இணையா துருவங்கள் (Completed)

Galing kay Bookeluthaporen

46K 1.5K 1.4K

உதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கா... Higit pa

அத்யாயம் - 1
அத்யாயம் - 2
அத்யாயம் - 3
அத்யாயம் - 4
அத்யாயம் - 5
அத்யாயம் - 6
அத்யாயம் - 7
அத்யாயம் - 8
அத்தியாயம் - 9
அத்யாயம் - 10
அத்யாயம் - 11
அத்யாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்யாயம் - 18
அத்யாயம் - 19
அத்யாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 27
அத்தியாயம் - 28
அத்தியாயம் - 29
அத்தியாயம் - 30
அத்தியாயம் - 31
அத்தியாயம் - 32
அத்தியாயம் - 33
அத்தியாயம் - 34
அத்தியாயம் - 35

அத்யாயம் - 12

1K 38 35
Galing kay Bookeluthaporen

கேரக்டர்-ல டவுட் இருக்கவங்களுக்கு இந்த கிளாரிஃபிகேஷன் (highlighted persons are very important persons of the story) : 

ஆதி கேசவன் - ஹீரோ 

உதய் மாதவன் - ஹீரோ 

யாழினி - ஹீரோயின் 

மணிமேகலை - ஹீரோயின் 

ஆதவன், தமிழ், கெளதம் - உதய் மற்றும் ஆதியின் நண்பர்கள் 

காயத்திரி - உதய்யின் அம்மா

திவ்யா, பல்லவி, ஹரி, விஷ்ணு - உதய்யின் சகோதர சகோதரிகள் 

சஹானா - ஆதி சகோதரி 

ஈஸ்வரன் - உதய்யின் மாமா 

ஜெயன், சக்தி - உதய்யின் அசிஸ்டன்ட்ஸ்

நீரஜ் தழல் - உதய்யின் தொழில்முறை போட்டியாளன்...

Note: Lakshminovels she is new to wattpad but she is author for many novels... kindly support her

****************

பத்து தளங்கள் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டல் அது... இரவின் குளிர்ச்சியும் கடலின் வெம்மையும் ஒரு சேர காற்றில் கலந்து சுகமாய் வீசியது அந்த மேல் தலத்தில்... 

அதற்கு போட்டியாய் மனம் கமழும் உணவின் வாசனை பசியே இல்லாதவர்களுக்கும் பசியை தூண்டி விட்டது... மேல்த்தட்டு வாடிக்கையாளர்களுக்கு சுட சுட பரிமாறப்பட்ட உணவும் அதை எடுத்து சென்ற பேரர்களின் கண்கள் அந்த உணவை ரசனையாய் பார்த்தாலும் அந்த ரசனையை தாண்டி இருந்த ஏக்கமும் ஒரு சிலரின் கண்களுகே தெரியும்...

இரவின் கருமைக்கு இணையாக அந்த கருப்பு நிற பெர்ராரி வந்து நின்ற வேகத்தில் அந்த இடமே அதிரிந்தது... காரில் இருந்தது இறங்கியவன் அங்கு அவன் பெற்ற கவனத்தை எல்லாம் உதாசீன படுத்தி மின்னலாய் அந்த பைவ் ஸ்டார் ரெஸ்டாரென்ட்டினுள் நுழைந்தான் ... ரிஸப்ஷனில் இருந்த பெண்ணிடம் கண்களில் இருந்த அந்த குலர்ஸை கழட்டாமல் தனக்கு தேவையானதை கூறி மேல் தளத்திற்கு விரைந்தான் சற்றும் குறையாத கோபத்துடன்...

மேல் தலத்தில் வெட்ட வெளியில் வீசும் அந்த குளிர்ந்த காற்றும், அங்கு ஒலிக்கும் மெல்லிசையும் அவன் நெற்றியில் தெரிந்த நரம்புகளுக்கு அமைதி அளிக்கவில்லை மாறாக ஒவ்வொரு நொடியும் அவன் பொறுமை காற்றில் கரைந்துக் கொண்டே இருந்தது...

சிறிது நேரத்தில் அவனை தொடர்ந்து வந்த ஜெயன் அவனது கோவத்தை உணர்ந்து அந்த இடத்தின் ஒரு ஓரத்தில் சென்று அமைதியாய் நின்றுவிட்டான்...

"குட் ஈவினிங் சார், யுவர் ஆர்டர் ப்ளீஸ்" உதய்யின் அருகில் இருந்து வந்த அந்த மெலிய குரலில் ஒரு ஆனந்தம் அவனை பார்த்து...

கோவத்தில் கட்டி வைத்திருந்த கைகளை நீண்டதொரு மூச்சை விட்டு அடக்கியவன் தலையை நிமிர்ந்து அவளை பார்த்ததும் பறக்க துடித்த கோவத்தை கட்டுப்படுத்தி இழுத்து வைத்திருந்தான்...

அவளது கேள்விக்கு பதில் அளிக்க விரும்பாமல் நேராக அவளை ஊடுருவும் பார்வையை மட்டுமே அவன் குடுக்க அந்த குலர்ஸை தாண்டி அவன் பார்வை அனல் கக்கியது... பாவம் அவனுடைய அந்த கோவத்தை முழுதாய் அவள் அறிய வாய்ப்பில்லாமல் போனது... அதே புன்சிரிப்போடு இருந்தவளது தோற்றத்தை அவன் கண்கள் பார்க்க இன்னும் இன்னும் கோபம் அதிகரித்தது... 

அவள் கால்கள் ஒரு இடத்தில் நிற்காமல் வலியில் ஆடிக்கொண்டே இருந்தது அதுவே கூறியது அவள் நீண்ட நேரம் ஓயாமல் நின்றுகொண்டே இருந்ததை... முட்டி வரை அவள் அணிந்திருந்த அந்த கருப்பு சீருடை அவளது வழக்கத்திற்கு மாறாக உடம்போடு கச்சிதமாய் ஒட்டி அவள் அங்க அடையாளங்கள் அப்பட்டமாய் தெரிந்தது. அவனது பார்வை வீச்சை தாங்க இயலாத யாழினி நெளிந்து நின்றாள்...

அவனது பார்வையை கலைக்கும் நோக்கத்தில், "சார் ஆர்டர்" என்று வந்தது அவள் குரல் நூலை விட சன்னமாக...

அந்த கேள்வியில் கட்டுக்கடங்காத கோவத்தில் அங்கிருந்த தண்ணீரை எடுத்து அருந்தியவன் மீண்டும் அவளுக்கு எந்த ஒரு பதிலும் கூறாமல் இருக்க, யாழினி கேள்வியாய் ஜெயனை பார்க்க அவன் அவளுடைய பார்வைக்கு பதில் எவ்வாறு தருவதென்று புரியாமல் விக்கித்து நின்றான்... அவனுக்கு மட்டுமே தெரியும் அவனுடைய சார் எவ்வளவு கோவத்தில் இருக்கின்றான் என்று... 

