இணையா துருவங்கள் (Completed)

By Bookeluthaporen

46.1K 1.5K 1.4K

உதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கா... More

அத்யாயம் - 1
அத்யாயம் - 2
அத்யாயம் - 3
அத்யாயம் - 4
அத்யாயம் - 5
அத்யாயம் - 6
அத்யாயம் - 7
அத்தியாயம் - 9
அத்யாயம் - 10
அத்யாயம் - 11
அத்யாயம் - 12
அத்யாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்யாயம் - 18
அத்யாயம் - 19
அத்யாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 27
அத்தியாயம் - 28
அத்தியாயம் - 29
அத்தியாயம் - 30
அத்தியாயம் - 31
அத்தியாயம் - 32
அத்தியாயம் - 33
அத்தியாயம் - 34
அத்தியாயம் - 35

அத்யாயம் - 8

1.1K 51 41
By Bookeluthaporen

போக்கே இல்லமால் ஓடிக்கொண்டிருந்த வண்டியை ஓரமாக நிறுத்தி அவன் கண் சென்று நின்ற இடத்திற்கு கால்களும் தானாக நரகர்த்தது. அவனுடைய வீட்டிற்கு அவனுடைய உயிரான ராயல் என்பீல்ட் வண்டியில் தடதடக்க வந்து கொண்டிருந்தவன் வழியில் பார்த்தது மணிமேகலையை தான்.

கடந்து போகும் பெண்களில் அவளும் ஒருத்தியாக இருந்திருந்தால் பிழை இல்லை ஆனால் அவள் அவனுக்கு தனியே... அவளை பார்த்து ஒரு வராம் ஆகிவிட்டது அந்த ஒரு வாரத்தில் எங்கேனும் அவள் கண்ணில் பட்டு விட மாட்டாளா என்று ஏங்கி தவித்த இதயத்தை எந்த வகையில் சேர்க்க வேண்டுமென்று தெரியாமல் விழித்திருந்தான்... இன்று அவன் கண்ணில் பட்டது ஒரு வீட்டிற்கு வெளியில் இருந்த மூடபத்திருந்த சாக்கடையின் வெகு அருகில் முட்டி போட்டு அமர்த்திற்கும் மணிமேகலையை தான்... 

அவளுடைய நிறத்திற்கு தகுந்தாற்போல் அடர் நீல நிற லெக்கிங்ஸ் மற்றும் வெள்ளை நிற டாப், கையில் முட்டி வரை இருந்த கையுறைகள்(gloves) முகத்தில் ஒரு மாஸ்க்... அந்த மாஸ்க்கையும் தாண்டி அவனுக்கு அவளை அடையாளம் காட்டியது அந்த குண்டு கண்களும் அவளுடன் அவள் அசைவிற்கிணங்க ஆடும் அந்த ஜமுக்கிகளே... 

ஆங்காங்கே அந்த பளீர் வெண்மை சட்டையில் பட்டிருந்த மணலும், சாக்கடை அழுக்கும் பொருட்படுத்தாது அவள் அருகில் இருந்த ஒரு பெண்ணுடன் பேசி சிரிக்கையில் சுருங்கிய அந்த கண்கள் தன்னை இம்சிப்பது அறிந்து வண்டியிலிருந்து இறங்கி அவளை நோக்கி நடந்தவன் அவளை தன்னுள் புதைத்து கொள்ள பேராசை கொண்டான்...

"என்ன ரோலக்ஸ் உங்கப்பன் வாட்ச் தொலச்சத்துக்கு சாக்கடை தள்ள அனுப்பி விட்ட மாதிரி இருக்கு... பரவால்ல நல்ல வேலை தான் பாரு பாரு அப்டியே ரெண்டு தெரு தள்ளி தான் எங்க வீடு, க்ரெ கலர் பெயிண்ட்... வந்து தள்ளி விடுறியா அடைச்சு போய் நாறுது"

அவனை பார்த்ததில் ஆசிரியத்தில் விரிந்த விழிகள் அவன் கூற்றுக்கு கோவமாய் மாறி "என்ன பாத்தா சாக்கடை தள்ளுற மாதிரியா இருக்கு உங்களுக்கு?"

"ஓஓஓ செப்டிக் டாங்க் கிளீனிங்கா?"

"நான் ஒன்னும் சாக்கடை அல்லல நான் ஆர்க்கியாலஜிஸ்ட்" சிணுங்கியவளை பார்க்க சிரிப்பு மட்டுமே வந்தது...

"ஆமா எரும மேய்க்கிறதுக்கும் சாணி அள்ளுறதுக்கும் கோபுரம் உயரம் எல்லாம் இல்ல"

"என்ன பாத்தா சாணி அள்ளுற மாதிரியா இருக்கு... நீங்க ரொம்ப பேசுற அப்றம் எங்க அப்பா கிட்ட உன்ன சொல்லிடுவேன்டா" கோவமாய் இருக்கிறாளாம்... மரியாதை தேய்ந்தது

"ஆமா உங்க அப்பன் பெரிய CM, வர சொல்லு கரப்பாபூச்சி ஏத்துற மாதிரி வண்டி டயர்ல ஏத்தி நசுக்கிடுவேன்"

"எங்க அப்பா எனக்கு தான் CM... எங்க அப்பா எவ்ளோ நல்லவரு தெரியுமா அவருக்கு நெறய பேன்ஸ் இருந்தாங்க அமெரிக்கால... என் அப்பாகிட்ட பேசுறிங்களா நீங்களும் அவரு பேன் ஆகிடுவீங்க"அவள் ஆசையாக கேட்க...

"கிளி புள்ள மாதிரி உங்க அப்பன் பேரையே ஓதிட்டு இருக்க சுய புத்தி இல்லையா..."

"அப்பா பேர சொல்லாம உங்க பேரயா பெணாத்த முடியு"

"பெணாத்த வைக்கவா" சற்று குனிந்து கண்ணடித்தவன் மீண்டும் நிமிர்த்து நேராக அவள் விருந்திருந்த சிவந்த கண்களை குறும்புடன் பார்த்து, "இப்புடியே பாக்காத நாவாட்டுக்கு லவ் பண்ணி வச்சிர போறேன், அப்றம் அந்த காரப்பாபூச்சிய மாமனாருன்னுலாம் என்னால கூப்புட முடியாது"

'உன்ன ஏமாத்துறான் மேகா கண்டுக்காத' தனக்குலேயே பேசிகொண்டவள், "அப்பாவை பத்தி பேசுனீங்க சாக்கடை வேஸ்ட்ட எடுத்து மூஞ்சில அப்பி விட்ருவேன்"

'அடியேய் லவ், மாமனாருனு எல்லாம் நடுல சொன்னேனே அது கேக்கல உனக்கு? ஆனாலும் பெண்களுக்கு பேச்சை மாற்ற சொல்லியா தர வேண்டும்... எல்லா தெரிஞ்சு தெரியாத மாதிரி பேசுறத பாரு... கேடி டீ நீ'

அவள் கூறியதை கேட்டு வாய் விட்டு சிரித்தவன், "சாக்கடை அல்லி என் மூஞ்சில அப்புவியா, நீ ஒதுக்குட்ட ரோலக்ஸ் சாக்கடை அல்லுறன்னு"

மானசீகமாக தன்னையே அடித்து கொண்டவள், "நீங்க பொய் சொல்றிங்க, நான் அப்டி சொல்லல... ஆமா உங்க பேர் என்ன? சொல்லவே இல்ல நீங்க ... உங்க வீடு இங்க தான் இருக்கா" எங்கே சென்றது இவள் கோவம் என்றிருந்தது ஆதிக்கு.

