விடாமல் துரத்துராளே!!

By RajalakshmiM6

81K 2.5K 628

திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா... More

விடமால் துரத்துராளே
விடாமல் துரத்துராளே 1
விடாமல் துரத்துராளே!! 2
விடாமல் துரத்துராளே!! 3
விடாமல் துரத்துராளே!! 4
விடாமல் துரத்துராளே!! 5
விடாமல் துரத்துராளே!! 6
விடாமல் துரத்துராளே!! 8
விடாமல் துரத்துராளே!! 9
விடாமல் துரத்துராளே!! 10
விடாமல் துரத்துராளே!! 11
விடாமல் துரத்துராளே!! 12
விடாமல் துரத்துராளே!! 13
விடாமல் துரத்துராளே 14
விடாமல் துரத்துராளே 15
விடாமல் துரத்துராளே 16
விடாமல் துரத்துராளே 17
விடாமல் துரத்துராளே 18
விடாமல் துரத்துராளே 19
விடாமல் துரத்துராளே 20
விடாமல் துரத்துராளே 21
விடாமல் துரத்துராளே 22
விடாமல் துரத்துராளே 23
விடாமல் துரத்துராளே 24
விடாமல் துரத்துராளே 25
விடாமல் துரத்துராளே 26
விடாமல் துரத்துராளே 27
விடாமல் துரத்துராளே 28
விடாமல் துரத்துராளே 29
விடாமல் துரத்துராளே 30
விடாமல் துரத்துராளே 31
விடாமல் துரத்துராளே 32
விடாமல் துரத்துராளே 33
விடாமல் துரத்துராளே 34
விடாமல் துரத்துராளே 35
விடாமல் துரத்துராளே 36
விடாமல் துரத்துராளே 37
விடாமல் துரத்துராளே 38
விடாமல் துரத்துராளே 39
விடாமல் துரத்துராளே 40
விடாமல் துரத்துராளே 41
விடாமல் துரத்துராளே 42
விடாமல் துரத்துராளே 43
விடாமல் துரத்துராளே 44
விடாமல் துரத்துராளே 45

விடாமல் துரத்துராளே!! 7

1.3K 48 11
By RajalakshmiM6

விடாமல் துரத்துராளே 7

(இந்த கதையில் வரும் மருத்துவமனை பெயர், கதாபாத்திரங்கள் பெயர் சொல்லும் விஷயங்கள் அனைத்தும் என் கற்பனையே... கதையின் சுவாரஸ்யத்திற்காக சேர்த்து கொண்டது...)

ஆரோக்கியம் மருத்துவமனை இரண்டு மணி நேரத்திற்கு முன்பு….

கோவையின் மையப்பகுதியில் அமைந்துள்ள 20 அடுக்குமாடிக் கொண்ட மிகப்பெரிய பிரபலமான மருத்துவமனை… கோவை மக்களின் முதல் தேர்வு இந்த மருத்துவமனை தான்…  அந்தஅளவு தரமானதாக இருக்கும் இங்கு வைத்தியம்… தமிழ்நாட்டின் அனைத்து வியாதிகளுக்கும் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்கள் இங்கு இருக்கின்றனர்… இந்த மருத்துவமனையின் இன்னோரு சிறப்பு பணக்காரர்கள் ஏழைகள் என்ற பாகுபாடு இங்கு பார்க்க மாட்டார்கள்… அனைவருக்கும் ஒரே மாதிரியாக மருத்துவம் பார்க்கப்படும்…. இன்னும் சொல்லப்போனால் ஏழை எளிய மக்களுக்கு அவர்களிடம் பணம் இல்லை என்ற போதும் ஒரு ரூபாய் கூட காசு வாங்காமல் எவ்வளவு பெரிய ஆப்ரேஷன் என்றாலும் இலவசமாக செய்யப்படும்…