அவள் மாலை 6 மணி வாக்கில் அந்த பைவ் ஸ்டார் ஹோட்டலில் வேலை கேட்டு வந்த பொழுதே ஜெயனுக்கு அந்த தகவல் வந்து விட அதை உதய்யின் காதில் சேர்க்கும் எண்ணத்தோடு அவனுடைய அறையை அடைந்த பொழுது உதய் மாதவன் ஒரு முக்கியமான அழைப்பில் கடந்த மூன்று மணி நேரமாக இருந்த காரணத்தால் தகவல் அவன் காதிற்கு தாமதமாகவே சென்றது... ஜெயன் கணித்தது போலவே யாழினி அந்த வேலையில் சேர்ந்தது அவனுக்கு சற்றும் புடிக்காமல் நிமிடம் தாமதிக்காமல் அந்த இடத்தை விட்டு யாழினி வேலை செய்யும் ரெஸ்டாரண்டிற்கு விரைந்திருந்தான், ஜெயனிடம் எச்சரிக்கை பார்வையை வீசி, "அவளை விட எனக்கு அந்த மீட்டிங் ஒன்னும் முக்கியம் இல்ல..." என்று...

"சார்..." மீண்டும் அழைத்தாள் இந்த முறை அவன் கண்களில் இருந்த கோவத்தை கண் கூடாய் பார்த்து... சிவந்திருந்தது அவன் கண்கள் கோவத்தில்... ஏமாற்றத்தில்...

"ஒக்காரு" என்றான் அடிக்குரலில்...

"சார்??"

எதிரில் இருந்த இருக்கையை காட்டி, "ஒக்காரு" அழுத்தமாய் வந்தது அவன் ஆணை...

"ஒர்கிங் ஹௌர்ஸ்ல நாங்க ரெஸ்ட் எடுத்த எல்லாம் கூடாது சார்"

நற நறவென பல்லை கடித்தவன் திரும்பி ஜெயனை பார்க்க அவன் தலை அசைத்து அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்... சிறிது நேரம் கழித்து ஜெயன் வந்து அதே இடத்தில் அமைதியாய் நின்று விட அந்த ரெஸ்டாரண்ட்டின் மேனேஜர் வந்து யாழினியிடம் அந்த வேலை இனி அவளுக்கு இல்லை என்ற கூற கண் கலங்கி உதய்யை நோக்கி சென்றாள்...  

"எனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம் சார்..." என்றாள் வலி நிறைந்த குரலில்

அந்த வலி அவளை விட அவனுக்கு அதிகம் வலித்தது...

"இருக்கட்டும்"

"தங்கச்சி படிக்கணும் சார்"

"படிக்கட்டும் யாழினி யார் வேணாம்னு சொன்னது??"

அவளுக்கு அழுகையை கட்டுப்படுத்த இயலவில்லை... இந்த ஒரு இடத்தில் மட்டுமே அவள் எதிர் பார்த்த சம்பளம் கிடைத்தது மற்ற இடங்களில் சொற்ப்ப அளவு சம்பளமே கிடைக்க, அதை தாண்டியும் அவள் இன்னொரு வேலையை செய்ய வேண்டும் அதனால் இந்த வேலையை தயங்காமல் ஏற்றாள்... இதை தவறவிட்டால் மீண்டும் அவள் பல இடங்களில் ஏறி இறங்க வேண்டும்...

"எதுக்கு சார் இப்டி பண்ணீங்க?" என்றாள் அவன் செயல் புரியாமல்...

"நான் உன்ன உட்கார சொல்லி பத்து நிமிஷம் ஆச்சு"

அவன் அதிகாரத்திற்கு மசியாமல் விடாப்பிடியாக மார்புக்கு குறுக்காக கை கட்டி நின்றவள், "நீங்க எனக்கு பதில் சொல்லாம நான் ஒக்கார மாட்டேன் சார்" வழிந்த கண்ணீரை துடைத்தது தைரியமாக அவனிடம் கேட்டுவிட்டாள்...

"இங்கன்னு இல்ல நீ எங்க போனாலும் உனக்கு இதே நிலைமை தான் அதையும் மீறி நீ வேற ட்ரை பண்ணணு தெரிஞ்சது அப்றம்..." ஒரு விரலை கட்டி எச்சரிக்கை செய்தவன் அந்த இடத்தி விட்டு எழுந்து அவள் கேள்விக்கு பதில் கூறாமலே விறு விறுவென்று சென்றான்... செல்பவனையே விழி நீர் வழிய பார்த்து நின்றவள் துவண்ட மனதுடன் இல்லம் நோக்கி சென்றாள்...

வீட்டில் அவள் வருகைக்காக காத்திருந்த அவள் தாய் அம்புஜம் நொடிக்கொருமுறை வாயிலை பார்த்துக்கொண்டே நின்றார்... அவரின் அந்த பொறுமையின்மையை தானும் அனுபவித்தாலும் வெளியில் காட்டாமல் மனைவியின் மகிழ்ச்சிக்கு நிகராக அமர்ந்திருந்தார் பரமசிவம். தாய் தந்தையின் ஆவலை கண்களில் தேக்கி தன்னுடைய படிப்பில் வெகு நாட்களுக்கு பிறகு கவனம் செலுத்தினாள் குழலினி, மன மகிழ்ச்சியுடன் ஆனால் இந்த மகிழ்ச்சியும் துள்ளலும் முதல் முறை அவளது படிப்பில் கவனம் செலுத்தாமல் தடுத்தது...

"என்னங்க இவளை இன்னும் காணோம்? குழல் எங்க யாழினிய கானம் போன் பண்ணியா அவளுக்கு?"

"நிமிசத்துக்கு ஒரு முறை இதே கேள்வியை கேட்டாலும் நானும் அதே பதில் தான் அம்பு சொல்லுவேன்... எனக்கு தெரியாது..." என்றார் சிரித்துக்கொண்டே...

"மா அக்கா போன் சுவிட்ச் ஆப் மா வந்துருவா ஆபீஸ்-ல ஏதாச்சும் வேலை இருந்துருக்கும்" என்றாள் குழல்...

"போங்க ரெண்டு பேரும்... என் புள்ள கேட்டுச்சுனா அவளோ சந்தோச படும்... அதுக்காகவே இதெல்லாம் நடந்த மாதிரி இருக்குது... காலைலயே அவ சொன்னா இனி நல்லது தான் மா நடக்கும்ன்னு... நடந்துருச்சு" கண் கலங்கி மகிழ்ச்சியில் நெகிழ்ந்தார் அம்புஜம்...

"ஏண்டி பண்ணது எல்லாம் நானு ஆனா நீ பாராட்டுறது உன் பொண்ணோட வார்த்தைக்கு"

"உங்க பங்கு இந்த வீட்டுல 50% என் பொண்ணுங்களோட பங்கு மீதி... இனி சந்தோசம் தான் அவளுக்கு ஒரு கல்யாணம் காட்சின்னு பாக்க அரமிச்சிடுவேன்... என்னங்க சரி தான?"