"வத்தல் மாதிரி வெடிச்ச கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எங்க போச்சு கோவம் இப்ப?"

"எனக்கு ரொம்ப நேரம் கோவம்லா பட தெரியாது, உங்க பேர் சொல்லவே இல்ல"

அவள் பதிலில் சிரித்தவன், "என் பேரு ஆதி, ஆமா என்ன இது சாக்கடைல ஒக்காந்து?"

"இங்க தான் ஒரு மண் ஓடு கெடச்சது டூ வீக்ஸ் முன்னாடி அது கிட்டதட்ட ஆயிரத்தி ஐநூறு வருசத்துக்கு முன்னாடி இருந்த ஓடு அதான் அப்புடியே பக்கத்துல ஏதாச்சும் கெடக்கித்தானு பாக்க வந்தோம், கெடச்சிடுச்சு" சிறு பிள்ளை போல குதித்தவள், "இருங்க எடுத்துட்டு வரேன்" ஓடி சென்று ஒரு பெண்ணிடம் ஒரு சிறிய சிதைந்த நிலையில் மண் குவளையை பத்திரமாக எடுத்து வந்தவள், "இது கெடச்சது கண்டிப்பா ஆயிரம் வருஷம் முன்னாடி உள்ளதா இருக்கும். கொஞ்சம் கூட எஸ்பக்ட் பண்ணல இது கிடைக்கும்னு"

அவள் முகத்தில் விளையாடிய ஆனந்தத்தை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை ஆதிக்கு... எதனால் இந்த பெண்ணிடம் இப்படி தன் மனம் நதி போல் வளைந்து வளைந்து ஓடுகின்றது சுத்தமாக புரியவில்லை... வெறும் இரண்டு முறை பார்த்த பழக்கம் போல தெரியவில்லை... 

மேலும் அதை காண்பித்து வாய் நிறுத்தாது விளக்கம் அளித்து கொண்டிருந்தவள் அவனை அடிக்கடி பார்த்துக்கொண்டாள், அவன் கேட்கின்றானா என்று... ஆனால் அவனுக்கு தான் பெரும் அவஸ்தையாக இருந்தது அவளை பார்த்து. செதுக்கிய தங்க சிலை போல இருந்தவளை அணு அணுவாக அளவெடுத்தான்... இறுதியாக அந்த பளபளக்கும் இதழ்களில் வந்து நின்ற கண்கள் அதன் ஓசையை கேட்க மறுத்தது... நிமிடம் கழிந்து அவள் மீண்டும் பேசிய பொழுதே நினைவிற்கு வந்தவன்...

"ஆமா எந்த நம்பிக்கைல நீ என்கிட்ட இவ்ளோ எக்ஸ்பிளைன் பண்ற எனக்கு ஒண்ணுமே புரியல சும்மாவே நான் படிப்புல வீக்கு, இதுல இப்டி மொட்டை வெயில்ல கிளாஸ் எடுத்துட்டு இருக்க" அவன் கேள்வியில் கண்கள் பளபளக்க அவனை பார்த்தவள்...

"சரி நான் உங்கள மன்னிச்சிர்றேன் ஆனா நீங்க எனக்கு இப்ப இத புடிங்க நான் போய் கை கழுவிட்டு வரேன், என்ன நீங்க உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயி உங்க அம்மாக்கு ஹலோ சொல்லி அறிமுகப்படுத்தி பண்ணி வைங்க. உங்க அம்மாகிட்ட உங்கள திட்டு வாங்க வைக்கிறேன் பாருங்க"

பதிலுக்கு காத்திராமல் கை கழுவச் சென்றவள் கழுத்தில் ஒரு வெள்ளை நிற துப்பட்டாவைப் போட்டு அமர்த்தலாக கண்கள் மின்ன நின்றவளிடம் மறுப்பு சொல்ல தோணவில்லை ஆதிக்கு... பாசமாய்க் கேட்டால் யாராக இருந்தாலும் மறுக்க இயலாது அவனால் அதிலும் அவன் மனதை வேறு விதமாக மாற்றிக் கொண்டிருக்கும் இந்த கள்ளம் கபடம் இல்லாத பெண்ணை மறுக்க எள்ளளவும்த் தோணவில்லை... உடனே வண்டியை நோக்கி சென்றவன் அவள் தன் பின்னால் வருகிறாளா என்று பார்த்துக்கொண்டே வண்டியில் அமர்ந்து அவளுக்காக காத்திருந்தான்.

அவனுக்கு அருகில் வந்து நின்றவள் வண்டியையும் அவனையும் மாறி மாறி பார்த்து, ஆதிக்கு"உங்க வண்டில உங்க அம்மா, தங்கச்சி தவற யாரையும் ஒக்கார விட மாட்டேன்னு சபதம் எதுவும் எடுத்துருக்கீங்களா..."

வாய் விட்டு சிரித்தவன், "என் வண்டில எத்தனைப் பொண்ணுங்க வந்துருக்காங்கனு கவுண்ட் மறந்து போச்சு... ஆமா முன்ன பின்ன தெரியாத பையன நம்பி தைரியமா நீ வர்ற பொறுப்பே இல்ல"

"யார் சொன்னா எனக்கு உங்களத் தெரியாதுன்னு நாம தான் ரெண்டு தடவ மீட்ப் பண்ணிருக்கோம்ல"

"ரெண்டு தடவைய இவ்ளோ பெருசா சொல்லுறறறற..." அவளை முறைத்துவிட்டு, "சரி வண்டில ஏறு போலாம்"

ஆனந்தத்தில் வண்டியில் ஏறி அமர்ந்தவள் அவன் தோளில் கை போட்டு, "உங்க வண்டி நல்லா இருக்கு என்ன மாடல் இது"

"Royal Enfield meteor 350"

"அய்ய்ய்... நல்ல இருக்கு அடிக்கடி ரவுண்டு கூட்டிட்டு போறிங்களா?"

சிறு பிள்ளை போல் கேட்டவளைப் பார்த்து இவள் என்ன குழந்தையா முன் பின் தெரியாத ஒரு ஆடவனிடம் உரிமையாய் கேட்டுவிட்டாலே... தன்னிடம் கேட்டது மனதிற்கு இதமாய் இருந்தாலும் அவன் சிந்தையால் ஒத்து கொள்ள இயலவில்லை...

பதில் கூறாமல் ஒரு கடையின் முன்னாள் வண்டி நிறுத்தியவன் அவள் இறங்கியதும் வண்டி கண்ணாடியில் தலையை சரி செய்து அவளை பார்க்க மணிமேகலையோ அந்த கடையின் போர்டை பார்த்து நின்றாள்...

