💙அன்பே💛சிவம்💙

By KathirvelanMullai

8.2K 1.1K 865

அதிகாரம் + அமைதி = அன்பு More

INTRO
எமிலி பாவம் 😔
குச்சி குச்சி முல்லையம்மா
எல்லாம் சிவமயம்
யாரு நீ..?
நாங்களும் கருத்து சொல்லுவோம்
ஒரு அடி எல்லாம் ஓவர் 🤗
காரில் யாரு.??
U dont Wry எமிலி 🤗
அந்தோ பரிதாபம்
கண்ணழகி...
🐦🐦குருவி இல்ல பருந்து🦅🦅
💞அன்பின் முல்லை 💞
கசமுசா ஓவியமா
என்ன கத்தியா 🤭
என்னது கதிரை எமிலி ரிஜெக்ட் பன்னிட்டாங்களா 🤭
குட்டி பிளாஷ் back
me too
என்னவா இருக்கும்
முதல் முத்தம் 🤗
இவன் யாரு டா புது வில்லன்
என்ன சொல்ல போகிறாய்
Y this கொலவெறி
ஒரே கல் இவங்க சோலி Over
come back முல்லை டார்லிங்
💛💙💛💙💛
💛காதல் கொண்டேன்💙
🤭கத்தாதே baby 🤭
பாப்பா சாதிக்க விரும்புறாங்க
யாருப்பா அது
இன்னும் யோசிக்கலையா
மலரும் நினைவுகள்
யோசிப்போம்
என்ன செய்யப் போகிறாய்
ஜிமிக்கி கம்மல்
வாய்ப்பில்ல கதிரு
ஒண்ணுமே புரியல 🙄
💙உனக்காக💛காத்திருப்பேன்💙
White Chilly

காஞ்சனாவா

196 26 19
By KathirvelanMullai

💙அன்பே💛சிவம்💙

💛Episode 🖐️➕️ 🖐️

வேணு முல்லை இரண்டு பேரும் ஏறிய பஸ்சில் முல்லையை காணோம் என்று தெரிந்ததும் மயில் சாமி நெஞ்சை பிடித்து கொண்டு மயங்கி விழுந்தவரை கதிர் ஹாஸ்பிடளில் சேர்க்க...

ஆப்போசிட் Side MR enterprise என்ற Factory யில் முல்லை மயங்கிய நிலையில் தரையில் படுத்து இருந்தவர் முகத்தில் ஒரு பெண் water spray பண்ணதும்... முல்லை கண்களை திறந்தவர்....

M - நான்...... நான் எங்க இருக்கேன்......

👩‍🦱- ம் உன் மாமியார் வீட்டுல....

M - நீங்க... நீங்க தானே என்னை பஸ்ல இருந்து வேணுக்கு accident ஆச்சுன்னு சொல்லி அழைச்சிட்டு வந்திங்க.... வேணு எங்க..... நான் எப்படி இங்க இருக்கேன்....

👩‍🦰- ஆங்.... நாங்க உன்ன இங்க கடத்திட்டு வந்துருக்கோம்

M - என்ன... கடத்திட்டு வந்திங்களா.... ஐயையோ.. அப்போ நீங்க எல்லாம் புள்ள பிடிக்கிற ஆளுங்களா...

ஒருவன் - என்ன புள்ள புடிக்கிற ஆளுங்க வா....

M - ம் ஆமா...எங்க அம்மா சொல்லிருக்கு.....உங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் என்னை மாதிரி குட்டி பாப்பாவை கடத்திட்டு போய் கண்ணை எல்லாம் நொண்டி பிச்ச எடுக்க வைப்பிங்கன்னு எங்க அம்மா சொல்லிருக்கு

👩‍🦰- டேய் இந்த பொண்ணு இன்னும் update ஆகல போல டா..... இங்க பாரு டி பொண்ணு.... நாங்க உன் கண்ணை மட்டும் இல்ல.... உன் மேல கூட கை வைக்க மாட்டோம்... நீ Fresh பீஸ்... அதனால உன்னை market ல sales பண்ண போறோம்

M - நான் என்ன பலகாரமா என்னை நீங்க sales பண்ண..... நகருங்க நான் போகணும்

👩‍🦱- ஏய் நில்லு எங்க போற...

