விடாமல் துரத்துராளே!!

By RajalakshmiM6

76.9K 2.5K 613

திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா... More

விடமால் துரத்துராளே
விடாமல் துரத்துராளே 1
விடாமல் துரத்துராளே!! 2
விடாமல் துரத்துராளே!! 3
விடாமல் துரத்துராளே!! 4
விடாமல் துரத்துராளே!! 5
விடாமல் துரத்துராளே!! 6
விடாமல் துரத்துராளே!! 7
விடாமல் துரத்துராளே!! 8
விடாமல் துரத்துராளே!! 9
விடாமல் துரத்துராளே!! 10
விடாமல் துரத்துராளே!! 11
விடாமல் துரத்துராளே!! 12
விடாமல் துரத்துராளே!! 13
விடாமல் துரத்துராளே 14
விடாமல் துரத்துராளே 15
விடாமல் துரத்துராளே 16
விடாமல் துரத்துராளே 17
விடாமல் துரத்துராளே 18
விடாமல் துரத்துராளே 19
விடாமல் துரத்துராளே 20
விடாமல் துரத்துராளே 21
விடாமல் துரத்துராளே 22
விடாமல் துரத்துராளே 23
விடாமல் துரத்துராளே 24
விடாமல் துரத்துராளே 25
விடாமல் துரத்துராளே 26
விடாமல் துரத்துராளே 27
விடாமல் துரத்துராளே 28
விடாமல் துரத்துராளே 29
விடாமல் துரத்துராளே 30
விடாமல் துரத்துராளே 31
விடாமல் துரத்துராளே 32
விடாமல் துரத்துராளே 33
விடாமல் துரத்துராளே 34
விடாமல் துரத்துராளே 35
விடாமல் துரத்துராளே 36
விடாமல் துரத்துராளே 38
விடாமல் துரத்துராளே 39
விடாமல் துரத்துராளே 40
விடாமல் துரத்துராளே 41
விடாமல் துரத்துராளே 42
விடாமல் துரத்துராளே 43

விடாமல் துரத்துராளே 37

1K 63 14
By RajalakshmiM6


விடாமல் துரத்துராளே 37

என்ன பாப்பா கண்ணு சிவக்கிற அளவுக்கு உங்க வீட்டுல கவனிப்பு பலம் போல என்ற தேவாவின் நக்கலில் நிமிர்ந்து தேவாவை முறைத்தவள், நானே இதுவரை என்னை திட்டாத என் டாடி திட்டிடாருன்னு பீல்ங்கில்ல உக்கார்ந்துட்டு இருக்கேன்… பொண்டாட்டி வருத்தில்ல இருக்காளே சமாதானம் பண்ணுவோம்ன்னு நினைக்காமா   நக்கல் பண்றீங்களா கண்களை உருட்டியபடி கேட்டாள்… இவ்வளவு நேரமும் இதுவரை கடினமான ஒரு வார்த்தையும் பேசாத தந்தை திட்டியதில் வருத்தமாக இருந்தவளுக்கு தேவாவை பார்த்ததும் அந்த வருத்தம் எல்லாம் காற்றில் வைத்த கற்பூரமாய் கரைந்து போனது..

நீ செஞ்ச காரியத்துக்கு உன்னை திட்டாம கொஞ்சவா செய்வாங்க.. உங்க அப்பாவ இருக்கிறதல்ல திட்டுனதோட விட்டுட்டாங்க. இதே நான்னா இருந்துதிருந்தா நாலு போடு போட்டு இருப்பேன்..

காதலிக்கிறது என்ன அவ்வளவு பெரிய தப்பா, அதுக்காக என்னை வெறுத்துருவாங்களா,

நீ காதலிச்சது அவங்களுக்கு கோவம் இல்லை.. யாரை காதலிச்ச அதான் அவங்க கோவத்திற்கு காரணம்.

ஏன் உங்களுக்கு என்ன குறைச்சல்? பார்க்க நல்ல ஹிந்தி ஹீரோ மாதிரி இருக்கீங்க.

