16. காதலையும் கடந்த உறவு

80 6 2
                                    

சிறிது நேரத்தில் ராகவின் பெற்றோர் இருவரும் வந்துவிட அங்கிருந்த ரக்ஷிதாவை பார்த்து கேள்வியுடன் புன்னகைத்தனர். உடனே ராகவ் அவனுடைய தோழி என்று அவளை அறிமுகப்படுத்த மரியாதை நிமித்தமாக எழுந்த அவளை அமரச் சொன்ன அவனது தந்தை அவள் ஏதேனும் உண்கிறாளா என்று கேட்டார். அவள் மறுத்த போதும் அவளுக்கு ஏதேனும் பதார்த்தங்கள் எடுத்து வருமாறு சமையல்கார அம்மாவிடம் கூறினார். பின் சில நிமிடங்களில் உடை மாற்றி வருவதாக கூறி மேலே சென்றார். ரக்ஷிதாவின் அருகே அமர்ந்த அவன் தாய், "நீயும் ராகவும் எப்படி ப்ரண்ட்ஸ் ஆனிங்க. அவன் எல்லாத்தையும் என்கிட்ட ஒப்பிச்சிடுவான். ஆனா, இத மட்டும் சொல்லல. ஓரே காலேஜா? இல்ல ஸ்கூலா?" என்று கேட்டார்.

அவள் என்ன கூறுவதென்று புரியாமல் விழிக்க அதேநேரம் ஆபத்பாந்தவனாக ராகவ் வந்து பேசினான். "அது ஒன்னு இல்லமா. வதனாவோட ஃபரண்ட் இவ. அப்பப்போ நான் அங்க போவேன்ல. அப்போ அப்டியே பேசி ஃபர்ண்ட் ஆகிட்டோம். என் பிஸனஸ் விஷயத்தில் ஒருத்தங்க ரொம்ப ஹெல்ப் பண்ணாங்கனு சொன்னேன்ல. அது இவ தான்" என்று உண்மையும் பொய்யும் கலந்து பேசினான்.

உடனே அவர் முகம் பிரகாசமாக, "ஓ நீ தானாடா அது. உண்மையாவே ரொம்ப பெரிய ஹெல்ப் நீ பண்ணது. எங்க இவன் இப்படியே ஊர் சுத்திட்டு உருப்படாம போய்டுவானோனு பயந்தே போய்ட்டேன். தீடீர்னு நான் பெர்ஃப்யூம் பிஸ்னஸ் பண்ணப் போறேனதும் என்னால நம்பவே முடியல. ஆனால் ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவங்க அப்பா கூட மொத என்னடா நம்ம பிஸ்னஸ பாத்துக்காம இப்டி தனியா ஆரம்பிக்கிறானேனு உர்றுனு இருந்தாரு. ஆனால் போக போக இவன் இன்ட்ரெஸ்ட் பார்த்து அவரே மனசு மாறி சப்போர்ட் பண்ணாரு. நீ வதனாவோட ஃபரண்டாமா? உன் ஃபரண்ட் கிட்ட இந்த ஆன்டிய அப்பப்போ பார்த்துட்டு போ சொல்லு. நானும் கூப்பிட்டே இருக்கேன். இந்த வேலை அந்த வேலைனு டிமிக்கி கொடுத்துட்டே இருக்கா. என்ன சொல்றியா?" என்றார்.

அவர் பேசுவதை கண்கொட்டாமல் பார்த்தவள் அவர் தன் பதிலை எதிர்ப்பார்ப்பதை உணர்ந்து, "கண்டிப்பா சொல்றேன் ஆன்டி" என்றாள்.

காதலையும் கடந்த உறவுWhere stories live. Discover now