரும்...

 











Continue Reading

You'll Also Like

644K 17.1K 53
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்கள...
400K 12.7K 56
Highest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..
165K 14.2K 63
A GIRL, "KADAVULE INDHA VELAYACHUM ENAKKU SET AAGANUM ADHUKKU MUNNADI INDHA VELA ENAKKU KIDAIKKANU.... NEE UN KULANDHAIYA KOODAVE IRUNDHU KAAPATHIRU...
255K 9.7K 40
கனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..