உன் கண்ணுக்கு தான் பாப்பா நான் ஹீரோ. ஆனா இந்த ஊருக்கும் உலகத்துக்கும் பொண்ணுங்க கிட்ட மிஸ்பிகேவ் பண்ணுன கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போட்டு வந்த வில்லன். என்னை மாதிரி ஒருத்தனை காதலிச்சு கல்யாணம் பண்ணினா எந்த பெத்தவங்களுக்கு தான் பிடிக்கும். உன் அம்மா அப்பா கோவத்தில்ல நியாயம் இருக்கு பாப்பா. அவ்ளோ ஏன் நாளைக்கு என் பொண்ணு என்னை மாதிரி ஒருத்தனை காதலிக்கிறேன் கல்யாணம் பண்றேன்னு சொன்னா அதுக்கு நான் அனுமதிக்கவே மாட்டேன். எனக்கு இப்புடி தான் கோவம் வரும்.

நீங்க தான் எந்த தப்பும் செய்யலையே பாவா. அது மத்தவங்க செஞ்ச தப்பை மறைக்க உங்க மேல்ல வீண்பழி போட்டுட்டாங்க என தியா கூறியதும் பயங்கரமாக சிரித்த தேவா ஷோபாவில் இருந்து இறங்கி அவளுக்கு எதிர்ப்புறம் அமர்ந்தான் நான் தப்பே பண்ணலைன்னு உன்கிட்ட சொன்னது யாரு அந்த  சூர்யா பய தானே, சூர்யா கர்ணன் மாதிரி தப்பு   என் மேல்ல தப்பு இருந்தாலும் இல்லைன்னு தான் சொல்லுவான்.. அவன் சொன்னதை நம்பியா என்னை கல்யாணம் பண்ணன லூசு புள்ள என்றவனை முறைத்தவள்,

சூர்யா அண்ணா சொன்னதை நம்பி இல்ல, என் மனசு சொன்னதை நம்பி உங்களை காதலிச்சேன். பாவா சூர்யா அண்ணா சொல்றதுக்கு முன்னாடி, ஏன் உங்களை பார்க்கிறதுக்கு முன்னாடியே உங்க பேரை என்னைக்கு என் அம்மா சொன்னாங்களோ அந்த நிமிஷத்தில்ல இருந்ததே என் மனசு ஒன்னே ஒன்னு தான் சொன்னுச்சு நீங்க எனக்கானவர் நீங்க எந்த தப்பும் செஞ்சிருக்க மாட்டீங்கன்னு, இந்த ஊர் உலகம் நீங்க தப்புன்னு சொன்னாலும் உங்களுக்கு எதிரே ஆயிரம் சாட்சி இருந்தாலும் ஏன் நீங்களே நானா தப்பானவன் சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்.  என் மனசு சொன்னதை  தான் அன்னைக்கு நான் நம்புனேன் இப்ப நம்புறேன் ஏன் நான் சாகற அதை மட்டும் தான் நான் நம்புவேன் என தியா தேவா கண்களை பார்த்து கூறியவளை தாவி அணைத்து அவள் தோளில் முகத்தை புதைத்தவன்

நீ எந்த தப்பும் செஞ்சிருக்க மாட்ட எனக்கு தெரியும் நான் உன்னை நம்புறேன் இந்த வார்த்தையை நான் எதிர்பார்த்த ஆளுங்க யாருமே சொல்லல பாப்பா. என்னை 25 வருஷமா பெத்து வளத்தவரு, என் கூட பொறந்தவங்க, வாழ்க்கை முழுசும் என்கூட வர போறதா நான் நினைச்சவங்க இவங்க யாருமே சொல்லல… என்னை முன்ன பின்ன பார்க்காத நீ என் மேல்ல வச்ச  நம்பிக்கை மாதிரி  அவங்க எல்லாம்  எல்லாம் ஏன் பாப்பா என்னை நம்புல. நீ எந்த தப்பு செஞ்சிருக்க மாட்டேன்னு அவங்க ஏன் பாப்பா சொல்லல என் அவளை அணைத்தபடி கூறியவயனின் குரலிலே தெரிந்தது அவன் பட்ட வேதனை..

