விடாமல் துரத்துராளே!!

By RajalakshmiM6

80.2K 2.5K 628

திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா... More

விடமால் துரத்துராளே
விடாமல் துரத்துராளே 1
விடாமல் துரத்துராளே!! 2
விடாமல் துரத்துராளே!! 3
விடாமல் துரத்துராளே!! 4
விடாமல் துரத்துராளே!! 5
விடாமல் துரத்துராளே!! 6
விடாமல் துரத்துராளே!! 7
விடாமல் துரத்துராளே!! 8
விடாமல் துரத்துராளே!! 9
விடாமல் துரத்துராளே!! 10
விடாமல் துரத்துராளே!! 11
விடாமல் துரத்துராளே!! 12
விடாமல் துரத்துராளே!! 13
விடாமல் துரத்துராளே 14
விடாமல் துரத்துராளே 15
விடாமல் துரத்துராளே 16
விடாமல் துரத்துராளே 17
விடாமல் துரத்துராளே 18
விடாமல் துரத்துராளே 19
விடாமல் துரத்துராளே 20
விடாமல் துரத்துராளே 21
விடாமல் துரத்துராளே 22
விடாமல் துரத்துராளே 23
விடாமல் துரத்துராளே 24
விடாமல் துரத்துராளே 25
விடாமல் துரத்துராளே 26
விடாமல் துரத்துராளே 27
விடாமல் துரத்துராளே 28
விடாமல் துரத்துராளே 29
விடாமல் துரத்துராளே 30
விடாமல் துரத்துராளே 31
விடாமல் துரத்துராளே 33
விடாமல் துரத்துராளே 34
விடாமல் துரத்துராளே 35
விடாமல் துரத்துராளே 36
விடாமல் துரத்துராளே 37
விடாமல் துரத்துராளே 38
விடாமல் துரத்துராளே 39
விடாமல் துரத்துராளே 40
விடாமல் துரத்துராளே 41
விடாமல் துரத்துராளே 42
விடாமல் துரத்துராளே 43
விடாமல் துரத்துராளே 44
விடாமல் துரத்துராளே 45

விடாமல் துரத்துராளே 32

1.3K 47 9
By RajalakshmiM6


விடாமல் துரத்துராளே 32

தியா செயலில் தேவா அதிர்ந்து விழித்தான். இதை முத்தம் என்று கூறிட இயலாது‌. தேவாவை பாப்பா என்று சொல்ல விடக்கூடாது என்பதற்காக அவன் இதழ் மீது தன் இதழை அழுத்தமாக பதித்து இருந்தாள்.. அவளின் செயலில் தேவா அதிர்ந்து இருந்தான். தியாவிற்குமே அதிர்ச்சி தான் இவ்வளவு நேரம் சண்டையில் உணராத நெருக்கத்தை இப்போது உணர்ந்தாள்…  இதழ்கள் நான்கும் உரசியதில் உடல் முழுவதும்  மின்சாரப் பூ பூத்தது போன்று குறுகுறுப்பாய் இருந்தது. கண்கள் இரண்டும் தானாய் மூடி கொண்டது… இந்த இதழ் ஒற்றலை ஆழ்ந்த அழுத்தமான முத்தமாக மாற்ற கூறி அவளின் இதழும் மனமும் இம்சித்தது. ஆனால் வெட்கம் வந்து தடைப்போட மனமே இல்லாமல் தேவா சட்டையை இறுக்கி பிடித்து இருந்த கையின் பிடியை தளர்த்தினாள்.. ஆனால் அவள் கரங்களை  விலக விடாமல் தேவாவின் ஒரு கை இறுக்கியது. மற்றோரு கரமோ கன்னத்தை பற்றி முத்தத்தை நீட்டிக்க நினைக்க லிஃப்ட் கதவு திறந்தது…