"சரி தான் ஆனா யாழினி இன்னும் கொஞ்ச நாள் அவ விருப்பப்படி வேலை பாக்கட்டும் எந்த பாரமும் இல்லாம முழுக்க முழுக்க அவளோட சந்தோஷத்துக்காக" பேசுவது தன் கணவர் தான என்று ஆச்சிரியமாக பார்த்து நின்றார் எப்பொழுதும் ஏழாம் பொருத்தமாக இருக்கும் தந்தை மகளுக்கு பரிந்து பேசுவது ஆச்சிரியமே...

"அம்மா..." வீடே அதிர உள்ளே நுழைந்தாள் யாழினி...

"என்னடி என்னைக்கு ஆச்சும் பொம்பள புள்ள மாதிரி நிதானமா வர்றியா?"

நீ என்னமோ பேசு என்று அவரை தர தரவென வெளியில் அழைத்து சென்றவள் தெருவின் முனையில் நின்றிருந்த ஒரு நபரை சுட்டி காட்டி, "இவரு எத்தனை நாளா இங்க இருக்காரு?" என்றாள் ஒரு வித குழப்பத்துடன்...

மகள் காண்பித்த திசையில் பார்த்தவர் அங்கு விறைப்பாய் நின்றிருந்த ஒரு மனிதரை பார்த்து, "அவரை மட்டும் தான் நீ பாத்தியா இந்த பக்கம் தெரு முக்குல இன்னொருத்தர் நிக்கிறாரு இவங்க ரெண்டு பேரும் இங்க தான் ஒரு வாரமா இருக்காங்க... யாருனு தெருவுல எல்லாரும் கேட்ருப்பாங்க போல அப்றம் தான் தெரிஞ்சது பக்கத்துக்கு தெருவுல திருட்டு நடந்துச்சுன்னு நம்ம ஏரியா கவுன்சிலர் தான் வாட்ச் மேன் போட்ருக்காருன்னு"

'ஓஓ' என்றவள் யோசனையுடன் வீட்டிற்குள் நுழைந்ததும் இன்முகத்துடன் வரவேற்றது, அவள் தங்கை குழலினி புத்தகத்துடன் அந்த மர ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் அவள் கையில் இருந்த புத்தகத்தை பார்த்ததும் வீடு வரை சமாதானம் செய்திருந்த இதயம் மீண்டும் வலியில் துடிக்க பெருக்கெடுத்த கண்ணீரை கட்டுப்படுத்தி நின்றாள்...

அந்த நொடி தான் தோன்றியது உதய்யிடம் சண்டை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று... ஆனால் அவன் பேச்சை மீறி அவள் மனத்தால் ஒரு துரும்பை கூட அசைக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை அவன் வார்த்தைகளில் மொத உடலும் இறைவனுக்கு நேர்ந்துவிட்ட ஆடு போல் தலை தானாக ஆடியது... அந்த ஒற்றை பார்வை காட்டி போட்டது அவளது பேச்சை...

'ஆனாலும் நீ பேசிருக்கலாம் யாழினி' என்றது விடாப்பிடியாக அவள் மனம்.

"யாழினிமா" தாயின் குரல் கேட்டு பின் திரும்பியவள் காத்திருந்து சிலையாய் நின்றாள்...

அவர் கையில் நிறைய பணம் எதற்காக அவள் ஏங்கி ஏக்கத்துடன் நின்றாலோ அதே பணம் ஆனால் இவ்வளவு பணம் என்று எண்ணுகையில்... மீண்டும் கடன் என்று தான் மனதில் முதல் ஒலித்த சொல்...

"அம்மா திருப்பியும் கடன் வாங்குனீங்களா?" என்றாள் குரல் நடுங்க...

"இல்லடா கடன் வாங்கலை உங்க அப்பா உழைத்து சம்பாதித்த பணம்டா"

"அப்பா தான் வேலைக்கே போகலேயே மா வேணாம் மா நமக்கு... இந்த கடன் எங்க வாங்குனியோ அங்கையே போய் குடுத்துறலாம்"

"சொல்றத கேளுமா இது அப்பாவை ஏமாத்துனாங்கள்ல அவனே வந்து குடுத்த காசு"

யாழினியல் துளியும் இதை நம்ப இயலவில்லை கேள்வியாய் சகோதரியை பார்க்க அவள் தலைசைத்ததும் தான் நிம்மதி அடைத்தாள்... மீண்டும் ஒரு கடன் சுமையை ஏற்க மனம் ஒப்பவில்லை...

"எப்படி?" என்றாள் தந்தையை பார்த்து...

"தெரியல அவனா தான் வீட்டுக்கு வந்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி... மன்னிச்சிருங்கன்னு அழுதான். அப்றம், இந்த அஞ்சு லச்சம் ருபாய் பணத்தை குடுத்து இப்போதைக்கு இத வச்சுகோங்க மிச்ச பணத்தை இன்னும் ரெண்டு மாசத்துல தரேன்னு ஒரு பத்திரத்துல கையெழுத்து போட்டு குடுத்துட்டு போயிருக்கான்... எது எப்புடியோ என்னோட பல வருஷத்தோட உழைப்பு வீண் போகல" தந்தை கண்களிலும் பல வருடங்கள் பிறகு ஆனந்தம்...

"எப்ப மா இது நடந்துச்சு?"

"இப்ப தான் டா ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னாடி..." 

ஏனோ எல்லாம் சேர்ந்து உதய்யின் முகமே கண் முன் தோன்றி மறைந்தது... அன்று அந்த கடையில் அவள் தங்கை குழலினி, உதய் அவர்கள் பின்னால் தான் நின்றான் என்று கூறி இருந்தாள்... அது மட்டும் அல்லாது அவனே அவளிடம் அவளுடைய தந்தையின் தொழிலைப் பற்றி கேட்டது உண்டு அனைத்தையும் முடிச்சிட்டவள் நொடி தாமதிக்காமல் கையில் இருந்த கைப்பையை கூட விட்டு வெளியில் ஓடினாள்...

"எங்க இப்புடி அவசரமா ஓடுறா?" பரமசிவம் கேட்க, "தெரியலைங்க... ஏய் யாழினி எங்கடி இப்புடி அவசரமா ஓடுற?" என்றவர் வாசல் நோக்கி அவள் பின்னே சென்றார்...

"மா நான் வந்தர்றேன் எனக்காக வெயிட் பன்னாதீங்க" தாயின் பதிலுக்கு கூட காத்திராமல் வெளியில் ஓடினாள்...

"ஏய் பொட்ட புள்ள இன்னேரம் என்னடி வெளில போற அறிவில்லை??" 

அவர் கேள்வியை கேட்பதற்கு அவள் அங்கே இருந்தாள் தானே... பறந்துவிட்டாள் தெரு முனையில் நிண்டிருந்த அந்த வாட்ச்மேனிடம்... விறைப்பாய் இரு கைகளையும் முதுகு பின்னால் கட்டி நின்றவன் மூச்சு வாங்க அவன் முன்னே வந்து நின்றவளிடம் சிறு அசைவை கூட காட்டாமல் சிலையாய் நின்றான்...

