25. காதலையும் கடந்த உறவு

64 8 2
                                    

வேறு என்னக் காரணம் என்று புரியாமல் அவன் பார்க்க வதனா பேசத் துவங்கினாள்.

"உங்களுக்கும் எனக்கும் உள்ள இந்த ஸ்டேட்டஸ் வேறுபாடு தான் மொதோ காரணம். நான் மிடில் க்ளாஸ் ஃபேமிலி. உங்க கம்பெனில நீங்க தர்ற சம்பளத்தை வாங்கிட்டு வேலைப் பார்க்குற ஒரு எம்ப்ளாயி. நீங்க என்னோட எம்.டி. அதனால நீங்க மேல நான் கீழனு சொல்ல வரல. ஆனால் உங்க பணத்துக்கு ஆசைப்பட்டு தான் நா..உங்கள காதலிக்கிறேனு இந்த ஊர்ல எல்லாரும் பேசுவாங்க. அதுவும் நான் உங்க கிட்ட வேலப் பார்க்கிறதால இன்னும் மோசமாவே சொல்லுவாங்க. என் அப்பா அம்மா பேர காப்பாத்த நான் ரொம்ப சிரமப்பட்டுட்டேன். அது திரும்ப நம்ம உறவால கெட கூடாது. இருங்க. நீங்க என்ன சொல்ல வருவீங்கனு எனக்கு தெரியும். நீங்க அப்படி நினைக்கல. ஆனா, ஃப்யூச்சர்ல உங்க சம்பந்தப்பட்ட யாராச்சும் இத பேசுவாங்க. அப்போ உங்களால அவுங்கள எதிர்த்து பேச முடியாது. அத என்னால ஏத்துக்கவும் முடியாது. என் செல்ஃப் ரெஸ்பெக்ட இழந்துட்டு என்னால ஒரு உறவுல இருக்க முடியாது. அதுமட்டுமில்லாம... இந்த கம்பெனி உங்களுக்கு எவ்ளோ இம்பார்ட்ன்ட்னு எனக்கு தெரியும். நம்மளோட உறவால இந்த கம்பெனிக்கு இப்போ மாதிரி எதாச்சும் பிரச்சனை வந்தா உங்க மனசுல அப்பவே யோசிச்சிருக்கலாமோனு தோனும். அப்படி தோனிட்டா இந்த உறவுக்கு அர்த்தமே இல்லாம போய்டும்" என்றாள்.

அவள் பேசும் வரை பொறுமையாக இருந்தவன் அவள் வலது கரத்தை தன் கருத்துடன் இணைத்து, "இவ்ளோ தெளிவா எல்லாத்தையும் யோசிச்ச நீ நான் என்ன நினைப்பேனு யோசிக்காம விட்டுட்டு. இது உன்னப் பத்தி மட்டும் சம்மந்தப்பட்ட ஒரு விஷயம் இல்ல. எனக்கும் இதுல முடிவு எடுக்க உரிமை இருக்கு. மிஸ் வதனா உன்ன மிஸஸ் வதனாவா என் லைஃப் பார்ட்னரா நான் ஆக்கிக்கனும். உனக்கு இனிமே அப்படி ஒரு கஷ்டத்த நான் வரவிட மாட்டேன். ஊர் உலகம் ஆயிரம் பேசும். அது என்னைக்கு பேசாம இருந்திருக்கு. லிஸ்டன். நான் ஒன்னும் பரம்பர பணக்காரன் இல்ல. மிடில் க்ளாஸ்ல பிறந்து வளர்ந்த ஒரு காதல் ஜோடியோட வாரிசு தான் நான். அப்படி வளர்ந்த நான் நீ சொல்ற மாதிரி உன்ன லோவா நினைக்க மாட்டேன். சண்டை போடுவேன். எல்லா நாளும் ஸ்வீட்டா இருக்காது. ஐ அக்ரி. ஆனால், எப்பவும் உன்ன வொர்த்லெஸா ட்ரீட் பண்ண மாட்டேன். இந்த கம்பெனி எனக்கு முக்கியம் தான். அத இல்லேனு மறுக்கல. ஆனால், அதுக்காக உன்ன லூஸ் பண்ணிட்டேனா காலம் முழுக்க அந்த குற்ற உணர்ச்சி என்னக் கொன்னுடும். ஏற்கனவே அம்மாவ அதனால பாதி இழந்து இப்ப மீட்டெடுத்து இருக்கேன். அதே ஃபேஸ் குள்ள நான் திரும்ப போய் கஷடப்படனுமா?" என்று கேட்டான்.

காதலையும் கடந்த உறவுWhere stories live. Discover now