அந்த சத்தத்தில் சுயநினைவை அடைந்த இருவரும் விலகினர். ஒரு நீண்ட பெருமூச்சு இழுத்து விட்டு தலையை அழுந்த கோதி சமன்நிலை அடைந்தான் தேவா.. தியாவும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.. அவர்கள் எதிரே யாரோ நிற்பது தெரியவர, தியா பொது இடத்தில்ல இப்புடி நடந்துக்கிட்டேயேடி என்று  தன் தலையில் தட்டி விட்டு எதிரே பார்க்க வெண்ணிலா நின்று இருந்தாள்…

வெண்ணிலா வை பார்த்த தியா உடனே திரும்பி தேவா முகம் பார்த்தாள். தேவா வெண்ணிலா இருவரையும் ஒரே இடத்தில் சேர்த்து இன்று தான் பார்க்கிறாள். தனது கணவன் அவனின் முன்னால் காதலியை பார்த்ததும் என்ன மாதிரி மனநிலையில் இருக்கிறான். அவளை இழந்து விட்டோமே என்ற வேதனையும் ஏமாற்றமும் அவன் முகத்தில் தெரிகின்றதா என பார்க்க தேவா முகம் பார்த்தாள்… அவன் முகத்தில் எதையும் படிக்க முடியவில்லை.. சாதாரணமாகவே இயல்பாகவே வெண்ணிலா வை எதிர் கொண்டான்..

ஆனால் இதுக்கு நேர்மாறாக இருந்தாள் வெண்ணிலா. அவளால் இயல்பாக தேவாவை எதிர்கொள்ள முடியவில்லை.. இந்த சூழ்நிலை அவளுக்கு தர்ம சங்கடமாக இருந்தது.. அவளை மேலும் கஷ்டப்படுத்தாமல் பாப்பா வா போலாம் என்ற தேவா அங்கு இருந்து சென்றான். தியாவும் அவன் பின்னே சென்றாள்.. செல்லும் அவர்களையே பார்த்து கொண்டு நின்று இருந்தாள் வெண்ணிலா…

நள்ளிரவு 1 மணியை தாண்டி இருந்தது. ஜீவாவின் தந்தை செந்திலுக்கோ உறக்கம் வரவில்லை. இன்று காலை மருத்துவமனையில் தேவா தியா வை பார்த்ததும் தேவா தியா இருவரின் சந்தோஷம்.. அதிலும் தேவா சந்தோஷமாக இருக்கின்றான் ( அப்புடின்னு அவரே நினைச்சிக்கிறார்ப்பா??) என்ற  நினைப்பே அவரின் தூக்கத்தை கெடுத்தது. அது எப்புடி அவன் மகிழ்ச்சியாக இருக்கலாம்.. அவனின் சந்தோஷமே செந்திலுக்கு எரிச்சலை தந்தது. அவன் சந்தோஷத்திற்கும் மகிழ்ச்சிக்கும் காரணமான விஷயத்தை அவனிடம் இருந்து பறித்து அவனை துன்பக்கடலில் தள்ளி விட வேண்டும்..  அந்த இழப்பை தாங்க முடியாமல் அவனை அவனே அழித்து கொள்ள வேண்டும் என்று அன்றோடு நாள் தினேஷ் கூறியதையே திரும்ப திரும்ப மனதிற்குள் உருப்போட்டு கொண்டார்..

டேய் தேவா உன் பொண்டாட்டி கூட  எவ்வளவு சந்தோஷமா இருக்க முடியுமோ இருந்துக்கோ, ஏன்னா இன்னும் கொஞ்ச நாள் தான் உன் பொண்டாட்டி உயிரோட இருக்க போற, அதுக்கு அப்புறம் என் பையனை மாதிரி அவளும் இந்த உலகத்தில்ல உயிரோட இருக்க போறதில்ல. நான் உன்னை பழி வாங்க போறதுக்கான துருப்பு சீட்டே அவ தான் என்று கொடுரமாக யோசித்து கொண்டு இருந்தார். இந்த அறையில் இவர் தேவா வாழ்க்கையை அழிக்க திட்டம் தீட்டி கொண்டு இருக்க. பக்கத்து அறையில் இருக்கும் அவரின் மகளோ முக நூல் காதலன் மூலம் தன் வாழ்க்கைக்கு தானே குழி தோண்டி கொண்டு இருந்தாள்..