"அண்ணா நீங்க உதய் சார் கிட்ட தான வேலை பாக்குறீங்க?" ஒரு ஆனந்தம், நெகிழ்ச்சி, எதிர்பார்ப்பு கண்களில் தேங்கி நின்றது... ஆம் என்று கூறுங்கள் என்று இறைஞ்சுதலாக இருந்தது அவள் பார்வை...

இவளது வார்த்தையை கேட்டவன் அசையாது நின்றான், அவள் வார்த்தைகள் காதில் விலாதது போல்...

"அண்ணா சொல்லுங்க ப்ளீஸ் நீங்க உதய் சார் சொல்லி தா இங்க வந்து நிக்கிறிங்களா?"

"..."

"பேச கூடாதுன்னு சொல்லிருக்காரா சார்... பரவாயில்ல நீங்க பேசுங்க நா சார் கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்"

"..."

நீண்ட பெருமூச்சு விட்டவள், "சரி சாரோட வீடு எங்க இருக்குன்னு சொல்லுங்க நான் அவரை பாக்கணும்"

"..."

"அண்ணா உங்க வயித்துல ரெண்டு குத்துனா கூட நீங்க ஒன்னும் சொல்லமாட்டீங்களா? இப்டி மௌனவிரதத்துல இருக்கீங்க... இப்ப சொல்ல போறிங்களா இல்ல எங்க வீட்டுக்குள்ள திருட வந்திங்கன்னு கத்தவா?"

"..."

"யோவ் சட்டி தலையா இப்ப அவரு வீடு எங்க இருக்குன்னு சொல்ல போறியா இல்லையா?"

"..."

இனி இவனிடம் பேசி பலன் இல்லை என்று அறிந்தவள் தன்னுடைய அலைபேசியை வீட்டிலேயே விட்டு வந்ததை நினைத்து அவன் கையில் இருந்த கைபேசியை பறித்து ஜெயனுக்கு தான் அழைத்தாள்... அவன் எண் அதில் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்க அவனை பார்த்து ஒரு குறும்பு சிரிப்பு சிரித்தாள். அந்த சிரிப்பில் தெரிந்த மகிழ்ச்சி அவனுக்கும் உதட்டினுள்ளே சிரிப்பை தந்தது...

"சொல்லு சிவா" கணீரென எதிரொலித்தது, அந்த பக்கமாக ஜெயன் குரல்.

"திருத்தம்... யாழினி" 

தான் கேட்டது சரியா என்ற சந்தேகத்துடன் கைபேசியில் மீண்டும் ஒரு முறை பெயரை பார்த்தவன் 'சரியா தான் இருக்கு... இந்த பொண்ணு எப்டி அவன் போன்ல இருந்து பேசுது ஒருவேளை தெரிஞ்சிடுச்சோ'

தொண்டையை செறுமியவன், "சொல்லு யாழினி"

அந்த யாழினி சற்று அமைதியாகவே வந்தது என்ன இருந்தாலும் உதய்யின் மனதை அறிந்தவன் அல்லவா அவன் செயலின் உறுதியும், கண்களின் உணர்ச்சியும் இவளே அவனுடைய முதலாளியின் வருங்கால மனைவி என்று உறுதியாக அறிவான்...

"சார நான் இப்ப பாக்கணும்ன்னா எங்க இருக்காரு அவரு?" ஒரு ஏக்கம் அவள் குரலில்...

"சார் எல்லாம் இப்ப பாக்க முடியாது மா அவரு ஒரு மீட்டிங்ல இருக்காரு"

"அவரு என்ன பாக்க கூடாதுனு நெனச்சா நேரடியா சொல்லுங்கண்ணா ஆனா இந்த நேரத்துல மீட்டிங்னு பொய் மட்டும் சொல்லாதீங்க" அவன் தன்னை தவிர்க்கிறான் என்ற எண்ணம் வேரூன்றியது... 

"நிஜமா தான்மா சொல்றேன் இது கலிபோர்னியா கால் அவங்களுக்கு இப்ப தான் காலைல பத்து மணி... சார் மீட்டிங் முடிக்க எப்படியும் 12 மேல ஆகிடும் நீ நாளைக்கு வந்து சார்க்கிட்ட ஆபீஸ்ல பேசிக்கோ"

"ம்ம்ம்ஹ்ம்ம்ம் நீங்க அட்ரஸ் மட்டும் சொல்லுங்க நான் விடிய விடிய இருந்து கூட பேசிட்டு போறேன் ப்ளீஸ் அட்ரஸ் சொல்லுங்க உங்கள கெஞ்சி கேடுக்குறேன்... வேனா நான் உங்களுக்கு நாளைக்கு என் காசுல உங்களுக்கு புடிச்ச பிரியாணி வாங்கி தரேன், அது மட்டும் பதலனா வேற ஏதாச்சும் கூட வாங்கி தரேன் அஹ்ஹ் நம்ம ஆபீஸ்ல நிலா-னு ஒரு பொண்ண நீங்க பாக்குறீங்களா அதுகிட்ட உங்கள பத்தி நல்ல விதமா சொல்றேன் முடிஞ்சா கல்யாணமே பண்ணி வைக்கிறேன் ஏன் அவங்க அப்பா அம்மா கிட்ட கூட பேசுறேன்..."

இவள் பேச பேச அங்கே ஜெயனுக்கு தான் மூச்சு வாங்கியது ஒரு நாள் தெரியாமல் அந்த பெண்ணிடம் தானே ஒரு கோப்பை சென்று தருவதாக கூறினான். யாழினியிடம் அங்கே சிக்கியவன் இன்று அதன் பாதிப்பு தெரிந்தது அதன் பிறகு அந்த பேச்சையே அவள் எடுக்காமல் இருந்ததன் சந்தேகம் இன்று தெரிந்துவிட்டது...

"இந்தாம்மா நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ ஆனா இந்த நேரத்துல நீ தலைகீழா நின்னாலும்... ம்ம்ஹ்ம்ம்ம் நீ விஷத்தையே குடிச்சிட்டு ஒக்கந்தாலும் இங்க கூட்டிட்டு வர விட மாட்டேன் எதுவா இருந்தாலும் காலைல ஆபீஸ்ல வந்து பேசிக்கோ" அவ்வ்ளவு தான் அதற்கு அடுத்து அவன் அழைப்பை எடுக்கவில்லை... சோர்ந்த முகத்துடன் வீட்டிற்கு சென்றவள் வீட்டில் இருந்த சந்தோசத்தை கூட முழுமையாய் அனுமதிக்காது முன்னே வைத்த அவளது பிரியமான இட்லியை கூட பேறுக்காக கொறித்தாள்...

அதிகாலை விடியலுக்காகவே இரவு முழுவதும் விழித்திருந்தவள் வழக்கத்தை விட வேகமாக எழுந்து அலுவலகம் புறப்பட்டாள் செல்லும் வழியில் ஒவ்வொரு நொடியும் அவளுடைய ஆர்வமும் நடுக்கமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது ஒரு வேகத்தில் கிளம்பிவிட்டாள் ஆனால் என்ன பேசுவது... எப்படி கேட்பது... முதலில் அவனை நேருக்கு நேர் எப்படி பயம் இல்லாமல் பார்ப்பது... ஒருவேளை அவனுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று கூறினால்?? கேள்விக்கு மேல் கேள்வி குழப்பத்திற்கு மேல் குழப்பம் மலையாய் நின்றது...

