இணையா துருவங்கள் (Completed)

By Bookeluthaporen

46.1K 1.5K 1.4K

உதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கா... More

அத்யாயம் - 1
அத்யாயம் - 2
அத்யாயம் - 3
அத்யாயம் - 4
அத்யாயம் - 5
அத்யாயம் - 6
அத்யாயம் - 7
அத்யாயம் - 8
அத்தியாயம் - 9
அத்யாயம் - 10
அத்யாயம் - 11
அத்யாயம் - 12
அத்யாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்யாயம் - 18
அத்யாயம் - 19
அத்யாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 28
அத்தியாயம் - 29
அத்தியாயம் - 30
அத்தியாயம் - 31
அத்தியாயம் - 32
அத்தியாயம் - 33
அத்தியாயம் - 34
அத்தியாயம் - 35

அத்தியாயம் - 27

845 35 20
By Bookeluthaporen

Comments please..

உதய் வந்து சென்ற பிறகு பெரியவர்கள் அனைவரும் இளையவர்கள் அருகே வந்து, "தமிழ் இது உதய் தான?" என்றார் நந்தன். 

"ஆமா ப்பா" - தமிழ் 

"ஆளே மாற்றிட்டான்லங்க?" உதய்யின் வாகனம் சென்ற திசையில் பார்த்து கேள்வி எழுப்பினார் ஷீலா. 

"ஆள் மட்டும் இல்ல தமிழ் அம்மா, அவனும் மாறிட்டான். மனசு இறுகி போ நிக்கிறான், காயத்திரி போனதுல இருந்து. எந்த விசேஷத்துக்கு வர்றதில்ல. வீடு விட்டா ஆபீஸ், ஆபீஸ் விட்டா வீடு தான் அவனோட வாழ்க்கை" மகனின் மூலம் கேட்ட வார்த்தைகளை வைத்து கூறினார் ஆதவனின் அன்னை. 

"ஆனா இவன் ரொம்ப ஓவரா பன்றான் ம்மா. ஆபீஸ் அவனோடதுனு சொல்றான்" குற்ற பத்திரிக்கை வாசித்தான் ஆதவன் அன்னையிடம் ஆதங்கம் தாங்காமல். 

"பத்தரத்துல தெளிவா இருக்குதுல ஆதவா? அப்பா கடன் வாங்கிருக்காங்க. இத இதோட விட்டுடுங்க ப்ளீஸ்" ஆதி தலை குனிந்தே அமைதியாக வினவினான். 

"அப்ப துறை எங்க ஆபீஸ் வப்பிங்க?" - ஆதவன் "ஏற்பாடு பண்ணலாம்" என்று முடித்துவிட்டான் ஆதி. 

மேலும் ஆதவன் பேச வர, கெளதம் அவன் தோளில் கை போட்டு வேண்டாம் என்று தலையை ஆட்டினான். 

"நல்லது பண்ண போறோம் எத பத்தியும் யோசிக்க வேணாம் ஆதவா, ஆரமிச்சத்த அப்டியே கொண்டு போகலாம். ஆபீஸ் இல்லனா என்ன? ஒரு குடிசையை போட்டு வச்சிடலாம்" நிகழ்ந்தவையை கூட பெரியவர்கள் சகுனம் சரியில்லை என்று பேசிவிட கூடாதென்று எண்ணம் ஆதிக்கு. 

"ஆதி சொல்றது சரி தான் ஆதவா. பிளான் போடுறது எல்லாம் வீட்டுலையே பண்ணிடுவோம். கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்" என்றான் தமிழும் ஆதியுடன் இணைந்து. 

"என்னமோ பண்ணுங்க டா. ஆனா இவன் அவனுக்கு ரொம்ப தான் சப்போர்ட் பன்றான்" என்றான் ஆதவன் எரிச்சலாய். 

ஆதவன் தோளில் கை போட்டு கழுத்தோடு நெருக்கிய ஆதி, "அடேய் என்னடா ஆங்கிரி பேர்ட் மாதிரி இப்டி கோவ படுற. வா உனக்கு ஒரு குண்டு சோடா வாங்கி தர்றேன்" 

நண்பனை நம்பாமல் பார்த்தவன், "குண்டு சோடா என்ன உங்கப்பனா விக்கிறாரு?" என்றான் இன்னும் விறைப்பாக. 

எல்லாம் நடிப்பு தான் என்று உணர்த்த ஆதி, "யார் சொன்னா? நம்ம டீ கடைல இருக்கும்" 

"அந்த ரோஸ் மில்க் கிடைக்கும்னு இவன் சொன்னானே அந்த கடைலயா?" 

தமிழை காட்டி ஆதவன் கேட்க, "ஆமா அதே கடை தான்" என்றான் ஆதி. 

"சரி பேச்சு மாற கூடாது. உன் காசு போட்டு நீ தான் வாங்கி தரணும்" - ஆதவன் 

"வாங்கி தர்றேன்டா லூசு பயலே" நண்பனை ஒருவாறு சமாதானம் செய்து வைத்தான் ஆதி. உதய் செய்தது மனதிற்கு ஒரு நெருடலாகவே இருந்தாலும் அனைவரும் ஓரளவிற்கு இயல்பிற்கு திரும்பி பேசி மகிழ்வாகவே இருந்தனர். சஹானா, பவித்ராவோடு மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்த மணிமேகலை மெதுவாக கூட்டத்தில் இருந்து விலகி வந்து ஆதி இருக்கும் திசைக்கு வர, 

அவளை பார்த்தவன் தமிழிடம், "சஹானாவை நானே வந்து கூட்டிட்டு போறேன் தமிழு" என்று மணிமேகலையை நோக்கி செல்ல நண்பர்களின் கேலி குரல்கள் தனக்கு பின்னால் தெளிவாக கேட்டாலும் அதை கண்டுகொள்ளாமல் சென்றான் அவளை உச்சி முதல் பாத்திரம் வரை அளந்து கொண்டிருந்தது அவன் கண்கள். வரும் பொழுது பூ வைக்காமல் வந்தவள் தலையில் இப்பொழுது ஷீலா சூடிவிட்ட மல்லி சரம் அழகாய் இருந்தது. 

"டைம் ஆச்சு... நான் கெளம்பவா?" - மணிமேகலை 

"வேணாம்-னு சொன்னா கேக்கவா போற?" பெருமூச்சோடு அவளை அசந்து பார்த்தவன், "பைக் எடுத்துட்டு வர்றேன், நானே உன்ன ட்ராப் பண்ணிட்றேன்" 

செல்ல போனவன் கையை வேகமாக பற்றியவள் அவன் தன் பக்கம் திரும்பியதும் அவன் கையை விட்டு, "நானே போய்க்கிறேன்" என்றாள் அவசரமாக. 

"ஏன்?" 

"ஏனா... ஏனா... ஆஹ்... அப்பா வீட்டுல இருப்பாங்க. உங்கள பாத்தா யாருனு கேள்வி கேப்பாங்க" - மணிமேகலை 

"சரி நான் பக்கத்து தெருவுல இறக்கி விடுறேன்" - ஆதி 

"ம்ம்ஹ்ம் வேணாம்" சிணுங்கினாள் மேலும். 