தன் பெற்றோருக்கு தன் மேல் பாசம் இல்லை என்ற எண்ணத்தை  சிறு வயதிலிருந்தே கொண்டு இருந்தாள் சௌதாமினி. ஜீவா இறப்பிற்கு பின் அந்த  எண்ணத்தை அதிகப்படுத்தும் படி இருந்தது செந்தில் கௌரி இவர்களின் நடவடிக்கை. இறந்து போன ஜீவாவை பற்றிய கவலை கொண்டவர்கள் சௌதாமினியை கவனிக்க தவறினர்.அதன் விளைவு முகநூல் மூலம் அவளுக்கு அறிமுகமானவன் காட்டிய பொய்யான அன்பில் மயங்கி கிடக்கிறாள். அவனும் இவளின் பலவீனத்தை தனக்கு சாதகமாக்கி தன்னுடைய பசை தடவிய பாசாங்கு வார்த்தைகளால் பெண்ணவளை ஏமாற்றி பணத்தையும்  கறந்து கொண்டு இருக்கின்றான்.. 

கொலைக்காரி உன்னை பார்த்து
உசுர் போச்சு 🎶
நின்னு போச்சு என் மூச்சு🎶
அடி கொலைக்காரி🎶
என்ற பாடல் அருகிலிருந்த திருமண மண்டப வாசலில் வைத்து இருந்த ஒலிபெருக்கி மூலம்  ஒலிக்க அதுக்கூடவே வாய் அசைத்தபடி தனது காவல் வாகனத்தின் சைடு கண்ணாடியில் தலையை கலைத்து கையால் வாரியபடி நின்று இருந்தான் சபரி..

ஒரு கேஸ் விஷயமாக அந்த ஏரியாவில் விசாரிக்க வந்தார்கள். இவனுக்கு கீழ் பணிபுரியும் கான்ஸ்டபிள்களை அருகே இருக்கும் கடைகளில் விசாரிக்க அனுப்பி விட்டு மரத்து நிழலில் நிற்கும் காவல் வாகனத்தின் அருகே நின்று இருந்தான்..

ம்.. அனுபவிச்சு எழுதி இருக்காங்கப்பா ஒவ்வொரு வரியையும், உண்மையாவே இந்த பொண்ணுங்க எல்லாம் கொலைக்காரிங்க தான். பசங்க நாம உண்டு நம்மை வேலையுண்டு இருக்க சமயமாக பார்த்து அவங்க கண்ணில் பட வேண்டியது. பார்த்த உடனே அவங்க மனசுக்குள்ளேயும் புகுந்துற வேண்டியது. அப்புறம் பசங்களை  யாரு அந்த பொண்ணு பேர் என்ன ஊர் என்னன்னு கூட தெரியாம இராத்திரியும் பகலும் அவ நினைப்புல்லயே பைத்தியமா சுத்த வச்சிட்டு, மறுபடியும் கண்ணுலயே படமா பசங்களை சாக அடிக்க வேண்டியது, ம்… நம்ம கொலைக்காரியை பார்த்து கூட இரண்டு மாசத்துக்கு மேல்ல ஆகியிருச்சு.. மறுபடியும் எப்ப பார்க்க போறோமோ என்று தனக்கு தானே புலம்பி கொண்டு திரும்பியவன் கண்கள் மின்னியது எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டே இருந்தவளை பார்த்ததும்,

ஐ..‌. நம்மோட கொலைக்காரி என்றவன் பார்வையை விலக்காது அவளையே பார்த்துக் கொண்டு இருக்க, டேய் போன தடவை மாதிரி பார்த்துக்கிட்டு மட்டும் இருந்துட்டு புலம்பிக் கிட்டு இருக்காது, இந்த தடவையாவது அவ கிட்ட பேச்சு கொடுத்து அவளை பத்தி தெரிஞ்சிக்க என்று மனசாட்சி மண்டையில் தட்ட, அவளின் வண்டியின்  முன்பு கை நீட்டி தடுத்தான்…

"ஏன் சார்? எதுக்கு வண்டியை ஸ்டாப் பண்றீங்க? "என கேட்டாள் சௌதாமினி.