அன்ஸியன்ட் சிப் (Ancient Sip)

நீலமான கம்பியில் இரண்டு சங்கிலிகள் உதவியுடன் தொங்கிக்கொண்டிருந்த வட்ட வடிவிலான கரும் பலகையில் பொன்னிற ஆங்கில எழுத்துக்களால் மின்னியது அந்த கடையின் பெயர்...

கடையின் முன் கூரை விரிந்து அதன் அடியில் இரண்டு டேபில்கள் இரண்டு நாற்காலிகளுடன், கூரையில்த் தொங்கும் இளஞ்சிவப்பு நிற செயற்கை பூக்களுடன் அழகு சேர்க்க, சுவர்களில் பூசப்பட்டிருந்த வெள்ளை மற்றும் சாம்பல் நிற பெயிண்ட் அந்த கடையின் அழகை இரு மடங்கு உயர்த்தி காட்டியது.

வெளித் தோற்றமே இவ்வளவு அழகாய் இருக்க கடையினுள் அவள் கால்கள் தானாய் சென்றது... பாதி மரம், பாதி கண்ணாடியுடன் செய்திருந்த அந்த கதவை திறந்தவுடன் மணி சத்தம் கேட்க ஒளி கேட்ட அதிர்ச்சியில் திடுக்கிட்டு மேல் சென்ற கண்கள் அந்த சிறிய மணியை கண்டது...

"அட பயந்ததாங்க்கோழி ரோலக்ஸ்... உள்ள போ" அவன் குரலில் அவனை பார்த்து பொய்யாய் முறைத்துவிட்டு உள்ளே சென்றவள் அந்த கடையின் மூலையில் இருந்த ஒரு இருக்கையில் அமர அவளுக்கு நேர் எதிரில் அமர்ந்தான் ஆதி...

ஒரு பக்க சுவற்றில் பொறிக்கப்பட்டிருந்த பல சதுரங்க வடிவிலான இரும்புக்கம்பிகளில் அங்கங்கேத் தொங்கப்பத்திருந்த சிறிய பூந்தொட்டியில் வளர்ந்திருந்த பச்சை கொடிகள் வளைந்து வளைந்து சுவற்றிக்கு இயற்கையாய் பச்சை நிறத்தை தந்தது... வட்ட வட்ட மேஜைகளிற்கு துணையாக போடப்பட்த்திருந்த லெதர் நாற்காலிகள் பார்ப்பதற்கே அழகாய் காட்சியளித்தது...

"ஆமா நீங்க எங்க படுபீங்க கிட்ச்சன்லயா இல்ல இந்த டேபிள் மேலயே படுத்து தூங்கிருவிங்களா?" கண்களில் குறும்பு மின்ன மின்ன மலர்ந்த இதழ்களுடன்க் கேட்டவளை கைகளில் அள்ளிக்கொள்ள பேராசை எழுந்தது அவனுக்கு... அவள் வீட்டிற்கு அழைத்து செல்ல கேட்க அவனோ கடைக்கு அழைத்து வந்ததும் தான் கேலியாய் கேள்வி எழுப்பினாள்.

"வீட்டுல யாரும் இல்ல கூட்டிட்டு போனா தப்பா இருக்கும் அதான்... நல்லா இருக்கும் இந்த கடை ஏதாச்சு ஆர்டர் பண்ணு"

"ஓ ஹோ அவ்ளோ நல்லவரோ நீங்க" சட்டமாய் கேட்டவள் சிரிப்புடன் பேரரை அழைத்தாள், "ப்ரோ இங்க வேகமா வாங்க பசிக்கிது"

"சே சே" தனக்கு பின்னே வந்து நின்ற பேரரிடம், "ஒரு பில்டர் காபி"

"எனக்கு... ஆஹ் கபெ அபேகாட்டோ (caffe affocatto) அப்றம் ஒரு மோச்சா" பேரரிடம் கூறி ஆனந்தமாய் சிரித்தவள், "மோச்சா (Mocha) சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு"

அவள் கண்கள் அந்த மெனு கார்டில் அலையாடியதையும் அதை கூறும்பொழுது அதில் இருந்த புன்னகையும் ஒன்று நிரூபித்தது அவனுக்கு... வாய் மொழியை விட விழியன் மொழி அழகானவையென்று... அதுவும் அந்த பெணின் கண்களில்த் தொலைந்தவனுக்கு மிகவும் இம்சையாய் இருந்தது...

"காபினா அவளோ புடிக்குமோ..." இழுத்தான் ஆதி

"ம்ம்ம்ம் ரொம்ப... சாப்பாடு கூட வேணான்னு சொல்லிருவேனா பாத்துகோங்களேன்... அப்றம் அப்பா தான் இப்ப திட்டி திட்டி கொஞ்சம் கொஞ்சமா கொறச்சிருக்கேன்"

தலை ஆட்டி அவளுக்கு பொம்மையாய் மாறி அமர்ந்திருந்தான்...

"இப்பயும் அப்பா தானா... சரி வாட்ச் மேட்டர் என்ன ஆச்சு" ஆவலை வந்தது அவன் குரல்...

ஒரு நொடி சோகத்தில் மாறிய கண்கள், "அதுவா நல்லா திட்டு விழுந்துச்சு அது என் மாமா எனக்கு அசையா வாங்கி குடுத்தாங்க அதுவும் ஒன் இயர் கூட ஆகல அதுக்குள்ள நான் மிஸ் பன்னிட்டேன்ல அதான் அப்பாக்கு கோவம் வந்துச்சு ஆனா அடுத்து ஒன்னும் சொல்லல... இன்னும் மாமாவை வேற நா போய் பாக்கல அமெரிக்கால இருந்து வந்ததுல இருந்து வாட்சை தொலைச்சனால"

அவள் பேசிக்கொண்டிருக்குக்கும் பொழுதே அவளுடைய மோச்சா, கபெ அபேகாட்டோ வர விழிகள் அகல விரித்து அழகாய் பார்த்தாள் கைகள் உரசி தன்னுடைய கூர் நாக்கை அந்த செவ்விதழ்களில் நனைக்க ஆதியால் தன்னை கட்டு படுத்திக்கொள்ள இயலாமல் போய்விடுமோ என்கின்ற எண்ணம் உதித்தது...

கடினப்பட்டு கண்களை அவளுடைய இதழ்களில் இருந்து பிரித்தவன் அவனிடம் ஆர்டர் வாங்கிய பேரரை அழைத்து...

"டேய் வேகமா பில்டர் காபி கொண்டு வா என்னால முடியல" வாய் விட்டே கூறிவிட்டான்.

அவனுடைய அவஸ்தையை அறியாமல் அந்த பேதை, "பசிக்கிதா நீங்க வேணா இத சாப்புடுறீங்களா?"

அவள் குழந்தை போல் கேட்க அவன் கண்கள் அவள் நீட்டிய அந்த காபி கப்ல் செல்ல அவள் சிறிது உண்டிருந்த அடையாளம் அவள் நீட்டிய ஸ்பூன்ல் தெரிந்தது... ஆழ்ந்த மூச்சு விட்டு அவளை பார்த்தவன் அந்த மான் விழிகளில் மீண்டும் தொலைய ஆர்மிதான்...