"அப்ப வேற என்னமோ இருக்கு" - ஆதி 

"சரி கார்ல போகலாம்" இறங்கி வந்தது அவன் மான்குட்டி. 

"ஏன் என்னோட வண்டில போனா தான் என்னவாம்?" - ஆதி 

"ஸாரீ கட்டிட்டு என்னால பைக்ல ஒக்கார முடியாது" - மணிமேகலை 

"பொய் சொல்ற ரோலக்ஸ்" - ஆதி 

அவன் கண்களை பார்ப்பதை தவிர்த்தவள், "இல்ல" என்றாள் சிவந்த கன்னங்களுடன். 

அதை அழகாய் படம் பிடித்த ஆதியின் கண்கள் சுற்றிலும் தங்களை எவரேனும் பார்க்கிறார்களா என்று பார்க்க, நண்பர்கள் மூவரும் தன்னையே பார்ப்பது தெரிந்து, "டேய் அங்க பாருங்க ஏரோப்ளேன்" 

மூவரும் வாழ்க்கையில் அதை பாத்திராத 90ஸ் கிட்ஸ் போல் வேகமாக வானத்தை வெறிக்க அந்த நேரத்தை உபயோகித்து வேகமாக அவளது கன்னத்தில் மென்மையாய் அவசர முத்தம் ஒன்றை வைத்தான். அவன் இதழ்களோடு இணைந்து ஒரு நொடி தீண்டி சென்ற ஆதியின் மீசையின் குறுகுறுப்பும் அடி வயிற்றில் அழகாய் ஒரு உணர்வை தந்தது. அதோடு இணைத்து முதல் முத்தம் இருவருக்குள்ளும்... 

ஆனாலும் சுற்றம் பார்த்து ஆதியை முறைத்தவள், "டேய் லூசு ஆதி" என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில். 

அவள் வார்த்தைகளில் வாய் விட்டு சிரித்தவன், "ஏய் என்னடி பொசுக்குன்னு மரியாதை இல்லாம பேசுற?" என்றான். 

கால்களை உதைத்து, "நான் கோவமா போறேன்" என்று வெளியில் வெளியில் நடக்க துவங்க ஆதி வேகமாக சென்று தன்னுடைய வண்டியை எடுத்து அவளை தொடர்ந்தான்.

வானத்தை மூவரும் ஆராய்ந்து ஆதியை திரும்பி பார்க்க மணிமேகலையின் முகத்தில் இருந்த வெட்கம் எதையோ கூற, "ச்சை இப்டியாடா பிலைட்ட பாக்காதவனுக மாதிரி பாப்பிங்க? அவன் சரி வாரம் ஒருக்க அதுல போய்ட்டு வர்ற நீயும் ஏன் டா... சந்தடி சாக்குல அவன் இந்நேரம் ஒரு ட்ரைனயே தயாரிச்சிருப்பான்" தன் போக்கில் தமிழையும் ஆதவனையும் திட்டு தீர்த்தான் கெளதம். 

"நீ பாத்துருக்கலாம்ல..." - ஆதவன் 

"ஆஹ் இத மட்டும் வக்கணையா பேசு.." வழக்கம் போல் வீண் சண்டைக்கும் வெட்டி பேச்சுக்கும் பஞ்சமே இல்லாமல் சென்றது அவர்கள் வாக்குவாதம்.

புடவையை பிடித்து நடக்க முடியாமல் சிரமப்பட்டவளை பார்த்து சிரித்துக்கொண்டே அவள் அருகில் வண்டியை நிறுத்தி அவள் கையை பற்றினான் ஆதி. கூட்டம் அதிகம் இல்லாத நேரத்தில் இருந்தது ஆதிக்கு மகிழ்ச்சியாக போனது. 

"ஏன் இப்டி பண்ணீங்க?" என்றாள் முறைப்புடன். 

"நான் வாங்கி குடுத்த புடவைல, அழகா குண்டுமல்லி வச்சு, கொஞ்சமா லிப்ஸ்டிக் போட்டு, ஜிமிக்கி ஆட, முகம் சிவந்து வெக்கத்தோட என்ன மொத்தமா தன்னோட அழகுல மயக்கி நிக்கிற என்னோட மேகாவ பாத்து ஒரு செகண்ட் என்னோட கண்ட்ரோல்ல லூஸ் பண்ணிட்டேன்" 

அவன் ஒவ்வொரு வர்ணனையை கேட்க முடியாமல் தலையை குனிந்து நின்றவள் காதுக்கு அருகில் சென்று, "தப்பா மேகா?" உஷ்ண காற்று காதில் படர வேகமாக தலையை தூக்கி அவன் முகத்தில் தெரிந்த உரிமையான காதலை பார்த்தவளுக்கு மேலும் வெட்கம் பிடிங்கி தின்றது. 

கூச்சத்துடன் ஒரு அடி பின் வைத்தவள், அவன் வடியின் ஹாண்ட்பாரில் கை வைத்து, "வீட்டுக்கு போகவா?" என்றாள் மீண்டும். 

அவளுடைய இந்த கள்ளம் இல்லாத அழகிற்கு தானே அடிமை அவன். "வீட்டுக்கு போகவா-னு கேக்குறியே தவற, வீட்டுக்கு வருவான்னு கேக்க மாட்டிக்கிற?" - ஆதி 

"நீங்களும் கூப்பிடவே இல்ல" 

அவனை குற்றம் சாட்டியவள் பிறகு வேகமாக சிரித்த முகத்துடன், "சஹானா கிட்ட பேசுனேன். எனக்கு ரொம்ப புடிச்சிடுச்சு. அவங்க க்யூட் தெரியுமா? நான் என்ன பேசுனாலும் சிரிக்கிறாங்க... அது தான் அவங்களுக்கு ஒரு சாக்லேட் வாங்கி குடுக்கணும்-னு இருக்கேன். அவங்க கட்டிருக்குற ஸாரீயும் நீங்க எடுத்து குடுத்துன்னு சொன்னாங்க. அழகா இருந்துச்சு. ஆமா ஆதவன் அண்ணா ஏன் அவங்கள அப்டி பாக்குறாங்க?" 

வழக்கம் போல் அவள் பேசுவதை ரசித்தவன், "இது கூட தெரியல? நீ எல்லாம் என்ன லவ் பன்றியோ?" என்றான். 

விழி விரித்து ஆச்சிரியதுடன், "லவ் பண்றங்களா?" ஆதி ஆமாம் என்றான், "ஆனா பேச்ச மாத்துறது எப்படினு உன்கிட்ட தான் கத்துக்கணும்" 

அசடு வழிந்தவள் பிறகு ஏதோ நினைவில், "ஆமா ஆபீஸ் இல்லாதது உங்களுக்கு கஷ்டமா இல்லையா? அப்பா ஆபீஸ்ல தான் உங்க ஆபீஸ் இருக்கணும்னு ஆசையா சொன்னிங்கள்ல?" 

தோளை குலுக்கியவன், "பாத்துக்கலாம் ரோலக்ஸ். எல்லாத்துக்கும் ஒரு வழி கிடைக்காமலா போய்டும்?" துளியும் வருத்தம் அவன் குரலில் இல்லை. 

"ஆமா அது என்ன உன் மாமனை பாத்ததும் ஸ்ப்ரிங் பொம்மை மாதிரி அந்த குதி குதிச்ச? என்ன பாத்து என்னைக்காவது இவ்ளோ சந்தோச பட்ருபியா?" 

மாமனை பற்றி பேசியதும் மீண்டும் அந்த சிறிய முகத்தில் ஆனந்தம் தொற்றிக்கொண்டது, "என் மாமா வந்தத பாத்தாங்க தான? ஒரு கை பாக்கெட்ல விட்டு, வைட் ஷர்ட்ல, ஸ்லீவ்ஸ் மடிச்சுவிட்டு, காதுல ஆடுன அந்த முடிய ஒரு தடவ ஸ்டைலா அப்டி சிலுப்பி விட்டாங்க பாருங்க... அவ்ளோ தான் டோட்டல் பிளாட். செம்ம ஹாண்ஸம் பிளஸ் ஸ்வீட். நீங்க அவ்ளோ ஹாண்ஸம் எல்லாம் இல்ல. சோ உங்கள நான் மாமா மாதிரி எல்லாம் சைட் அடிக்க மாட்டேன்" கறாராய் கூறியவளை பார்த்து சிரித்தான். தான் நண்பனை பார்த்து ரசித்ததை அவள் கூறியதும் ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை அவனுக்கு. 

"எல்லாத்துக்கும் சேத்து கல்யாணம் ஆனதும் எப்படி வசூல் பண்ணிக்கனுமோ அப்டி பண்ணிறேன்" விஷமமாய் கூற பெண்ணுக்கு மேலும் வெட்கமே. 

வெட்கத்தை நிறுத்தி அவனை மணிமேகலை பார்க்க, அவனோ அதே தெருவில் ஒரு பெண் நடந்து செல்வதை கழுத்தை திருப்பி பார்த்துக்கொண்டிருந்தான். பருவ வயதில் வந்த பழக்கம் சட்டென நிறுத்த முடியவில்லை... தனக்கான ஒரு பெண் வந்தது கூட ஒரு நொடி மறந்து தான் போனான் ஆண். 

அட்டகாசமாய் முடிந்தமட்டும் அந்த பெண்ணை பார்த்த சந்தோஷத்தில் சிரித்த முகத்தோடு ஆதி திரும்ப, தன்னுடைய கள்ள பார்வை தன்னவளுக்கு புரிந்து அவள் முறைக்க அவளை சமாளிக்க, "பொண்ணு பாக்க அழகா, மூக்குத்தி எல்லாம் போட்டு அப்டியே கிராமத்து பொண்ணு மாதிரி இருந்துச்சா... அது தான் லைட்டா பாத்தேன். தப்பில்லையே... எனக்காக நீயும் அதே மாதிரி வெள்ளை கலர் கல் வச்ச மூக்குத்தி குத்தேன்..." 

பொறாமை எழ தான் செய்தது ஆனால் அடுத்து அவன் கேட்ட ஆசையில் அந்த பால் மனம் அவன் பார்வையை கூட மறந்தது. 

"அப்பாகிட்ட கேட்டு குத்துறேன்..." அப்பொழுதும் தந்தையின் வசமே சென்றது மேகலையின் எண்ணங்கள். 

அதை கடுப்புடன் சமாளிக்க, "வா மேகா, டைம் ஆச்சு, சஹானாவை வெயிட் பண்ணுவா" வண்டியில் ஏற கூறினான். 

"ம்ம்ஹ்ம்ம் நான் கேப் புக் பண்ணி போய்க்கிறேன் நீங்க சஹானாவை பாத்துக்கோங்க" - யாழினி 

"ரொம்ப தான் நல்ல எண்ணம். அதெல்லாம் நான் பாத்துக்குறேன் நீ இப்ப வா" - ஆதி 

"ஆதி..." உயிர் கொடுத்த அவன் வண்டியின் சாவியை மீண்டும் அணைத்தாள். 

அவளை திரும்பி பார்த்தவன், "என் கூட வர்றதுக்கு எதுக்கு உனக்கு இவ்ளோ பயம்" - ஆதி 

"பயம் எல்லாம் இல்ல" - யாழினி 

"வேற என்ன?" - ஆதி 

"உங்க கூட பைக்ல வர கூச்சமா இருக்கு" அவள் பதிலில் சிரிப்பு வர, "என் கூட வர எதுக்கு கூச்சம்? இதுக்கு முன்னாடி என் கூட இதே பைக்ல நீ வந்தது இல்லையா?" - ஆதி 

"அப்ப வந்தது வேற, இப்ப வர்றது வேற ஆதி" காலை உதைத்து அடம் பிடித்தாள். 

அவள் நாணத்தை புரிந்தவன், "ஏய் இவ்ளோ அழகா இருக்காத ரோலக்ஸ், தூக்கி கைக்குள்ளையே வச்சுக்கணும் போல ஆசை வருது. ஒழுங்கா வந்துடு அமைதியா வீட்டுல விட்டுட்டு வந்துடுவேன் எதுவும் பண்ண மாட்டேன். சரியா? ப்ளீஸ் மேகா" 

அவன் கெஞ்சல் மொழிகளில் இறங்கி அவன் வாகனத்தில் சென்றவளை சிறிதும் சங்கடப்படுத்தாமல் வீட்டின் பக்கத்து தெருவில் நிறுத்தப்போக, வேகமாக இறங்கி ஆதி சுதாரிக்கும் முன் அவன் கன்னத்தில் அழுத்தமாய் ஒரு முத்தத்தை வைத்துவிட்டு ஓடிவிட்டாள். 

நடக்கவே சிரமப்பட்ட அவன் மான்குட்டி கடினப்பட்டு ஓடுவதை பார்த்தவன், "துரத்த மாட்டேன் மான்குட்டி, மெதுவா போ டீ" வேகத்தை குறைத்து அவனை பார்த்து அதே சிரிப்போடு விடைபெற்றாள் மணிமேகலை. 

அலுவலகத்தை கைப்பற்றினாலும் தன்னுடைய முன்னேற்றத்தின் ஆரம்பத்தில் நண்பன் வந்தது, வாழ்க்கை முழுதும் துணையாய் வர போகும் சரி பாதியின் ஆசை துணை, ஆதவனின் பெற்றோரின் பார்வை சகோதரி மீது படிந்தது என ஒரு நாளில் ஏதோ வானத்தில் பறக்கும் எண்ணம் ஆதிக்கு அந்த நாளை அழகாய் முடித்து வைத்தது.

*******************

மறுநாள் அலுவலகத்தை அடைந்த உதய் எந்த வித சலனமும் இல்லாமல் தன்னுடைய வேலையை துவங்கியிருந்தான். ஆதிக்கு அன்று இரவு யோசனையை மறைமுகமாய் கூறிய பொழுதே அவன் தந்தையின் அலுவலகம் பற்றிய எண்ணம் உதித்திருந்தது, அதை அடுத்த நாளே ஜெயனிடம் கூறி பத்திரங்களை எடுத்து வைக்க கூறியிருந்தான். ஆதியை சற்று முடக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. 

அதை செய்துவிட்டான். ஆதி தனக்கு விளைவித்தது போல் பெரிதாக அடி இருக்காது, ஆனால் நிச்சயம் ஆதியின் மனதில் பெரிய ஏமாற்றம் அடைந்திருப்பான் என்று யூகித்து தான் இந்த நகர்வு உதய்யிடம். 