அந்த மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் மகேஸ்வரன் நீண்ட அந்த வராண்டாவில் சற்று பதட்டமாக குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தார்… அவரின் மகன் டாக்டர் கார்த்திக்கோ( தேவா தங்கை இந்துமதி கணவன்) கோவமாக அங்கு நின்று இருந்த திவேஷை முறைத்து கொண்டு நின்றான்… அந்த வராண்டாவில் மேலும் வெண்ணிலாவும் அங்கு பணிபுரியும் இரு டாக்டர்களும் பதட்டத்துடனும் குழப்பத்துடனும் நின்று இருந்தனர்...‌

அனைவரும் அமைதியாக இருக்க அங்கு இருந்த மூத்த மருத்துவர் நாராயணன் சார் இப்படியே யோச்சிட்டே இருந்தா என்ன பண்றது மினிஸ்டருக்கு உடல்நிலை ரொம்ப மோசமா இருக்கு… இமீடியட்டா ஓபன் ஹார்ட் சர்ஜரி இன்னைக்கு பண்ணியே ஆகனும் டீலே பண்ணா அது அவருக்கு ரொம்ப ஆபத்தா முடியும்… அது மட்டுமில்லை நம்ம ஹாஸ்பிடல் பேரும் கெட்டு போயிரும் சார் என்றார்…

நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா என்றான் திவேஷ் மெதுவான குரலில்,

யூ ஜஸ்ட் ஷ்ட்டப்ப் திவேஷ் இப்ப உருவாகி இருக்கிற இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு காரணமே உன்னோட கேர் லெஸ் தான்… அதனால் நீ அமைதியா இரு என்று கடுப்புடன் கூறினான் கார்த்திக்…

தாரிகா தந்தை ஒரு ஆளும் கட்சியின் மினிஸ்டர் பெயர் சேரன்… அவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட அவரை மகேஸ்வரன் மருத்துவமனையில் அனுமதித்தனர்… பரிசோதித்தில் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது தெரிய வர உடனடியாக  அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்னும் நிலை… திவேஷும் ஒரு கார்டியாடிக் மருத்துவர் தான்… ஆனால் அவன் ஒருவனால் இந்த ஆப்ரேஷனை செய்ய இயலாது… அதுபோக அவன் மேல் மகேஸ்வரனுக்கே நம்பிக்கை இல்லை… இருந்தாலும் அவனை இந்த மருத்துவமனையில் வேலைக்கு வைத்து இருக்கிறார்… அதற்கு ஒரு காரணம் இருக்கிறது… ( அது இப்போதைக்கு வேண்டாம்) அதற்காக இந்தியாவிலேயே சிறந்த ஹார்ட் சர்ஜன் ஒருவரை நார்த் சைட்ல் இருந்து வரவழைக்க சொல்லி அந்த பொறுப்பை திவேஷிடம் ஒப்படைத்து இருந்தார் மகேஸ்வரன்… அந்த வேலையையும் திவேஷ் சொதப்பி வைத்து விட்டான்… அந்த ஹார்ட் சர்ஜனிடம் மினிஸ்ட்ரின் உடல்நிலை குறித்து விரிவாக கூறி இன்றைய நாளுக்கு அப்பாயிண்மெண்ட் வாங்க சொன்னார் மகேஸ்வரன்… அவனும் அவர் ஒத்து கொண்டார் என்று கூற மகேஸ்வரன் மினிஸ்டரின் குடும்பத்தினரிடமும் பத்திரிகைகளிலும் இன்று ஆப்ரேஷன் என்று சொல்லி அதற்கான வேலையில் இறங்கினார்… ஆப்ரேஷன் இன்னும் அரைமணி நேரத்தில் துவங்க வேண்டும் ஆனால் மருத்துவர் வரவில்லை… அவருக்கு கால் செய்து பார்த்தால் அவர் வேறு ஒரு அறுவை சிகிச்சையில் இருப்பதாகவும் திவேஷிடம் நாளைக்கு தான் அப்பாயிண்மெண்ட் கொடுத்தேன் என்று கூறினார்… அது தான் அனைவரும் என்ன செய்வது என்று புரியாமல் நின்று கொண்டு இருக்கின்றனர்...