"செக்கிங்மா, வண்டி பேப்ர்ஸ் எல்லாம் வெளிய எடுங்க" என்றான் அவளை பார்த்தபடி இல்லை இல்லை ரசித்தபடி,

சௌதாமினி, "நீங்க எதுக்கு செக்கிங் பண்ணனும். இது எல்லாம் ட்ராஃபிக் போலீஸ் வேலை தானா? "

சபரி, "யார் சொன்னது ட்ராஃபிக் போலீஸ் தான் செக் பண்ணனும்னு, நாங்களும் பண்ணுவோம், ஏன்னா பொதுமக்கள் பாதுகாப்பு மேல்ல எங்களுக்கும் அக்கறை இருக்கு" என்றவனை பார்க்க பார்க்க சௌதாமினிக்கு கடுப்பாக வந்தது. தன்னுடைய அவசரம் புரியாமல் நிற்க வச்சிட்டானே என்று, அப்போது அவளை  தாண்டி சில இரு சக்கர வாகனங்கள் சென்றது.

"என்ன சார் எனக்கு முன்னாடி போன வண்டியை செக் பண்ணல, எனக்கு பின்னாடி வர வண்டியையும் செக் பண்ணல, என்னோட வண்டியை  மட்டும் ஏன் செக் பண்றீங்க" என நியாமான கேள்வியை கேட்டாள்.. 

அவள் கேள்வியில்  "என்ன இவ இவ்வளோ அறிவா இருக்கா, இப்ப என்ன பதில் சொல்றது என்று முதலில் தடுமாறியவன் பின்பு ஏன்னா உன்னை பார்த்த பதினாறு பதினேழு வயசு மாதிரி தான் தெரியுது. நீ வண்டி ஓட்ட தெரியாம ஓட்டி யாரையாவது இடிச்சு ஆக்ஸிடென்ட் பண்ணிட்டா என்ன பண்றது? லைசென்ஸ் வச்சு இருக்கியா எடுத்து காட்டுமா" என்றான் அவளிடம் பேச்சை வளர்த்து அவளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன்,

"சார் நீங்க நினைக்கிற மாதிரி என் வயசு 17 இல்ல.  எனக்கு வயசு 22" என்றாள் எரிச்சலுடன்,

"நீ லைசென்ஸ் எடு அதில்ல நான் உன் ஏஜ் எவ்ளோன்னு பார்த்துக்கிறேன்" என்றவன் மேல் கோவமாக வந்தது சௌதாமினிக்கு, அவளே அவசரமாக தனது முகநூல் காதலனுக்கு பணம் அனுப்ப பேங்க் நோக்கி சென்று கொண்டு இருக்கிறாள். வரும் அவசரத்தில் வண்டி லைசென்ஸ் இருந்த பர்ஸை வீட்டிலையே மறந்து விட்டு இருந்தாள் அது கூட இப்போது சபரி கேட்ட பின்பு தான் நியாபகம் வந்தது. இப்ப என்ன பண்ணலாம் என்று யோசித்தாள், சரி ஏதாவது பேசி சமாளிக்கலாம் என்று நினைத்தவள்,

"சார் நான் xxxx காலேஜ்ல  இன்ஜினியரிங் ஃபைனல் இயர் படிச்சிட்டு இருக்கேன். காலேஜ்க்கு டைம் ஆகிருச்சு சார். இப்ப வண்டியை ஓரமா நிறுத்தி பேப்ர்ஸ் எல்லாம் எடுத்து காட்ட நேரம் இல்ல சார். லேட்டா போனா ப்ரின்ஸ்பால் உள்ள விடமாட்டாங்க சார், திரும்பி வீட்டுக்கு போனா அப்பா அம்மா கிட்ட அடி விழும் சார், அதனால்ல பாவம் பார்த்து என்னை விட்டுருங்களேன்" என்றாள் பாவமாக முகத்தை வைத்து கொண்டு,

