19. காதலையும் கடந்த உறவு

97 8 6
                                    

ஆஸ்பத்திரிக்கு இப்படி அழகு ஓவியமாய் அலங்கரித்து வந்தவளைக் கண்டவன் மனதில் பொரி தட்டியது. அவளருகே வந்தவன் அவளிடம், "ஹே.. ஹாஸ்பிடல்னு சொல்லிட்டு இப்டி வந்திருக்க? என்ன நடக்குது இங்க?" என்று கேட்டான்.

அவனது குழப்பத்தைக் கண்டு சிரித்தவள், "சொல்றேன். ரொம்ப யோசிக்காதீங்க. நீங்க தந்த சேலன்ஜ் தான் இது. உங்களைப் பத்தி தெரிஞ்சுக்க முடியுமானு கேட்டீங்கள்ல? நான் ஏதோ என்னால முடிஞ்சவர ட்ரை பண்ணிற்கேன். சர்ப்ரைஸ்கு ரெடியா?" என்று கேட்டாள்.

அதை சற்றும் எதிர்பாராதவன் ஆச்சரியத்துடன், "எப்படி? எதுக்கு இங்க வந்திருக்கோம்?.." என்று கேள்விகளை அடுக்க அவனிடம், "ஷ்ஷ். இன்னும் கொஞ்ச நேரத்தில நீங்களே தெரிஞ்சுப்பீங்க" என்று அவனை அமைதியாக செய்தாள்.

பின் தன் கையில் இருந்த ப்ளைன்ட் மாஸ்கை கொண்டு அவன் கண்களை மூடினாள். அவன் கரத்தை பிடித்துக்கொண்டு அவனை தன்னுடன் வருமாறு இழுத்துச் சென்றாள். அவள் செய்வது வேடிக்கையாக தோன்றினாலும் இப்படி அவள் சொல்லும் வழியில் அவள் கரத்தை பிடித்து நடப்பது அவனுக்கு பிடித்திருந்தது. அவளை மட்டுமே அந்த கணம் நம்பி செல்வது போல் இருந்தது. அது அவனுக்கு ஒரு வித கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

நடக்கும் போது ஏதோ காலை தட்டிவிட தடுமாறியவனை மேலும் இறுக்கப் பிடித்துக்கொண்டவள் முன்னே அழைத்துச் சென்றாள். பின், ஓரிடத்தில் நின்றவள் அவனிடம் தன் கண்களை திறக்குமாறு கூறினாள். கண்களைத் திறந்த போது வண்ண வண்ண விளக்குகளோட ஒரு நடைபாதை தெரிந்தது. சுற்றிலும் வேறு ஆட்கள் இல்லை. அவன் ஏதும் கேட்கும் முன் அவள் அவறை முன்னே இழுத்துச் செல்ல ஒவ்வொரு இரண்டு மீட்டர் இடைவெளியில் ஒரு பரிசு இருந்தது. அதைப் பார்த்தவன் புன்னகையுடன் அவளிடம் திரும்பினான்.

"நான் என்ன சின்னக் குழந்தையா? இப்டிலாம் கிஃப்ட்ஸ் தரத்துக்கு?" என்று புன்னகையுடன் கேட்டான்.

அதற்கு வதனா, "எம்.டி சார் ஓபன் பண்ணி பாருங்க. உங்க லெவல் இல்லனாலும் இது வதனா ஸ்டைல் சர்ப்ரைஸ். டிஸப்பாய்ன்ட் ஆக வாய்ப்பே இல்லை" என்றாள்.

காதலையும் கடந்த உறவுDonde viven las historias. Descúbrelo ahora