29. காதலையும் கடந்த உறவு

73 4 0
                                    

வேலையின் கலைப்பில் இருந்த ராகவ் ரக்ஷிதாவின் முக வாட்டத்தை அப்போதே கவனித்தான். ஆர்டர் செய்த கோல்ட் காஃபியை குடிக்காமல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு இருந்த ரக்ஷிதாவின் தோளை தட்டினான் ராகவ்.

"என்ன ஆச்சு? ஏன் இப்டி டல்லா இருக்க? எக்ஸாம் நல்லா பண்லையா? இதுக்கு தான் அப்பவே சொன்னேன். எக்ஸம் முடியுறவர எங்கயும் நம்ம போக வேணாம்னு. ஏன் ரக்ஷு இப்டி பண்ற?" என்று ஆதங்கத்துடன் கேட்டான்.

அதைக் கேட்டவள் மெலிதாக புன்னகைத்து, "போடா. இப்டி பேசி பேசியே என்ன லவ் பண்ண வச்சிட்ட. எனக்கு வேற ஒரு பிரச்சினை. சொன்னா நீ சரினு சொல்லனும். ஓகேவா?" என்று கேட்டாள்.

அதைக் கேட்டவன் புரியாமல், "வேற என்ன ப்ராப்ளம். தெரியாம நான் எப்டி சரினு சொல்ல முடியும்?" என்று கேட்டான்.

ரக்ஷிதா தயக்கத்துடன், "நம்ம.. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்று கேட்டாள்.

அதைக் கேட்டு ஒரு பக்கம் மகிழ்ச்சியில் இருந்தாலும மறுபக்கம் அதிர்ந்தவன், "என்ன சொல்ற? கல்யாணமா? படிப்பு முடியற வர அதைப்பத்தி யோசிக்காதனு சொன்னேன்ல. இப்டி நீ திரும்ப திரும்ப கேட்டா நான் கன்வின்ஸ் ஆகிடுவேன். அப்றம் உன் ஃப்யூச்சர் தான் ஸ்பாயில் ஆகும். நீ வேலைக்கு போகனும்னு எந்த கட்டாயமும் இல்லை. ஆனால், டிகிரி முடிக்காம விட்டுடாத. அதுலாம் ஒரு எக்ஸ்பிரியன்ஸ்" என்று வதனா கூறியதை நினைவில் வைத்து அவள் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு பேசினான்.

அவன் பேசியதில் உள்ளம் உருகினாலும் எடுத்த முடிவில் தீவிரமாக ரக்ஷிதா, "புரியாம பேசாத. எங்க அப்பாவுக்கு நம்ம விஷயம் எப்படியோ தெரிஞ்சிருச்சு. என்கிட்ட சண்டை போட்டு அடிப்பார்னு நினைச்சேன். அவருக்கு அதுக்கும் நேரம் இல்ல போல. உன்னப்பத்தி விசாரிக்க ஆள் அனுப்பிருக்காரு. என் அண்ணன வேற யூ. எஸ்லருந்து வர சொல்லிருக்காரு. நான் ஒட்டுக் கேட்டத வச்சு பார்த்தா என்னயும் அவனோட யூ. எஸ் அனுப்ப போறாருனு நினைக்கிறேன். இப்பக் கூட நான் என்ன பண்றேனு கண்காணிக்க ஆள் வச்சிருக்காரு. எனக்கு பயமா இருக்கு. நம்ம கல்யாணம் பண்ணிக்றது தான் பெஸ்ட் " என்றாள்.

காதலையும் கடந்த உறவுOù les histoires vivent. Découvrez maintenant