"ஐயோ சாரி அது பாக்க ரொம்ப டெம்ப்ட் பண்ணுச்சா அதான் சும்மா ஒரு ஸ்பூன் சாப்பிட்டேன்... ஆனா டேஸ்ட் பக்கா..."

'உன்னைய விடவா அது டெம்ப்ட் பண்ணிட போகுது... சீக்கிரம் சாப்டுட்டு மொத இவள அடிச்சு அனுப்பி விடணும்... சாமிமிமிமி முடியல'

"பரவாயில்ல நீ சாப்பிட்டு"

அவன் சொன்னது தான் தாமதம் நொடி தாமதிக்காமல் அதை ஆசை ஆசையாய் பருக ஆரமித்தாள்... அவளையே பார்த்து ரசித்து கொண்டிருந்தவன் முன்னாள் வந்து சுட சுட ஆவி பறக்க அந்த இடத்தையே ஆக்கிரமிக்கும் அளவிற்கு மனம் வீச அவன் ஆர்டர் செய்திருந்த பில்டர் காபி வந்தது...

அதை பார்த்தவளுக்கு அதன் தோற்றமும் நறுமணமும் கட்டி இழுக்க ஏக்கமாய் அவள் அதை பார்ப்பதை உணர்ந்தவன் புருவம் உயர்த்தி 'என்ன' என்று கேட்டான்...

"பில்டர் காபி நல்லா இருக்குமா?"

"என்ன கேள்வி கேட்டுட்ட... இதோட ருசி ஒரு தடவ நாக்குல பட்டுடா வாழ்க்கை முழுக்க அது மறக்கவே மறக்காது... அதுவும் இந்த கடைல வறுத்த காபி கொட்டைய அரைச்சு அப்றம் காபி போடுவாங்க" பேச்சு வாக்கில் அதன் தோற்றத்தை பார்த்து எடுத்து குடித்தவன், "ப்ப்ப்ப்பா என்ன டேஸ்ட் இதுக்காகவே நான் இங்க அடிக்கடி வருவேன்"

"அப்டியா" ஆச்சிர்யமாய்க் கேட்டு நிமிடம் யோசிக்காமல் அவன் கையில் இருந்த டம்ளரை வாங்கி அவன் எச்சில் பட்டது என்று கூட யோசிக்காமல் ஆசையாய் குடித்தாள்... அவளை விழி விரிய பார்த்த ஆதி...

'ரொம்ப கஷ்டம்டா ஆதி இவள வச்சு நீ பியூட்டர்ல ரொம்ப கஷ்டம்'

"ஏய்ய்ய்ய் லூசா நீ அது நான் குடிச்சது இப்டி தான் எல்லா பசங்ககிட்டையும் வாங்கி குடிப்பியா அறிவு இல்ல" அவன் கோவத்தில் கையில் இருந்த காபியை குடிப்பதை நிறுத்தியவள் அதை அவனிடமே வைத்து, "சாரி" என்றாள்.

அவ்வளவு தான் அடுத்து அவள் ஒழுங்காக எதுவும் பேசவில்லை. கண்கள் அவளுடைய காபியில் மட்டுமே இருந்தது அவன் எதாவது பேசினாலும் அவள் தலையசைவை மட்டுமே செய்ய ஆதி தன்னையே மானசீகமாக திட்டி கொண்டான்... அந்த மான் விழிகளை பார்க்க மீண்டும் மனம் துடித்தது ஆனால் அதில் சோகத்தையும் பார்க்க பிரியமில்லை...

அவனிடம் பேச நினைக்கியில் அவனுடைய அலைபேசி சினுங்க அதை பொருட்படுத்தாமல், "நான் கெளம்புறேன்"

அந்த குரலில் இருந்த சோகம் அவனை வதைத்தது...

அவள் எழ தானும் எழுந்தவன் அவளுக்கு பின்னே நடந்தான், "எங்க ட்ராப் பண்ணனும்?"

"ஒன்னும் வேணாம் நானாவே போயிருவேன்"

"நான் இருக்கப்ப உன்ன தனியா போக விட மாட்டேன்... வண்டில ஏறு" ஆணையிட அவள் அசையாது கையில் இருந்த கைபேசியின் கவரை தன் கூறிய நகங்களால் பிய்த்து கொண்டிருந்தாள் இன்னும் கண்கள் அவனை சந்திக்கவில்லை... 

அவனுக்கு அவளை அவ்வாறு பார்க்க எள்ளளவும் விருப்பம் இல்லாமல் கோபமாக, "இப்ப எதுக்கு மூஞ்சிய இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி வச்சிட்டு நிக்கிற"

"......."

"உன்ட்ட தான் கேக்றேன்"

"எனக்கு டைம் ஆச்சு நான் வீட்டுக்கு போகணும்"

"உன்ன யாரு இப்ப புடிச்சிட்டு விட மாட்டேன்னு பிடிவாதம் பண்றது... வண்டில ஏறி ஒக்காரு"

கீழே குனிந்து தலையை மறுப்பாய் அசைத்தவள், "உங்க கூட நான் வரல"

"அதான் ஏன்?"

"நீங்க என்ன திட்டிட்டீங்க" அந்த குரல் உடைந்து வந்தது...

அதை பொருட்படுத்தாமல், "நீ பண்ணது தப்புனு உனக்கு தோனலயா... இப்டி தான் ஒரு மூணாவது மனுஷனோட டம்ளர்ல யோசிக்காம எடுத்து குடிப்பியா? இப்டி எல்லாம் அமெரிக்கால சாதாரணமா இருக்கலாம் ஆனா இங்க அப்டி இல்ல... நீ வாட்டுக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போங்கிற... இல்ல கேக்குறேன், அறிவு கொஞ்சமாச்சும் இருக்கா இல்லையா? எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. இப்டி எல்லாம் பண்ணுனா நீயே சிக்னல் குடுக்குற மாதிரி. ஈஸியா கூட்டிட்டு போயி மேட்டர் முடிச்சிடுவாங்க பசங்க..."

அவன் பேச பேச கண்களில் கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது அவளுக்கு... ஒரு முறை அழுகட்டும் அப்பொழுது தான் இனி இந்த தவறை செய்ய மாட்டாள் என்று அவளை சமாதானம் செய்ய நினைத்த மனதை அடக்கி வைத்தான்...

"அப்டி எல்லாம் சொல்லாதீங்க..." விசும்பி அழுதவள், "எனக்கு கஷ்டமா இருக்கு"

"கஷ்டமா இருக்கட்டும் அப்டியாச்சும் இந்த மரமண்டைல அறிவு வளரட்டும்... எப்ப பாத்தாலும் உங்க அப்பனையே நம்பி, பயந்து வாழ்ந்துட்டு இருக்கல்ல அப்றம் இப்டி தா அறிவுகெட்ட தனமா யோசிக்க தோணும்... இப்ப வண்டில ஏற போறியா இல்ல சினுங்கிட்டே நிக்க போறியா"

கண்களைக் கோபமாக துடைத்தவள் அவனை நோக்கி, "ஆமா எனக்கு அறிவு இல்ல நான் உன் கூட வண்டில வர்ரதுக்கு தனியாவே நடந்து போய்டுவேன்" 

சிறிது தூரம் நடந்தவள் மீண்டும் அவன் முன் வந்து நின்று அவனுடைய கையில் தன்னுடைய சிறிய கைகளால் அடித்து, "நான் உங்கள பிரண்டு-னு நெனச்சு தான அப்டி பண்ணேன்... நான் இது வரைக்கு இப்புடி யார் கிட்டையும் பண்ணது இல்ல தெரியுமா? ஏதோ அசையா இருக்குன்னு வேகமா வாங்கி குடிச்சிட்டேன் இதுல என்ன தப்பு இருக்கு... அதுக்கு ஏண்டா என்ன இப்டி திட்டுற... நான் உன் கூட உன் டப்பா வண்டில வர மாட்டேன் போடா லுசு கம்னாட்டி..."