அவன் முதுகை தடவி ஆறுதல் படுத்தியவள் இந்த பாப்பாவுக்கு இந்த முரட்டு பாவாங்கிறது  தான் விதி போல அதான் இப்புடி எல்லாம் நடந்திருக்கும் போல என தியா தேவாவை ஆறுதல் படுத்த கூற,  தேவாவோ அவள் தோளில் இருந்து முகத்தை எடுத்து தியா முகம் பார்த்து என்ன சொன்ன புரியல என்றான்.

ஒரு வேளை அவங்க எல்லாம் உங்களை நம்பி இருந்தா, இப்புடி ஒரு அழகான அறிவான க்யூட்டான வொய்ஃப் கிடைச்சிருக்குமா சொல்லுங்க பார்காகலாம், நான் உங்க வாழ்க்கையில்ல வரும்னுங்கிறதால தான் கடவுள் உங்களுக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்தாரு போல, என தியா அவனை ஆறுதல் படுத்த கூற,
அவளை  முறைக்க நினைத்தவனும் தோற்று சிரித்தபடி இதை எல்லாம் நான் சொல்லனும் நீ சொல்ல கூடாதுடி என்றான் அவளின் மூக்கை உரசியபடி,

அப்ப சொல்லுங்க பாவா… என் பொண்டாட்டி ஒரு தேவதை அவ என் வாழ்க்கையோட வரம்… அவ கிடைச்சது போன ஜென்மத்தில்ல நான் செஞ்ச புண்ணியம் அப்புடின்னு சொல்லுங்க பாவா யார் வேணாம்னு சொன்னது…
கண்களை சிமிட்டியபடி தியா கூறினாள்..‌ தேவா சிறிது நேரம் அவளையே அவள் விழிகளை சில நொடிகள் பார்த்து கொண்டு இருந்தான்… தியாவும் இமைக்காது அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்… நான்கு கண்களும் ஒன்றோடு ஒன்று கலந்தன. சற்று  அவளை விலகி இருக்க வேண்டும் என்று எடுத்த தீர்மானம் கொஞ்ச கொஞ்சமாக உடைவது தேவாவுக்கு புரிந்தது..  உடனடியாக அவளை விட்டு தள்ளி அமர்ந்தவன் போடி லூசு, லூசு மாதிரி எதையாவது உளறிட்டு என எழ பார்த்தான்…

அவனின் கை பிடித்து தடுத்த தியா உக்காருங்க பாவா உங்ககிட்ட ஒரு டவுட்டு கேட்கனும்…

போடி உன் மொக்கை எல்லாம் கேட்க எனக்கு நேரமில்லை.

அச்சோ பாவா மொக்கை எல்லாம் இல்ல.. இது வேற ஒரு மேட்டர் பத்தி டவுட்டு கேட்கனும்.‌‌

புத்தி போகுது பாரு என்ற தேவா தியா தலையில் கொட்ட,

ஆ…. என தன் தலையை தடவியவள் அய்யோ நான் சொல்றது நீங்க நினைக்கிற அந்த மேட்டர் இல்லப்பா இது வேற மே…  என்றவளை தேவா முறைக்கும் விஷயமா டவுட்டு கேட்கனும் உக்காருங்க என்றதும் தேவாவும் பழையபடி கீழே அமர்ந்தான்.

எப்ப பார்த்தாலும் அதே நினைப்புல இவர் சுத்திட்டு நம்மளை திட்டுராரு என தியா தேவா காது பட முணுமுணுக்க தேவா அவளை முறைத்தான்…

சரி சரி அதை விடுங்க.. இப்ப நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லுங்க..  இதை ரொம்ப நாளா உங்ககிட்ட கேட்கனும் நினைச்சிட்டு இருந்தேன். கேட்க முடியலை. இப்ப கேட்கட்டா

கேட்டு தொலை.