இப்ப என்ன பண்றது டாக்டர் நாராயணன் இந்த பிரச்சினையை தீர்க்கிறது எப்படி உங்களுக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க என்று கேட்டார் மகேஸ்வரன்…

சார் இப்ப நம்மளால உடனே வேற சர்ஜனை அதர் ஸ்டேட்டில் இருந்து வர வைக்க முடியாது… இப்ப நமக்கு வேற வழி இல்லை சார் நாமா தேவேந்திரன் கிட்ட தான் ஹெல்ப் கேட்டு ஆகனும் என்றார்… மேலும் அவரே சார் தேவேந்திரன் ஆல்ரெடி நம்ம ஹாஸ்பிடல் வொர்க் பண்ணி இருக்கிறார்… அவரை பத்தி நான் சொல்லி உங்களுக்கு தெரியம்னு ஒன்னும் இல்லை… ஐந்து வருஷத்துக்கு முன்னாடியே அவர் நம்ம ஹாஸ்பிடல் பண்ண எல்லா ஹார்ட் சர்ஜரியும் சக்ஸஸ் ஒரு பெயிலியர் கூட கிடையாது சார்… இப்ப கூட இந்தியாவின் சிறந்த  ஹார்ட் சர்ஜரி ஸ்பெஷலிட்டில் டாக்டர் தேவாவும் ஒருத்தர் சார்… அவர் நம்ம ஹாஸ்பிடல் விட்டு போன அப்புறம் நடந்த எந்த ஆப்ரேஷனும் சக்ஸஸ் ஆகல சார் என்று கூறினார்…

கார்த்திக், தேவா வேண்டாம் டாக்டர் நாராயணன் என்றான்…

நாராயணன், கார்த்திக் சார் we have no other option ( நமக்கு வேற வழி இல்லை)
ஆளுங் கட்சியோட  மினிஸ்டர் அவர்.. அடுத்த எலெக்சன்ல சி.எம் வேட்பாளராக நிற்க போகிறவர்… அவருக்கு ஏதாவது ஒன்னுனா அவரோட தொண்டர்கள் ஹாஸ்பிடலை சும்மா விட மாட்டாங்க...
டாக்டர் தேவாவோட பாஸ்ட் அண்ட் இப்ப இருக்க பர்சனல் லைஃப் பத்தி நாமா யோசிச்சா லாஸ் நமக்கு தான் சார்… 

ஓகே டாக்டர் நாராயணன் ஆனா இப்ப நாமா எப்படி ஹெல்ப் கேட்டு டாக்டர் தேவா வா காண்டாக்ட் பண்றது… எனக்கு தெரிஞ்சு அவரை நாமா நேரடியா காண்டாக்ட் பண்ண முடியாது…அப்படியே கேட்டாலும் அவர் ஒத்துக்குவாரா? என்றார் அங்கு நின்று இருந்த மற்றுமொரு மருத்துவர் லட்சுமணன்…

நாராயணன், தேவாவோட ஃப்ரெண்ட் டாக்டர் சூர்யா கிட்ட பேசலாம் அவர் சொன்னா தேவா கேட்பார்… சூர்யா கிட்ட டாக்டர் வெண்ணிலாவே பேச சொல்லலாம் சார் அவங்க அவரோட சிஸ்டர் தானே என்றார்...

(என்னடா இது எல்லாருமே டாக்டரா அப்பிடிங்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது.)

இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த மகேஸ்வரன் யோசிக்க ஆரம்பித்தார்… டாக்டர் நாராயணன் கூறுவது போல் இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க இருக்கும் ஒரே வழி தேவா தான்… ஆனால் தேவா இதற்கு ஒத்து கொள்வானா, இந்த மருத்துவமனையில் நடந்த ஒரு நிகழ்வில் தானே நேர்கோட்டில் பயணித்து கொண்டு இருந்த தேவா வாழ்க்கையை திசை மாற்றியது… அவனுக்கு ஏற்பட்ட அவமானம், அவனை சுற்றி இருப்பவர்கள் அவனை வெறுத்தது இது எல்லாம் இந்த மருத்துவமனையில் நடந்தது தானே அதனால் தேவா ஒத்து கொள்வானா என்று மகேஸ்வரன் பயந்தார்…  இவர்கள் கூறுவது போல் சூர்யாவிடம் அணுகினால் தேவா விஷயத்தில் தான் செய்த தவறால் தேவாவை விட அதிக கோவத்துடன் ஏன் கொலை வெறியுடன் இருப்பது சூர்யா தான்… இப்போது தான் உதவி என்று போய் நின்றால்  சூர்யா அதற்கு பதிலாக அன்று நடந்த உண்மைகளை அனைவரிடமும் கூற சொன்னால் என்ன செய்வது, ஒரு உயிரை வைத்து பேரம் பேச மாட்டார்கள் தான் சூர்யாவும் தேவாவும், ஆனாலும் ஒரு வேளை அப்படி சூர்யா சொன்னால் தன்னுடைய கெளரவம் இந்த மருத்துவமனைக்கு இருக்கும் மரியாதை அனைத்துமே ஒரு நொடியில் காற்றில் பறந்து விடும்… அதனால் சூர்யாவிடம் தான் நேரடியாக சென்று உதவி கேட்க முடியாது… வேறு யாரையாவது தான் தூது அனுப்ப வேண்டும்…  யாரை அனுப்புவது என்று யோசித்தார்… வெண்ணிலாவை தூது அனுப்புவது மிக மோசமான ஒரு தேர்வு தான்… அவள் சென்று உதவி கேட்டாலும்  சூர்யாவிடம் வேலைக்கு ஆகாது… திவேஷ் மீதும் அவன் கொலை வெறியில் இருக்கிறான்...
அடுத்து தன் மருமகள் தேவாவின் தங்கை இந்துமதியை அனுப்பலாமா என்று சிந்தனை வந்தது… ஆனால் இந்துமதி தூது போக ஒத்து கொள்ள மாட்டாள்… இந்துமதி கொஞ்சம் கர்வம் பிடித்தவள் என்றும் யாருக்காகவும் தன் நிலையை விட்டு கீழ் இறங்க மாட்டாள்… அதுவும்  இப்போது அவளுக்கு தேவா மீது பயங்கர கோவம் வெறுப்பு எல்லாமே உள்ளது…

இறுதியாக செல்லவே மாட்டேன் என்ற தனது மகன் கார்த்திக்கை சமாதானம் படுத்தி  சூர்யாவிடம் பேச அனுப்பி வைத்தார் மகேஸ்வரன்... கார்த்திக் சென்று பேசினால் சூர்யா தேவா இருவருமே மறுப்பு கூற மாட்டார்கள்... கார்த்திக் சூர்யா தேவாவின் நண்பன் தான்... ஆனால் அன்று தான் தேவா பற்றி கூறிய பொய்யை நம்பி தேவாவிடம் இருந்து பிரிந்து விட்டான்…

கார்த்திக் சென்று சூர்யாவிடம் பேச தேவா இந்த அறுவை சிகிச்சை செய்ய ஒத்துக் கொண்டான் ஒரு நிபந்தனையுடன், அது அவர்கள் ஆரோக்கியம் மருத்துவமனைக்குள் எந்நிலையிலும் காலடி எடுத்து வைக்க மாட்டேன்… அருகில் இருக்கும் வேறு மருத்துவமனைக்கு மினிஸ்டரை மாற்றினால் வந்து அறுவை சிகிச்சை செய்வேன் என்று கூறினான்…. கார்த்திக்கும் அதற்கு ஒத்து கொண்டான்… மகேஸ்வரனுக்கு அமைச்சரை வேறு மருத்துவமனை அனுப்புவது விருப்பமில்லை… அது தனது மருத்துவமனைக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால், ஆனால் இப்போது வேறு வழியில்லை என்று அமைதியாக இருந்தார்… அடுத்த சில விநாடிகளில் அமைச்சர் அருகில் இருந்த நலம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தேவா சென்று அறுவை சிகிச்சையை முடித்து விட்டு வெளியே வந்தான்….