காலை உதறி வண்டியிலேயே எழுந்தவன், "என்னது கம்னாட்டியா... ஏய் அடிச்சு வாய ஒடச்சிருவேன்"

"என்ன மெரட்டுறீங்க" கண்கள் சுருங்க பயத்துடன் கேட்டவளிடம் இரக்கம் தோன்ற, "சரி மொதல வண்டில ஏறு" என்றான்.

தலையை மறுபடியும் மறுப்பாக ஆட்டியவள், "நீங்க சாரி சொல்லுங்க அப்ப தான் வருவேன்"

"நீ உன் மாமாவ பத்தி என்னமோ சொல்லிட்டு இருந்தல்ல யார் அது?"

அவனை ஆசையாய் பார்த்தவள் தன்னையே மறந்து அவளுடைய மாமாவை பற்றி புகழ ஆரமித்தாள்...

"எனக்கு மொத்தம் மூணு மாமா ஆனா எனக்கு ரொம்ப புடிச்சது என்னோட மொத மாமாவ... அவரு பேசுனாருன்னா அப்டியே கேட்டுட்டே இருக்கலாம் தெரியுமா அவரோட வாய்ஸ் அவ்ளோ பென்டாஸ்டிக்கா இருக்கும்... என் அப்பாவும் என் மாமாவும் பேச ஆரமிச்சா பேசிக்கிட்டே இருப்பாங்க அவ்ளோ டாலன்டட் என் மாமா... பிசினஸ்ல அவரோட ஸ்டைல் தனியா இருக்கும்... அவருக்கு மொத்தம் எயிட் லாங்குவேஜஸ் தெரியும்... அவர்கிட்ட நான் கொஞ்சம் ஜெர்மன் கூட கத்துக்குட்டேன்... எனக்கு எத்தனை தடவ புரியலனாலும் மாமா கொஞ்சம் கூட மூஞ்சிய சுளிக்காம சொல்லி குடுப்பாங்க தெரியுமா... நான் இப்ப உங்க கிட்ட காபி நல்லா இருந்துச்சுனு ஜெர்மன்ல சொல்லி காட்டவா..."

தலையை ஆட்டிக் கேட்டவள் அவனுடைய பதிலுக்காக காத்திருக்க அவனோ ஒரு புன்னகையுடன் தலை அசைத்தான்... அவன் அனுமதி கிடைத்ததும் அழகாய் சிரித்துத் தொண்டையைச் செருமி அவனுடைய கண்களை நேருக்கு நேர் பார்த்து...

"Der Kaffee war ausgezeichnet" அவளே கூறி அவளே கை தட்டி சிரித்து, "புரிஞ்சதா" ஆசையாய் கேட்டாள் பெண்.

அவனும் தலை அசைத்து, "நல்லா தான் பேசுற சரி இப்ப வண்டில ஏறு... உன் மாமா புராணம் ரொம்ப பெருசா போகும் போலயே"

வண்டியில் ஏறி அமர்ந்தவள், "ஆமா என் மாமா அறிவு மட்டும் இல்ல பாக்கவும் ஆளு ஸ்மார்ட்டா இருப்பாரு..."

"ஒரு கெழவன போய் இப்டி சைட் அடிக்கிற"

"ஐயோ இல்ல மாமாக்கு உங்க வயசு தான்"

"என்னது என் வயசு தானா... ஆமா அவன கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இருக்கா உனக்கு"

ஆமாம் என்றால் அவளை பற்றி இனி சிந்திக்க கூடாதென்று யோசித்தவன் அவளுடைய பதிலில் நிம்மதி அடைந்தான்...

"ச்ச ச்ச இல்ல மாமாவை புடிக்கும் ஆனா லைப்ப ஷேர் பண்ணுற அளவு இல்ல... ஆனா மாமா ரொம்ப நல்லவங்க தெரியுமா ரொம்ப அமைதியா இருப்பாங்க என் சின்ன மாமா எல்லாம் ஒண்ணா இருப்பாங்க ஆனா மாமா தனியாதா இருப்பாங்க நானே அடிக்கடி அவரு தனியா இருக்கத பாத்து பீல் பண்ணிருக்கேன்... ஆனா மாமா கண்ணு அவரோட தம்பிங்க மேல தான் இருக்கும் அவ்ளோ பாசம்... ஆனாலும் நான் நல்லா சைட் அடிப்பேன் தான் மாமாவை"

"என் அளவு ஹண்ட்ஸம்மா இருப்பானா..."

"இல்ல உங்கள விட நல்லா இருப்பாங்க... ஆனா நீங்களும் நல்லா தான் இருக்கீங்க... எனக்கு உங்கள விட உங்க பைக் தான் புடிச்சிருக்கு"

"ஓ ஹோ... சரி அட்ரஸ் சொல்றியா ரொம்ப நேரமா இந்த ரெண்டு தெருவையே சுத்திட்டு இருக்கேன் அந்த வாட்ச்மேன் ஒரு மாதிரி பாக்குறான்"

அந்த வாட்ச்மேனை அவள் பார்க்க நிஜமாகவே அவர் அவர்களை ஒரு சந்தேக பார்வையுடன் பார்க்க அவள் அவன் தோளில் சாய்ந்து குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரமித்தாள்..

பின்னர் அவனிடம் அவளுடைய வீட்டு முகவரியை குடுத்து இருவரும் பேசிக்கொண்டே அவளுடைய வீட்டிற்கும் வந்து சேர்ந்தனர்... வண்டியில் இருந்து இறங்கியவள் ஒரு நன்றி கூறி கேட்டை அடைந்தவள் ஏதோ யோசித்தவளாய் அவனிடம் வந்து...

"எனக்கு ஒரு டவுட்"

"ம்ம் கேளு"

"கம்னாட்டினு நான் சொன்னது ஏன் உங்களுக்கு கோவம் வந்துச்சு? கம்னாட்டினா ஸ்டுபிட் தான?"

"அப்டினு யாரு சொன்னா"

"என்னோட புது பிரன்ட் கதிர்... போன வீக் என் பிரன்ட் கூட ஒரு கிபிட் ஷாப் போனேன் அப்ப தான் பிரன்ட் ஆனோம்"

"அவன் பிரண்ட்ஷிப்ப கட் பண்ணு மொத... தப்பா சொல்லி குடுத்துருக்கான் உனக்கு"

"அப்டியா... சரி அதோட மீனிங் என்ன?"