8 மணிக்கே அலுவலகம் வந்தவள் கண்ணில் பட்டான் உதய். புதிதாய் கஞ்சி போட்ட சட்டை போல் விறைப்பாக தன்னுடைய கோட்டின் பட்டன்-ஐ போட்டபடியே ஜெயனிடம் ஏதோ உத்தரவை பிறப்பித்துக் கொண்டிருந்தான் மிடுக்கான நடை எவருக்கும் அஞ்சாது நேருக்கு நேர் பார்க்கும் அந்த பார்வை, அலை அலையான அடங்காத கேசம் அதை ஜெல் கொண்டு தடவி இருந்தாலும் தனக்கே உரிய அழகில் அவனுக்கு அழகு சேர்த்தது... நொடிக்கொருமுறை நுனி மூக்கினை தீண்டும் கைகள் என அவள் பார்வை அவனை ரசனையை தீண்டி கொண்டே இருந்தது... 

இவளை தாண்டி தனது கேபினுள் சென்றவன் கதவை மூடும் நொடி, "யாழினி கம் இன்" என்ற கட்டளையை பிறப்பித்தே சென்றான். 

கைகளை சூடேற தேய்த்து உள்ளே சென்றவள் அவனது வழக்கமான இருக்கையில் அவனை பார்க்க அங்கு இல்லாமல் நுழைவாயிலின் வலது புறம் இருந்த டிவைன் சோபாவில் அமர்ந்து ஒரு பிஸ்னஸ் நாளிதழை அலசிக்கொண்டிருந்தான். அவளது கூர்ந்த பார்வையை கண்டும் காணாமல்... நேற்று இரவே ஜெயன் அவனிடம் அவளது அவசரத்தை கூறி இருந்தான்... ஓரளவு யூகித்திருந்தான் அவளது தந்தையின் தொழில் சம்மந்தமாக என்று...

"சொல்லுங்க யாழினி நேத்து நைட் என்ன பாக்க கேட்டிங்கனு கேள்வி பட்டேன்"

"சாப்பிட்டீங்களா சார்?"

அவளது கேள்வியில் புருவம் உயர்த்தி தலை அசைத்தவன், "நைட் 10 மணிக்கு என்ன அவசரம்?"

'கேட்ரு கிறுக்கு யாழினி இத விட நல்ல சுட்டிவேசன் கண்டிப்பா நீ உருவாக்க பண்ண மாட்ட அந்த ரோபோ மண்டையன் கிட்ட கேட்ரு'

"எதுக்கு சார் என்ன வேளைக்கு போக கூடாதுன்னு சொன்னிங்க"

"வயசு புள்ள, பொம்பள புள்ளைங்கள பாக்குறது தப்பு இல்ல ராசா... வயசு கோளாறு அது. ஆனா, எந்த பொண்ண உன்னால கடந்து வர முடியலையோ அவளை யோசிக்காம காலம் முழுக்க சரி பாத்தியா வச்சுக் காப்பாத்தணும்யா"  தாயின் வார்த்தை காதில் இன்றும் ஒலித்தது...

'உண்மைய சொன்னா புரிஞ்சிருக்குற நிலமைல நீயும் இல்ல சொல்லுற நிலமைலயும் நானும் இல்ல... புரிய வைக்கிறேன் எல்லாத்தையும் ஆனா நாள் இருக்கு அதுக்கு'

"இத கேக்க தான் நடு ராத்திரி என்ன பாக்கணும்னு சொன்னியா? அதுவும் இல்லாம நா அப்டி சொல்லவே இல்லையே"

"இல்ல நீங்க தான அங்க இருந்து என் வேலைய விட்டு எடுக்க வச்சிங்க வேற எங்கையும் போக கூடாதுன்னு வேற சொன்னிங்க"

"அதுக்கு??"

"அப்பாவுக்கு நீங்களா சார் ஹெல்ப் பண்ணீங்க..." அவள் மனது 'ஆமான்னு சொல்லுங்க ப்ளீஸ் ப்ளீஸ்' என்று மன்றாடியது அவனிடம்...

"தெரியலை"

இல்லை என்று சொல்லாததே நம்பிக்கை தந்தது, "அப்ப எங்க வீடு முன்னாடி இருந்த கார்ட்ஸ்?"

"ஜெயன் கிட்ட தான் கேக்கணும்"

'நடிப்பு'

"நீங்க பொய் சொல்றி..." அவள் பேச்சை முடிக்கும் முன்னே ஜெயன் வந்தான் கதவை உடைத்தெறியும் வேகத்தில்... 

"என்ன பிரச்னை ஜெயன்" 

"ஆதி சார்"

"ஆரமிச்சிட்டானா" என்றவன் யாழினியை பார்த்து, "ஒர்க் கான்டினியூ பண்ணுங்க யாழினி" 

வாடிய முகத்துடன் அவள் வெளியில் சென்றதும், "என்ன பண்ணான் இன்னைக்கு?" ஜெயனிடம் சென்றது கேள்வி.

***********************

"என்னடா ஆதி... மாப்பிள்ளை மாதிரி வேஷ்டி சட்டைல ஜம்முன்னு வந்துருக்க" சிகப்பு முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்து விட்டு அவனை போலவே அடங்காத அவனதுக் கேசத்தை ஒரு கையில் அடக்கியபடி மற்றொரு கையால் அந்த வெள்ளை வேஷ்டியின் நுனியை பிடித்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைத்தவனை பார்த்த ஷீலாவிற்கு இப்பொழுதே அவனுக்கு ஒரு திருமணம் செய்து வைக்கும் ஆசை மேலோங்கியது...

"ஒரு கல்யாண வீட்டுக்கு போனேன் ஷீலா எங்க அந்த வெளங்காதவன் வர்றேன்னு நேத்து தான் சொன்னான் ஆள காணோம்"

"அவனே மாப்பிள்ளை மாதிரி இருக்கானா அப்ப நானு?" ஆதிக்கு பின்னாலே வந்த கெளதம் ஆதியை விட சற்று கூடிய சிகப்பு நிறத்தில் சட்டை அணிந்திருந்தான்... கௌதமின் குரலைக் கேட்டு எதார்த்தமாக வெளியில் வந்ததுப் போல ஓடி வந்து நின்ற பவித்ரா கௌதமை ரசனையாய் பார்த்து யாரும் பார்க்காத நேரத்தில் அவனுக்கு கண்ணடித்தாள்... அதில் ஜெர்க் ஆனவன் அவளதுக் காதல் பார்வையைத் தாளாது ஓரக்கண்ணால் அவளை பார்த்து நின்றான்...

