15. காதலையும் கடந்த உறவு

80 7 2
                                    

அன்றைய பணிகள் அனைத்தும் முடித்து தான் தங்கியிருந்த விடுதியின் அறைக்கு வந்த திரவியம் உறங்கும் முன் வதனாவின் நினைவு கொண்டான். அவன் பி.ஏ அவள் தன்னை ஏதோ ஒரு தகவல் சொல்ல தேடியதாக கூறியதில் இருந்தே அவன் மனம் அவளிடம் பேச வேண்டும் என்ற ஆவல் கொண்டது. வேலையின் காரணத்தால் அவனால் எப்போதும் பிடித்தவர்களுடன் போதிய நேரம் செலவழிக்க முடிவதில்லை. அவன் தந்தை சராசரியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்; அரசு அதிகாரி. அவருக்கு சுயமான தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் குடும்ப சூழலால் அவர் அதை மறந்து விட்டு அரசு தேர்வில் விடாமுயற்சியுடன் படித்து வெற்றி பெற்று வருமானவரித்துறையில் ஒரு அதிகாரியாக உள்ளார்.

அதே நிலை மகனுக்கும் வர விடாமல் அவனுக்கும் தொழில் தொடங்க உதவுவதில் தீவிரம் காட்டினார். அதை அவன் இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அவனுக்கு சிறுவயதில் இருந்தே கிடைக்கும் பொருட்களை மதிக்கும் பண்பை போதித்தார். எனவே, அவரது முதலீட்டை குறுகிய காலத்திலேயே தன் உழைப்பு மற்றும் சாமர்த்தியத்தின் மூலம் திரவியம் இரட்டிப்பாக்கினான். அவன் கவனம் எப்போதும் அவன் கம்பெனியைச் சுற்றியே இருக்கும். அதனாலேயே அவனால் எந்தவித உறவிலும் நீடிக்க முடியவில்லை. அவன் பழகிய பெண்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் இதனால் எரிச்சல் அடைந்து அவனைவிட்டு விலகி உள்ளனர்.

ஆனால், அப்போது எல்லாம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவன் வதனாவின் விடயத்தில் ஒருவித கலக்கத்துடன் இருந்தான். எங்கே நாம் அவளுக்கு முக்கியத்துவம் அளித்து அதிக நேரம் செலவிடவில்லை என்றால் அவளும் அதேபோல விலகி சென்று விடுவாளோ என்று அவன் மனம் தவித்தது. அவளிடம் மட்டும் ஏன் இந்த அளவு ஆர்வமும் பதட்டமும் சௌகரியமும் கிடைக்கிறது என்று அவனுக்கும் புரியவில்லை.

அவள் குறுஞ்செய்தி அனுப்பியதும் யோசிக்காமல் அவள் எண்ணிற்கு அழைத்தான். அவனது அழைப்பை அவள் ஏற்று விட அதை எதிர்பாராதவன், "ஹலோ" என்றான் மெல்லிய குரலில்.

காதலையும் கடந்த உறவுWhere stories live. Discover now