"Bastard"

ஆச்சிரியத்தில் கண்கள் விரிந்த நிலையிலேயே சில நொடிகள் இருந்தது, "ஐயோ சாரி நான் வேணும்னு அப்டி சொல்லல அவன் தப்பா சொல்லி குடுத்துட்டான் இனி அப்டி சொல்ல மாட்டேன்... சாரி"

கண்களால் கெஞ்சியவளிடம் புன்னகையை பதிலை குடுக்க அவள் திருப்தியில் நடக்க இப்பொழுது அழைத்து ஆதியின் முறை...

"ஏய் ரோலக்ஸ்"

அவள் திரும்பி பார்த்த பார்வையில் நிலை தடுமாறினாலும்...

"சாரி"

அவ்வளவு தான் அதற்கு மேல் அவன் அங்கு நிற்கவில்லை நின்றாள் ஆபத்து அவனுடைய இதயத்திற்கு தான் என்று உணர்ந்து அவளை பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றான்... மீண்டும் எப்பொழுது சந்திப்போம் என்றெல்லாம் எண்ணம் தோன்றினாலும் மூன்று முறை சந்திக்க வைத்த இதே விதி இன்னொரு முறை உதவி கரம் நீட்டமாலா போய்விடும் என்கின்ற நம்பிக்கையில் முகத்தில் சிரிப்போடும் அகத்தில் ஒரு ஆறுதலோடும் வீட்டை நோக்கிச் சென்றான்...

*********************

"என்னடா சொல்ற நீங்களும் ஒரு ஷேர் ஹோல்டரா சத்தியமா நம்ப முடியல" இமயமலை அளவிற்கு ஆச்சிரியத்துடன் கேட்டாள் பல்லவி.

"இப்ப நீ நம்பனும்னு யார் அழுதா... அய்யாலாம் வேற லெவல் அதான் மேல மேல போயிட்டே இருக்கேன்..." தலைக்கு கீழ் கைகளை வைத்து ஆனந்தமாக படுத்திருந்த விஷ்ணுவின் முகத்தில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி... ஏதோ சாதித்த ஆனந்தம்...

ஆனால் ஹரியின் மனம் நிம்மதி இல்லாமல் சஞ்சலத்துடனே இருந்தது... காலையில் வந்த அந்த நபர் யார்? அவனிடம் இருந்த திமிரானத் தோரணை அவன் கண்களில் இருந்தக் கோவம் எல்லாம் சகோதரன் மீது மட்டுமே இருந்தது இதை அனைத்தையும் உணர்த்த உதய்யோ அவனிடம் எந்த ஒரு எதிர்வினையும் காட்டாமல் இருந்ததுப் பேரதிர்ச்சியாக இருந்தது...

அதையும் தாண்டி மீட்டிங் நடந்த இடத்தில் நிகழ்ந்த அசாதாரணமான சூழல்ப் பெரிதாக ஒரு சிக்கல் நடந்திருக்கின்றது என்பதை அறிந்தான்... உதய் அவனுடைய மாமனை அளந்த பார்வை பார்த்தது தனக்கு மட்டும் தான் அவ்வாறு தெரிந்ததா இல்லை உண்மையிலேயே அவன் கண்கள் ஈஸ்வரன் மேல் சென்றதா என்று புரியவில்லை... நடந்த நிகழ்வுகளை அவருடன் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை ஹரிக்கு இதை விஷ்ணுவிடம் பகிர்ந்து கொண்டால் புரிந்து கொள்வானா... நிச்சயம் இல்லை அவனுக்கு அவன் மாமா மேல் மரியாதையும் பாசமும் அதிகம்... நியாயமே இருந்தாலும் ஏற்று கொள்ளும் நிலையில் இல்லை விஷ்ணு...

கடந்த வருடம் ஈஸ்வரன் வீட்டிற்கு வந்திருந்தப் பொழுது ஹரியின் தாயார் அவரை சரியாக கவனிக்கவில்லை என அவர் பேசிய பேச்சு இன்றளவும் நினைவில் உள்ளது ஆனால் அதை விஷ்ணுவிடம் கூற அவனோ மாமாவிற்கே முழு ஆதரவாக இருந்தான்... அதன் விளைவாக ஒரு வார காலம் அவர்களுக்கிடையில் பேச்சு வார்த்தையும் துண்டிக்கப்பட்டது... ஈஸ்வரன் மேல் அவ்வளவு கண்மூடித்தனமான நம்பிக்கை விஷ்ணுவிற்கு.

"சும்மா கனவு காணாம ரியாலிட்டியா யோசிச்சு பாரு ஆளே இல்லாமல் தான் நம்மள அண்ணே சேத்து விட்ருக்கு... நம்ம என்ன இதுல கத்துக்குட்டோம்னு இப்புடி பெருமை பேசிட்டு சுத்துற" - ஹரி

"அட அனகோண்டா வாயா நமக்கு என்னடா குறை" - விஷ்ணு

"இங்க பாரு லூசு மாதிரி பேசிட்டு இருந்த செருப்பாலேயே அடிப்பேன்" - ஹரி

"யாரு லூசு மாதிரி பேசிகிட்டு இருக்கா இங்க... அவன் ஆளு இல்லாம கொடுத்தது உண்மை தான், ஆனா, அதுலயும் இன்னொன்னு நீ யோசிச்சியா அவன் அன்னைக்கு நம்மள பாக்க ஆபீஸ்க்கு வந்தான்ல அதுக்கு அப்றம் தான் இந்த மாற்றமே... அதுவும் இல்லாம ஒண்ணுமே தெரியாம எவ்ளோ பெரிய பொறுப்பை குடுக்குற அளவு அவன் ஒன்னும் முட்டாள் இல்ல" - விஷ்ணு

"இவ்ளோ பேசுற நீ கம்பனிக்கு என்ன பண்ணிருக்க" - ஹரி

"அது... வந்து நான் எப்டி சொல்றது... ஆஹ் நானும் டெய்லி ஆபீஸ் போறேன்ல அதுவே கம்பனிக்கு பெரிய பிராபிட் தான் டா" - விஷ்ணு

"போடா கூறுகெட்ட குக்கரு... சரக்க உள்ள அனுப்பி ரொம்ப நாள் அச்சுல அதான் இந்த மாதிரி ஒளறுற"

"நேரா உதய் அண்ணாக்கிட்ட தான் போவேன்" - திவ்யா

நேரம் எட்டை கடந்திருக்க ஸ்போர்ட்ஸ் டீ-ஷர்ட் பேண்டுடன் கையில் கால்பந்தை வைத்து சோர்வாக உள்ளே நுழைந்தாள் திவ்யா... கண்களில் இருந்த கோவம் சகோதரர்களை துளைக்க பட்டென கால்பந்தை ஹரியிடம் போட்டு...

"கொன்னுடுவேன் இன்னொரு தடவ உங்களால நடு ராத்திரில என்னால அட்வைஸ் எல்லாம் கேட்டுட்டு இருக்க முடியாது... அப்புடியும் குடிக்கிறதா இருந்தா அப்டியே கேட்டுக்கு வெளியவே படுத்துகோங்க வீட்டுக்குள்ள வரணும்னு நெனச்ச மண்டைய பொளந்துருவேன்" - திவ்யா

"ப்பா என்னமா என் ராசாத்தி பேசுது... எப்ப ராசாத்தி இவ்ளோ பெருசா வளந்த" விஷ்ணு கேட்க...

