இருவாழ்வி அவன்

15 2 7
                                    

ச்ச ச்ச ச்ச ச்ச ச்ச.... என்ன கெரகம் புடிச்ச வேல டா இது... ஆடாம அசையாம ஒரே எடத்துல ஒக்காந்துட்டு... ச்ச்சை... இந்த ஒரே ஒரு கம்பியூட்டர் ஸ்கிரீன பாத்துட்டு.... இப்போ நா எங்க எப்டி இருக்க வேண்டியவன்.... என் நேரம் இந்த நாசமா போன கால் சென்டர் வேலைல வந்து மாட்டிகிட்டேன்.. எல்லாம் என் விதி... கொடும டா..

ஓரிடத்தில் உட்கார்ந்து உருப்படியாக ஒரு வேலை செய்வதில் நாட்டம் இல்லாமல் துறுதுறுவென எங்கேயாவது சுற்றி திரிய ஆவல் கொண்டிருக்கும் நாயகன்...

                         ✨✨✨

ரசாக் பேபி... இந்த ஜென்மம் மட்டும் இல்ல... இனி வர்ற ஏழு ஜென்மம்... அதுக்கு முன்னாடி இருந்த ஏழு ஜென்மம்... அதுக்கு அப்பரமா வர்ற நூறு ஜென்மம்... அப்பறம்....

அம்மாடி தெய்வமே... போதும் நிறுத்து மா... எனக்கு அத்தன ஜென்மம்லாம் இந்த பூமில பொறந்து நொந்து நூடுல்ஸ் ஆவ தெம்பு இல்ல மா... எனக்கு என் ராகி கொழுகட்ட கூட இருக்குற இந்த ஒரே ஒரு ஜென்மமே போதும்... மை லவ்லி பொண்டாட்டி...

அவனுக்கே அவனுக்கென இருக்கும் ஒரு காதல் நாயகி...

                       ✨✨✨

"எதுக்கு பேபி எல்லாத்தையும் பேக் பண்ணுற... மறுபடியும் எதாச்சும் மல ஏற போறியா.."

"போறியா இல்ல டி செல்லம்.... போறோம்."

"எதே.. போரோமா???... ஹ்ம்ம்... நோ... எனக்கு கால் வலிக்கும்..."

"நா எதுக்கு இருக்கேன்... உன்ன அப்படியே தூக்கிட்டு போய்ட்டா போச்சு"

சிறு அவகாசம் கிடைத்தாலும் நாயகியை இழுத்துக்கொண்டு சந்து பொந்து தொடங்கி காடு மலை ஏரி குளம் குகை என ஓரிடம் விடாமல் பம்பராமாய் சுற்றி வருபவன்

                          ✨✨✨

"வாவ்... பேபி... இதுகுள்ள பாரேன்... எவ்ளோ அழகா இருக்கு.... இத ஒரு குகைன்னு சொன்னா யாராச்சும் நம்புவாங்களா..."

"அட போடா... நீ எந்த எடத்த பாத்தாலும் இப்டி தா ஒரு ரியாக்ஷன குடுப்ப... போ டா.. நா தூங்க போறேன்."

தொடர் முன்னோட்டம்Where stories live. Discover now