M - நான் ஊருக்கு போறேன்.... அந்த வேணு பையன் கண்டிப்பா இநேரம் ஊருக்கு போய் இறங்கி இருப்பான்.... நானும் போகணும் வழியை விடுங்க

👩‍🦰- நீ உன் ஊருக்கெல்லாம் போக முடியாது

M - ம் அப்போ நான் அந்த கிறுக்கு பையன் வீட்டுக்கு போறேன்

👩‍🦰- ஏய் நீ எங்கேயும் போக கூடாது

M - என்ன நீங்க....இந்த ஊருல எல்லோரும் ரொம்ப கெட்டவுங்களா இருக்கீங்க.... அந்த கிறுக்கன் கதிர் என்னடானா அவன் பங்களால இருந்து என்னை வெளிய போக கூடாதுன்னு சொல்லறான்.... அங்க இருந்து நான் தப்பிச்சு என் ஊருக்கு போகலாம்ன்னு பாத்தா நீங்க என்னை இந்த இடத்துல உக்கார வச்சி நான் வெளிய போக கூடாதுன்னு சொல்றிங்க..... ஏன் இப்படி பண்ணுறீங்க...

👩‍🦱- ஏய் நீ என்ன இவ்வளவு பேசுற.... நாங்க உன்னை இங்க கடத்திட்டு வந்துருக்கோம் என்ற பயமே உனக்கு இல்லையா..

M - ம் பயம் இருக்கு தான்.... ஆனா என்னை நினைச்சு நான் பயபுடல.... உங்கள நினைச்சு தான் நான் பயப்புடுறேன்....

👩‍🦰- என்ன.... எங்கள நினைச்சா

M - ம் ஆமா....இங்க பாருங்க நான் உங்களுக்கு எல்லாம் பத்து நிமிஷம் அவகாசம் தரேன்... அதுக்குள்ள நீங்க என்னை எங்க இருந்து கூட்டிட்டு வந்திங்களோ அங்கேயே அழைச்சிட்டு போய் விடணும்...

👩‍🦱- அப்படி விடலைனா....

M - இன்னும் பத்து நிமிஷம் எக்ஸ்ட்ராவா எடுத்துக்கோங்க.. ஆனா என்னை அழைச்சிட்டு போய் bus ஏத்தி விட்டுடுங்க..

👩‍🦰- நீ பஸ்ல எல்லாம் போக வேணா... நான் உன்ன வேன் ல ஏத்தி விடுறேன்... இப்போ நீ போய் அந்த ரூம்ல இரு போ..

M - அந்த ரூமா

👩‍🦱- ஆமா ஆமா அங்க தான்.. போ மா... போ...

M - ம்.... வேன் வந்ததும் சொல்லுங்க

👩‍🦰- ஆங் ஆங் சொல்றோம்..

முல்லை இவர்கள் சொன்னதை நம்பி ஒரு ரூமுக்குள் செல்ல.... அந்த MR enterprise factoryai சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் முல்லையை கடத்தி இருக்கிறார்கள் என்ற உண்மை தெரியாத கதிர்... மயில்சாமியை ஹாஸ்பிடளில் சேர்த்தவர்... டாக்டரை பார்த்த பிறகு அந்த அறையில் இருந்து வெளியே வர........

{ ஹாஸ்பிடளில் நடக்கும் சீன் }

எமிலி - கதிர் டாக்டர் என்ன சொல்றாங்க..