"என்ன உதய் அந்த நீரஜ ஒரு வழியா முடக்கிட போல தெரியுது" பெரிதாய் சாதித்த இன்பத்துடன் வந்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார் ஈஸ்வரன். 

"ஆமா, ஏழு வருஷம் அவன் தொல்லை இருக்காது" இயந்திரமாய் பதில் தந்தவன் முன்னால் ஈஸ்வரனின் காருக்கு அருகில் விறைப்பாய் நின்ற யாழினியின் புகைப்படம் இன்னமும் ஓடிக்கொண்டே இருந்தது.

"பரவால்ல உதய் உன்ன பாராட்டி தான் ஆகணும். நீரஜ் தழல் விசியத்துலையும் சரி, ஜெர்மன் கம்பெனி விசியத்துலையும் சரி. நான் இங்க வந்து பத்து நாள் கூட ஆகல அதுக்குள்ள அங்க ஒரு ஆள் அனுப்பி வச்சிட்ட. அவ்ளோ நம்பிக்கை?" ஆதங்கம் குரலாய் வந்தது ஈஸ்வரனிடமிருந்து. 

அவர் பக்கம் திரும்பியவன், "உண்மையா இருந்தா கோபுரத்துல, இல்லனா தெருவுல தான் நான் ஒக்கார வைப்பேன்" 

மறைமுக எச்சரிக்கை விழுந்தது மாமனுக்கு. பற்களைக் கடித்தவர், "அதுனால தான் என்ன உன் பக்கத்துல வச்சிருக்க போல?" இங்கு வந்த பத்து நாட்களில், உதய் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி அவன் பார்வையை மீறி அவரால் சிறு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை. 

உள்ளேயே ஆட்களை விலை பேசச் சென்றவருக்கு உதயின் அலுவலகத்தில் நெருப்பு பார்வை தான் அதிகம் கிடைத்தது, அதுவே அந்த மனிதரை அமைதியாக்கியது. எதுவும் பேசாமல் தன்னுடைய வேலையில் உதயின் கவனம் திரும்ப, 

"எங்க உதய் உன்னோட பி.a ரெண்டு நாளா கானம்?" - ஈஸ்வரன் 

"தெரியல" - உதய் 

"இது தான் உன்னோட ஆளுங்க உனக்கு காட்டுற விஸ்வாசமா? சாவிய கைல தூக்கி குடுத்த அடுத்த இருபத்தி நாலு மணி நேரத்துக்குள்ள வந்து குடுத்துட்டு போய்ட்டா" 

உதய் நேற்று யாழினி கையில் கொடுத்த ஒரு டைரியையும் சில சாவிகளையும் தன்னுடைய மேஜையில் தூக்கிப் போட்டார். உஷ்ணம் தலைக்கு ஏறியது அவர் பேசிய வார்த்தைகளில். நிச்சயம் அவர் செயல் என்று புரிந்துபோனது. அதுவும் நேற்றிலிருந்து யாழினி அலுவலகம் வராதது மேலும் உதயின் நெற்றியைச் சுருக்கியது யோசனையில். 

"ஒரு மாசம் இருந்தாலும் உண்மையா இருந்தா அந்த பொண்ணு. சிலர் பாம்பு மாதிரி கழுத்த சுத்திட்டு இருக்கறப்ப இந்த மாதிரி ஆளுங்க எனக்கு வரம் தானே" 

அவன் பேசும் வார்த்தைகள் பல முறை மனதை நீ தான் என்று ஈஸ்வரனுக்குச் சுட்டிக்காட்டியிருந்தாலும் அந்த மனிதர் எதையும் உணரும் நிலையில் நிச்சயம் இல்லை. துர் எண்ணங்கள் மூளையை ஆட்சி செய்யச் சாத்தான்களின் பேச்சு மட்டுமே காதில் விழுந்தது அந்த மனிதருக்கு. 

"அந்த பாம்பு வகைல நான் இல்லங்ற வர எனக்கு நிம்மதி தான்" தானே தன்னை நல்ல குடி நாணயத்தின் வகையில் சேர்த்தார் அந்த பெரிய மனிதர். 

"எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க... நம்ம பல்லாவரம் சைட் ஒர்க் எந்த அளவு போய்ட்டு இருக்குன்னு பாத்துட்டு வாங்க" வந்ததிலிருந்து உதய் தானாய் அவருக்கும் தரும் முதல் வேலை. 

எங்குச் சென்றாலும் வேலை செய்ய விடாமல் அவனே அனைத்து வேலைகளையும் செய்திருக்க, இந்த வேலையாவது சென்று வருவோம் என்று தான் உடனே சரி என்று சென்றுவிட்டார். செல்லும் வரை முகத்தைச் சாந்தமாக வைத்திருந்தவன் முகம் பிறகு கோவத்தில் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கும் அளவிற்கு ஆத்திரம் வந்தது. 

'இந்த ஆள் பேச்ச கேட்டு மட்டும் நீ வராம இருந்த உன்னையும் கொல்லுவேன் அவனையும் கொல்லுவேன் டீ' அடங்க முடியாமல் எறிந்த தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து யாழினியின் கைப்பேசிக்கு அழைத்தான். 

அவள் தந்தை சிறைச்சாலை சென்றது எல்லாம் உதய்க்கு நேற்று தான் தெரியும் ஆனால் அதன் காரணத்தை மேலோட்டமாக மட்டும் தன்னுடைய ஆட்கள் மூலம் அறிந்தவன் அவர் வீடு வந்து சேர்ந்ததையும் யாழினி ஈஸ்வரன் வாகனத்தின் அருகில் நின்ற புகைப்படமும் ஒரு சேர வர, அவன் மூலையில் ஏதோ மணி அடித்தது. 

விளைவு, இரண்டு நாட்களாக யாழினி அலுவலகம் வராதது. முதல் முறை ரிங் முழுவதுமாக செல்ல அழைப்பு ஏற்கப்படவில்லை. மீண்டும் முயன்றான் நீண்ட நேரம் சென்ற பிறகே அழைப்பை யாழினி ஏற்க இரு பக்கமும் அமைதி. 

ஒரு புறம் உதய்க்கு அவள் தானே வரவில்லை, அதற்கு முன் தான் தன்னுடைய கைகளில் வைத்து எவருடைய பேச்சையும் கேட்க வேண்டாம் என்று சிறு பிள்ளைக்குக் கூறியது போல் கூறினான், இப்பொழுது மீண்டும் துவங்கிய இடத்திலே வந்து நிற்கிறாள்... கோவம் வந்தது ஆடவனுக்கு மூக்கிற்கு மேல். 

அந்த பக்கம் அவன் அழைப்பு என்றதுமே மொட்டை மாடிக்கு வந்த யாழினிக்குக் கண்கள் கலங்கியது... எவ்வளவு ஆசையாய் பார்க்கும் அந்த விழிகள் தன்னை, மிக எளிமையான உடையை அணிந்து வந்தாலும் ரசனையை விழும் அவன் உரிமை பார்வை, அன்று அவன் வீட்டில் மனக்கவலை நீங்க அவள் மாடி சாய்ந்தது எனக் கடந்த இரண்டு நாட்களாக உணவைக் கூட பெயருக்காக அருந்தி எந்நேரமும் விட்டதை வெறித்து அமர்ந்திருந்த மகளை அவள் அன்னை, தங்கை எல்லோரும் கேள்விக் கணைகளைத் தொடுக்க, பெண்ணிடம் மௌனம் மட்டுமே. 

இரண்டு பக்கமும் அமைதியே வரப் பொறுமை இழந்தவன், "ஆபீஸ் வா" ஆணை தான் வந்தது. 

"நான் வரல சார்" குரலை நலுங்க விடாமல் தெளிவாகப் பேச முயன்று வெற்றி கண்டது பாவை. 

"ஏன்?" - உதய் 

"எனக்கு புடிக்கல சார்" - யாழினி 

"புடிக்கலைனா? என்ன புடிக்கல... மாமாவ வேற ப்ரான்ச் மாத்துறேன்" - உதய் 

"அவர் எங்க இருந்தா எனக்கு என்ன சார், எனக்கு உங்க ஆபீஸ் வர புடிக்கல" - யாழினி 

எவ்வளவு நேரம் தான் பொறுமையாய் இருக்க முடியும் அவனாலும்... ஆனாலும் அவள் மனம் நோகவிடக் கூடாதென்று அப்பொழுதும் பொறுமையைக் கடைப்பிடித்தான், "என்ன பிரச்சனைன்னு சொன்னா தான யாழினி தெரியும்?" 

"நீங்க தான் பிரச்சனை போதுமா?" எடுத்தெறிந்து அவள் பேசியதை அவன் சிறிதும் எதிர் பார்க்கவில்லை. 

"நான் தான் பிரச்சனையா? பொத்தம் பொதுவா சொன்ன என்ன அர்த்தம்?" விழிகள் சுருக்கி தலையை அவன் கைகள் நீவியது. 

"ஒரு பொண்ணு பலவீனமா இருக்கறப்ப அவளை அங்கையும் இங்கையும் தொடுறது உங்கள மாதிரி பெரிய இடது பசங்களுக்கு பெருசா தெரியாது சார்" மொத்த பழியையும் தூக்கி அவன் மீது போட்டாள் யாழினி. அவன் மனம் நிச்சயம் அடித்துச் சொன்னது அவள் வார்த்தைகள் மனதிலிருந்து வரவில்லை என்று, 

"மாமா ஏதாவது சொன்னாரா?" கேள்வி எழுப்பினான் உதய். 

"யாரும் சொல்லி குடுத்து செய்ய நான் ஒன்னும் கொழந்த இல்ல சார்" - யாழினி "மாமா உன்ன பாத்தது எல்லாம் எனக்கு தெரியும் யாழினி... எதையும் என்கிட்டே மறைக்காத" - உதய் 

"எங்க வீட்டுல எனக்கு மாப்பிள்ளை பாக்க ஆரமிச்சிட்டாங்க சார்... நமக்குள்ள என்ன நடந்திருந்தாலும் அதை அப்டியே விட்டுட்டு ஆக வேண்டியதை பாருங்க சார்" குடும்பத்தைக் காக்க தன்னுடைய ஒரே ஒரு பெரிய ஆசையையும் புதைக்க வேண்டிய கட்டாயம். 

"ஏய்... நேர்ல இல்லற தைரியத்துல ரொம்ப பேசுற டீ. ஒழுங்கு மரியாதையா ஆபீஸ் வந்து சேரு... இல்லனா வீடு வந்து ஆபீஸ் தூக்கிட்டு வந்துடுவேன்" பொறுமை காற்றில் பறந்தது உதய்க்கு... சற்று நிதானித்து, "நீ இல்லாம ஒரு மாதிரி இருக்கு டீ" இதற்கு மேல் என்ன சொல்லி அவளுக்குப் புரியவைக்க என்று புரியவில்லை அவனுக்கு. 

இயலாமையுடன் காதல் வழிந்த அவன் வார்த்தைகளைக் கேட்டு அடக்கி வைத்திருந்த விசும்பல் ஒன்று வெளியேறியது... அப்பொழுது புரிந்தது உதய்க்கு, நரியின் சூட்சியில் இருவரும் விழுந்ததை. 

"வேணாம் சார்... உங்களுக்கு நான் வேணாம். எனக்கும் நீங்க வேணாம். எனக்கு என் குடும்பம் வேணும்... எல்லா நேரமும் உங்கள எதிர்பாத்துட்டே இருக்குற சூழ்நிலை எனக்கு சுத்தமா புடிக்கல" 

அழுகையினோடே யாழினி பாதி உண்மையை மறைத்து அவனிடம் தெரிவித்தாள்... எப்படியாவது அனைத்தையும் சரி செய்து என்னை உன்னுடனே வைத்துக்கொள் என்ற ஆசையில். 

"அப்ப நான் உனக்கு வேணாம்?" 

அவளால் எப்படி அவனை வேண்டாம் என்று கூற முடியும்? தகுதியாவது உள்ளதா தனக்கு? தூரத்தில் நின்றே அவன் நினைவுகளை அழகாய் அவள் மனதில் செதுக்கியவனின் சிரித்த உருவம் வந்து ஆட்டி படைத்தது பெண்ணுக்கு... எந்நேரமும் அவன் எண்ணங்களுடன், அவன் அன்பிற்குச் சிறைப்பட்டுக் கிடக்கத் துடிதுடித்த இதயம் பொய் கூற மறுத்தது, வாயை மூடி தரையில் அமர்ந்து அழுதாள். 

இப்பொழுதே அவனிடம் சென்று மனதைத் திறக்க அவா எழுந்தது. ஆனால் அவள் மௌனத்தைச் சகிக்காதவன் கோவ மூச்சுக்காற்று தெளிவாகக் கேட்க, இனி அவன் ஒரு வார்த்தை கேட்டாலும் அவனிடம் சாய்ந்துவிடும் இதயத்தை மறைக்க அணைப்பைத் துண்டித்துவிட்டாள். 

ஈஸ்வரன் மீது கோவம்... சகோதரியின் மகனின் நிம்மதியைக் குலைக்க ஏன் இந்த மனிதர் இவ்வளவு துடிக்கிறார்... அவன் மகிழ்ச்சி அவருக்கும் தித்திக்க வேண்டும் அல்லவா? அதே போல் தன் மீதும் கோவம், காதலைக் கூட அடைய முடியாமல் கோழையாய் நிற்பதை எண்ணி... 

'இனி அவனைச் சந்திக்கவே முடியாதா? அன்று அவன் கைச் சிறையில் கிடைத்த சுகம் இனி வாழ்க்கையில் எந்நாளும் கிடைக்காதா? அவன் வட்டத்தினுள் கிடைக்கும் பாதுகாப்பு என்றும் தனக்குக் கிடைக்கப் போவதில்லையா? எல்லாமே முடிந்ததா... அவ்வளவு தானா?' 

கேள்வி மேல் கேள்வி எழுந்து பெண்ணின் மனதைக் குத்தி கிழித்தது உயிரோடு... அந்த பக்கம் யாழினி அழைப்பைத் துண்டித்ததும் கையிலிருந்த கைப்பேசி தனக்கு எத்திரிலிருந்த சுவரில் பட்டு சுக்கு நூறாய் சிதறி விழுந்தது. அடுத்து தனக்கு முன் இருந்த மடிக்கணினியை எடுத்து வீசப் போக, அதற்குள் ஜெயன் அறைக்குள் நுழைந்தான். 