ப்ராடு சனிக்கிழமை காலேஜ் லீவ் எப்புடி பொய் சொல்றா பாரேன் என்று தனக்குள் கூறியவன், சௌதாமினியை பார்த்து "அப்ப லைசென்ஸ் இல்ல அப்புடி தானே" என கேட்க,

"இருக்கு ஆனா வீட்டுல சார்"  என அசடு வழிந்தவளை உள்ளுக்குள் ரசித்தவன் வெளியே மிடுக்காக "ம்… ஹெல்மெட் போடல, லைசென்ஸும்  இல்ல ஓவர் ஸ்பீடு அப்ப சரி வண்டியை கோர்ட்டுல பைன் கட்டிட்டு எடுத்துக்க" என வண்டி சாவியை எடுத்தான் சபரி.

"அச்சோ வேணாம் சார் வேணாம் சாவியை கொடுத்துருங்களேன். என்னால்ல கோர்ட்டுக்கு எல்லாம் அலைய முடியாது. இப்ப எனக்கு வண்டி வேணும். நான் அவசரமா பேங்க் வரைக்கும் போகனும் ரொம்ப அர்ஜெண்ட்  சார்" என்றவள் தனது ஹெண்ட் பேக்கில் இருந்து ஐநூறு ரூபாயை எடுத்து சபரி முன்பு நீட்டினாள்..

"என்னம்மா லஞ்சமா?"

"அய்யோ  சார் இதை  நீங்க ஏன் லஞ்சம்ன்னு நினைக்கிறீங்க. பொறுப்பான போலீஸான உங்களுக்கு நான் கொடுக்குற அன்பளிப்பா நினைச்சுக்கோங்க சார்" என்றவளை சபரி முறைக்க,

"என்ன சார் ஐநூறு ரூபாய் கம்மியா இருக்குன்னு நினைக்கிறீங்களா? அப்ப நீங்களே உங்களுக்கு என்ன வேணுமோ கேளுங்க" என  அவசரத்தில் வார்த்தைகளை விட,

அவளை பார்த்த சபரி "அட போம்மா சும்மா வாய் விடாத நான் கேட்கிறதை உன்னால்ல கொடுக்க முடியாது" என்றவனின் வார்த்தை சௌதாமினியின்  தன்மானத்தை சீண்ட, 

"சார் அது எல்லாம் என்னால் கொடுக்க முடியும்.
என்ன நீங்க ஒரு இரண்டாயிரம் மூணாயிரம் கேட்பீங்களா, இல்ல மிஞ்சி போனா ஐந்தாயிரம் வரை கேட்பீங்களா, அதற்கு மேல்ல என்ன ஏன் சொத்தையா எழுதி கேட்க போறீங்க கேளுங்க சார் என்னால் கொடுக்க முடியும்" என்றாள் ரோஷமாக,

அவளை உற்று பார்த்தவன் "உன் சொத்து எல்லாம் எனக்கு வேணாம் நீ தான் வேணும். நான் உயிர் வாழுற கடைசி நாள் வரை என் பொண்டாட்டியா வேணும்  உன்னால் தர  முடியுமா" என நேரடியாக கேட்க, சௌதாமினி அதிர்ந்து அவனை பார்த்து முழித்து கொண்டு இருந்தாள்…