அப்போது தான் அங்கு நின்று  இருந்த தியா அவனை பார்த்து,

பாவா நீங்க டாக்டரா?

ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை என்று அவனை கண்டு விட்ட சந்தோஷ மிகுதியில் இடம் பொருள் ஏவல் எதுவும் பார்க்காமல் கத்தி விட்டாள்…. தாரிகா, அமைச்சர் மனைவி, கட்சி ஆட்கள் அனைவரும் அவளை தான் திரும்பி பார்த்தனர்… அவளோ முகத்தில் தேவாவை பார்த்தால் அவ்வளவு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நின்று கொண்டு இருந்தாள்… அவளுக்கு இப்போது தான் இருப்பது மருத்துவமனை தனது தோழியின் தந்தை அங்கு இருக்கிறார்… அவர்கள் குடும்பம் அழுது கொண்டு இருக்கின்றனர் என்பது எல்லாம் நினைவில் இல்லை… அவளின் நிலை ஒரு சாக்லேட் கேட்கும் குழந்தைக்கு தீடிரென பத்து டெய்ரி மில்க் சாக்லெட் வாங்கி கொடுத்தால் அந்த குழந்தை எவ்வளவு மகிழ்வாக துள்ளி குதிக்கும் அந்த மனநிலையில் இருந்தாள் தியா…. ஹரிணிக்கு தியா மகிழ்வை பார்த்தே இது தான் தேவா என்று தெரிந்து கொண்டாள்… கத்தி கொண்டு இருந்த தியா அருகில் வந்து அவள் கையை அழுத்தி பிடித்து அமைதியா இரு என்று அங்கு நின்று இருந்த தாரிகாவை கண்காட்டினாள் ஹரிணி… அதன் பின்பே சுற்றம் அறிந்து சற்று அமைதியானால் தியா...

தேவாவிற்கு தியாவை பார்த்து முதலில் யார் இவள் என்று தான் தோன்றியது… அதன் பிறகே அவள் அழைத்த பாவா என்பதில் தான் அன்று வீட்டில் பார்த்தா ராகவ் கசின் என்பது புரிந்தது… எதற்காக  தன்னை பார்த்ததும் இவள் கண்களில் இவ்வளவு பிரகாசம் முகத்தில் இவ்வளவு மகிழ்வு எதனால் என்று ஒரு நொடி யோசித்தவன், பின்பு இரியேட்டிங் இடியட் என்று தியாவை மனதிற்குள் திட்டி விட்டு அமைச்சரின் மனைவியிடம் அமைச்சருக்கு நடந்த அறுவை சிகிச்சை குறித்தும் இனி அவரின் உடல்நிலை குறித்தும் கூறி கொண்டு இருந்தான்…