"என்னைக்கும் என் ஆதி தான் அழகு" என்று அவனிடம் வந்து த்ரிஷ்டி கையாலே கழித்தார் ஷீலா...

"என்ன சைட் அடிச்சது இருக்கட்டும் நீங்க பெத்த டைனோஸர் குட்டி ஒன்னு தனியா படம் ஓட்டிட்டு இருக்கு பாத்திங்களா"

பவித்ராவை பார்த்தவர் மீண்டும் ஆதியிடம் திரும்பி, "அதை எல்லாம் இப்ப கண்டுக்குறது இல்ல நான் பெத்த ரெண்டும் தெண்டம் தான்... எனக்கு இப்ப நீ இல்லனா சஹானா கல்யாணம் பண்ணிக்கணும் ரெண்டுல ஒன்னு சொல்லு" விடாப்பிடியாக நின்றார் ஷீலா

தமிழின் தந்தையை பார்த்தவன், "எப்டி இந்த ஷீலா கூட இத்தனை வருஷம் குப்ப கொட்டுனிங்க தொல்லை தாங்க முடியல பா... எப்ப பாரு கல்யாணம் கல்யாணம்னு ஏலம் விட்டுட்டே இருக்குது"

"கஷ்டம் தான் டா ஆதி ஆனா என்ன பண்றது வேற வழி இல்லையே... சரி போய் சாப்பிடுங்க ரெண்டு பேரும். தமிழ் நீங்க வருவீங்கன்னு சொன்னான் அதான் கறிக் குழம்பு வச்சிருக்கா சாப்பிடுங்க மொத" என்றவர் மீண்டும் தன்னுடைய நாளிதழில் மும்முரமானார் நந்தன்.

"உங்க வீட்டுல நடக்குற உறுப்புடியான விசியம் ரெண்டே ரெண்டு... ஒன்னு இந்த கறிக் குழம்பு இன்னொன்னு வாயிலேயே வடை சுடுறது"அவனது காதை திருகியவர், "வாய் அதிகமாகிடுச்சு டா உனக்கு"

"ஐயோ ஷீலா காதுல இருந்து மொத கைய எடுங்க... ஏற்கனவே அடிச்ச சரக்குல காது சரியா கேக்க மாட்டிக்கிது இதுல நீங்க வேற"

"காது பிரச்சனை ஆனதுக்கு பதிலா வாயில ஏதாச்சும் அடி பட்ருக்கனும்... சாமி இனி பேச்சிலர் பார்ட்டி-னு உன் கூட வந்தா என்ன செருப்பை எடுத்து நானே மடார் மடார்-னு அடிச்சுக்குவேன் டா" உச்சகட்ட எரிச்சலில் கெளதம் ஆதியை பார்த்து பொரிந்தான்.

அவனை அப்பாவியாக பார்த்த ஆதி, "நான் என்ன டா பண்ணேன்? ஒரு ஷாட் அடிச்சிட்டு ஒரு ஓரமா போய் தூங்கிட்டேன்"

"கிழிச்ச குடிகாரன்னா என்ன பண்ணுவான்? சரக்கு அடிச்சிட்டு தூங்கிருவான் இல்ல ரெண்டு லவ் புட்டுக்குச்சுன்னு அந்த பொண்ணப் பத்திப் பொலம்புவான் ஆனா நீ என்ன தெரியுமாப் பண்ணுன? கல்யாணப் பொண்ணப் பாத்து ப்ரப்போஸ் பண்ணுன டா பேமானி"

ஷாக் ஆனது போல் நடித்த ஆதி வாயை பொத்தி, "நானா டா அப்டி பண்ணுனேன்"

"நீ இல்லாம உங்க ஆயாவா வந்து பண்ணுச்சு? சனியன் அதோட நிறுத்தாம இடத்தையே கலாட்டா பண்ணிட்டு தான் டா வந்த. நல்லவேளை, அந்த இடத்துல பெருசுக எதுவும் இல்ல.... இருந்துச்சு, கல்யாணம் நின்னுருக்கும்..."

ஆதியின் தலையில் குட்டிய ஷீலா, "அறிவு இருக்கா கொஞ்சம் ஆச்சும்? ஒரு பொண்ணுகிட்ட போய் தப்பா நடந்துக்குற அளவுக்கு அந்த போதை உன்ன மாத்திருக்கு"

"இது என்னடா புது கதையால இருக்கு... பொண்ணு பாக்க அழகா, கழுத்துல நெறையா நகை போட்ருந்துச்சு... சரி கரெக்ட் பண்ணா லைப் செட்டில், இந்த தீஞ்ச வாயனுக முன்னாடி கும்னு ஒரு பொண்ணோட வந்து நிக்கலாம்னு ப்ரப்போஸ் பண்ணா என்னமோ ரேப் பண்ண மாதிரி தப்ப நடந்துக்குதேன்னு சொல்றிங்க?" - ஆதி

"ஆமா இல்லனாலும் இவன் உத்தமன் நடிப்பை போடுறத பாரு... இதையும் இந்த குடும்பமே நம்புது" கெளதம் புலம்பிக்கொண்டே இன்னும் இரண்டு இட்லியை உள்ளே தள்ளினான்

"சாரி ஷீலா இனிமே வெளிய போனா சரக்கு பக்கமே போக மாட்டேன்... பிராமிஸ்" என்று கௌதமின் தலையில் கையை வைத்து சத்தியம் செய்தான் அமைதியாக உணவை எடுத்துக்கொண்டிருந்த கௌதமிற்கு புரை ஏறியது.

"ஷீலா மா எனக்கு வேகமா கல்யாணம் பண்ணி வச்சிருங்க கண்ட கண்ட நாய் எல்லாம் என் உயிரை பணயம் வச்சு விளையாடுது... ஐயையோ பவிக்குட்டி என்ன எவ்ளோ பாக்க முடியுமோ அவளோ பாத்துகோ என்னைக்கு காலைல செத்து கிடக்க போறேனு தெரியலையே"

 புலம்பினாலும் முன்னே இருந்த பாத்திரத்தில் இருந்த நல்லி எலும்பு மட்டும் குறைந்துக் கொண்டே இருந்தது...

"டேய் டேய் அளக்காத டா ஒரு சத்தியத்துல நீ செத்துட மாட்ட. அப்டி பாத்தா நீ என்னைக்கோ செத்துருக்கணும்... சரி அந்த புளியங்கொட்டை எங்க மா? இவ்வளவு காலைல போயிருக்கான் காலேஜ் 7.30 எல்லாம் எங்க போய் என்ன பண்ணுறான் அதுவும் ஞாயிற்றுக்கிழமை" - ஆதி

"இன்னும் இந்த புளியங்கொட்டைய நீ விடலையாடா... காலேஜ்ல இருந்து போன் வந்துச்சு ஆதி. ஏதோ ப்ரின்சிபள் கூப்பிட்டாருனு சாப்புடாம போய்ட்டான்"

"ம்ம்ம்ம்... ஞாயிற்று கிழமை இவனுக்கு மட்டும் காலேஜ் எல்லாம் இருக்காது அவன் வெளிய ஊரச் சுத்த பொய் சொல்லிருப்பான் அதையும் நம்புறியே ஷீலா விவரம் பத்தல உனக்கு" - ஆதி

ஆதி ஒரு வாய் எடுத்து வாயில் வைக்க போக சரியாக அவனுடைய கைபேசி அலறியது "சீசீ இவனுக்கு எல்லாம் நூறு ஆயிசு வேணாம்டா பூமிக்கு தான் பாரம்" என்று புலம்பியவன் காலை அட்டன் செய்து காதில் வைத்து, "சொல்லுடா கருவாயா..." அழைத்தது அதே புளியங்கொட்டை தமிழ் தான்...