"டேய் அண்ணா பேசாத... ஆமா என்னமோ ஆபீஸ்ல நடந்துச்சுனு கேள்வி பட்டேன்... ட்ரீட் வச்சிருங்கடா ரொம்ப நாள் ஆச்சு எல்லாரும் வெளிய போயி"

"அது ஒன்னு தான் குறை இங்க... போடி போய் குளி, நாறுது" மூக்கை மூடிக்கொண்டே ஹரி வெளியில் சென்றதும் விஷ்ணுவும் பின்னாலேயே வந்து...

"டேய் மாமா வீட்டுக்கு போகணும் வர்றியா?"

'சனியன் தெரிஞ்சே கேக்குது பாரு' - ஹரி

"எவன் குடி கெட்டா நமக்கு என்ன? நாம, நம்ம வேலைய பாக்கணும்னு கெளம்பிட்ட என்னடா?" ஹரி குரலில் கோவம் அப்பட்டமாக தெரிந்தது...

"தலைவரே இப்ப யாரு குடி கேட்டுச்சு" - விஷ்ணு

"ஆஹ் உன் மாமன்கிட்ட போய் கேளு அந்த ஆளு சொல்லுவாரு" கடுகடுத்த குரலில் ஹரி கூற, விஷ்ணுவிற்கு கோவம் தலைக்கு ஏறியது...

ஒரு முறை இரண்டு முறை கூறினால் பரவாயில்லை அவரை பார்க்கும் பொழுதெல்லாம் இதே பிரச்சனை மட்டுமே... தனக்கு புடித்த ஒருவருடன் அவன் உறவாட அழைக்கவில்லை ஆனால் அவரை ஒரு மனிதராக கூட மதிக்காத ஹரியின் செயல் அனலை கக்க வைத்தது...

"என்ன நானும் பாத்துட்டே இருக்கேன் நீ வரம்புக்கு மீறிப் போய்கிட்டே இருக்க... உன் இஷ்டத்துக்கு எல்லாம் என்னால ஆட முடியாது அவரு என்னோட மாமா என் அம்மாகூடப் பொறந்தவரு அவருக்கு மரியாதை இல்லாம நீ பேசுறது என் அம்மாவைப் பேசுறதுக்கு சமம்... அதையும் மீறி நீ பேசுனன்னு வை அப்றம் நான்..."

அவனை இடை மரித்த ஹரி, "இதுல எதுக்குடா பெரியாம்மவை இழுக்குற... அவங்களுக்கும் உன் மாமாக்கும் ஏணி வச்சா கூட எட்டாத தூரம்... அவரு ஒன்னும் நீ நினைக்கிற மாதிரி ரொம்ப நல்லவரு எல்லாம் இல்ல டா திவ்யாவையும் பல்லவியையும் அவரு பேசுறது உனக்கு தெரியாது டா... எல்லா விசியத்துலையும் என் பேச்ச கேக்குற நீ ஏன் இதுல நான் சொல்லுறத காத்து குடுத்து கூட கேக்க மாட்டிக்கிற"

"நான் எதுக்குடா உன் பேச்ச கேக்கணும் நீ யாரு மொத எனக்கு..."

தனது பேச்சின் வீரியத்தை அறிந்து ஹரியின் அருகில் செல்ல ஹரி வெற்று பார்வையுடன் விஷ்ணுவிடமிருந்து ஓரடி பின்னே எடுத்து வைத்தான்...

"ஹரி" இயலாமையில் பயத்துடன் விஷ்ணு ஹரியை அழைத்தான்.

"என்ன எதுவும் பிரச்னையா" விஷ்ணுவின் பின்னிருந்து வந்தது உதயின் ஆழந்த கனமான அடிக்குரல்.

"இல்ல" - விஷ்ணு அவன் முகம் பார்க்காமல் விருப்பமின்றி கூறினான்...

தனக்கு நேரெதிரே நின்ற ஹரியின் முகமோ வேறொன்றை கூற... விடாமல்...

"ஹரி என்ன ஆச்சு" ஒரு சகோதரன் என்னும் அக்கரையில் கேட்க... இருந்த கோவத்தை எல்லாம் மடை திருந்த வெள்ளம் போல் அவன் மீதே இறக்க ஆர்மிதான் விஷ்ணு...

"அதான் ஒன்னும் இல்லனு சொல்றேன்ல எதுக்கு நீ தேவையில்லாம நடுல ஆஜராகுற... புதுசு புதுசா திடீர்னு அக்கறை வருது. இத்தன வருஷம் ஒதுங்கி தான இருந்த இப்ப என்ன புதுசா பாசம் பொதுக்குட்டு வருது அதே மாதிரி தள்ளியே இரு... இது அண்ணே தம்பிக்குள்ள இருக்குற பிரச்சனை நாங்க பாத்துக்குவோம்"

கூர்மையான கண்ணாடி சில்லை நெஞ்சில் வலிக்க வலிக்க இறக்கிய உணர்வு எழுந்தது உதய் மாதவனுக்கு... ஒரு முறை அல்ல பல முறை மீண்டும் மீண்டும் அதே வழியை உணரவைத்தான் அவன் சகோதரன் சிறிதும் மெனக்கெடாமல்... விஷ்ணுவின் வார்த்தைகள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க கால்கள் பசையாய் நிலத்தில் பதிந்துவிட்டது உதய்க்கு...

வீதியில் நடக்கும் ஒரு மூன்றாவது மனிதன் போலே பார்க்கும் அளவிற்கா நான் வேண்டாதவன் ஆகிவிட்டேன்... இனி ஒரு முறை கூட என்னுடைய சகோதரன் என்னும் எண்ணம் அவனும் வராதா... ஹரியிக்கும் விஷ்ணுவிற்கும் நடுவில் இருக்கும் அந்த சகோதரத்துவம் எனக்கும் அவர்களுக்கும் நிகழ வாய்ப்பே இல்லையா...

உதய்யின் மனம் ஒரு புறம் வேதனையில் புழுங்கிக்கொண்டிருக்க மறுபுறம் ஹரியின் நிலைமையோ அதை விட அதிகமாய் புண்பட்டிருந்தது... சகோதரன் என்னும் அளவிற்கு பார்க்காமல் ஒரு நல்ல நண்பன் என்னும் நிலைக்கு பத்து படி மேலே வைத்திருந்தான் விஷ்ணுவை. ஆனால் இன்று, வருடம் ஒரு முறை உறவு கொண்டாட வரும் அவனுடைய மாமாவிற்காக இருபத்தி நன்கு வருட அந்த நட்பை யாரென்று கேட்கும் அளவிற்கு பித்தம் பிடித்து நிக்கிறான்... 

யாருக்காக தன்னுடைய தாயின் பாசத்தை முழுவதும் விட்டு கொடுத்து நின்றானோ அவனே இன்று உறவுகளை பிரித்து பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டான்... யார் தனிமையை உணர கூடாதென்பதற்காக நண்பர்களை ஒரு எல்லை கோட்டிற்கு வெளியே வைத்தானோ அவனே இன்று நீ யார் என்று கேட்டுவிட வலி நெஞ்சை பிளந்தது... 

விஷ்ணுவின் சேட்டைகள் பல பிடிக்காமல் இருந்தாலும் அவனுக்காக வாங்கிய பழிச்சொற்கள், தண்டனைகள் எண்ணிலடங்கா... ஆனால் அவை அனைத்தையும் ஒரு நாளும் எண்ணாத மனது இன்று அதை வெறுத்தது...

சுதாரித்து நிலைக்கு வந்தவன் உதய்யை பார்க்க அவனுடைய நிலையம் தனக்கு ஈடாகவே இருந்தது... வலியை துடைத்த குரலில் உதய்யை நோக்கி... 

"விஷ்ணுகிட்ட கேள்வி கேக்க நமக்கு எல்லாம் எந்த உரிமையும் இல்ல. அவன் எவ்ளோ பெரிய ஆளு நீங்க அவன்கிட்டயே கேள்வி கேட்டீங்கன்னா அப்றம் நீங்க யாரு உங்களுக்கும் அவனுக்கும் என்ன சம்மந்தம்னு கேப்பான்... அவன் அவனோட மாமாவை பாக்க போறான் நடுவுல யார் வந்தாலும் கண்ணு மூளை எல்லாம் வேலை செய்யாம போய்டும்... என்ன விஷ்ணு கரெக்ட் தான? நீ போடா வழக்கம் போல நான் ஏதாச்சும் சொல்லி சமாளிச்சிக்கிறேன். அண்ணே... ஸ்ஸ்ஸ்ஸ் சாரி உனக்கு தாம் அவரு அண்ணன் இல்லல மறந்துட்டேன்..."

"டேய் ஹரி ஏதோ கோவத்துல..." தன் அருகில் வர எத்தனித்தவனை கை காட்டி நிறுத்தி...

"நீ எதுக்கு டா என்கிட்டே விளக்கம் குடுக்குற? நாம என்ன சொந்தக்காரங்களா இல்ல பிரண்ட்ஸ்ஸா ஒரே வீட்டை ஷேர் பண்ணுற ஹவுஸ் மேட்ஸ்... நீ உன் வேலைய பாரு நான் என் வேலைய பாக்குறேன் அவ்ளோ தான் சிம்பிள்... உன்ன இனி என் அம்மா அப்பாவும் சரி, திவ்யா, பல்லவியும் சரி யாரும் கேள்வி கேக்க மாட்டாங்க நான் கேரண்டீ. ஏன்னா என்ன மாதிரி எல்லாம் சிலையா நிக்க மாட்டாங்க அவங்க ஒடஞ்சிருவாங்க..."

வலி நிறைந்த குரலில் கூறி சென்றவனின் புறம் பார்த்து நின்ற விஷ்ணுவிற்கு முதல் முறை தனி உலகின் இருட்டில் தனித்து விடப்பட்ட உணர்வு...

அனைத்து கோபத்தையும் மீண்டும் உதய்யின் மீதே திருப்பினான், "ப்பா இப்ப சந்தோசமா இருப்பியே.. உன்ன மாதிரியே நானும் யாருமே இல்லாம அனாதையா வாழனும். அதான உன் ஆசை... இப்ப சந்தோசமா இரு... நீ நடுவுல வராம இருந்திருந்தா இன்னேரம் இந்த பிரச்னை எதுவுமே இருந்திருக்காது... உன் கூட பொறந்த பாவத்துக்கு எனக்கு ஏதாச்சும் நல்லது பண்ணனும்னு தோணுச்சுனா தயவுசெஞ்சு இந்த அண்ணே னொண்ணேகிற உரிமைல எதுவும் பண்ணாத பிச்சை கேக்குறே உன்கிட்ட..." பற்களை கடித்து அமிலத்தை வாரி வாரி இறைத்து சென்றான் துளியும் இரக்கம் இல்லாமல்...

வலியிலும் வேதனையிலும் துடித்துக் கொண்டிருந்த இதயத்தை கட்டு படுத்த இயலாமல் இடி மின்னல் என்றும் பாராமல் தன்னுடைய வாகனத்தை எடுத்து ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு இடத்தில நிறுத்தியன் மழை என்றும் பாராமல் சொட்ட சொட்ட நனைந்த உடைகளுடன் வலி தாளாமல் தெருவில் மண்டியிட்டு அமர்ந்து கதறி கதறி அழ ஆரமித்தவன், மழையோடு மழையாக கரைய ஆரமித்தான் உதய் மாதவன். ஆனால் மனதில் இருக்கும் அந்த வலியை மட்டும் பொறுக்கவே இயலவில்லை...

இதயத்தை இறுக்கி புடித்த கைகள் வலித்ததே தவிர அந்த இதயத்திற்கு துளியும் வேதனை குறையவில்லை... வீட்டில் இருக்கும் வெறுமை உயிர் வரை சென்று வலியை கொடுத்தது... இன்று சரியாகிவிடும் நாளை சரியாகிவிடும் அளவிற்க்கு வளர்த்து வைய்த்த நம்பிக்கை இன்று துளியும் இல்லாமல் காணாமல் போனது... உயிரென நினைத்த நண்பன் பழி வாங்க துடிப்பது ஒரு பக்கம்... முதுகில் குத்தும் உறவுகள் ஒரு பக்கம்... வீட்டில் தன்னை ஒரு பொருளாய் நினைக்கும் வீட்டார்...

மகிழ்ச்சியையும் பாசத்தியும் தேடித் தேடி தினம் நிம்மதியை இழந்தது தான் மிச்சம்... தோள் தட்டி அணைக்க தந்தையும் அவனிடம் அக்கறைச் செலுத்தவில்லை... தலை வருடி மடி சாய்த்து ஆறுதல் கூற தாயும் இல்லாமல் பாசத்திற்கு மட்டுமே ஏங்கும் குழந்தையாய் கரைந்து கொண்டிருந்தான்.

தன் தோளில் எவரோ கை வைப்பதை உணர்ந்தவன் திரும்பி பார்க்க அங்கு நின்றிருந்தான் ஆதி, கண்களில் கேள்வியோடும், கரிசனத்தோடும்... அவனை பார்த்தது தான் தாமதம் நொடி வீணாக்கவில்லை, எழுந்து அவனை கட்டி அணைத்து மீண்டும் அழுகையில் கரைந்தான்...

அவனுடைய நிலையை பார்த்த ஆதிக்கோ அவனின் அந்த நிலைக்கான காரணமும் புரியாமல் அவனை எவ்வாறு சமாதானம் செய்வதென்றும் புரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்... 

"நான் என் அம்மாகிட்டயே போறேன்... என்னால முடியல டா ஆதி" உடைந்து வந்த உதய்யின் குரல் ஆதியின் உயிரை மொத்தமாய் உலுக்கியது...




Comments solitu ponga paa...

How is it...???!!!

Bye take care until the next chapter..

Continue Reading

You'll Also Like

368K 12.2K 54
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அ...
15.5K 1.4K 39
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
471K 12.6K 67
"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று...
29K 3.3K 33
Sudum Nilavu Sudatha Suriyan - Part 2