இதயம் 19

78 3 1
                                    

நலம் விரும்பியாய் 

உன் நலத்தினை மட்டும் விரும்புகிறேன்!

காதல் என்னும் கல்லறைக்கு-இன்றே

பூக்கள் கட்ட விரும்புகிறேன்!

வளையாத மூங்கிலுக்கு 

வளைக்கக் கற்றுத் தருகிறேன்!

என்றோ சாவதற்காக -இன்று 

அஸ்தியை கரைகிறேன்!

எப்பொழுதோ உதிரும் பூக்களுக்காக-நாளை

அஞ்சலி செலுத்துகிறேன்!

எங்கோ மறையும் சூரியனுக்காக-இங்கு

வருந்துகிறேன்!

எதற்காகவோ வரும் சந்தோசத்திற்காக -இப்பொழுது

அழுகிறேன்!

என்றோ வரும் இருட்டிற்காக-இன்றைய

வெளிச்சத்தை வெறுக்கிறேன் !

எதற்காக இதையெல்லாம்

செய்கிறேன்

வெறும் முற்று புள்ளிகளோடு

முடிப்பதர்க்காகவா???

காதல் நுழைந்தால் என்ன ஆகும் இதயம்!!!Where stories live. Discover now