தியா அவன் பேசுவதையே இமைக்காமல் பார்த்து கொண்டு நின்று இருந்தாள்… முதன் முதலில் அவனை பார்க்கும் போது அவன் முகத்தில் அவ்வளவு இறுக்கம் கடுகடுப்பு இருந்தது...  இன்றோ அது இரண்டுமே இல்லை... சாந்தமாக அவன் முகம் இருந்தது… அவனை பார்த்த தியாவின்  உதடுகளோ சிரித்த வண்ணமாகவே இருந்தது… ஹரிணியும் தாரிகா அன்னை தியா வை தவறாக எண்ண கூடாது என்று தியா  கன்னத்தை அழுத்தி சிரிக்காத மாதிரி வைத்தாலும், மறுபடியும் தியா சிரித்த முகமாகவே நின்று இருந்தாள்… இந்த சூழ்நிலையில் தன்னுடைய முகபாவனை தவறானது என்று தியாவின் மூளைக்கு புரிகிறது… ஆனாலும் தேவாவை பார்த்ததும் தன் உள்ளம் கொண்ட மகிழ்வை அவள் எவ்வளவு அணை போட்டு தடுத்தாலும்‌ மனது கேட்காமல் அணையை உடைத்து வரும் வெள்ளம் போல் அவள் கண்களும் முகமும் அந்த மகிழ்ச்சியை  அப்பட்டமாக வெளிபடுத்துகிறது…

தேவா அவர்களிடம் பேசி விட்டு கிளம்பும் போது தாரிகா அன்னை தேவாவின் கைப்பிடித்து ரொம்ப தாங்க்ஸ் டாக்டர் என் புருஷன் உயிரை காப்பாத்தி கொடுத்துட்டிங்க… நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கனும் குழந்தை குட்டியோடு என்று கூறினார்… அதை கேட்டு தேவா மகிழ்ந்தானோ என்னவோ  தியாவிற்கு மனதிற்குள் சொல்ல முடியாத அளவு அவ்வளவு மகிழ்வு… அவனை புகழ்வது அவளுக்கு பெருமையாக இருந்தது... தேவாவோ அவர்கள் சொன்னதுக்கு நன்றி எனும் விதமாக உதட்டோரம் சின்ன சிரிப்பை அளித்து விட்டு கிளம்பினான்... இதழ் பிரிக்காமல் உதட்டை லேசாக வளைத்ததுக்கே, என் பாவா சிரிக்கும் போது எவ்ளோ அழகு சுத்தி போடனும் ப்பா என்று தியா  எண்ணினாள்…‌‌

தேவா தியா வை கடந்து சென்றான்… என்ன இவரு நம்ம கிட்ட பேசாம போறாரு? என்று அவள் முகம் சுருங்கியது.. செல்லும் அவனையே பார்த்து கொண்டு நின்றாள்...

பாவா ஒரு நிமிஷம் நில்லுங்க..‌ பாவா என்றபடி தேவா பின்னே சென்றாள்…

என்ன பாவா  கூப்பிடுற வேலை வச்சுக்காதா, என்று மெதுவாக அவள் புறம் திரும்பி விரல் நீட்டி கோவமாக எச்சரித்து  விட்டு தேவா விறு விறுவென நடந்தான்...

அவன் நடந்து தான் செல்கிறான்… ஆனால் தியா வால் அவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை… அதனால் தேவா அருகில் ஓடி‌ கொண்டே பேசினாள்…

ஹாய்  பாவா எப்படி இருக்கீங்க... நல்லா இருக்கீங்களா, நாமா பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு என்றாள்... தேவா தியா வை கண்டு கொள்ள வில்லை... அவன் நடந்து கொண்டே இருந்தான்... என்ன பாவா நான் பேசிக்கிட்டே  வரேன் நீங்க கண்டுக்காம போறீங்க… இது எல்லாம் நியாயமா கொஞ்சம் நில்லுங்க பாவா என்றாள்… தியாவிற்கு ஓடி கொண்டே பேசுவது மூச்சு வாங்கியது… பாவா மெதுவா நடங்க, இல்லைனா இப்படி ஓரமா நின்னு பேசாலாம் முடியலை ஓடி கிட்டே பேசுறது என்று தியா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க  கூறினாள்... தேவா எதுவும் பேசாது அமைதியாக நடந்து கொண்டு இருந்தான்...