உள்ளே நுழைந்ததும் தன்னுடைய காலில் சிக்கிய கைப்பேசியின் உடைந்த பாகத்தைப் பார்த்து உதயின் நிலையைப் பார்த்தவன் வியந்தான். எதையோ பெரிதாக இழந்த வருத்தம் அவன் முகத்தில்... 

இயலாமையோடு மேஜையில் சாய்ந்து நின்ற உதய், தன்னை நிதானப்படுத்தும் முயற்சியைத் தலையை மீண்டும் மீண்டும் கோதியவன், "அப்பா, சித்தப்பாவ பாக்கணும்" என்றான் வால்ட்டடில் இருந்து சில கற்றை கோப்புகளை எடுத்துக்கொண்டே. 

"நீங்க இருக்க வீட்டுக்கு வர சொல்றேன் சார்" - ஜெயன் 

"வேணாம். நான் அங்க போகணும்" 

தகவல் தெரிவித்து வெளியில் நடக்க விலகாத அதிர்ச்சியோடு முதலாளியைப் பின்தொடர்வது ஜெயனுக்கு வழக்கமாய் மாறிப்போனது. ஒரு மாதம் குடும்பத்தை விட்டு விலகி இருந்தவன் எதற்கு இன்று அங்குச் செல்ல வேண்டும் என்ற கேள்வி மட்டுமே பாக்கி. வாகனம் உதயின் வீட்டை நோக்கி நகரச் செல்லும் வழி எங்கும் ஹிந்தியில், ஜெர்மனில் மாறி மாறி ஏதோ வெகு தீவிரமாகப் பேசிக்கொண்டே வந்தான். 

வீடு வந்தும் வாகனத்தை உள்ளே நிறுத்திய பின்னரும் வீட்டின் தோட்டத்தில் பல நிமிடங்கள் பேசிக்கொண்டிருக்க அதற்குள் ரகுநந்தனும், ஜெயநந்தனும் மகனின் திடீர் வரவால் அதிர்ச்சியில் நின்றனர். 

"ஏதாவது பிரச்சனையா?" ஜெயனிடம் ரகுநந்தன் கேள்வி எழுப்பினார். 

"தெரியல சார். திடீர்னு உங்க ரெண்டு பேரையும் பாக்கணும் சொன்னாங்க" 

தன்னுடைய முதலாளியின் சோக ரேகைகளை அவரிடம் கூறவில்லை, கூறினால் மட்டும் அவனுக்குத் தேவையானதையா இந்த குடும்பம் நிகழ்த்திவிடும் என்ற ஆதங்கம் தான் உண்மையை மறைக்க வைத்தது. 

தந்தைமார்கள் மகன் பேசும் வரை வெளியிலேயே காத்திருக்க, அதற்குள் உதயின் வரவை வேலையாட்கள் மூலம் அறிந்த நளினி வேகமாக வெளியில் வந்தார். எத்தனை வாரங்கள் கடந்தது இந்த வீட்டினுள் அவன் வந்து... தோட்டத்திற்கு வந்தவர் கைப்பேசியில் மும்முரமாய் இருந்தவனின் உடல் தோற்றத்தைக் கண்டு கண் கலங்கியது. 

மெலிந்த உடல்வாகுடன், கண்கள் எல்லாம் கருவளையம் விட்டு, சோர்வுடன் தெரிந்தான்... நிச்சயம் காலை உணவை அருந்தவில்லை... வேகமாக உள்ளே சென்றவர் வேலையாட்களிடம் ஆப்பிள் ஜூஸ் ஒன்றைச் செய்யக் கூறி, தான் காலையில் வைத்த சாம்பாருடன் தக்காளி சட்டினி செய்து, மொருவலாக இரண்டு தோசை சுட்டு உதயை அழைக்க வந்தார். இன்னும் கைப்பேசியில் தான் இருந்தவனைச் சிறிதும் யோசிக்காமல் நெருங்கி அவன் கையிலிருந்ததை வாங்கி இணைப்பைத் துண்டித்தார். 

"சித்தி..." உதய் அதிர்ச்சியாகச் சிற்றன்னையைப் பார்க்க அவர் அவன் கையை பிடித்து வீட்டினுள் அழைத்துச் சென்றார். அது வரை அமைதியாய் இருந்தவன் வாசலை அடைந்த சமயம் கால்கள் வேரூன்ற நின்றான். "வேணாம் சித்தி நான் ஒரு வேலை விசயமா வந்தேன். அப்பா, சித்தப்பா கிட்ட பேசணும்" என்றான். 

"வீட்டுக்குள்ள வந்து பேசு உதய்" - முதல் முறை அவரிடமிருந்து வரும் ஆணை... ஆனாலும் உள்ளே செல்ல பல காரணங்கள் அவனைத் தடுத்தது. 

"வேணாம் சித்தி..." முடிவாய் அழுத்தம் கொடுத்தான். 

"ஏன் உதய் உள்ள வர மாட்டியா?" உதயின் செயல் கோவத்தைத் தர ரகுநந்தன் காட்டமாய் கேட்டார். 

"இத்தனை நாள் அவன் வராம இருந்தப்ப இதே கேள்வியை நீங்க ஏன் மாமா கேக்கல?" நளினியின் கேள்வியில் அங்கிருந்த அத்தனை பேருக்குமே அதிர்ச்சி தான். 

ரகுநந்தன் அமைதியாக இருக்க நளினியின் கணவர் தான் மனைவியைப் பார்வையால் பஸ்பமாக்கினார், "நளினி யார் கிட்ட பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா?" 

"நான் யாரையும் குறிப்பிட்டு பேசலங்க... நீங்களும் அந்த கேள்விக்கு பதில் சொல்லலாம். உங்க பசங்க உங்களோட இருக்காங்க... அது போதும் உங்களுக்கு... வேலைய பாத்துக்க ஒரு ஆள் வேணும், அதுக்கு உதய் வேணும். அவன் என்ன வேணா பண்ணிட்டு போகட்டும்... சாப்புடுறானா தூங்குறானா எதுவும் கவலை இல்லை. அப்ப அப்டி இருந்தவங்க இப்பயும் அப்டியே இருந்துக்கோங்க" 

கணவனிடம் காட்டமாய் கூறியவர் உதய் பக்கம் திரும்பி, "உன்ன மதிக்காதவங்க இருக்குற இடத்துல நீ வர வேண்டாம் உதய்... நான் என்னையும் சேத்து தான் சொல்றேன்" கண்ணீர்த் துளி ஒன்று அவர் கணத்தில் வழிய வேகமாய் உதய் அதைத் துடைத்தான். 

"ஒரு அம்மாவா நான் தோத்துட்டேன்ல உதய்?" குற்ற உணர்ச்சி மேலோங்கியது அவனுடைய சிறு பாசத்தில்... எத்தனை நாட்கள் அன்னையின் பாசத்திற்கு ஏங்கி இருப்பான்? இப்படி அவன் பக்கமே திரும்பாமல் இத்தனை வருடங்கள் விட்டது தன்னுடைய தவறு தானே? 