K - மாமாவுக்கு treatment பண்ணுறாங்க எமிலி......அவருக்கு already two times attack வந்து இருக்கு.... So இப்போ மறுபடியும் இவருக்கு pain வந்ததை நினைச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்கு....

வேணு - யோவ்... இதுக்கெல்லாம் காரணம் நீ தான்.... நாங்க எங்களோட ஊருல இருந்து இருப்போம்... எங்கள இங்க அழைச்சிட்டு வந்து... என் அத்தை மகளை நான் தொலைச்சது தான் மிச்சம்....ஐயோ முல்லைக்கு வேற விவரம் தெரியாது.... பாவம் அவ எங்க மாட்டிகிட்டு என்ன பன்றான்னு தெரியல...

வேணுவின் கன்னம் மீண்டும் காயமானது கதிரின் கோவத்தால்....

வேணு - என்ன நீ அப்புறமா அடி... பாவம் முல்லை அவ எங்கன்னு கண்டு பிடி

K - ஏன்டா நல்லா ஜெஸி மாடு மாதிரி வளந்து இருக்கியே.... அவ தான் குழந்தை தனமா வீட்டை விட்டு போகலாம்னு சொன்னா நீ கொஞ்சம் கூட யோசிக்காம அந்த பொண்ணை அழைச்சிட்டு போயிடுவியா....

வேணு - என் அத்த மக ஆசையா கேட்டா நான் என்ன பண்ண முடியும்....

K - டேய் நான் அசிங்கமா பேச மாட்டேன்.... ஆனா உன்ன மாதிரி கேவலமா பேசுற வாயை உடைக்காமவும் விட மாட்டேன்

எமிலி - கதிர் pls... இப்போ கோவப்பட நேரம் இல்ல.... பாவம் அந்த Girl எங்கன்னு வேற தெரில..... நம்ம வேணும்னா போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணலாமா

K - எமிலி நீங்க எனக்காக மாமா கூட இருங்க.... நான் மறுபடியும் அந்த BUSTAND ஏரியால இருக்குற CCTV கேமரா மூலமா முல்லையை யாரு அழைச்சிட்டு போனாங்கன்னு பாக்குறேன்....

எமிலி - அப்போ போலீஸ்கிட்ட சொல்ல வேணாமா

K - என்னால கண்டு பிடிக்க முடியலைன்னா... வேற சாய்ஸ் இல்ல.... கண்டிப்பா போலீஸ் கிட்ட தான் போகனும்...

என கதிர் எமிலியிடம் சொல்லிக்கொண்டு இருந்த நேரம்.... கதிரின் cell போன் kku நியூ நம்பரில் இருந்து CALL வர....

K - ஹலோ யாரு பேசுறீங்க

சிவா - தம்பி நான் சிவா பேசுறேன் பா....

K - சிவா na.... ஓ.. ஆட்டோ அண்ணனா

சிவா - ஆமா பா....

K - சொல்லுங்க அண்ணா

சிவா - தம்பி உன் போன் kku நான் location அனுப்பிருக்கேன்.....நீ உடனே கிளம்பி அந்த அட்ரஸ் kku வாப்பா

K - என்ன அட்ரஸ்...... ஏன் அண்ணா... அப்போ நீங்க என் மாமன் மகளை பாத்திங்களா.... அவ அங்க தான் இருக்காளா

சிவா - தம்பி நீ இங்க வாப்பா.... நேர்ல வா நான் விவரமா சொல்றேன்

K - within 30mins ல நான் அங்க இருப்பேன்.....

கதிர் போன் call cut செய்தவர்.....

K - எமிலி மாமாவ பாத்துக்கோங்க....

எமிலி - போன்ல யாரு கதிர்...ஆட்டோ டிரைவரா

K - ம் ஆமா

எமிலி - என்னவாம்

K - போன்ல ஏதோ அட்ரஸ் லொகேஷன் send பண்ணிருக்காரு...நான் அங்க உடனே போகணும்....

வேணு - நானும் வரேன்...

K - நீ பண்ணது எல்லாம் போதாதா.... இங்க பாரு... முல்லைக்கோ என் மாமாவுக்கோ எதாவது ஆச்சுன்னு வை... உன் கழுத்தை நான் திருப்பி போட்டுடுவேன் சொல்லிட்டேன்

எமிலி - கதிர் pls control ur self... நீங்க இந்த பையனையும் அழைச்சிட்டு போங்க

K - டேய் வந்து தொல.... எமிலி மாமாவை பாத்துக்கோங்க

கதிர்....வேணுவுடன் ஆட்டோ டிரைவர் சிவா send பண்ண அட்ரஸ் kku காரை டிரைவ் செய்ய ....

Aftr Few Mins இவர்கள் ... அந்த லொகேஷன் காட்டிய அட்ரஸில் வந்து இறங்கியதும் கதிர் சிவாவுக்கு call பண்ண.....

சிவா - ஹலோ தம்பி எங்க இருக்கிங்க

K - நீங்க அனுப்புன அட்ரஸ் ல தான் இருக்கேன்

சிவா - ஆங் ஆங் நான் உங்கள பாத்துட்டேன் அங்கேயே நில்லுங்க

என்று சிவா சொன்னவருடன் ஒரு பெண் வருவதை பார்த்த வேணு

என்ன கதிர் அண்ணா.... இவர் நம்ம முல்லை கூட வருவாருன்னு பாத்தா.... வேற ஏதோ பொண்ணுகூட வராரு

K - எனக்கும் ஏதும் புரில இரு டா....

சிவா - தம்பி....முதல்ல உன் காருல ஏறு பா....

K - அண்ணா என் மாமன் மக எங்க

சிவா - நீ முதல்ல உன் காருக்குள்ள உக்காரு பா சொல்றேன்..... அனிதா நீயும் வா மா...

என சிவா சொன்னதும்.... கதிர் காரில் அனைவரும் ஏறி அமர....கதிர் ஒன்றும் புரியாமல்....

K - இவுங்க யாரு

அனிதா - வணக்கம் சார்... நான் அனிதா நான் உங்க area station ல தான் pc யா இருக்கேன்...

K - ஆங்.... but அண்ணா முல்ல எங்க

சிவா - தம்பி நான் உங்ககிட்ட பேசிட்டு போனதுக்கு பிறகு நானும் போய் உங்க சொந்தக்கார பெண்ணை bus ஸ்டாண்ட்ல தேடினேன் பா.... அப்போ ரெண்டு பொம்பளைங்க அந்த பெண்ணை மயக்கமான நிலைமையில ஒரு ஜிப் ல ஏத்திகிட்டு போறத பாத்து நான் அவுங்கள follow பண்ணேன் .....

K - என்ன அண்ணா நீங்க எனக்கு ஒரு போன் பண்ணிருக்கலாமே

சிவா - நானே அந்த பெண்ணை காப்பாத்திடலாம்ன்னு நினைச்சேன் பா..... ஆனா நான் அவுங்கள பின் தொடர்ந்து வருவதற்குள்ள அந்த ஜீப் வேகமா இதோ இந்த factory குள்ள புகுந்துடுது பா...

K - இந்த factorya... but இது.... இது என்ன factory..... MR என்டேரப்ரைஸ்ன்னு போட்டு இருக்கு..

சிவா - அத பத்தி பேச தான் உன்னை இங்கே வர சொன்னேன்....அனிதா நீயே சொல்லு மா

அனிதா - சார் இந்த MR enterprise மேல ஏற்கனவே நிறைய complaint இருக்கு.... ஆனா இதுக்கு owner யாருன்னு தெரியல... but இத run பண்றவன் பெரிய கட்டபஞ்சாயத்து காரன்.... உங்க வீட்டு பொண்ணு இந்த இடத்துல தான் இருக்காங்கன்னு அண்ணன் சொன்னதுமே நான் போலீஸ்ல எல்லாம் கம்பளைண்ட் பண்ண வேணா nnu சொல்லிட்டேன்

K - ஏன்...இங்க தான் முல்லை இருக்கான்னு தெரிஞ்சும் நம்ம ஏன் போலீஸ் kku போக கூடாது

அனிதா - இல்ல சார்....நம்ம நினைக்கிற மாதிரி அவ்வளவு சுலபமா உள்ள போக முடியாது... இவனுங்களுக்கு அடி ஆள் support அரசியல் சப்போர்ட் எல்லாம் பயங்கரமா இருக்கு... அதனால தான்..

K - அதனால....

அனிதா - சார் நம்ம இப்போ உங்க வீட்டு பெண்ணை எப்படி காப்பாத்துறதுன்னு பாருங்க..

வேணு - ஏங்க.... என்னங்க நீங்க.... என் அத்த மக இங்க தான் இருக்கான்னு தெரியுது இல்ல...வாங்க போய் என் முல்லையை அழைச்சிட்டு வரலாம்...

K - இப்போ நீ வாயை மூடல.. நான் உன்ன இதே இடத்துல சம்பவம் பண்ணிடுவேன் சொல்லிட்டேன்...

சிவா - தம்பி நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எடுத்தோம் கவுதோம்னு உள்ளே போக முடியாது பா....

K - ஆமா டா....பிளான் பண்ணி தான் நம்ம உள்ள போகணும்

அனிதா - சார்... நான் வேணும்னா எதாவது அட்ரஸ் கேக்குற மாதிரி உள்ள போகட்டா...

K - இல்ல இல்ல... ம்... இருங்க வரேன்

கதிர் அவர் போனில் இருந்து அவரின் மேனேஜர் @ frnd சாந்தனுவை அழைக்க...

சாந்தன்னு - ஹலோ கதிர் சொல்லு டா என்ன இந்த நேரத்துல...

K - டேய் ஏன் எதுக்கு எல்லாம் கேக்காத... நீ இரண்டு 1000 wlts பட்டாசை வாங்கிகிட்டு நேரா நான் அனுப்புற அட்ரஸ் kku வந்து சேர்ந்துடு.....

சாந்தன்னு - என்ன பட்டாசா

K - ஆமா டா...சீக்கிரம் வந்து சேரு..

சாந்தன்னு - ம் சரி கதிர்....

கதிர் போனை cut செய்ததும்....வேணு கதிரை கோவமாக பார்த்தவன்

வேணு - யோவ் என் அத்த மக அங்க உள்ள இருக்கா... நீ என்னனா இங்க பட்டாசு வெடிச்சு விளையாட பாக்குறியா....

K - டேய் ச்சீ வாயை மூடு... சிவா brother... இப்போ என் friend சாந்தன்னு வருவான்... அவன் வரும் போது பட்டாசு எடுத்துட்டு வருவான்....

சிவா - ஆனா பட்டாசு எதுக்கு

K - நம்ம சாந்தன்னு வந்ததும் பட்டாஸை பத்த வச்சி விடுவோம்....கண்டிப்பா இந்த நேரத்துல ஏன் பட்டாசு வெடிக்கிறாங்கன்னு சொல்லி எல்லா வீட்ல மட்டும் இல்ல இதோ இந்த ஃபேக்டரிக்குள்ள இருக்கிற ஆளுங்களும் வந்து பாப்பாங்க..அப்படி வரும்போது உள்ள எத்தனை பேரு இருக்காங்கன்னு நம்ப தெரிஞ்சுக்கலாம்... இது ஃபர்ஸ்ட் பாயிண்ட்...