மறுமுனையில் தமிழின் குரலில் பெரிய மாற்றம் தெரிந்தது, "ஆதி"

அநியாயத்திற்க்கு மூச்சு வாங்கியது அவனுக்கு... ஏதோ ஒன்று சரி இல்லை என்று உணர்ந்த ஆதி, சாப்பிட்டுக் கொண்டிருந்த இடத்தில் இருந்து எழுந்து கை கழுவ சென்றவன், தன்னை சுற்றி எவரும் இல்லை என்று உறுதிசெய்து, "தமிழ் என்ன ஆச்சு?"

"ஆ...ஆதி காலேஜ்ல இருக்... இருக்கேண் டா வா... வா டா..." அந்த ஒரு வரியில் அத்தனை தடுமாற்றம்... விறுவிறுவென வீட்டை விட்டு வெளியேறியவன், "காலேஜ்ல எங்க இருக்க"

"லைப்ரரி பக்கம் போயிடு இருக்கேண் டா..."

"பத்து நிமிசத்துல அங்க இருப்பேன் பயப்படாத... புரிஞ்சதா" ஆதியின் செயலை கண்ட கௌதமும் வெளியில் வரவும் ஆதி வண்டியில் ஏறவும் சரியாக இருந்தது...

"ஆதி பயமா இருக்கு டா அருவா, கத்தி எல்லாம் வச்சிருக்காங்க டா"

"டேய்" ஆதி கத்திய கத்தில் அந்த பக்கம் பேரமைதி, "பயப்புடாத-னு சொன்னேன் கேட்டுச்சா"

"இல்ல மச்சான் தொரத்துறாங்க"

"நேர்ல வந்தேன் மொத வெட்டு உனக்கு தான் டா... தைரியமா இருன்னு சொல்றேன்ல... ஒருவேளை உன்னப் புடிச்சிட்டா அவங்கட்ட ஏதாவதுப் பேச்சு குடுத்துட்டே இரு... பயப்படாத... பத்து நிமிசத்துல நான்அங்க இருப்பேன்" என்றவன் அணைப்பை துண்டித்து வண்டியை உயிர்ப்பித்த நொடி கெளதம் நிலைமையை புரிந்து பின்னால் ஏறி அமர, ஆதி தீயாய் கல்லூரியை நோக்கி பறந்தான்...

அந்த கல்லூரி சென்னை மாநகரித்திலே ப்ரசித்தி பெற்றது. அதன் தரத்திற்கும் அதன் கட்டணத்திற்கும்... ஒன்று திறமை இருந்தால் கல்லூரியில் சேரலாம் இல்லை பணம் இருந்தால் சேரலாம் ஆதலால் அங்கு முக்கால் வாசி பணக்காரர்கள் மட்டுமே இருப்பர்... கல்லூரியின் பரப்பளவு மட்டுமே கிட்ட தட்ட ஐம்பது ஏக்கர் இருக்கும்.

ஆதி சொன்ன நேரத்தை விட வேகமாக கல்லூரி வந்திருக்க, விடுமுறை நாள் ஆதலால் கேட்பார் இன்றி கல்லூரியே வெறிச்சோடி இருந்தது. வண்டியை நேராக நூலகம் நோக்கி செலுத்த அங்கு இருந்தான் தமிழ், அந்த புல் தரையில் வயிற்றை பிடித்து வழியால் துடித்துக்கொண்டே... 

நெற்றியில் பெரிய கீறல், கைகளில் ஆங்காங்கு குருதி தென்பட்டது... ஆதியின் ஊர்தி ஒலி கேட்டு தமிழை சுற்றி இருந்த அந்த பத்து தடியன்களும் திரும்பினர் முகத்தில் ஒரு குழப்ப ரேகையுடன்...

"யார்ரா நீங்க... அடிச்சேன்னு வையி கூவத்துல போய் விழுந்துருவீங்க அப்பால போயிக்கினே இரு" தர லோக்கலில் ஒருவன் ஆதி, கௌதமை விரட்ட முயன்றான்.

வண்டியில் இருந்து இறங்கிய ஆதி அதே வண்டியில் சாய்ந்து அமர்ந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தவன், "இன்னா அண்ணாத்த எப்டி வுட்டுட்டு போக சொல்ற? தோ கீழ வலிக்கினு இருக்கான் பாரு அவன் என் தோஸ்து தான்... என் கூட அனுப்பிடு நா கூட்டினு இப்பிடிக்கா போய்கின்னே இருப்பேன் ... இன்னா டா நா சொல்றது சரி தான" என்று கௌதமிடம் கேட்க அவனும் சலனமே இன்றி தலை அசைதான்...

"அய்ய உன் தோஸ்துனா ஒடனே விட்டுன்னு போணுமா நீ இன்ன என் மாமனா? மச்சானா?" இன்னொருவன் எகிறினான்...

"ண்ணா இன்னா இவன்டலாம் பேசிட்டு இர்க்க வந்த வேலீய முடிச்சுன்னு கெளம்பலாம் குறுக்க வந்தா ஒரே வெட்டா நா அசால்ட் பண்ணிட்றேன்" என்றவன் ஆதியிடம், "யின்னா நின்னுட்டே இருக்க சொல்றது காதுல விலலையா ஓபி அடிக்காம கெளம்பு முடிச்சின்ன வுடனே சொல்லி அனுப்புறோம் வந்து பாடிய இட்டுனு போங்க..."

அவர்கள் பேசிய வார்த்தை எதுவுமே காதில் விழாதவாறு தான் உண்டு தன் வேலை உண்டு என்று தம் அடித்து நின்றான் ஆதி கேசவன்.

"சனியன் பேசுதா பாரு" என்று ஆதியை பார்த்து புலம்பிய கெளதம், தமிழை நோக்கி செல்ல, 

ஒருவன், "டேய் இவனாண்ட யார் வந்தாலும் அவன் கால ஒட" முன்னர் பேசியவனிடம் கட்டளையிட்டான்.

"உன் உருட்டல் மெரட்டலுக்கு எல்லாம் நான் ஆள் இல்ல, இந்தா பின்னாடி நிக்கிறான் பாரு அவன்ட பேசு" என்று அவர்களை சற்றும் பொருட்படுத்தாது தமிழிடம் செல்வதிலேயே குறியாய் நின்றான் கெளதம்...