வலி நிறைந்த புன்னகையோடு சிரித்தவன், "இல்ல சித்தி... விஷ்ணு, ஹரி எவ்ளோ பொறுப்பா இருக்காங்க தெரியுமா? நீங்க பாத்தாலே பெருமைப்படுவீங்க" சிலாகித்துக் கூறினான். 

ஆனால் ஒரு தாய் தன்னுடைய அனைத்து பிள்ளைகளையும் சரி சமமாய் பார்த்தால் தானே அவர் ஒரு அன்னையாய் முதல் படியைத் தாண்ட முடியும்? அதன் பிறகு தானே அவர்கள் வளர்ப்பு எல்லாம் அடுக்கும்... அப்படிப் பார்த்தால் முதல் படியிலேயே தோல்வி தானே? 

"எப்டி உதய் இத்தனை நாள் உன்ன நான் புரிஞ்சுக்காமயே இருந்தேன்?" தன்னையே கேள்வி கேட்டவர் கண்ணை துடைத்து, "ஒரு புள்ள பெத்தாலும் உன்ன மாதிரி மார் தட்டி பெருமை படுற புள்ளையா பெத்துக்கணும், கரண் இங்க ஒரு டேபிள், ச்சார் வந்து போடுங்க" 

ஒரு வேலையாளிடம் ஏவியவர் தானும் உள்ளே சென்று அடுத்த இரண்டாவது நிமிடம் உதய் முன்னால் தான் செய்தது எல்லாம் அடுக்கி வைத்தார். அவனை அமரவைத்து அவனுக்குப் பரிமாறியவர், 

"காலைல சாப்பாடு உடம்புக்கு மட்டும் இல்ல, மூளைக்கும் ரொம்ப முக்கியம் உதய்... காயத்திரி அக்கா இருந்த வர, காலைல சாப்பாடு நாம வீட்டுல யாரா இருந்தாலும் நாள் தவறாம சாப்புடனும், உனக்கு தெரியாதது இல்ல" உன் அன்னை பேச்சிற்காக நீ காலை உணவை உண்டே ஆக வேண்டும் என்ற அதிகாரத்தைச் சிறு தலை அசைப்புடன் ஏற்றான். ஆனால் எதனால் தன் சித்தியிடம் இந்த திடீர் பாசம், அக்கறை என்று உதய் ஆராய விரும்பாமல் அனுபவிக்க விரும்பினான். 

ஒவ்வொரு மிடறு உள்ளே உணவு இறக்கும் பொழுதும் இரும்பை விழுங்குவது போல் மிகவும் கடினமாகத் தொண்டையிலேயே வரிசைகட்டி நிற்பது போன்ற எண்ணம். இரண்டு தோசையோடு எழ இருந்தவனைக் கட்டாயப்படுத்தி மூன்றாவது நெய் தோசையையும் உண்ண வைத்தே அவனை வேலை பார்க்க அனுமதித்தார். 

இவை அனைத்தையும் பார்வையாளராகவே நின்று பார்த்த ரகுநந்தனும், ஜெயநந்தனும் என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பி நின்றனர். நளினி சிறிய விசயங்களைக் கூட பெரிதுபடுத்துகிறாரா? இல்லை உதயின் ஆள் மனம் உண்மையிலேயே அடிபட்டு அதை அவன் மறைக்கிறானா? புரியாமல் விழித்தனர் இருவரும். 

"பேசலாமா ப்பா... நீங்க பிரீ தானே சித்தப்பா?" இருவரையும் விசாரித்து அவர்களுக்கு எதிரில் அமர்ந்தான். 

"சொல்லு உதய்" சிறிய தந்தையின் குரலில் ஒரு தடுமாற்றம் முதல் முறை உதய் உணர்ந்தான். 

"பெர்ஸ்னல் எல்லாம் யோசிக்காதிங்க சித்தப்பா... இது ரொம்ப முக்கியமான விசியம்" 

"சரி உதய் சொல்லு நாங்க என்ன பண்ணனும்?" - ரகுநந்தன் 

"நான் ஒரு பெரிய ரிஸ்க் எடுக்க போறேன் ப்பா, அதுக்கு உங்களோட பெர்மிஷன் வேணும். இது நம்ம குடும்பத்துக்குள்ள பிரச்சனை கொண்டு வரலாம், அதே சமயம் பிஸ்னஸ்ல பெரிய பிரச்னையும் வரும்" தொழில் என்று வந்தால் உதயின் பேச்சிலோ பார்வையிலோ சிறு தடுமாற்றமும் கண்டது இல்லை, ஆனால் இன்று தயங்கித் தயங்கி அவன் கேட்கும் பொழுதே புரிந்தது பெரிதாக ஏதோ ஒன்று என்று. 

"தயங்காத உதய்" தந்தையாய் மூத்த மகனை ஊக்குவித்தார் ஜெயநந்தன். 

"ஈஸ்வர் மாமா ரொம்ப தப்பு பண்றங்க ப்பா... இப்ப இல்ல ஜெர்மன் போனப்ப இல்ல, என்னைக்கு உங்ககிட்ட வேலை செய்ய வந்தாங்களோ அப்ப இருந்து அவர் கைக்கு போற ஒவ்வொரு ப்ராஜெக்ட் ஆகட்டும், அவர் பார்வைல இருக்குற ப்ராஜெக்ட் ஆகட்டும், எல்லாமே தனக்கு சாதகமா மாத்தி பல நூறு கோடி பிளாக் மனி வச்சிருக்காரு" 

வார்த்தைகள் தந்தை இருவரிடமும் இருக்க கை பின்னே சென்று ஜெயனிடம் கொடுத்த கொத்தான கோப்பைகளை வாங்கியது. அதை இருவர் முன் நீட்டி, "இப்ப அந்த பணம் எல்லாம் ஒவ்வொரு ப்ராபர்ட்டி பேர்ல உயிரோட நிக்கிது" 

இருவரின் முகமும் அதிலிருந்து மீளவே சில நொடிகள் பிடித்தன, உதய் கொடுத்த ஆவணங்களைப் பார்க்கப் பார்க்க அவன் வார்த்தைகளை விட அதிகம் அதிர்ச்சி தந்தன. 

"ஏதாவது பண்ணனும் ப்பா" என்றவன் உஷ்ணம் தெறித்த குரல் இன்றே இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற கங்னதோடு இருந்தது. 

"இவன் இவ்ளோ மோசமா போவான்னு நான் கொஞ்சம் கூட எதிர் பாக்கல" ஏமாற்றத்தோடு ரகுநந்தன் கூற, 

"உங்களுக்கு முன்னாடியே அவரப் பத்தி தெரியுமா ப்பா?" இப்பொழுது தான் புரிந்தது அவரின் தொடக்க நேரம் மௌனத்தின் அர்த்தம். 

"தெரியும் உதய்" - ரகுநந்தன் 

"கொஞ்ச வருஷம் முன்னாடி தான் தெரியும், அதுவும் ஒரு கோடி கை மாறுச்சு. அண்ணன் சொல்ல சங்கடப்படுறாருனு நான் தானே அவரை கண்டிச்சு விட்டேன். விட்ருவாருனு நம்பிக்கைல தானே இருந்தோம்" தளர்ந்த குரலில் ஜெயநந்தன் பதில் தர அப்பொழுது தான் ஹரி, ரகுநந்தன் மீது ஈஸ்வரனின் இலக்கார பார்வை இத்தனை ஆண்டுகள் எதற்கு என்பது புரிந்தது. 

ஜெயநந்தனோ அதோடு விடாமல் தன் கையிலிருந்த கோப்பையும் அண்ணன் கையிலிருந்ததையும் வாங்கி மூடி உதய் முன் நீட்டினார், "இத இதோட விட்ரலாம் உதய். நீயும் மறந்துடு" 

பிரமை பிடித்தது போல் இருந்தது உதய்க்கு, தான் சரியாக தான் கேட்டோமா என்ற எண்ணம் எழ, "இல்ல சித்தப்பா... நீங்க இத விட சொன்னிங்களா?" தன்னிச்சையாக அவர் நீட்டிய அந்த கொத்தை வெடுக்கென வாங்கினான். 

"ஆமா, விற்று உதய். இனி நீ இத பத்தி எதுவும் பேச வேணாம்" தந்தை உறுதியாய் கூறி இடத்தை விட்டு நீங்க போனார். "அதெல்லாம் விட முடியாது ப்பா. ஒரு மனுஷன் என்ன என்ன பண்ண கூடாதோ அது எல்லாம் பன்றாரு. அவரை அப்டியே விட முடியாது ப்பா" - உதய் 

திரும்பி உதயை முறைத்த ரகுநந்தன், "காசு போனா போகட்டும் உதய், ஆனா சொந்தம் பந்தம் திரும்ப வராது" என்றார் இலகுவாக. 

"கிழிச்சது" அடக்க மாட்டாத கோவத்தில் உதய் கூற, 

"வார்த்தையை பாத்து பேசு உதய்" சிறிய தந்தை சினத்தைக் காட்டினார். 

"துரோகம் பண்ற உறவு இருந்தா என்ன இல்லனா என்ன?" - உதய் 

"அவர் திருடுறாரு தான் இல்லனு சொல்லல ஆனா துரோகம் ஆகாது உதய். குடும்பம் ஒரு குருவிக் கூடு மாதிரி உதய், ஒரு சின்ன கல் பட்டாலும் திரும்ப நம்பிக்கை அங்க திரும்ப வரவே வராது. உன் மாமா நமக்காக நெறையா பன்னிருக்கார். அதுக்காக இதெல்லாம் விட்டுடலாம்" 

"எனக்கு அப்டி பட்ட குடும்பம் தேவ இல்லை சித்தப்பா. என்ன தான் அவர் நமக்கு பண்ணிருந்தாலும் அதுக்கு சேத்து தான் இவ்ளோ சுருட்டிருக்காரே பத்தல? அவர் திருட்டை எல்லாம் தாண்டி ரொம்ப நாள் ஆச்சு. உங்க பாசமும் அமைதியும் தான் அவரை தன்னோட இஷ்டத்துக்கு ஆட வைக்கிது" எப்படி அவர்களுக்குப் புரிய வைப்பது என்று தெரியாமல் குழம்பி நின்றான் உதய். 

"திருட்டை தாண்டினா?" - ரகுநந்தன் 

"ஆதிய ஜெயில்-கு அனுப்பிருக்காரு. அவன் மேல தப்பே இல்லாம..." 

அவன் முடிக்கும் முன் இடையிட்டு, "ஆதிக்கு அவன் அடி குடுத்தான். ஆக, இது தான் உன்னோட கோவத்துக்கு முக்கிய காரணம்?" மொத்தமாக உதயின் சுயநலத்திற்காகத் தான் இவை அனைத்தும் என்று சரியாகத் தவறான எண்ணம் தந்தை மனதில் பதிந்தது. 

"அது இல்ல ப்பா..." இயலாமையுடன் யாழினியின் விசயத்தை மறைக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டான் உதய். 

"இப்ப நீங்க முடிவா என்ன சொல்றிங்க?" இனி இவர்களின் காலை பிடித்து நிற்பது ஆகாது என்று புரிந்து போனது ஆணுக்கு. 

"இனி நீ ஈஸ்வர் விசயத்துல தலையிட கூடாது. அவன் மறுபடியும் ஜெர்மன் போகணும்" - ஜெயநந்தன் 

"முடியானு சொன்னா?" திமிராக வந்தது உதயின் கேள்வி. 

"அஸ் எ ச்சார் மேன் உன்ன சி.இ.ஓ பொசிஷன்ல இருந்து இந்த நிமிஷமே என்னால தூக்க முடியும்" சகோதரனுக்குத் துணையாய் நின்றார் ரகுநந்தன். வலி நிறைந்த முகத்தோடு ஏளனமாகச் சிரித்தான் உதய். 

இவ்வளவு தான இந்த வீட்டில் தன்னுடைய வார்த்தைகள், மரியாதை எல்லாம்? அடக்கி அழுத்தி வைத்தான் உதய் அனைத்து உணர்வுகளையும் மனதினுள். உணர்வுகளைத் துடைத்து இறுகிய திமிர் பார்வையோடு, 

"என்ன ப்பா ஒரு சாதாரண பதவி என்னோட வேலைய நிறுத்தும்ன்னு எப்படி யோசிச்சீங்க? இந்த பதவில இருந்தா லைஷன்ஸ் கன்-கு வேலை. இல்லையா லைஷன்ஸ் இல்லாத அருவாளோ, நம்பர் ப்ளேட் இல்லாத ஒரு லாரியோ அதே வேலையப் பாக்கும்" அழுத்தமாக ஆழமாக வந்தது அவன் இறுகிய குரல். ஆனால் தன்னுடைய மகன் தன்னையே எதிர்த்து தன் பேச்சைக் கேட்காமல் அவ்வளவு நிமிர்வாய் பேச, தந்தையின் கர்வத்தை அது சீண்டி விட்டது. 

"அப்ப ஈஸ்வரன் மேல நீ ஆக்ஷன் எடுக்க போற?" - ரகுநந்தன் 

"சந்தேகமே வேணாம்" உதய் புடித்த பிடியில் நின்றான். 

"என் பேச்சை மீறப் போற?" அவனுக்கு அருகில் வந்து அவனை அடிக்கும் அளவிற்குக் கோபத்துடன் கேட்டார். 

"நான் உங்களையே மீறி ரொம்ப நாள் ஆச்சு ப்பா" அதற்கு மேல் அங்கு நில்லாமல் நடந்தவன், "என் இடத்துல உங்க மச்சானை ஒக்கார வைக்கிறதா இருந்தா உங்க செல்வாக்கு யூஸ் பண்ணி ஜெயில்க்கு ஒரு கம்ப்யூட்டர், போன் இன்னைக்கே அனுப்பி விட்ருங்க" திரும்பியும் பார்க்காமல் சென்றவன் அடுத்துச் சென்றது மாமனின் இல்லத்திற்குத் தான்.

Epdi iruku? Comments please...

Continue Reading

You'll Also Like

152K 6.4K 25
அவள் உள்ளங்கவரப் போகும் கள்வன் அவன்..
51.4K 2.9K 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்...
438K 874 2
அவள் எங்கே விட்டுப் போனாளோ.. அங்கே தொடங்கி உனை நான் காதல் செய்வேன்..
15.3K 1.4K 38
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...