பாவா உங்க கிட்ட தான் நான் பேசுறேன்... ஏதோ காது கேட்காத மாதிரி போறீங்க... அதுவும் இவ்வளோ வேக வேகமா, ஏதாவது எக்ஸ்பிரஸ் ட்ரைன் பிடிக்க போறீங்களா,  உங்க கிட்ட நிறைய கேட்க வேண்டிய கேள்வி இருக்கு... அதற்கு எல்லாம் பதில் தெரியலைனா எனக்கு மண்டை வெடிச்சிரும்... பாவா நில்லுங்க என்று அவன் கைபிடித்து நிறுத்தியவள், இப்ப நீங்க பிசினா பரவாயில்லை, உங்க மொபைல் நம்பர் கொடுத்துட்டு போங்க... நான் உங்களுக்கு மெசேஜ் பண்ணிட்டு நீங்க ஃப்ரியா இருக்க டைம் வந்து என் கொஸ்டினுக்கு ஆன்சர் தெரிஞ்சிக்கிறேன் என்று இரண்டு கண்ணையும் சிமிட்டியபடி கூறினாள்...

தேவா பெரு மூச்சை இழுத்து விட்டவன், தனது நெற்றியை தடவினான்... என்ன பாவா தலை வலிக்குதா, வாங்களேன் வெளியே காஃபி ஷாப் போய் காபி சாப்பிட்டே பேசலாம்...  இவர்கள் இருவரும் நின்ற இடத்தில் இருந்து சற்று தள்ளி நின்று கொண்டு இருந்த ஹரிணியை கை காட்டி இங்கு வருமாறு அழைத்தான் தேவா... ஹரிணியும் அருகில் வர,

ஹரிணியிடம் யார் இது உன்னோட ஃப்ரெண்டா என்று தியாவை காட்டி கேட்டான்....

ஹரிணி ஆம் என்று தலை ஆட்டினாள்...

தேவா தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து தனது வால்டை எடுத்து அதில் வைத்து இருந்த ஒரு விசிட்டிங் கார்டு ஒன்றை எடுத்து ஹரிணி கையில் கொடுக்க, அதை என்கிட்ட கொடுங்க பாவா உங்க கார்டா இது என்றபடி தேவா கையில் இருந்து பிடிங்கினாள் தியா...

இதுல ஒரு சைகார்டிஸ்ட்  அட்ரஸ் இருக்கும்மா... உன் பிரெண்டா கூட்டிட்டு போய் காட்டுங்க... அவரு எவ்ளோ முத்துன கேஸா இருந்தாலும் சரி பண்ணிருவார்... அசாலாட்டா விட்றாதீங்க அப்புறம் பாவம் சங்கிலி போட்டு கட்டி வைக்கிற நிலைக்கு வந்துர போகுது என்று அலட்சியமாக கூறி விட்டு அங்கிருந்து சென்றான்...

என்னடி சொல்லிட்டு போறாரு, ஆ... நீ சரியான மெண்டல்னு சொல்றாருடி அந்த ஆளு,

ஹனிமா பாவா மரியாதையா பேசு என்று ஹரிணியிடம் கூறி விட்டு மறுபடியும் அவன் பின்னால்  வெளியே ஓடி வர, ஹரிணி தான் தன்  தலையில் அடித்து கொண்டாள்...

அதற்குள் தேவா தனது காரை எடுத்து கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றான்...  

ச்சை போன் நம்பர் கொடுக்கமா போய்ட்டாரே, இந்த பாவா இருக்காரே, சரியான லூசு என்ற தியா , ஏதோ அவசரம் போல் நெக்ஸ்ட் டைம் பார்க்கும் போது வாங்கிக்கலாம்...

தொடரும்.....

Continue Reading

You'll Also Like

42.1K 1.2K 45
காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r
18.7K 464 8
காதல் கொண்டு மனம் புரிந்த கணவன் திடீரென்று இறக்க கயல்விழிக்கு ஏற்படும் திகில் நிறைந்த நிகழ்வுகளே இக்கதை.
358K 9.2K 46
நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி...
644K 17.1K 53
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்கள...