இதயம் 20

160 11 2
                                    

அவள் கண்கள் எனக்காக 

அலைமோதக் கண்டேன்!

இமை...இமையே

இவை நடுவே 

எனை மீறிக் காண !

இது என்ன புது மாற்றம் 

எனக்குள்ளே தோன்ற !

வழி நெடுக 

இவள் மணமே

எனை மோதிச் செல்ல-அவளின்

புது சாயல் என்னுள்

களவாடக் கண்டேன்!

பேரழகை வெல்லும் 

பெண் இவளே என்று

ஊனுக்கு உயிரே

பகையாகக் கண்டேன் !

இனியேனும் உறவாடி-என்

நாட்கள் போனால்

இதயத்தின் சம நிலையோ 

நிறம் மாறக் கூடும்!

தலைகீழாய் என் உலகம் 

மாறிப் போனால்

உயிர்கூட்டின் உறவும்

மோட்சம் காணும் !

இதுவே ...இதுவே

உன்னை யாசிக்கும்  

நிலையாகிப் போனால்

நித்திரையும் உன் சப்தம்

பிறையாகக் கூடும்!

என் மனதில் தவழும் ஊசலாய்-நீ

ஆனால் தாலாட்டும் பல்லவியாய்

நானே ஆவேன் !

லோகமும்,சூன்யமாய் 

மாறிப் போனால்-உன்

ஜாடைக் கண் இமையில் 

புது லோகம் படைப்பேன்!

தாள் திறந்து நீ எனை ஒரு கணம் பார்த்தால்

பரவசம் என்னுளே பல நூறு காண்பேன் !!!

காதல் நுழைந்தால் என்ன ஆகும் இதயம்!!!Where stories live. Discover now