பாவா உங்க மேல்ல எந்த தப்புமே இல்லைன்னு நீங்க ஏன் நிருபிக்க முயற்சி பண்ணல தேவா முகத்தை கூர்ந்து நோக்கியபடி கேட்டாள்..

ஏன் நிரூபிக்கனும் பாப்பா? எதுக்காக யாருக்காக பாப்பா நான் நிரூபிக்கனும்? என்ன நடந்ததுன்னு என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கமா நான் தான் குற்றவாளின்னு முடிவு பண்ணினவங்க  கிட்ட போய், இல்ல இல்ல நான் எந்த தப்பும் பண்ணல, நான் நல்லவன் என்னை நம்புங்க. என் மேல்ல அன்பா பாசமா இருங்கன்னு கெஞ்ச சொல்றியா? வாழ்க்கையோட ஆதாரமே ஒருத்தர் மேல்ல இன்னொருத்தர் வைக்கிற நம்பிக்கை தானே பாப்பா, அந்த நம்பிக்கையை என் மேல்ல துளிக்கூட வைக்காதவங்களுக்கு என்னை நிரூபிச்சு என்ன ஆக போகுது பாப்பா.. சூர்யா இருக்கானே அவனுக்கு நான் எந்த விளக்கமும் கொடுக்கல. ஆனா  அவன் நான் எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டேன் நம்பி என் பக்கம்  நின்னுனான்.. இப்ப வரைக்கும் நிற்கிறான்… அதானே பாப்பா உண்மையான அன்பு.. என் மேல்ல நம்பிக்கை வைக்காத யாருக்கும் நான் என்னை நல்லவன்னு நிரூபிக்கனும்னு அவசியமும் இல்லை.. அவங்க எனக்கு தேவையும் இல்லை என்று கோவத்திலும் விரக்தியிலும் கூறியவன் எழுந்து சென்று விட்டான்.‌‌..

அவனையே பார்த்து கொண்டு இருந்த தியா, உங்க மேல்ல எந்த தப்பும் இல்லை நீங்க ரொம்ப நல்லவங்கன்னு இந்த ஊருக்கும் உலகத்திற்கும் உங்க பாப்பா  நிரூப்பிபேன் பாவா. இன்னைக்கு உங்களை பத்தி தப்பு தப்பா பேசுங்க எல்லாரையும் அதற்காக வருத்தப்பட வைப்பேன். உங்க வீட்டு ஆளுங்க என் வீடு ஆளுங்க எல்லாரும் உங்களை தப்பா பேசுனதை நினைச்சு வருத்தப்பட்டு குற்ற உணர்ச்சியோட உங்க முன்னாடி வந்து கண்டிப்பா நிற்க வைப்பேன் பாவா. கண்டிப்பா இதை எல்லாம் நடத்தி காட்டுவேன் என மனதிற்குள் உறுதி எடுத்தாள்..‌

நினைத்ததை நடத்தி முடிக்கும் பிடிவாதகாரி  11 மாதங்களுக்கு பிறகு இதையும் நடத்தி காட்டினாள்… தேவா முன்பு அவனின் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், தியா அம்மா அப்பா அனைவரும் குற்ற உணர்வோடு அவன் தங்களிடம் ஒரு வார்த்தை பேசி விடமாட்டானா என்ற ஏக்கத்துடன் நின்று இருந்தனர்.. அவனோ கண்களில் கண்ணீரோடு அந்த மருத்துவமனை வராண்டாவில் அமர்ந்து இருக்க.. அவனின் பாப்பாவோ அனைத்தையும் செய்து முடித்துவிட்டு வாழ்வா சாவா போராட்டத்தில் ஆப்ரேஷன் தியேட்டர்க்குள் இருந்தாள்..

இந்த 11 மாதங்கள் என்னென்ன நடந்தது என்பதை இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்…

தொடரும்...

Continue Reading

You'll Also Like

62.6K 3.6K 65
உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுப...
193K 5.1K 127
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...