"கோத்தா செத்த டா இன்னிக்கி நீ" ஒரு தடியன் கௌதமிடம் நெருங்கி அரிவாளோடு வர, அவன் கை கௌதமிடம் படுவதற்கு முன்பாகவே 'சுர்ர்ர்ர்'- என்ற வலி ஒன்று அடிக்க வந்தவன் கழுத்தில் பட்டது, வலியில் துடித்தவன் திரும்ப, அங்கே ஆதி... புன்னகை பூத்த முகமாய் அவனை நோக்கி...

"நான் சிகரெட் குடிக்கிறப எவன் என்ன டிஸ்டர்ப் பன்னாலும் எனக்கு கோவம் வரும்... அதான் கொஞ்சமா சூடு வச்சேன் இனிமேல் அப்டி பண்ணாத..." பாசமாய் அறிவுரை வழங்கி அவனது கையை முறுக்கி தரையில் சரித்தான்...

"டேய் நாங்கல்லாம் மினிஸ்டர் ஓட ஆளுங்க. விசியம் தெரிஞ்சது உன் குடும்பமே பேஜாராகிடும் பாத்துக்க... கடைசியா ஒருக்கா டைம் கொடுக்குறேன் எஸ் ஆய்கின்னேயிரு"

"நானும் அதே தான் தல சொல்றேன். ஒரு தடவ யோசிச்சுக்கோ அவனை மட்டும் விற்று. இல்லனா சீன் வேற மாதிரி ஆகிடும் மினிஸ்டர் ஆவது மயிராவது எல்லாரு எனக்கு ஒன்னு தான்" 

வேஷ்டியின் ஒரு நுனியை இடது காலால் எடுத்து மடித்து கட்டியவன் வலது கரத்தில் இருந்த அந்த வெள்ளிக் காப்பினை நன்றாக ஏற்றி இறுக்கி மீசையை கம்பீரமாய் முறுக்க, பார்த்தவர்களுக்கு எவருக்கும் அடங்காத சண்டியனாக மட்டுமே காட்சியளித்தான்.... 

அவன் கண்களில் இருந்தத் தீவிரம் நிச்சயம் அங்கு உள்ளவர்களுக்குப் புதிதாகவே இருந்தது... தமிழ் இருப்பதையே அவர்கள் மறந்து ஆதியை நோக்கி ஒருவன் வேகமாக அடிக்க வர, வந்தவனின் முகத்திலே ஓங்கி ஒரு குத்து குத்திய ஆதி அவனை அப்டியே முழங்காலில் ஓங்கி ஒரு மிதி மித்தான். அடுத்தவன் அதே வேகத்தோடு வர அருகில் கிடந்த ஒரு பெரிய கல்லை வேகமாக எடுத்து அவன் காதிலே ஓங்கி ஒன்று விட்டான்... அடுத்த நிமிடம் அங்கு ஒருச் சிறிய ஆக்சன் கட்சி நடந்தேறியது... கல்லூரியில் ஒரு டிபார்ட்மெண்ட்டை தனியாக சமாளித்தவனுக்கு இந்த பத்து பேர் தூசியாக தெரிந்தனர்...

 அனைவரையும் வீழ்த்தி இறுதியாக மூச்சு வாங்க, வலியில் துடித்துக்கொண்டிருந்த ஒருவனது கையை பின்னால் முறுக்கி, "ஐயோ வலிக்கிது வுட்றா வுட்றா" அவன் கத்தியதும், கதறியதும் ஆதியின் காதிற்கு எட்டவில்லை... 

"இப்ப சொல்லு நான் உன் மாமனா? இல்ல மச்சானா?"

"எனக்கு ரெண்டுமே நீ தான் டா... வுட்றா"

"அட முட்டா பயலே அது எப்புடிடா ரெண்டுமே ஒரே நேரத்துல இருக்க முடியும்? படிக்கலானாலும் இந்த அறிவு கூட இல்லாம இருக்க" என்று கையை இன்னும் சற்று முறுக்கினான் ஆதி...

"ஆஆஆஆ.... சரி சரி நீ என் மச்சான் அவனை கூட்டிட்டு போ... கை வலிக்கிது டா விடு" கண்களில் ஒரு ஓரம் கண்ணீர் ஓடியது அந்த தடியனுக்கு...

"அய்யா இவன் தான்யா அன்னைக்கு அந்த உதய் மாதவனை கட்டிபுடிச்சிட்டு நின்னான்... இவன் மேல கை வச்சா அவனுக்கு அங்க கண்டிப்பா வலிக்கும்" சண்டை மும்முரத்தில் அவனையே வெறித்து பேசிக்கொண்டிருந்த சிலரை கவனிக்க தவறினான்.

"ம்ம்ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும். இனிமே இவன் பின்னாடி எவனாச்சும் வந்திங்க நீ சொல்ற மினிஸ்டர் தான் மொத டெட் பாடி... சொல்லி வை..." ஆதி பேசிக் கொண்டிருந்த நேரம் ஒருவன் கூரிய அரிவாளால் ஆதியின் முதுகை பதம் பார்த்தான்...

"ஆதி" கெளதம் தமிழ் இருவரும் பயத்தில் அலறினர்...

இவை நொடி பொழுதில் நிகழ்த்திட ஆதி சுதாரித்து அவன் மறுமுறை ஓங்கிய அரிவாளை அவன் கையால் அவன் கழுத்திற்கே எடுத்து சென்றிருந்தான், "பொட்ட மாதிரி பின்னாடி வந்து குத்துற?" ஆதி கண்களில் துளியும் வலியோ பயமோ இல்லை கோவம் மட்டுமே, "ஆம்பளையா இருந்த நேருக்கு நேர் வந்து நில்லு" என்று அருகில் இருந்த மரத்தில் தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி அவனை தாக்கினான்...

அவன் கீழே விழுந்த நொடி, ஆதியின் கண்களில் விழுந்தான் அந்த ஐம்பது வயதி ஒத்த மனிதன், தமிழக அரசியல்வாதிகளுக்கே உரிய வெள்ளை வேஷ்டியும் வெள்ளை சட்டையும் அணிந்த ஒருவன்... அவனது முகம் கூட ஆதியின் கண்களுக்கு மங்களாகவே தெரிந்தது... ஒரு நிமிடம் உணர்ச்சியின்றி இருந்த அவனது முதுகில் யாரோ தண்ணீர் ஊற்றிய எரிச்சல் இதயம் வரை செல்ல சிறுக சிறுக உலகமே இருண்டது...

"நா இங்க வந்தது வேற ஒரு சோளிய முடிக்க ஆனா உன்னால நல்லது நடந்துச்சு... இங்க கை வச்சா அங்க வலிக்குமாமே..." அந்த குரலில் அவ்வளவு வன்மம், க்ரோதம்... அடுத்த வார்த்தை அவன் செவிகளை எட்டும் முன் ஆதியின் கண்கள் தானாக மூடியது...

Ipagpatuloy ang Pagbabasa

Magugustuhan mo rin

15.2K 1.4K 38
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
22.8K 642 58
ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை
22.1K 869 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...
51.4K 2.9K 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்...