1. காதலையும் கடந்த உறவு

321 9 2
                                    

விண்ணுலகம் மனம் கனிந்து பூமிக்கு மாரியை பரிசளித்த பொன்னான மழைக்காலம் இந்த நேரம். வெப்பம் தன் தாக்கத்தால் வாட்டிய இடங்களை எல்லாம்  மழை தன் நீரால் குழுமையாக்கியது. சேர்த்து வைத்த செல்வமெல்லாம் எதிர்காலத்தில் கை கொடுப்பது போல நட்ட செடிகளெல்லாம் மரங்களாகி இயற்கையின் வனப்பை அதிகரித்தன. மழையில் தோகை விரித்து ஆடும் மயில் போல தன் கைகளை விரித்து தன் அழகிய தோட்டத்தில் வானத்தை நோக்கி ஆடிக் கொண்டு இருந்தாள் வதனா. துளி துளியாய் கொட்டிய நீர் தன் ஆடையை நனைத்து உடலெங்கும் பரவசமாக்க அதில் தாளமிட்டு நடனம் பழகினாள் அந்த மங்கை மகிழ்வோடு.

மழை, அவளது இரண்டாம் உற்ற நண்பன். தன் உணர்வுகளை கட்டுக்குள் வைக்காமல் வெளிப்படுத்தும் இடமாகவே அவள் மழையை கருதினாள். மழையில் நனையும் போது அவள் மனம் எந்தவித சிந்தனைகளும் இன்றி இலகுவாக மாறுவதை அவள் எப்போதும் உணர்ந்து கொள்வாள். அது ஏன் என்று அவளுக்கு புரிந்தது இல்லை. கடவுளின் விந்தையான படைப்புகளை ஆராய்வது ஒரு சுகம் என்றால் அதை அனுபவிப்பது அதனினும் சுகம் தரும். வதனா அந்த வகையில் இரண்டாவது இனம். அந்த சுகத்தை ஏற்று  அனுபவித்து கொண்டு இருந்தவளை சுயநினைவுக்கு கொண்டு வந்தது அவள் பாட்டியின் குரல்.

"தோ.. வந்துட்டேன் பாட்டி," என்றபடியே உள்ளே வந்தவளைக் கண்ட பரமேஸ்வரிக்கு முகத்தில் கோபத்தின் தடம் தெரிந்தது.

"அடடா..எப்படி தொப்பலா நினைஞ்சிருக்க? எத்தனை முறை சொல்லிற்கேன் மழைல போய் ஆடாதனு?  போய் துணிய மாத்திட்டு வந்து சாப்பிடு" என்று கட்டளையிட்டார்.

அனைத்தையும் கேட்பது போல தலையாட்டிவிட்டு வெள்ளைக் கோடுகள் போட்ட தன் மஞ்சள் நிற சுடிதாருக்கு மாறி வந்தவளின் தலையை துவட்டியவர் பின் உணவை பரிமாறினார்.

"வாவ். சப்பாத்தியும் பன்னீர் மசாலாவும் பண்ணீர்க்கீங்களா? சூப்பர். என் செல்லம்" என்று அவர் கன்னத்தை கிள்ளினாள்.

அவள் கையைத் தட்டி விட்டவர், "அடிபோடி  வலிக்குது. வயசான காலத்துல இவ்வளோ மெனக்கெட்டு சமைக்கிறது யாருக்காக? நீ நேரத்துக்கு சாப்பிட்டா எனக்கு அதுவே போதும்" என்றார்.

காதலையும் கடந்த உறவுजहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें