இணையா துருவங்கள் (Completed)

By Bookeluthaporen

46.1K 1.5K 1.4K

உதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கா... More

அத்யாயம் - 1
அத்யாயம் - 2
அத்யாயம் - 3
அத்யாயம் - 4
அத்யாயம் - 5
அத்யாயம் - 6
அத்யாயம் - 7
அத்யாயம் - 8
அத்தியாயம் - 9
அத்யாயம் - 10
அத்யாயம் - 11
அத்யாயம் - 12
அத்யாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்யாயம் - 18
அத்யாயம் - 19
அத்யாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 27
அத்தியாயம் - 28
அத்தியாயம் - 29
அத்தியாயம் - 30
அத்தியாயம் - 31
அத்தியாயம் - 33
அத்தியாயம் - 34
அத்தியாயம் - 35

அத்தியாயம் - 32

1.1K 31 52
By Bookeluthaporen




ஒரு வாரம் கடந்திருந்தது சஹானாவிற்கு அந்த கோரமான விபத்து நடந்தேறி. மருத்துவ வளாகத்திலே ஆதவன் தங்கிவிட, ஆதியோ சகோதரியிருந்த அறையிலே தங்கிவிட்டான். கை கால்கள் எங்கும் செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்க எவர் பேச்சும் காதில் வாங்காமல் சகோதரியின் முகம் பார்த்தே அமைதியாக இருந்தான்.

பேச வில்லை எவரிடமும். பேசவும் மனம் வரவில்லை.

ஆறு நாட்கள் நெருப்பில் நிற்பது போல் இருந்தது அவனுக்குச் சகோதரியின் நிலை கேட்டு. மூன்று நாட்களுக்கு முன்னர் வரை சஹானா காதிற்கு அவள் கால் பற்றிய செய்து செல்லாமல் இருந்தது. ஆதியை நிறுத்தி வைத்திருந்தனர் என்று தான் கூற வேண்டும்.

ஆனால் அதற்கு மேல் சகோதரிக்குப் பொய் வார்த்தைகள் கூற மனம் ஒப்பாமல் கலங்கிய மனதோடு சென்று எவரது அபிப்பிராயமும் கேட்காமல் ஒரே மனதோடு அவளது நிலையை உடைத்தான் அண்ணன். சகோதரி அழுது வருந்துவாள், அவளுக்குத் தோள் கொடுக்க சகோதரனானவன் நினைத்திருக்க அதற்கு வேலையே உனக்கு வேண்டாம் என்று எண்ணினாள் போலும்.

"ஓ..." அமைதியாய் இருந்தவள் கால் கட்டை பார்த்து, "நான் ப்ராக்சர்-னு நெனச்சேன் ண்ணா" அவளது அமைதியான வார்த்தையில் சகோதரனான ஆதி துடிதுடித்துப் போனான்.

அழுபவளைக் கூட கட்டி தழுவி ஆறுதல் கூறிவிடலாம் ஆனால் அமைதியாகச் சிரிப்பவளுக்கு எந்த வகையில் ஆறுதல் கூற இயலும்? அவ்வளவு தான்...

துயரம் அடைந்த மனதைப் புகை வைத்து ஆற்றலாம் என்று செல்லும் அவனது இரண்டு நிமிடங்களும் அதன் பிறகு அவளை விட்டுச் செல்லாமல் மொத்தமாய் அந்த அறையிலேயே நிறுத்திக்கொண்டது.

ஷீலா, ஆதவனின் அன்னை உணவை மருத்துவமனை அனுப்பிவிட ஆண்கள் நாளில் இரண்டு முறை சஹானாவை வந்து பார்த்துச் சென்றனர். தமிழ், கெளதம் கட்டிட வேலைகளை நிறுத்தாமல் தொடர்ந்து செய்துகொண்டிருந்தனர்.

ஆதவன் தன்னவள் மேல் முழு உரிமையைக் காட்டக் கூட முடியாமல் கனமான இதயத்தோடு வளம் வந்தான். அதே நேரம் தன் பார்வை வட்டத்திற்குள் சஹானாவை வைத்திருக்கும் ஆதி மீதும் வருத்தமே வந்தது. என்ன பாடு படும் அவன் இதயம்?

உதய் மேல் தான் அத்தனை கோவமும் சென்றது.

நண்பனாக இருந்தாலும் தன் கையாலேயே அவனை ஏதாவது செய்தாக வேண்டும் என்ற அடங்கா ஆத்திரம் வற்றாமல் பெறுக, முதலில் தன்னுடைய துணையைத் தேற்றி தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு தந்தையிடம் முடிவாய் சஹானாவைப் பற்றிப் பேசிவிட்டான்.

தந்தை தன்னுடைய முடிவை சில நாட்களுக்குப் பிறகு கூறுவதாகக் கூறிவிட, எதற்கு இந்த தேவையற்ற அவகாசம் என்ற ஆதங்கத்தில் தந்தையிடம் சண்டையிட்டு வீட்டிற்கே செல்வதை நிறுத்திவிட்டான்.

"இங்க பாருங்க எனக்கு சஹானா தான் வாழ்க்கை... ஒரு கால் வேலை செஞ்சாலும் சரி, ரெண்டு காலும் வேலை செய்யலானாலும் சரி. அவ மட்டும் தான் என் பொண்டாட்டி. அவர்கிட்ட சொல்லிடுங்க" அதோடு வீட்டைத் துறந்து மருத்துவ சாலையில் புகுந்தவன் தான்...

தயக்கத்தோடு ஆதியின் அனுமதி பெற்றே சஹானாவைப் பார்ப்பான்.

மருந்தின் வீரியம் பாதியிருக்க, மனதில் உடைந்த கனவை மறைக்கவும், தன்னுடைய எதிர்காலத்தை மட்டும் இறைவன் பறிக்காமல் சகோதரனின் வாழ்க்கையையும் உடன் பாதிப்படைந்ததை எண்ணி கலக்கம் கொண்டிருந்தவள் அதிகம் உறங்குவதைப் போல நடித்தே சுற்றத்தைப் புறக்கணித்தாள். அதனால் ஆதவனால் கூட அவளிடம் முழுதாக ஒரு நிமிடம் கூட மனம் விட்டுப் பேச முடியவில்லை.

தன்னை பார்ப்பதைத் தவிர்க்கும் பெண்ணின் மனதில் என்ன இருக்கிறதென்று கூட அறிய முடியாமல் ஆதவன் தான் அதிகம் வாடினான்.

ஆதியிடமும் அவன் காதலைப் பற்றிப் பேச முடியவில்லை. சஹானாவிற்கு உண்மை தெரியும் முன்னர் கூட ஓரிரு வார்த்தைகள் வர, அதன் பிறகு மொத்தமாய் கூட்டிற்குள் அடைந்த ஆமையாக வார்த்தைகளுக்குக் கடின ஓடிட்டு மூடிவிட்டான்.

இன்று மணிமேகலை சஹானாவை காண இரண்டாவது முறையாக வந்திருக்க முதல் நாள் அவள் வந்த பொழுது இருந்ததை போலவே அவள் முகத்தைக் கூட ஆதி பார்க்கவில்லை. ஏதேதோ எண்ணங்களால் அல்லோலப்பட்டிருந்தவன் அவள் வரவால் இன்னும் மனம் உடைய அமைதியாய் அவளைத் தவிர்த்தான். ஆனால் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை பெண்.

அவன் மனம் அறிந்தவளாயிற்றே...

சஹானாவிற்காகக் காலையிலிருந்து போராடி, வீட்டையே இரண்டாக்கி ஒரு பருப்பு சாதம் செய்து எடுத்து வந்திருந்தாள். அன்று பேசிய பொழுது தெரியாமல் வந்த வார்த்தை. அதற்காக ஆசையாகச் செய்து வந்த மணிமேகலை உண்டே ஆக வேண்டும் என்று போராடி சஹானாவைச் சம்மதிக்க வைத்தாள்.

கைகள் இரண்டும் கட்டிக்கிடக்க அதையும் தானே ஊட்டி விட்டவள் சஹானாவைச் சிறிது சிரிக்க வைத்தே கிளம்ப ஆயத்தமானாள். செல்லும் பொழுது அவனிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் செல்ல மனம் வரவில்லை... மனதில் உள்ளதை என்னிடமாவது கூறேன் என்று அவனுக்குத் தினமும் குறைந்தது நூறு குறுஞ்செய்திகள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவிடுவாள் ஆனால் எதற்கும் மசியவில்லை அவன்.

அவளிடம் அவன் பேசி ஆறு நாட்கள் ஆகியது. அறையை விட்டுச் செல்ல இருந்தவள் நின்று அவனைக் கவலையோடு, "ஆதி..." என்று அழைத்தாள்.

தன்னை கவனி என்ற அழைப்பு அல்ல... 'உன்னைத் தேற்ற நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?' என்ற கேள்வியோடு இருந்தது அவள் அழைப்பு.

அவனோ அவளை இப்பொழுதும் தலை தூக்கிப் பார்க்கவில்லை, "ம்ம்ம்... போ"

அவன் துறத்தலில் மனம் விசும்ப அங்கேயே சில நிமிடங்கள் அவனைப் பார்த்து நின்ற மணிமேகலைக்கு அதற்கு மேல் நிற்க முடியவில்லை. சில தினங்கள் செல்லட்டும் தேற்றிடலாம் என்ற எண்ணத்தில் வெளியேறினாள்.

ஆனால் இவற்றை எல்லாம் பார்த்த சஹானாவிற்கு அதுவே பெரும் பாரமாகிப் போனது. தங்கையின் முகம் வாடிப் போனதைப் பார்த்தவன் ஒரு முடிவோடு அடுத்த சில நிமிடங்களில் சஹானாவின் உடல்நிலையை ஆராயும் மருத்துவர் வரவிற்குக் காத்திருந்தான்.

சில நிமிடங்களில் மருத்துவர் வர அவரை தொடர்ந்து ஆதவனும் பின்னாலே வந்தான். இருவரையும் வெளியில் காத்திருக்கக் கூறி அவளை ஆராய்ந்த மருத்துவர்கள் இருவர் சில நிமிடங்கள் இருவரையும் உள்ளே விட வில்லை. மற்ற பெரியவர்களும் அந்த காலை நேரத்தில் இல்லை, இன்னும் சில நிமிடங்களில் தான் ஆதவனின் அன்னை காலை உணவோடு வருவார்.

நிமிடங்களில் செவிலியர் வந்து ஆதியை உள்ளே அழைத்துச் செல்ல மருத்துவர், "எல்லாமே கொஞ்சம் பலமான அடி தான் ஆனா கொஞ்சம் கொஞ்சமா காயம் ஆறிட்டே இருக்கு... வயிற்றுல போட்ட தையல் கூட நல்லா குணமாகிட்டு இருக்கு. தையல் இன்னைக்கே பிரிச்சிடலாம். காலுக்கு மட்டும் ரொம்ப ஸ்ட்ரைன் குடுக்காதிங்க. மத்தபடி எல்லாமே நார்மல் தான். இன்னைக்கு காலுக்கு ஒரு ஸ்கேன் எடுக்கணும் பத்து மணி போல எடுத்துடுங்க" என்றார்.

"ஓகே டாக்டர்..." என்றவன் மேலும் தயக்கமாக, "டிஸ்சார்ஜ் எப்போ பண்ணலாம்?" என்றான் ஆதி.

"வீட்டுல நல்லா பாத்துக்குவீங்கன்னா இன்னைக்கே கூட பண்ணலாம். வாரம் ரெண்டு தடவ செக்அப் மட்டும் கூட்டிட்டு வாங்க" - மருத்துவர்

"ஆதி..." ஆதவன் ஏதோ பேச வரக் கையை தூக்கி அவனை நிறுத்தினான். மருத்துவர் இருப்பதால் அவனும் பேசாமல் நின்றுவிட்டான்.

"அப்ப இன்னைக்கே டிஸ்சார்ஜ் பண்ணிடலாம் டாக்டர்" என்கவும் அடுத்து நடக்க வேண்டிய வேலைகளை உடனே துவங்கினார்கள் மருத்துவர்கள்.

மருத்துவர்கள் வெளியில் சென்றதும், "ஆதி ஏண்டா அவசர படுற? இன்னும் கொஞ்ச நாள் இங்க இருந்தா டாக்டர்ஸ் நல்லா பாத்துக்குங்க... அவளுக்கும் கொஞ்சம் நல்லாகிடும்ல..."

"இல்லடா இங்க வேணாம் நாங்க வீட்டுக்கு போறோம்" - ஆதி

ஆதவனுக்கு ஆத்திரம் பொங்கியது, "அவ என்ன நீ ஆட்டி வக்கிர பொம்மையா... இன்னும் ஒரு வாரமோ ரெண்டு வாரமோ இங்கையே இருக்கட்டும்" என்றான் கோவமாக.

எப்படி கூறுவான் தன்னுடைய சகோதரியின் மனநிலையை? நலம் விசாரிப்பு என்னும் பெயரில் அவளை நோக்கி விழுகும் கருணை பார்வை சகோதரியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் காவு வாங்குகின்றதென்று...

"இல்ல டா நாங்க கெளம்புறோம்" மனதில் நினைத்ததை வாய் விட்டுக் கூறியிருக்கலாமோ என்னமோ.

"சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னா நீ சொல்றதுக்கு உடனே நாங்க தலை ஆட்டுவோம்னு இல்ல ஆதி. சஹானாவைப் பத்தி மட்டும் யோசி... வீட்டுல லேடீஸ் யாரும் இல்ல எதுவும் தேவனா துணைக்குக் கூட யாரை எதிர் பாத்துட்டு போவா?" - ஆதவன்

அத்தனையையும் யோசித்தே ஆதி கழகத்திலிருந்தான் பல நாட்களாக. அமைதியாய் ஆதி இருக்கவும் யோசிக்கிறான் என்று ஆதவன் நினைக்க ஆனால் ஆதி உறுதியாய் தான் இன்னும் இருக்கிறான் என்று தெரியவில்லை பாவம்.

"வீட்டுக்கு போகலாம் ண்ணா..." அமைதியைக் கிழித்து வந்தது சஹானாவின் மெல்லிய குரல்.

சகோதரனை இது போன்று உடைந்த நிலையில் அவளால் பார்க்க முடியவில்லை. ஏக பெருமூச்சு விட்ட ஆதவன் பொறுமையாய் அவளிடம் வந்தவன் ஆதிக்குத் தெரியாமல் அவள் கை பற்றிட, இத்தனை நாள் அடக்கிய கண்ணீர் ஒரே துளியாய் வந்து முட்டி நின்றது.

"புரிஞ்சிக்கோ டா... அவன் உன்ன எப்படி பாத்துக்க முடியும்? இங்க நர்ஸ், அம்மா, ஷீலா ம்மா எல்லாம் ஹெல்ப் பண்ணுவாங்க. கொஞ்சம் ஒடம்பு தேரிக்கோ அப்றம் கண்டிப்பா வீட்டுக்கு போகலாம்"

அவன் கையிலிருந்த தன்னுடைய கையை வலியையும் பொருட்படுத்தாது எடுத்தவள் கண்களில் கண்ணீர் வந்தாலும் மீண்டும், "அண்ணா வீட்டுக்கு போகலாம்" ஆதவனைப் பார்க்கவில்லை பெண்.

சகோதரியின் வார்த்தைகளில் கர்வம் தலைதூக்க வில்லை அவனுக்கு, மேலும் வருத்தம் கூடத் தான் செய்தது.

"யாரவது வந்ததும் நான் போய் பணத்தை அரேஞ் பண்ணிட்டு வர்றேன்"

ஆதியின் வார்த்தை கேட்டு பொறி தட்ட உடனே ஆதவன், "ஆதி பணம் தான் பிரச்னைனா நான் பே பண்றேன்டா... காசு பத்தி நீ யோசிக்காத" என்றான்.

"இல்லடா வேணாம் விடு" - ஆதி

"ரொம்ப யோசிக்காத ஆதி, நான் செய்யாம வேற யார் செய்வா? விடு நான் டாக்டர்கிட்ட பேசுகிறேன்"

ஆதவன் பேச சரியாக ஆதவனின் அன்னை காலை உணவோடு அறைக்குள் நுளைந்தார், "இவன் சஹானாவை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்றான் மா" அன்னையிடம் புகார் கூற அதைப் பொருட்படுத்தவில்லை ஆதி.

"நீ எதுக்குடா என் தங்கச்சிக்கு செய்யணும்?"

அதிர்ந்தாலும் இன்றே பேசிவிடலாம் என இடம் பொருள் பார்க்காது, "சஹானாவை நான் லவ் பன்றேன்னு உனக்கும் தெரியும் ஆதி..." உண்மையை உரைத்தான் ஆதவன்.

"ஆமா ஆதி நானே இத பத்தி பேசணும்னு தான் நெனச்சிட்டு இருந்தேன்" என்றார் பெரிய மனிதராக.

"இல்ல மா வேணாம்" என்றான் மெதுவாக.

ஆதவன் அதிர்ந்து சஹானாவைப் பார்க்க அவளோ வேறு பக்கம் தலை சாய்த்து கண்களை மூடியிருந்தாலும் கண்களிலிருந்து நிற்காமல் வழிந்த கண்ணீர் எனக்கும் இதற்குச் சம்மதமே என்று கூற நொறுங்கிப்போனான் ஆடவன்.

"என்ன ஆதி பேசுற? என் லைப் அவ தான்னு முடிவு பண்ணி ரொம்ப நாள் ஆச்சு... இப்ப வந்து மாட்டேன்னு சொல்ற?" அவள் இல்லாமல் ஒரு நாளை கூட அவனால் சிந்திக்க இயலவில்லை.

"பழகிக்கோ. இனிமேல் பழகிக்கோ" விட்டெதெரியாக ஆதி பேச என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை அவனுக்கு. உடன் நின்று பேச வேண்டியவளே முகத்தைத் திருப்பிவிட எந்த உறுதியின் தான் அவனும் பேசுவான்?

"ஏன் ஆதி இப்டி பண்ற?" வலியோடு ஆதவன் பேச அன்னைக்கும் தாங்கவில்லை மகனது வேதனை.

"தம்பி எடுத்தோம் கவுத்தோம்னு பேசுற விசியம் இல்ல இது... பொறுமையா பெரியவங்களா பேசுனா போதும். இப்ப விடு சஹானா மனசு கஷ்டப்படும் அவ முன்னாடி எதுவும் பேச வேணாம்" உறுதியாக நிதானித்தார் ஆதவன் அன்னை.

ஆனால் இதை விடும் முடிவில் அவன் இல்லை, கை எடுத்து அவரை கும்பிட்டவன், "என் தங்கச்சிக்கு நீங்க ரொம்ப அதிகமாவே உதவி பண்ணிட்டீங்க இத எல்லாம் நான் எப்படி திரும்ப அடைப்பேன்னு கூட தெரியல. ரொம்ப ரொம்ப நன்றி... ஆனா போதும், இனிமேல் உங்க பையன் என் தங்கச்சிய மறக்க சொல்லுங்க"

ஆதவனும் கவனித்துத் தான் வருகிறான், ஒரு முறை கூட இங்கிருந்த நாட்களில் நண்பர்களிடமோ தன்னிடமோ ஆதி எதுவும் பேசவில்லை, ஏன் பெயரைக் கூட வாய் திறந்து பேசவில்லையே அவன்.

"என்னடா யாரோ மாதிரி பேசுற?" எத்தனை வேதனையைத் தான் அவனும் தங்குவான்... மனம் உடைந்தான் ஆதவன் நண்பனின் அந்நிய பார்வையில்.

"ஒன்னுமில்ல... என் தங்கச்சியோட நிம்மதி எனக்கு எல்லாத்தையும் விட முக்கியம்" - ஆதி

"எங்க வீட்டுல சஹானா கஷ்டப்பட மாட்டா ப்பா... நீ ஏன் இப்டி யோசிக்கிற?" - ஆதவன் அன்னை.

"கஷ்டம் இருக்காது ஆனா நிம்மதி இருக்கும்னு உங்களால உறுதியா சொல்லிட முடியுமா? இவன் பாத்துக்குவான், ஆனா ஏதோ ஒரு சூழ்நிலைல வாய் தவறி வார்த்தை வந்துட்டா அத என் தங்கச்சியால எந்த காலத்துலையும் தாங்கிக்க முடியாது" சகோதரியின் நிலை அண்ணன் அவனை அழுகத் தூண்டியது.

"யாரும் அவளை குறையா சொல்லல டா... சஹானா தான் என்னோட லைப்னு தெரிஞ்சு அவளை அவளா தான் அக்சப்ட் பண்ணிருக்காங்க ஆதி" - ஆதவன்

"ஆக்சிடென்ட் ஆன அன்னைக்கு கூடயே இருந்த உன் அப்பா, அவளால நடக்க முடியாதுனு தெரிஞ்ச அப்றம் ஏன் ஒரு தடவ கூட வரல?"

ஆதியின் கேள்வியில் இருவருமே அமைதியாகிவிட அதுவே உறுதியளித்தது ஆதியின் சந்தேகத்தை. அது வரை அடங்கியிருந்த அழுகை கூட சஹானாவால் கட்டுப்படுத்த முடியாமல் போக அவளது மெல்லிய விசும்பல் சத்தம் ஆதியை உடைத்தது.

"டேய் வெளிய போடா" ஆதி சத்தமாய் ஆதவனை விரட்ட அதிகம் உடைந்தான் அவன்.

"அப்பா ஏதோ தெரியாம பேசுறாங்க ஆதி" - ஆதவன்

"அவர் ஒரு கூறுகெட்ட மனுஷன் ஆதி. அவர் பேச்ச கேட்டுட்டு புள்ளைங்க வாழ்க்கையை நாம வீணாக்கிட கூடாது. அவரை நான் பேசி சம்மதம் வாங்குறேன்" ஆதியின் தோள் தொட்டு சமாதானம் செய்தார்.

"ஒரு கல்யாணம் ரெண்டு குடும்பம் சந்தோசமா நடத்தி வைக்கணும் ம்மா... நீ நல்லவன் தான்டா ஆனா மனசு ஒரு கொரங்குல... உங்க கல்யாணம் அப்ப ஒரு பேருக்கு அங்கிள் வந்து நின்னுட்டு போனா, அதை பாக்குற இவன் ஏதோ ஒரு கோவத்துல சஹானா மேல காட்டிட்டா... இல்ல நீங்களே என் தங்கச்சிய பாத்துக்க முடியாம வார்த்தை விட்டா கூட அதை யார்கிட்டயும் சொல்லாம மனசுலையே வச்சு அழுவா. என்ன பாத்து 'ஏன் அவசரப்பட்ட'-னு சஹானா ஒரு வார்த்தை கேட்டா கூட அந்த இடத்துலயே நான் செத்துடுவேன்."

சஹானா அழுக அழுக அவள் உடல் குலுங்க அதைப் பார்க்க முடியாத ஆதி அவள் அருகே சென்று சகோதரியின் கை பற்றினான்.

"வேணாம். விட்டுடுங்க. இத்தனை வருஷம் அவளை பாத்துக்குட்ட என்னால இனியும் பாக்க முடியாதா? நான் பாத்துக்குவேன் டா. நான் வாழுறதுக்கு காரணமா இருக்குறவ என்னோட அவசரகால வருத்தப்பட்டா நான் வாழுறதுக்கு என்ன அர்த்தம்? உங்க பையனுக்கு உங்க தகுதிக்கு ஏத்த இடமா பாத்து கல்யாணம் பண்ணி வச்சுக்கோங்க"

அவ்வளவு தான் பேச்சு என்று சகோதரியைச் சமாதானம் செய்ய ஆதி சென்றுவிட, செய்வதறியாமல் வெளியில் சென்று அமர்ந்துவிட்டான் ஆதவன் தலையில் கை வைத்து.

மகனது நிலை பார்த்துக் கலங்கிய கண்களோடு அன்னை அவன் கை தொட, "இந்த காசு பணம் எனக்குச் சொந்தமா இல்லாம இருந்தா இந்நேரம் சஹானா எனக்கு கெடச்சிருப்பாளா மா?" எங்கேயோ வெறித்து அமர்ந்திருந்த மகனை என்ன கூறி தேற்றுவதென்று தெரியாமல் அவன் தோளிலே சாய்ந்து அழுதார் அன்னை.

"நான் கொஞ்ச நேரம் முன்னாடி போயிருந்தா என் சஹானா இந்த நிலைமைக்கு வந்துருக்க தேவையில்லல?"

"அவ எப்படி இருந்தாலும் அவளை என்னால யோசிக்காம இருக்க முடியலையே மா... கால் இருந்தா என்ன இல்லனா என்ன ம்மா... ஏன் நான் அவளை பாத்துக்க மாட்டேனா? நமக்கு நல்ல நாள்க்கு டிரஸ் எடுக்க போறப்ப எல்லாம் அவளுக்கும் இத்தனை வருசமா டிரஸ் எடுத்து வச்சிட்டு இருக்கேன் மா..."

"அவ்ளோ தான் அவனுக்கு என் மேல இருக்க நம்பிக்கையா ம்மா?"

"என்கிட்டே வேகமா வந்துடுவேன்னு சொன்னவளும் இன்னைக்கு என் முகத்தை கூட பாக்க மாட்டிக்கிறா? எங்க மா நான் தப்பானேன்?" அவனது ஒவ்வொரு கோயிலும் அன்னையானவர் அதிகம் மனம் கலங்கினார்.

மகனின் விருப்பத்தை சில நாட்களுக்கு முன்னர் தெரிந்திருந்தால் கூட இந்நேரம் திருமணத்தையே நடத்தி வைத்திருக்கலாமே என்ற எண்ணம். ஆனால் ஆதி கேட்ட கேள்விகள் அவரை வாயடைக்க வைத்திருந்தது, அவருக்கும் கூட இதில் சிறு சஞ்சலம் இருக்கத் தான் செய்தது, மகனின் விருப்பத்திற்கு மட்டுமே மனம் இறங்கி வந்தார்.

இன்று உடைந்து அமர்ந்திருந்த ஆதவனின் நிலையைப் பார்த்ததும் அவன் வாழ்க்கையின் அவள் இடத்தை பார்த்தவருக்கு விதியை மட்டுமே குறை சொல்ல முடிந்தது.

நிமிடங்கள் கரைய ஷீலாவோடு தமிழ் வரவும் தான் அறையை விட்டு வெளி வந்த ஆதி, "சஹானா தூங்கட்டும் ம்மா" என்று வெளி நடந்தான்.

அவன் சென்றதும் ஆதியின் பிடிவாதத்தை அவர்களுக்குக் கூறிய ஆதவனின் அன்னை அழ அவரை தேற்றுவதிலே ஷீலாவிற்கு நேரம் செல்ல ஆதவனை என்ன கூறியும் தலையை நிர்மித முடியவில்லை. விறுவிறுவென வேலைகள் நடக்க அடுத்த மூன்று மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்வதற்காக சஹானாவிற்கு ஸ்கேன் எனச் சென்றுவிட ஆதவனின் தந்தை கூட விஷயம் கேள்வியுற்று வந்துவிட்டார். ஆனால் எதற்கும் மசியவில்லை ஆதி.

"எல்லாம் தெரிஞ்சவன் மாதிரி பேசிட்டு இருக்கான்... இப்ப தங்கச்சி சுமையா தெரியமாட்டா நாளைக்கு அவனுக்கே கல்யாணம் ஆச்சுன்னா பொண்டாட்டி புள்ளைங்கள பாப்பானா இல்ல தங்கச்சிய பாப்பானா?"

அவன் காதுப்படவே ஆதவனின் தந்தை பேசியதற்கு, "என் தங்கச்சிய என்ன விட்டு தள்ளி வக்கிர அப்டி ஒரு கல்யாணமே எனக்கு வேண்டாம்" அவரை பார்த்துப் புன்னகைத்தவன் அடுத்த வேலைகளைத் துவங்கினான். சகோதரிக்கு எந்நேரமும் உடன் இருக்கும்படி இரண்டு செவிலியர்களை நியமித்தான்.

சகோதரிக்காக சிறுக சிறுக சேமித்திருந்த நகையைச் சென்று அவள் மருத்துவத்திற்கு அடமானம் வைக்கும் பொழுது அவன் அனுபவித்த வேதனை சொல்லில் அடங்காதது. எத்தனை ஆசை ஆசையாக அவள் திருமணத்திற்கு வாங்கியது... அதைத் திருமணத்தில் அவள் கழுத்தில் போட்டு அழகு பார்க்கவேண்டும் என்று எத்தனை நாள் உண்ணாமல் சேமித்த பணம்... அதற்கு வேலையே இல்லை என்றான பொழுது வீட்டில் மடிந்து அமர்ந்து அழுதான் ஆண்மகன்.

அத்தனையையும் ஆதி தனியே பார்த்தான், டிஸ்சார்ஜ் செய்யும் வேலை, பணம் செலுத்த, ஸ்கேன் அழைத்துச் செல்ல என மொத்தமும் எவரையும் அருகில் கூட விடவில்லை அவன். ஷீலா கூட அவனைப் பார்த்து மனம் தாங்காமல் அழுகத் துவங்கிவிட்டார்.

எப்படிக் கலகலப்பாக இருந்த குடும்பம், இன்று சிரிப்பிற்கே பஞ்சமாய் இருக்க மனம் கன்றியது. ஒரு வண்டியைப் பிடித்து நிறுத்தி மருத்துவமனையிலிருந்த பொருட்களை எடுத்து வெளியே ஆதி வர, உதவச் சென்ற தமிழ், கௌதம் என எவரையும் அனுமதிக்கவில்லை, "விடு" என்றதோடு தானே செல்ல,

ஆதி சென்ற அந்த சிறு இடைவேளையைப் பயன்படுத்தி சஹானா மட்டுமே இருந்த அறைக்குள் நுழைந்தான் ஆதவன். கண்களை மூடி படுத்திருந்தவள் கதவு திறக்கும் சத்தத்தில் ஆதி என்று பார்க்க, ஆதவனை பார்த்ததும் கண்களை மூடி தலையைத் திருப்பி அமைதியாகப் படுத்தாள்.

அவளைப் பார்த்ததும் அடக்கிய துன்பம் மேலோங்க அவள் அருகே வந்து மண்டியிட்டு முகம் பார்த்து அமர்ந்தான். அவன் வாசனை உணர்த்தும் உணர்வுகளைக் கட்டுப்படுத்திப் படுத்திருக்க உடல் முழுதும் கட்டுடன் கிடந்தவள் அழகு அந்த நொடியும் அவனுக்குத் தெவிட்டவில்லை...

"பேபி டால்" ஏகமாய் வலியோடு ஆதவன் அழைத்த அழைப்பில் உணர்ச்சி பெருக்கெடுத்து கண்ணீர் விழ அவள் கண்கள் திறந்தாள் தன் முன்னே அமர்த்திருப்பவனைப் பார்க்க.

அவளது ஏக்கத்தை அந்த கண்ணீர் கூறிவிட, பட்டும் படாமல் அவள் கண்ணீரைத் துடைத்தான் விரல் கொண்டு. "என்கிட்ட வேகமா வந்துடுவேன்னு சொன்னது எல்லாம் பொய்யாடி?"

அவன் கை பிடித்து நடக்க ஆசைகொண்டிருந்த மனதை அவனிடம் கூறத் தான் முடியுமா அவள் இருந்த நிலையில்? ஏற்கனவே வசதி படைத்தவன் என்ற எண்ணம் அவளுள் இருந்த பொழுது, இனி தன்னால் நடக்க முடியாது என்று அறிந்த பின்னர் தன்னை வைத்து அவனுக்கு என்றுமே சிரமம் தான் என்று உறுதியாக நம்பிவிட்டாள் மனதளவில். பேசினால் மனம் சாயும் அவனிடத்தில் என்று அமைதியாகக் கண்ணீரை உள்ளடக்கிக் கொண்டாள்.

"ஆனா நான் பொய் சொல்லல, எனக்கு என்னோட பேபி டால் மட்டும் தான் வேணும்... அவ இல்லனா வேற யாரும் வேணாம்..." சற்று தலை தூக்கி அவள் நெற்றியின் இதழ் பதித்தவன், "வந்துடுவல டால் என்கிட்ட?"

வழக்கத்தை மீறாமல் தானாக அவனின் இந்த கேள்வியில் இன்றும் அவள் தலை ஆட, அதை கடும் காணாமலும், "வந்துடு டா..." கெஞ்சலோடு அவள் கண்களைப் பார்த்துப் பேசியவன் அமைதியாய் எழுந்து வெளியில் செல்ல, அவனைப் பார்த்தவள் உடலோடு சேர்ந்து மனமும் அதிகம் அடிவாங்கியது.

பத்தே நாட்களில் அவனுடைய காதலை சஹானாவின் மனதில் ஆழமாய் விதைத்திருந்தவன் அவனுடைய உலகில் அவள் எவ்வளவு முக்கியமென்று ஒவ்வொரு நாளும் தவறாமல் பதியவைத்திருந்தான் அவள் மனதில்.

"சஹானா கெளம்பலாமா டா?"

கைகள் இரண்டும் அசைவில்லாமல் கட்டிக்கிடக்கக் கண்ணீரைத் துடிக்க முடியாமல் பரிதவித்தவள், "போலாம் ண்ணா" என்க.

சகோதரியின் நிலை பார்த்து, "உன் கால சரி பண்றது மட்டும் தான் இனி என்னோட வேலைடா... நீ கலங்காத என்னைக்கு இருந்தாலும் ஆதவன் தான் உன்னோட வாழ்க்கை... அதே நேரம் என்னால உன்னோட சந்தோசத்தை அடகு வைக்கவும் முடியல. என் மேல நம்பிக்கையோட வா" அதற்கு மேல் சகோதரி எதுவும் யோசிப்பாளா என்ன? மறு வார்த்தை பேசாமல் சகோதரனோடு இல்லம் திரும்பினாள்.

***********************

எப்பொழுதும் பரபரப்பாக நிற்க நேரமில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கும் அந்த அலுவலகத்தில் இன்று பேச்சுக்கு கூட பஞ்சமாகி போனது. அட்மின் டீமிலிருந்து மேனேஜர் ஒருவர் உதய் பிரத்தேயேகமாய் பயன்படுத்தும் கணினியின் கடவுச்சொல்லை மாற்றிக்கொண்டிருக்க அருகில் நின்று கவனமாய் பார்த்துக்கொண்டிருந்தான் உதய்.

அவனுக்கு உதவி புரிந்துகொண்டிருந்த ஜெயன் செயலில் வேகமும் இல்லை.

"சார் இது ஒன் டைம் பாஸ்ஒர்ட்... ச்சர்மேன் மெயில்க்கு சென்ட் பண்ணிட்டேன்... அவரு ச்சேஞ் பண்ணிக்கலாம். அதே அப்றம் இனிமேல் நீங்க இந்த கம்பெனில எதையும் ஆக்ஸஸ் பண்ண முடியாது... ச்சர்மேன் பெர்மிசன் இருந்தா உங்களுக்கு ஒரு ஆக்சஸ் கிரியேட் பண்ணி தர்றேன்" என்றார் இருக்கையிலிருந்து எழுந்து.

"இருக்கட்டும் ஞானமூர்த்தி இனிமேல் எனக்கு இங்க வேலை இல்லை. தேங்க்ஸ் உங்க வேலை டைம்ல எனக்கு வந்து ஹெல்ப் பண்ணதுக்கு"

அவரோடு கைகுலுக்கியவனை பார்த்து அந்த மனிதரால் வியக்காமல் இருக்க முடியவில்லை. பல ப்ராஜெக்ட் சார்பாக அவனுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்த போதும் சரி, இப்பொழுதும் சரி அவனது அணுகுமுறை இதுவரை அவர் வேலை செய்த பல அலுவலகங்களை விட மாறுபட்டிருக்கும்.

சாதாரண தொழிலாளரிடம் முதல் மேல் தட்டு தொழிலாளர்கள் என அத்தனை மனிதர்களிடமும் மரியாதையாக வார்த்தை விடாமல் முடிந்த மட்டும் தன்னுடைய எச்சரிக்கையையும் கூட அழுத்தமாக வரம்பு மீறாமல் எச்சரிக்கை கூறி கடந்துவிடுபவன் மேல் அத்தனை பேருக்கும் மரியாதை அவன் மேல் சற்று அதிகம்.

"நைஸ் ஒர்கிங் வித் யூ சார்" என்றவர் பாரமான மனதோடு விலகினார்.

"கையோட வால்ட்ஸ் பாஸ்ஒர்ட ச்சேஞ் பண்ணிடலாம் ஜெயன்" தன்னுடைய அறையை விட்டு அந்த வேலையையும் கூறியவன் மொத்த இண்டஸ்ட்ரியையும் பார்வையிட்டு எங்கெங்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்ற நீண்ட பட்டியலை கொடுத்தவன் அடுத்த ஒரு வருடம் தேவையான அத்தனை ப்ராஜெக்ட் பற்றிய தகவல்கள் அடங்கிய கோப்பை வால்டில் வைத்து அதன் கடவுசொல்லையும் மாற்றி தந்தைக்கு அந்த தகவல்களையும் அனுப்பி வைத்துவிட்டான்.

இறுதியாக தன்னுடைய அறைக்குள் வந்தவன் ஒரு பெரிய அட்டைப்பெட்டியுள் பல கோப்புகளை அடுக்கி ஜெயன் கையில் கொடுக்க அதை எல்லாம் கசந்த புன்னகையுடன் வாங்கி வைத்துக்கொண்டான் அவன். அடுத்து தன்னுடைய சில பொருட்களை ஒரு அட்டை பெட்டியில் உதய் அடுக்க அவனுக்கு எதுவும் பேசாமல் உதவி செய்துகொண்டிருந்தான் ஜெயன்.

"என்ன ஜெயன் இனிமேல் இவன் தொல்லை இல்லனு சந்தோசமா இருக்கீங்க போல..." சிரிப்போடு உதய் கேட்டான்.

"எப்படி சார் இப்டி எதுவுமே நடக்காத மாதிரி சந்தோசமா இருக்கீங்க?" - ஜெயன்

"எனக்கு என்ன ஜெயன் வருத்தம் இருக்க போகுது?" அதே சிரிப்பு இதழ்களில்.

"கண்ணுல வச்சு பாத்துக்குட்ட கம்பெனிய விட்டுட்டு போறப்ப வருத்தமாவே இல்லனு மட்டும் பொய் சொன்னாலும் நான் நம்ப மாட்டேன் சார்" சோகமாக வெளியில் சென்றவன் சில நிமிடங்களில் மீண்டும் உதய் அறைக்குள் வந்தான்.

வேலையில் மும்முரமாய் இருந்தவன் ஜெயனை பார்த்ததும், "ஆ ஜெயன் சொல்லணும்னு நெனச்சேன். வால்ட் ரூம், டாக்குமெண்ட்ரி ரூம் க்கு பிங்கர்பிரிண்ட் லாக் போட்டுடுங்க. இந்த ரூம்க்கு பேஸ் லாக் பிளஸ் பிங்கர் பிரிண்ட் லாக் கண்டிப்பா போடுங்க. அப்பா எல்லாரையும் சட்டுனு நம்பிடுவாங்க சோ முன்னெச்சரிக்கையா இருக்குறது நல்லது. இங்க அடிக்கடி கேமரா இருக்கானு செக் பண்ணிடுங்க...

ஒவ்வொரு மாசமும் ரெண்டாவது மன்டே ஈவினிங் கண்டிப்பா இந்த ப்லோர் கம்ப்ளீட்டா ஸ்கேன் பண்ணிடுங்க. எவ்வளவு பெரிய கஸ்டமர்சா இருந்தாலும் பரவால்ல எந்த நேரமும் நீங்க இல்லனா பசங்க ரெண்டுபேர் அப்பாகூட என்க போனாலும் இருக்கனும்"

கட்டளைகளை அடுக்கிக்கொண்டே சென்றவனை, "நான் ரிசைன் பண்றேன் சார்" என்ற ஜெயன் வார்த்தை நிறுத்தியது.

ஜெயனை ஆழ்ந்து பார்த்த உதய்க்கு புரிந்தது இவன் முடிவுதோடு தான் இருக்கின்றான் என்று. "நான் இப்ப சி.இ.ஓ இல்ல ஜெயன்... சோ உங்க ராஜனாமா லெட்டர் செல்லாது" - ஆதி

"இல்ல சார் உங்களுக்கு இன்னும் ஒரு மணி நேரம் டைம் இருக்கு" - ஜெயன்

"அதே ஒரு மணி நேரத்துல என்னால உங்கள வேற எங்கையும் வேலை பாக்காத மாதிரி மாத்த முடியும்-னு சொன்னா" - உதய் புருவத்தை உயர்த்தி கேட்டான்.

"எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல சார்" அவனும் திடமாக என்ன வேண்டும் என்றாலும் செய்துகொள் என்று தான் நின்றான்.

கம்பெனி பெயரில் வாங்கியிருந்த லைசன்ஸ் இருந்த துப்பாக்கியை ஜெயன் கையில் கொடுத்த உதய், "அஸ் அ சி.இ.ஓ உங்களோட ரேசிக்னேஷன் லெட்டரை நான் ஆஃப்ரூவ் பண்ணல, ரிஜெக்ட் பண்றேன் ப்ராப்பர் ரீசன் இலாததுனால" என்று சிரிப்போடு கூற ஜெயனால் அமைதியாக இருக்க முடியவில்லை.

"உங்க மேலையே சந்தேகம் வந்துருக்கு எங்க மேல இதே பழி விழுக ரொம்ப நாள் ஆகாது சார்... நான் உதய் மாதவன் பி.எ வா மட்டும் தான் இருக்க ஆசைப்படுறேன்" என்றான் இயலாமையில்...

அவனால் உதய் கூறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை மறுக்கவும் முடியவில்லை... தத்தளித்தான்...

"சரி எனக்காக ஒன்னு பண்றிங்களா?"

"என்ன வேணாலும் பண்ணுவேன் சார்..." என்றான் ஆசையாக.

"இந்த ச்சார்ல ஒக்கார்ரவங்க எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிச்சுக்குவாங்கனு உண்மையா என்னைக்கு நீங்க பீல் பண்றிங்களோ அன்னைக்கு நீங்க கேக்குற மாதிரி தாராளமா வேலை விட்டு போகலாம்... இது நான் உங்களுக்கு தர்ற ப்ராமிஸ்...

அது வரைக்கும் இந்த சென்னை பிரான்ச் பாதுகாப்பை நீங்க தான் பாத்துக்கணும். உங்கள மட்டும் தான் நம்பி என்னோட பேமிலியோட பாதுகாப்பை  விட்டுட்டு போறேன். என் நம்பிக்கையை காபித்துவிங்க தான?"

மொத்த பொருட்களையும் எடுத்து வைத்து முக்கிய சாவிகள் அடங்கிய கொத்தை அவன் முன் நீட்டி கேட்க கண்கள் கலங்கிவிட்டது ஆடவனுக்கு. உதய்யின் கைகள் அந்தரத்தில் தொங்க ஜெயன் சாவியை இன்னும் வாங்காமல் தன்னுடைய உறுதியை கூற மறுத்து மௌனம் காத்தான்.

"ஜெயன் எனக்கு வேலை எதுவும் லேட்டா ஆகுறது புடிக்காது" ஆளுமையான குரலில் கட்டளையிட்டவனை வேதனையோடு பார்த்து சாவியை வாங்கிக்கொண்டான் ஜெயன்.

"ம்ம்ம்... பசங்கள எல்லாம் பாத்துக்கோங்க ஜெயன். எனக்கு எந்த பாதுகாப்பும் இனிமேல் வேணாம்"

"கழுகா சுத்திட்டு இருக்காங்க சார் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இதுக்கு நாமளே இடம் கொடுக்கலாமா?" உதய்யின் இந்த கோரிக்கை ஜெயன் மனதிற்கு சிறிதும் ஒப்பவில்லை.

"இந்த ச்சர்ல இருந்து ஆண்டுட்டு இருந்த உதய் மாதவன்க்கு தான் பாதுகாப்பு தேவ ஜெயன். வீட்டுல இருக்க செக்யூரிட்டி எல்லாம் பெரிய வீட்டுக்கு மாத்திடுங்க. ஹரி என்ன மீறி எதுவும் பண்ண மாட்டான் சோ அவனை நான் பாத்துக்குறேன்"

ஜெயன் சரி என்று தலையை ஆட்ட, "அப்ப நான் கிளம்புறேன்..." விடைபெற தயாராக இருந்தவனை பார்க்க பார்க்க ஜெயன் மனம் பாரம் ஏற துவங்கியது. தன்னுடைய பாக்கெட்டில் எப்பொழுதும் வைத்திருக்கும் ஒரு பேனாவை ஜெயனின் கோட்டில் மாட்டிவிட்டான்,

"பத்தரமா பாத்துக்கோங்க ஜெயன்.. என்னோட லக்கி ச்சாரம் அது" அவன் தோளில் சிரித்தான் உதய்... வலியை மறைக்கவோ?  "சார்.." தயக்கமாக அழைத்தான் உதய்யை.

"சொல்லுங்க ஜெயன்... என்னமோ நீங்க லவ் பண்ற பொண்ணுகிட்ட லவ் சொல்ல கூச்சப்படுற மாதிரி நிக்கிறிங்க" என்றான் இதழ்கள் பிரித்து. இப்பொழுதெல்லாம் உதய்யின் சிரிப்பில் கூட ஜெயனுக்கு மனம் கனத்தது, பல உணர்ச்சிகளை மறைக்க தானே இந்த சிரிப்பு...

"நான் உங்கள ஒரு தடவ ஹக் பண்ணிக்கவா?" தயக்கத்தை முழுதாய் உதய் முன்னாள் காட்டும் முன்னர் உதய்யின் உறுதியான அணைப்பில் இருந்தான் ஜெயன்.

தன்னுடைய முதலாளி என்ற எண்ணம் மறைந்து உதய் ஆசானாகவே தெரிந்தான். இந்த வயதில் இவ்வளவு பக்குவம் ஒருவனுக்கு இருக்க வேண்டாம் என்று தான் தோன்றியது ஜெயனுக்கு. சண்டையிட்டிருக்க வேண்டும், தந்தையிடம். என்னுடைய உழைப்பை அங்கீகரிக்காமல் தவறிய நீங்கள் உழைப்பென்ற சொல்லை உச்சரிக்கவே தகுதியற்றவர்கள் என்று ஆடி தீர்த்திற்க கூடாதா என்று உதய் மேல் வருத்தமும் இருந்தது.

ஆனால் இந்த நொடி அவன் அணைப்பிலிருந்த அவனுடைய உறுதியான சிறு அணைப்பு இவனை தவறவிட்டவர்களது இழப்பு என்று தான் என்ன தோன்றியது. ஜெயன் முதுகில் இரண்டு முறை தட்டியவன் அணைப்பை விழக்கி, "பாக்கலாம் ஜெயன்" என்று வெளியேறினான்.

அலுவலகத்தை விட்டு வந்தவன் கண்கள் தனக்காக எப்பொழுதும் நிற்கும் அந்த வெண்மை ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வாகனத்தை பார்க்க ஏங்க தான் செய்தது. இந்தியா வந்த பொழுது அவன் தந்தை பயன்படுத்திய ஆடி காரினை பயன்படுத்தியவன் தனக்காக கடந்த வருடம் வாங்கியது தான் அந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்.

கார்கள் மீது எப்பொழுதும் உதய்க்கு ஈர்ப்பு இருந்தது இல்லை, ஆனால் இந்த வாகனத்தை மட்டும் ஏன் என்றே தெரியாமல் மனம் விரும்பி வாங்கினான். நீண்ட பெருமூச்சோடு கண்ணில் சிக்கிய முதல் ஆட்டோவை பிடித்தவன் நேராக பெரிய வீட்டிற்கு சென்று தந்தையிடம் மொத்த கணக்கையும் காட்டிவிட்டு சிறிய இல்லம் திரும்பினான்.

அடுத்த மூன்று நாட்களில் இல்லத்தில் ஹரியை சமாதானம் செய்யவே நேரம் சரியாக போக மனம் வேறு எங்கும் செல்லாமல் மீதியிருந்த அறைக்குளேயே கிடந்தான். மறுநாள் உறங்காமல் விழித்து கிடந்த உதய்யின் அறைக் கதவை அதிகாலை நளினி தட்டினார்.

"வாங்க சித்தி உள்ள.." கதவை திறந்து அன்னையை அழைத்தான்.

அவன் முன் காபி ஒன்றை நீட்டியவர், "இன்னைக்கு சாயந்தரம் கோவிலுக்கு போகணும் உதய்" என்றார் வாடிய முகத்துடன்.

காபியை வாங்க மறுத்தவன், "எனக்கு பசிக்கல சித்தி" என்றான்.

"ஜூஸ் கொண்டு வரவா ப்பா?" - நளினி "வேணாம் சித்தி அப்றம் சாப்புடுறேன்"

"என்ன அப்றம் சப்புடனும்? ஏன் இப்ப சாப்டா ஆகாதா?"

சுவரின் பக்கம் நின்றிருந்த பல்லவி சகோதரனைப் பார்த்து முறைக்க அன்னையிடம் திரும்பியவள், "நீங்க வழி விடுங்க" என்று சகோதரன் அறைக்குள் சட்டமாய் சென்றாள்.

"எங்களுக்கு காபி எல்லாம் வேணாம். நெய் தோசை வேணும்" என்று அடுத்து ஹரி அறைக்குள் நுழைந்து உதயின் கட்டிலில் சென்று அமர்ந்தான்.

"மசாலா தோசை கிடைச்சாலும் எங்களுக்கு ஓகே தான்" இது திவ்யா.

ஆக மூவரும் எந்த விதமான தயக்கமும் இல்லாமல் உரிமையோடு உதய்யிடம் நடக்க சிரிப்போடு சமையல் அறை சென்று அவர்களுக்கு பிடித்தமான உணவைத் தயாரித்து வெளியில் வந்த நளினிக்கு வாடிய முகத்தோடு கதவில் சாய்ந்து காட்சியளித்தான் விஷ்ணு. பத்தே நாட்களில் உடல் இளைத்து கண்களுக்குக் கீழ் கருவளையம், கலைந்த கேசம் எனக் காட்சியளித்தவனைப் பார்க்கக் கண்கள் கலங்கினாலும் வெளிக்காட்ட வில்லை அவர்.

"இங்க என்னடா பண்ற?" என்றார் உணவை ஒரு ட்ராலியில் எடுத்து வைத்து.

"ஏன் நான் இங்க வர கூடாதா?" வீம்பாகக் கேள்வி இருந்தது ஆனால் அவன் குரலில் ஒரு சோர்வு.

"தாராளமா வரலாம்" என்றவர் உணவை எடுத்துக்கொண்டு மாடி நோக்கிச் செல்ல, "ஏன் இங்க சாப்பிடலாமே" ஏக்கமாய் கேட்டவனுக்குத் தெரிந்தது மேலே இருந்து வந்த சிரிப்பு சத்தத்திலே உதயுடன் தான் சகோதர சகோதரிகள் உள்ளனர், உணவும் அங்கு தான் செல்கின்றதென்று.

"எல்லாரும் மேல சாப்பிடணும்னு ஆசைப்படுறாங்க... உனக்கு வேணும்னா நீயும் வா... இல்லனா மாவு இருக்கு. தோசை ஊத்திக்கோ" சென்றுவிட்டார் நளினி படியேறி...

உதயின் அறைக்குள் வந்தவரைப் பார்த்து உதய் ஒரு மேஜையை இழுத்துப் போட, சகோதரனுக்கு ஹரி உதவ, சகோதரிகள் அன்னைக்கு உதவும் வகையில் உணவைப் பரிமாறினார்கள் அன்னையை அமர வைத்து.

"ம்மா எனக்கு மசால் தோசை" - திவ்யா

"அதுக்கெல்லாம் நேரமில்லை இருக்குறத சாப்பிடு... கோவிலுக்கு நேரமாச்சு" மகளை அதட்டிய நளினி தங்களையே ஏகமாய் வெளியில் நின்று பார்க்கும் விஷ்ணு மீது பட்டும் படாமலும் விழுந்தது.

உதயைத் தவிர அவனை எவரும் கண்டுகொள்ளாமல் இருக்க உணவை உண்டுகொண்டிருந்த உதய் கட்டிலிருந்து எழுந்து ஒருவர் அமரக்கூடிய சோபாவில் மாறி அமர்ந்தான். அவனது செய்கை புரிந்து தயக்கமாக உள்ளே வந்த விஷ்ணு ஹரிக்கு அருகில் அமர மகனின் பசி அறிந்து ஒரு தட்டில் அவனுக்கு இரண்டு தோசையை வைக்கச் சென்ற நளினியை அதட்டினாள் பல்லவி,

"ம்மா எனக்கு வேணும்" என்று மீதமிருந்த இரண்டையும் தனக்கும் திவ்யாவிற்கும் வைத்துக்கொள்ள முகம் வாடியது விஷ்ணுவிற்கு. அதை எல்லாம் பொருட்படுத்தாமல் உதயிடம் தங்களது கல்லூரி கதையை, சகோதரனிடம் போட்ட அர்த்தமில்லாத சண்டையைப் பகிர விஷ்ணுவைத் தவிர அத்தனை பேரின் குரலும் அந்த அறைக்குள் ரீங்காரமிட்டது.

முதல் முறை உதயின் நிலை விஷ்ணுவிற்குப் புரிந்தது...

அதே நேரம் விஷ்ணுவின் வாடிய முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த உதய்க்கு தானே தெரியும் தனிமை எவ்வளவு கொடுமையானதென்று... அதுவும் இன்று... மனம் கேட்கவில்லை உதய்க்கு. தன்னுடைய தட்டிலிருந்த கை படாத தோசையை எடுத்து அதில் சட்னி குருமா என அவனே ஊற்றி அவன் முன் நீட்டினான்.

அதைப் பார்த்த ஹரி உதயிடமிருந்து தட்டை வாங்கி, ஒரு தோசையை எடுத்து உதய் தட்டில் வைத்து தன்னுடைய தட்டிலிருந்த ஒரு தோசையை வைக்க, சகோதரிகளும் தங்கள் பங்கிற்கு ஆளுக்கு ஒரு தோசை வைக்க, விஷ்ணுவின் தட்டோடு நளினியின் பாரம் ஏறிய மனமும் நிறைந்து போனது. மூன்றாம் நபர் வீட்டில் இருப்பது போல் கையிலிருந்த உணவைத் தொடாமல் கண்ணீர் நிறைந்த கண்களுடன் தலையைத் தொங்கப்போட்டு இருந்த இடைவேளையில் உதய் உண்டே முடித்திருந்தான் விஷ்ணுவைக் கவனிக்காமல் இல்லை...

எழுந்தவன், "சாப்பாட காக்க வைக்க கூடாதுன்னு தெரியாதா?" சகோதரனாய் உதய் அதட்டல் விடுக்க முதல் வாய் எடுத்து வைத்த விஷ்ணுவின் கண்களிலிருந்து தன்னையே அறியாமல் ஒரு சொட்டு கண்ணீர் கீழே விழுந்தது.

கையை கழுவி வெளியே செல்ல தயாரான உதயனைப் பார்த்து, "கோவிலுக்கு போகணும் ப்பா"

மீண்டும் நளினி நினைவூட்ட, "என்ன எதிர்பாக்காம நீங்களே எல்லாத்தையும் பாத்துக்கோங்க சித்தி"

"மூத்த பையன் நீ இல்லாம எப்டி ப்பா" கலங்கிய விழிகளோடு கேட்டவரைப் பார்த்து வேதனை நிறைந்த புன்னகையை உதிர்த்தவன் எதுவும் பேசாமல் புறப்பட்டான்.

*****************

கோடை காலத்தில் மரங்களின் அழகிற்கு பஞ்சம் இருக்குமா என்ன? மழை காலத்தை ஒத்து பச்சை பசேலென காட்சியளித்தது அந்த ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த சில மரங்கள் கூட திகிலுடன் சேர்த்து உறவுகளின் அமைதியையும் கூறியது.

காலை உதய்க்கு முன்னரே வந்து அமர்ந்திருந்த ஆதிக்கு தெரியும் நண்பன் தன்னை அறிந்துகொண்டான் என்று. நண்பர்கள், சுற்றத்தை பொறுத்த வரை ஆதி உதய்யை பல வருடங்கள் பிறகு சில மாதங்களுக்கு முன்னர் தான் பார்த்தான்.

ஆனால் வருடம் தவறாமல் கயாத்திரியின் நினைவு தினத்தில் முதல் ஆளாக வந்து கயாத்திரிக்கு மரியாதை செலுத்தி உதய் கல்லறையிலிருந்து செல்லும் வரை பார்த்துவிட்டு தான் செல்வான் என்று எவருக்கும் தெரியாது, உதய்யை தவிர. உதய் அழைத்தும் நகராமல் அவள் கால்களை இழுத்து பிடித்தது.

"அம்மாவை பாக்க வந்தனா கெளம்பு.. என்னையும் பாக்க வந்திருந்தா இங்க வா"

தன் பக்கத்தில் தட்டி காட்டி அழைக்க கலங்கிய விழிகளோடு வந்து அமர்ந்தவன் இருவருக்கும் இடையிலிருக்கும் இடைவெளியில் உதய் ஆதியின் காலடியில் தூக்கியெறிந்த மோதிரத்தை வைத்தான் ஆதி.

இருட்டை வெறித்து அமர்த்திருப்பவனை பார்த்த உதய் அந்த மோதிரத்தை பார்க்க பல கதைகள் கூறியது அது. முதலில் சகோதரி விபத்தில் நீ எந்த தவறும் செய்யவில்லை என்ற உறுதி, அடுத்து ஆதி உதய் மீது இப்பொழுது வைத்திருக்கும் நம்பிக்கை. அந்த சிறிய மோதிரத்தை நிறைவான மனதுடன் எடுத்து கையில் அணிந்துகொண்டான் வலிக்க வலிக்க.

"அது தான் பத்தலல ஏன் கைல போடுற?" ஆதி எரிச்சலாக கேட்க உதய்யிடம் எந்த பதிலும் இல்லை, அவன் செயலை மாற்றவும் இல்லை.

சில நிமிடங்கள் இருவருக்கும் இடையில் மௌனம் மட்டுமே. அமைதியை மட்டுமல்லாது ஆதியின் மனதையும் உடைத்தது உதய்யின் கேள்வி, "அம்மாகிட்ட உண்மைய சொல்லிருக்கலாம்ல?"

சற்றும் பிசுறு தட்டாமல் கேள்வி கேட்டு விட்டான். கேள்வியை வாங்கியவன் தான் மனமுடைந்து போனான். தன்னால் தன்னுடைய தாய்க்கு நிகரான காயத்திரி அன்னை இறந்தார் என்ற உண்மையே அவனை பல வருடங்கள் நிம்மதியில்லாமல் அல்லோலப்படுத்தியிருக்க அதற்கு விளக்கம் கேட்டு நிற்பவனுக்கு என பதில் கூறுவான்? விழிகள் கரித்தது மனதில் எரியும் தீயால்.

"உன்ன நம்பி தானே வந்தாங்க..."

மனம் தாங்காமல் உதய்யின் காலுக்கருகில் மண்டியிட்டு அமர்ந்து உதய்யின் கை பற்றினான், "என்ன மன்னிக்கவே மாட்டியா உதயா?" கை பிடித்து கண்ணீர் மல்க கெஞ்சுபவன் மேல் இருக்க வரவில்லை, இத்தனை வருடங்கள் கேட்க தோன்றியதை கேட்க முடிவெடுத்து தான் இன்று உதய் வந்ததே.

"உன்னோட நிலைமைய எடுத்து சொல்லிருந்தா யோசிக்காம கைல காசு எடுத்து குடுத்துருப்பாங்களே... ஏன் டா பொய் சொன்ன?" இன்னும் அன்னையின் துடிதுடிக்கும் உடல் தன் கையில் இருப்பது போல் தான் இருந்தது உதய்க்கு.

"டேய் உதயா செத்து போ-னு கூட சொல்லுடா சந்தோசமா செய்றேன் ஆனா இப்டி கேட்டு என்ன கொல்லாத"

"எவ்ளோ பதட்டத்தோட சுத்தி பாக்காம உன்னையே பாத்துட்டு வந்துருப்பாங்க... நீ நெனச்சிருந்தா அந்த நேரம் கூட உண்மைய சொல்லி அவங்கள நிறுத்திருக்கலாமே" - உதய்

"சாத்தியமா நேர்ல பாத்து பொறுமையா சொல்லலாம்னு முடிவு பண்ணி தான்டா கால் பண்ணாதே... ஆனா நானே சுதாரிக்கிறதுக்குள்ள எல்லாமே நடந்து முடிஞ்சிடுச்சு" - ஆதி

தன்னுடைய கையை பற்றியிருந்த ஆதியின் கையை தள்ளி வைத்தான். அவனுடைய இந்த செயலில் இன்னும் வேதனையடைந்த ஆதி, "ரோடு கிராஸ் பண்றப்ப கூட எனக்கு எதுவும் அடி பட்ருக்கா-னு பாத்துட்டே வந்தாங்க, எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாம பாசத்தை மட்டுமே காட்டுன அந்த கண்ண தவற வேற எதுவும் என்னால அந்த செகண்ட் பாக்க முடியல.

கண்ண சிமிட்டுறதுக்குள்ள என் கண் முன்னாடியே அடிச்சு விழுந்து ஒடம்பெலாம் ரத்தமா இருந்தவங்கள பாத்து நான் தவிச்சது வார்த்தைல சொல்ல முடியாது... செத்துட்டேன்டா... அன்னைக்கே இந்த ஆதி செத்துட்டான். நீ மட்டும் அன்னைக்கு உன்னோட அம்மாவை இழக்கல உதயா அன்னைக்கு நான் மறுபடியும் என் குடும்பத்தையே இழந்துட்டேன், அது ஏண்டா உனக்கு புரியல?"

உதய் அமைதியாக இருப்பதை பார்த்து மனம் முழுதும் தாங்க முடியாத பாரத்தோடு எழுந்தவன், "எனக்கும் சஹானாக்கும் சொந்தம் பந்தம்னு ஒண்ணா இருக்க என்னைக்குமே குடுப்பனையே இல்ல போல" எத்தனை வலியை அந்த குரல் தாங்கியிருந்தது என்று தெரியவில்லை, வாசல் நோக்கி சென்றவனின் சட்டை பிடித்து மீண்டும் அருகில் அமர வைத்தான் உதய்.

"என் முகத்துலையே முழிக்க கூடாதுன்னு சொன்னா அப்டியே வரமா போய்டுவியா?" வாய் தான் அன்று சென்று விடு என்றது ஆனால் அடுத்து வந்த நாட்கள் தினமும் வீடு வாசலில் இவன் வந்து நிற்பான் என்று இரவு வரை வாசலை பார்த்த நாட்கள் தான் அதிகம்.

"யார் ஸ்கூல் மாத்திட்டு போனது?" - ஆதி

"ஏன் ஊர்ல இருக்க சாராய கடைக்கெல்லாம் வழி தெரியும், நான் படிச்சா ஸ்கூல்க்கு அட்ரஸ் தெரியாதா?" - உதய்

"அது என்னமோ ஒரு நாள் போனேன் அதுக்குன்னு..."

"ஓ சாராயம் அன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான், இப்போ எல்லாம் நீ பீர், விஸ்க்கி தானே" ஏளனமாக உதய் கேட்டான்.

"இப்ப நீ சொல்லேன் இனிமேல் எந்த கருமத்தையும் தொடாதடா நாயேனு" - ஆதி

அவனை விசித்திரமாக பார்த்த உதய், "சரி தொடாத" என்றான் சம்ரதாயத்திற்கு. யார் கூறியும் கேட்காதவன் தான் கூறி கேட்க போகிறானா என்று.

"ஒரு நிமிஷம்" என்ற ஆதி பாக்கெட்டில் இருந்த ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைக்க அவனை முறைத்த உதய்யை கூட கண்டு கொள்ளவில்லை, ஆசையாக அனுபவித்து புகையை உள் இழுத்தவன் இதயம் இந்த வார்த்தையை தானே ஆண்டுகள் பல எதிர் பார்த்தது.

உரிமையாய் இவன் கூற வேண்டும் என்று. முழுதாய் அந்த சிகரெட்டை முடித்தவன் காலில் போட்டு மிதித்து, "ம்ம்ம் இனி தொடவே மாட்டேன்" ஏதோ பெரிதாக சாதித்த உணர்வு ஆதிக்கு.

அப்பொழுது தான் அவனது எண்ணம் புரிந்தது உதய்க்கு, "நீ பைத்தியம் தான் டா" சிரித்தான் உதய் நண்பனின் தோளில் அடித்து.

"ஏண்டா என் மேல ரொம்ப கோவமா?" - ஆதி

"இருக்காதா பின்ன? கொஞ்சம் நஞ்சமா பண்ண நீ? அந்த ப்ராஜெக்ட் விசயத்துல எல்லாம் அளவுக்கு அதிகமான கோவம். இத்தனை வருஷம் கட்டி காப்பாத்துன பேர ஒரே நாள்ல கெடுத்தா கோவம் வருமா வராதா?" - உதய்

"நீ மட்டும் என்னோட அப்பா பேர ஊருக்கே அசிங்கப்படுத்துன..." - ஆதி

"இன்னும் அது நான் தான்னு நம்புறியா?" - உதய்

"நீ தான-னு நான் கேட்டப்ப அமைதியா இருந்தா நான் என்னடா நெனச்சுக்குவேன்?" - ஆதி

"உனக்கு சொல்லி புரிய வக்கிர நிலமைல நான் இல்ல... மணிமேகலை அப்பா கொஞ்சம் டக்குனு அவசர பாடுவாங்க. அவரு பாத்த பையன் நல்ல பையன், ஸ்டேபிலா நீ இல்லாத நேரத்துல உன்ன பத்தி பேச முடியாது. அதுக்கு தான் நான் நடுல வந்து டைம் வாங்குனேன். ஒரு வருஷம் டைம் இருக்கு அதுக்குள்ள கொஞ்சம் முன்னேறிடு அப்றம் அத பத்தி பேசலாம்"

"இப்போ இத பத்தி பேச வேணாம் டா... அவங்க வீட்டுல பாக்குற மாப்பிள்ளையை அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்லு" கூறவே ஆதிக்கு மனம் கிடந்தது அடித்தது.

"ஏன்டா லூசு மாதிரி பேசுற? மணி கேட்டா ரொம்ப கஷ்டப்படுவா... ஒழுங்கா ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணு இல்லனா கைய கால ஒடச்சி போட்டுடுவேன்" உதய்யின் அதட்டல் எல்லாம் ஆதி மனதில் வேலை செய்யவில்லை.

"என்னால உனக்கு பிரச்னைல? ஏதோ கோவத்துல ஹரி விஷ்ணுவ போலீஸ்ல மாட்டி விட்டேன் ஆனா அது இவ்ளோ பெரிய பிரச்சனையா வந்து நிக்கும்னு எதிர் பாக்கவே இல்ல..." எதுவும் என்னை பாதிக்கவில்லை என்பது போல் சிரிப்போடு அமர்ந்திருந்தான்.

"விடு நடந்தது நடந்துடுச்சு... இனிமேல் அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கணும் இனிமேல் தான். இன்னைக்கு காலைல அதிசயம் எல்லாம் நடந்துச்சு" காலையில் சகோதரர்களுடன் நடந்த இனிமையான நிமிடங்களை பகிர்ந்தான்.

"எப்டிடா எதுவுமே உன்ன பாதிக்காத மாதிரி நடந்துக்குற? உன் அப்பா பேசுனது கொஞ்சம் கூட உனக்கு கோவம் வரலையா?"

மனம் ஆற்றாமல் கேட்டான் ஆதி. உதய்யின் முகமும் வாடியது, நண்பனிடமாவது மனதிலிருந்ததை கூறிவிட வேண்டும் என்று, "எல்லாத்தையும் தூக்கி போட்டு சண்டை போடணும் போல தான் ஆதி இருந்தது ஆனா அப்டி எல்லாம் பண்ணா என்ன பயன் சொல்லு? நாம மேல ஒருத்தர் நம்பிக்கை வச்சிருந்தா கூட உரிமையா கோவப்படலாம் ஆனா இவங்ககிட்ட ஒரு வார்த்தை கூட பேச மனசு வரல. அதுவும் கணக்கு கேட்டப்ப நொறுங்கிடுச்சுடா மனசு"

நெஞ்சை நீவி பேசியவனை யோசிக்காமல் அனைத்திருந்தான் ஆதி. ஆதியின் தோளில் சூடான நீர் வடிய உதய்யின் முதுகில் ஓங்கி அடித்தான், "நீ எதுக்குடா அழகுற? நீ எல்லாம் அழுதா நாங்க எல்லாம் வாழுறதுக்கே தகுதியிலாதவங்களா மாறிடுவோம். எல்லாரையும் சந்தோசமா வாழ வச்ச நீ அழுக கூடாது உதயா... உன்ன மாதிரி மனுசனை வச்சு அவங்களுக்கு வாழ தெரியல... விட்டு தள்ளு உன்னோட அருமை புரிஞ்சு அவங்களே வருவாங்க கண்டிப்பா"

பொலிவில்லாத உதய்யின் முகத்தை பார்த்தவன், "என்னோட உதய் எப்படியும் கெத்தா யாருக்கும் மசியாம நிக்கணும்... ச்ச கண்ணாடி இல்லையே" என்று நொந்தான் ஆதி.

அவன் கூறியதில் சிரித்த உதய், "இதே தான் யாழினியும் சொன்னா"

"சேந்தாச்சா?" ஆனந்தமாய் கேள்வி கேட்டான் ஆதி.

"ம்ம்ம் அவளே வீட்டுக்கு வந்தா... சட்டையை புடிச்சு போயா வாயான்னு சண்டை போட்டு என்ன மலை இறக்கி தான் வீட்டுக்கு போனா" சிரித்தான் அவளது ஆர்ப்பாட்டமான சேட்டையை எண்ணி.

அப்பொழுது தான் நினைவு வந்தவனாக சட்டை பாக்கெட்டில் இருந்த ஒரு கவரை எடுத்து ஆதி கையில் கொடுத்தான் உதய். "என்னடா... செக் ஏதாவது வச்சிருக்கியா? எனக்கு வேணாம். ஏற்கனவே ஒருத்தன் பார்ட்னர்-னு வந்து பங்குக்கு நிக்கிறான்"

சிரித்துக்கொண்டே, "ஆஸ்திரேலியால சஹானாக்கு ஒரு டாக்டர் அப்பாய்ன்ட்மென்ட் வாங்கியிருக்கேன்... பாத்துட்டு வா"

தலையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான் ஆதி, "முகத்தை அப்டி வைக்காத நல்லாவே இல்ல. சஹானா ரிப்போர்ட்ஸ் எல்லாம் நான் எக்ஸ்பர்ட் டாக்டர்ஸ் வச்சு ஒரு மீட்டிங் போட ரெகமெண்ட் பண்ணேன். இதே மாதிரி ஒரு கேஸ் ஒரு டாக்டர் ஈஸியா சால்வ் பண்ணிருக்கார். அதுக்கு தான் ஒடனே அப்பாய்ன்ட்மென்ட் பிக்ஸ் பண்ணி பிலைட் டிக்கெட் கூட புக் பண்ணிட்டேன். அடுத்த வாரம் போ... சிக்ஸ் மந்த்ஸ்ல சஹானா பழைய மாதிரி நடப்பா"

செய்தியை கேட்டதும் தலை கால் புரியவில்லை ஆதிக்கு எழுந்து நின்று சந்தோஷத்தில் கத்த துவங்கிவிட்டான்.

"உதயா நிஜமா சொல்றியா? சஹானாவாலா நடக்க முடியுமா? ஐயோ சாத்தியமா நம்ப முடியலடா. சஹானா கேட்டா ரொம்ப சந்தோச பட்டுவாடா... ஒரு வாரமா என் சஹானா முகத்தை கூட என்னால பாக்க முடியல.. இப்ப போய் சொல்லுவேன் உன் அண்ணன் உன்ன சரியாக்க போறான்... அதுக்கு காரணம் இன்னொரு அண்ணன்-னு பெருமையா சொல்லுவேன் டா... ரொம்ப சந்தோச படுவா" அளவே இல்லாமல் சென்றது ஆதியின் உற்சாகம்

"டேய் இது சுடுகாடு..." நினைவுபடுத்திய உதய்யின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டவன் கைபேசியை தேடிய பொழுது தான் நினைவு வந்தது வீட்டில் வைத்து வந்தது.

"போன்ல சொல்லாத நேர்ல போய் சொல்லு" என்றான் அவன் மகிழ்ச்சியை பார்த்து முழுதாய் நிறைந்த உதய்.

"ஆமாடா... நாளைக்கு பாக்கலாம். வீட்டுக்கு வர்றேன் சஹானாவ கூட்டிட்டு. அப்றம் உன் மாமா மகளை வேற யாருக்கும் கட்டி வச்சிடாத நான் தான் அவளுக்கு வீடு வேலை எல்லாம் செய்வேன்"

மின்மயானத்தின் கேட் வரை கத்தி கொண்டே சென்ற ஆதி வாடகைக்கு பிடித்து வந்த வாகனத்தை எடுத்து சில தூரம் சென்ற பிறகு தான் உதய்யையும் அவன் இல்லத்தில் விட்டு விடலாம் என்று மீண்டும் மின்மயானம் விரைந்தான்.

கேட் அருகிலே நின்று ஹார்ன் அடித்து நின்ற பொழுது ஏதோ சத்தம் உள்ளிருந்து வருவது போல் கேட்க, வண்டியையும் உள்ளே விட்ட ஆதி கண் முன்னே வெள்ளை சட்டை முழுவதும் செந்நிறம் பூசி குப்புற தரையில் அசைவற்று கிடந்த உதய் தான் கிடந்தான்...

கையிலிருந்த வாகனம் தடுமாற அதை அப்டியே போட்டு தடுமாறினான், "உதயாஆஆஆ..." கால்கள் தடுமாற மனம் முழுதும் எக்குத்தப்பாய் அடித்த இதயத்தோடு தரையில் கிடந்தவனை நோக்கி ஓடினான்.

Comments plzx

How is the chap??

Continue Reading

You'll Also Like

91.6K 7.8K 108
It's like a short story. There will not be any further parts. It's just a scenario based short story. Let me know your comments.
15.1K 632 29
இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பத...
15.3K 1.4K 38
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...