"என் பேர் சபரி. இந்த ஏரியா இன்ஸ்பெக்டரா இருக்கேன். சம்பளம் நம்ம இரண்டு பேரும் குடும்ப நடத்தரத்துக்கு அதிகபடியாவே வரும். போலீஸ் அப்புடிங்கிறதுக்காக எப்பவும் விரைப்பா இருப்பேன்னு நினைக்காத, நான் பயங்கர ஜாலி டைப்..  எனக்கு அம்மா, அப்பா, கூட பொறந்தவங்கன்னு யாரும் இல்லை. அதனால்ல மாமியார் நாத்தனார் கொடுமை எல்லாம் உனக்கு  கிடையாது. மாமா, அத்தை, அத்தை பொண்ணு ஹரிணி அவங்க தான் நமக்குன்னு சொந்தம். அவங்களும் நமக்கு தொந்தரவா இருக்க மாட்டாங்க. நம்ம கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நீ இப்புடி இருக்கனும் அப்புடி இருக்கும்னு கண்டிஷன் எல்லாம் போட மாட்டேன். நீ உன் விருப்பப்படி இருக்கலாம். உன் சுதந்திரத்தில்ல நான் தலையிட மாட்டேன்..எனக்கு தம்மு, தண்ணின்னு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. படிக்கிற டைம் பொண்ணுங்களை சைட் அடிச்சு இருக்கேன். அவ்ளோ தான் அதை தாண்டி வேற எதுவும் பண்ணனது இல்ல. அவ்ளோ  நல்ல பையன்மா நானு. என்னை கல்யாணம் பண்ண நீ கொடுத்து வச்சு இருக்கனும். மேரேஜ் முடிஞ்ச அப்புறம் உனக்கு  சமைக்க  தெரியலைன்னா கூட பரவாயில்லை. நானே நல்லா தான் சமைப்பேன். வீட்டு வேலை எல்லாம் கூட நானே  பார்த்துப்பேன். உன்னோட ஒரே வேளை என்னை லவ் பண்றது மட்டும் தான். அதை மட்டும் பண்ணு அது போதும். இப்ப சொல்லு உன் பதிலை" என்று தன்னை பற்றி முழு மூச்சாக கூறி முடித்து அவளை பார்த்தான்.

சௌதாமினியோ அதிர்ச்சியில் சிலையென நின்று இருக்க, தாமினி என்று சபரி அவளின் கையை தொட்டு அழைத்ததில் நினைவுக்கு வந்தவள், அவனை முறைத்து கொண்டே வண்டியை விட்டுட்டு அங்கிருந்து சென்றாள்..

"ஓய், என்னமோ என்ன வேணா கேளுங்கன்னு ரோஷமா சொன்ன, கேட்டதுக்கு அப்புறம் பதில் சொல்லாமா போனா என்ன அர்த்தம்  வண்டி வேணாமா" சென்று கொண்டு இருந்தவளை பார்த்து சபரி கேட்க, திரும்பி பார்த்தவள் "வேணாம், நான் கோர்ட்ல பைன் கட்டியே வாங்கிக்றேன்" என்றாள் அவனை முறைத்தபடி,

அவள் அருகே நடந்து சென்றவன்  "போ போ எந்த கோர்ட்டுக்கு போனாலும்  எத்தனை நாள் ஆனாலும் சரி நான் கேட்டதை  கொடுத்தா தான் உன் வண்டி உனக்கு கிடைக்கும். யோசிச்சு பதில் சொல்லு, அதுவரை உனக்கு எங்க போகனும்னாலும் சொல்லு அடியேன்  நானே உன்னை ட்ராப் பண்றேன். எனக்கு ஒரு கால் பண்ணு அது போதும்" என்றவன் அவள் கையில் பேப்பரை திணித்தான். அதை கசக்கி கீழே போட்டவள் அவனை முறைத்து கொண்டே சென்றாள்…

தொடரும்...

Continue Reading

You'll Also Like

203K 5.3K 131
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...
333K 9.8K 66
அகல்யா ஓடும் நதி... அமைதியின் சொருபம்... அவள் வாழ்க்கை ஒரு பார்வை
7K 1.1K 36
😁என்ன சொல்ல.....??? 😁சொல்ற மாதிரி எதாவது இருந்தா தானே சொல்ல.... 😁சரி தெரிஞ்சதை சொல்லி வைப்போம்.. 😁இந்த storyil... ஒரு பெண் குட்டி ஒரு பையனை சின்ச...
149K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.