💞8💞

115 11 4
                                    

மித்ரவிந்தாவின் தேர்வுகள் ஆரம்பித்துவிட்டன. காதலனைப் பிரிந்த துயரில் வாடினாலும் படிப்பில் மட்டும் அவள் குறை வைக்கவில்லை. சம்யுக்தாவிற்கு அவளின் இந்நிலை புரியாத புதிராக இருந்தாலும் அவளது படிப்பு முக்கியம் என்று சொல்லி அவளைத் தேர்வுக்குப் படிக்க செய்தாள்.

ஆஸ்திரேலியா சென்ற முகுந்தோ மித்ரவிந்தாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும் வருமென காத்திருந்தவன் அது வராமல் போகவும் ஏமாற்றத்தில் ஆழ்ந்து போனான்.

அந்த ஏமாற்றம் பயிற்சியாட்டத்தில் அவனது செயல்பாடுகளை மிகவும் பாதித்து விட்டது எனலாம். சரத் சர்மா கூட "முன்னா வாட் ஹாப்பண்ட்? ஏன் இவ்வளவு ரெஸ்ட்லெஸ்சா பவுலிங் பண்ணுற? சம்திங்க் இஸ் ராங்க் வித் யூ" என்று விசாரித்தான்.

அவனிடம் மனம் சரியில்லை என்றவன் அதன் பின்னர் ஆட்டத்தில் கவனம் செலுத்தினான். இருந்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் மித்ரவிந்தாவின் மலர்ந்த வதனம் தோன்றி மறைந்து கொண்டே இருந்தது.

மறுநாள் போட்டித்தொடர் ஆரம்பிக்கவிருக்கும் சமயம். அவனுக்கு உறக்கம் கொள்ளவில்லை. கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மேலாக அவளது முகத்தைப் பார்க்காமல் வெறும் புகைப்படத்தை வைத்தே சமாளித்தவனுக்கு இதற்கு மேல் பொறுமை இல்லாது போகவே அன்று மாலையில் அழைத்து விட்டான்.

ஆனால் அப்போது தான் இறுதி தேர்வுக்காக மித்ரவிந்தா தேர்வறைக்குள் நுழைந்திருந்தாள். போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு அவளது கைப்பையில் உறங்கியது. 

முகுந்த் இந்தியா மீது படையெடுத்த கஜினி முகமது போல மனம் தளராது அழைத்துக்கொண்டே இருந்தான். ஆனால் எடுக்கத் தான் ஆளில்லை.

ஒரு கட்டத்தில் அவனது இயல்பான குணமான கோவம் எவ்வளவு கட்டுப்படுத்தியும் வெளிப்பட்டுவிட்டது. அரைமணி நேரம் கிட்டத்தட்ட நூற்றிற்கும் மேற்பட்ட முறை அவளது போனுக்கு பைத்தியக்காரனைப் போல அழைத்து ஓய்ந்தான்.

பரீட்சை இரண்டரை மணிநேரம் என்பதால் மித்ரவிந்தா திரும்பி வரும் போது இந்திய நேரத்துக்கு மதியம் ஆகிவிட்டது. வந்தவள் கைப்பையில் உறங்கியிருந்த போனை ஆன் செய்து பார்த்ததும் ஷாக் ஆனாள்.

என் தோளில் சாய்ந்திட வாWhere stories live. Discover now