Then எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரிஞ்சதுக்கு பிறகு நம்ப இந்த தெருமுனையில் இருக்கிற கரண்ட் கம்பத்துல கரண்ட் கட் பண்ணிட்டு... நீங்க நானு என்னுடைய friend சாந்தன்னு மூணு பேரும் ஃபேக்டரிக்குள்ள பூந்து நம்ம பொண்ண நம்ப அழைச்சிட்டு வரலாம்....

அனிதா - அப்போ நானு

K - இல்ல சிஸ்டர் நீங்க கார்லையே இருங்க....

வேணு - அப்போ நானு

K - நீ என்ன உள்ள வந்து பணியாரம் சுட போறியா.....காரை விட்டு கீழே இறங்கினா உன் கால ஒடச்சிடுவேன் சொல்லிட்டேன்

சிவா - தம்பி ஆனா இதுல எதுவும் பிரச்சனை வராதே

K - பிரச்சனை கண்டிப்பா வரும் தான் அண்ணா....எது வந்தாலும் பாத்துக்கலாம்

சிவா - இல்லப்பா வேணும்னா பெரிய அதிகாரிங்க உனக்கு யாராவது தெரிஞ்சா அவங்க கிட்ட உதவி கேட்போமே

அனிதா - ஐயோ வேணா... இந்த மாதிரி விஷயத்துல பெரிய அதிகாரிகள் தான் சம்பந்தப்பட்டிருப்பாங்க.... நம்ம மட்டும் இப்போ இந்த விஷயத்தை சொன்னா அந்தப் பெரிய அதிகாரிகளே இவங்களுக்கு போன் பண்ணி நம்மள போட்டு கொடுத்துடுவாங்க...அதனால கதிர் சார் சொல்ற மாதிரி நம்ப இங்கேயே வெயிட் பண்ணுவோம்...அவங்களுடைய மேனேஜர் வந்ததும் கதிர் சார் சொன்ன மாதிரி ப்ரோசீட் பண்ணுவோம்

என்று அனிதா சொன்ன நேரம் சாந்தனு கையில் பட்டாசுடன் கதிர் காரின் பக்கம் வர...

சாந்தனு - கதிர் என்னடா இது... இந்த நேரத்துல இங்க இருக்கிற... ஆமா ஊர்ல இருந்து எப்ப வந்த

K - டேய் அந்த விவரம் எல்லாம் நான் அப்புறம் சொல்றேன்... நாங்க ஊர்ல இருந்து வரும் பொழுது மயில்சாமி மாமாவுடைய மகளை அழைச்சிட்டு வந்தோம்...ஒரு சின்ன பிரச்சினையால அவ வீட்டை விட்டு வெளிய வந்துட்டா...வந்தவளை பஸ் ஸ்டாண்ட்ல அதை இதுன்னு சொல்லி ரெண்டு பொம்பளைங்க அவளுக்கு மயக்கம் மருந்து கொடுத்து கடத்திட்டு வந்து இதோ இந்த ஃபேக்டரி குள்ள வச்சிருக்காங்க... உள்ள எத்தனை பேர் இருக்காங்க உள்ள என்ன சூழ்நிலைன்னு தெரியாம நம்ப எடுத்தோம் கவிழ்த்தோம் என்று போலீஸ் கிட்ட போக இயலாது .. அதனால தான் நம்மளே உள்ள போயி என் மாமா மகளை அழைச்சிட்டு வந்துரலாம்னு பிளான் போட்டேன்..

சாந்தன்னு - என்னது நீ உள்ள போக போறியா...டேய் என்னடா என்னமோ சொல்ற..எனக்கு பயமா இருக்கு

K - அட சரியான தொட நடுங்கிடா நீ... முதல்ல உன் கைல இருக்குற பட்டாசை அதோ அந்த முனையில் இருந்து இந்த முனை வரைக்கும் வச்சு இரண்டு பக்கமும் ஆளாளுக்கு ஒரு மூலைல பத்த வைங்க போங்க..

என கதிர் சொன்னதும் சாந்தனுவும் ஆட்டோ காரர் சிவாவும் ஆளுக்கு ஒரு மூலையில் நின்று பட்டாசை பற்ற வைத்த நேரம் அந்த தெருவில் இருந்த வீட்டில் லைட் போடப்பட்டு அனைவரும் வெளியே வந்து எட்டிப் பார்க்க... ஃபேக்டரியிலிருந்து இரண்டு பெண்மணிகளும் இரண்டு ஆண்களும் வெளியே வர...

சிவா - கதிர் கதிர் அதோ இந்த ரெண்டு பொம்பளைங்க தான்பா உன் மாமன் மகளை ஜீப்பில் ஏத்துனாங்க

K - நல்லா தெரியுமா அண்ணா

சிவா - அட எனக்கு நல்லா தெரியும் பா....அதுவும் அங்க இருக்கிறா பாரு குண்டா ஒரு பொம்பள...அவதான் ஒரே ஆளா உன் மாமன் மகளை தூக்கி வண்டி குள்ள போட்டா

K - சரி அவங்க கண்ணுல படாம நம்ம காரிலேயே உட்கார்ந்து இருக்கலாம்

என கதிர் சொல்ல...பட்டாசு சத்தம் கேட்டதும் கூடியிருந்த வீட்டில் இருக்கும் எல்லோரும் லைட்டை போட்டு எட்டிப் பார்த்தவர்கள் தெருவில் யாரும் இல்லை என்று தெரிந்த பின்பு அவரவர் வீட்டுக்குள் சென்றுவிட...ஃபேக்டரியில் இருந்த இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் பேசும் சீன்

1st person - என்ன இது இந்த நேரத்துல யாரு பட்டாசு வெடிச்சு விளையாடுறாங்க

2nd person - என்னன்னு தெரியலையே

👩‍🦰- அட கல்யாணம் காட்சிக்கு வாங்கின பட்டாசு ஏதாவது மீதி இருக்குன்னு எவனாவது விளங்காதவன் பத்த வச்சிருப்பான்...சரி சரி வாங்க உள்ள போகலாம்..

👩‍🦱- டேய்... மணி என்ன ஆகுது இன்னும் ஏன் வேன் வரல

1st person - இன்னும் அரை மணி நேரத்துல வந்துருன்னு டிரைவர் சொன்னாரு அக்கா

👩‍🦱 - அந்த பொண்ணு வேற நல்லா தூங்கிகிட்டு இருக்கா..... வேன் சீக்கிரம் வந்தா இந்த குட்டியை ஏத்தி விட்டுட்டு நம்மளும் வீட்டுக்கு போகலாம்..

2nd person - சரி சரி... எல்லா கதையையும் வெளியே இருந்துகிட்டு பேசாம வாங்க உள்ள போகலாம்

இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் ஃபேக்டரிக்குள் செல்ல

K - சிவா அண்ணா எனக்கு தெரிஞ்சி இந்த நாள் பேர் மட்டும் தான் உள்ளே இருக்கிறாங்க போல

வேணு - அய்யய்யோ அப்ப முல்லை உள்ளே இல்லையா

K - டேய் உன்ன நான் வாயை திறக்க கூடாதுன்னு சொன்னேன்

சாந்தனு - கதிர்...இப்ப என்னடா பிளானு

K - நீ போயி அந்த தெரு முனையில் இருக்கிற கரண்ட் பாக்ஸ்ல பீஸ் எல்லாம் புடிங்கி விட்டுட்டு வந்துரு....இந்த ஏரியால எங்கயுமே கரண்ட் இருக்க கூடாது

என கதிர் சொன்னதும்...சாந்தனு அந்த ஏரியாவில் இருந்த கரண்ட் பாக்ஸ் லைனை நிறுத்த....ஏரியாவில் ஒரு விளக்குகள் கூட எரியாமல் இருள் சூழ்ந்து இருக்க....சில வீடுகளில் மட்டும் மெழுகுவத்தியின் வெளிச்சம் ஒளிர... ஃபேக்டீரியிலும் இரண்டு மூன்று இடத்தில் மெழுகுவத்தி வெளிச்சம் இருந்ததை பார்த்த கதிர்

K - அனிதா நீங்க drive பண்ணுவீங்க இல்ல

அனிதா - நான் PC sir

K -சூப்பர்.... ok நீங்க டிரைவிங் சீட்ல உட்காருங்க...இந்தாங்க கார் சாவி... உள்ள இருந்து நாங்க வந்ததுமே நம்ப உடனே கிளம்புற மாதிரி இருக்கணும்....டேய் வேணு அதிக பிரசங்கித்தனமா ஏதாவது பண்ணி வாங்கி கட்டிக்காத புரியுதா

இப்படியாக சொன்ன கதிர் சாந்தனு மற்றும் சிவா உடன் அந்த ஃபேக்டரி 1st floor வழியாக உள்ளே நுழைந்தவர்கள்.. ஒரு ஒரு ரூமாக முல்லை எங்கே இருக்கிறாள் என்று தேட...... ground flooril இருந்து..ஒரு பெண் அந்த வீடே அலறும் படி ஆக்ரோஷமாக கத்தும் சத்தம் கேட்டு அனைவரும் பயந்த நேரம்

சிவா - தம்பி என்னப்பா ஏதோ பெண் அலறும் சத்தம் கேட்டது

சாந்தனு - டேய் என்னடா ஃபுல்லா இருட்டா இருக்கு...பேய் படம் பாக்குற மாதிரியே இருக்கு... எனக்கு பயமா இருக்குடா

K - வாய மூடு முதல்ல... டேய் உன் ஃபோன்ல இருக்கிற லைட் ஆன் பண்ணு

என்று கதிர் சொன்னதும் கதிர் சிவா மற்றும் சாந்தனுவின் செல்போனில் இருந்த டார்ச் லைட்டை இவர்கள் ஆன் செய்து கொண்டவர்கள் ஒவ்வொரு அறையாக மீண்டும் முல்லையை தேடி சென்ற நேரம்.... ground flooril இருந்து மீண்டும் முல்லை கத்தும் சத்தம் கேட்ட கதிர்....

K - இது என் மாமன் மகளோட குரல் தான்..... ஆமா முல்லையோட குரல் இது... ஐயோ முல்லைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே

என்று கதிரும் பதறியபடி கிரவுண்ட் ஃபுளோர்க்கு ஓடியவன்....அவன் செல்போன் டார்ச் லைட் மூலம் கீழே ரத்தம் இருப்பதை பார்த்து பயந்தவன்......தன் செல்போன் டார்ச் லைட்டை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தியபடி தன் எதிரில் இருக்கும் உருவத்தை பார்த்து அரண்டு போய் நிற்க்க ரிசன் என்னவா இருக்கும் .......

Author - ஐயோ காஞ்சனாவா.... 🤭
சரி யாருன்னு Next Part ல படிப்போம்....
Happy Week End 🙏🏽

Continue Reading

You'll Also Like

46.4K 1K 20
பணக்காரன் மனதை வெல்லும் நாயகி❣️❣️
11.2K 486 8
ஞாபகங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் இன்றியமையாதவை. வருடங்கள் பல கடந்து போனாலும் பசுமரத்தில் அடித்த ஆணி போல நம் நினைவில் நிற்கக்கூடியவை. ஏதோ ஒரு சந்தர்பத்...
14.5K 167 25
இது ஒரு அழகான காதல் கதை.... காதலுக்கு அழகு முக்கியம் இல்லை.... மனது தான் முக்கியம் என்பதை பெண்ணவளுக்கும்.... காதல் எப்பேர்ப்பட்ட மனிதனையும் மாற்றும்...