💞16💞

53 4 0
                                    


மித்ரவிந்தாவை முகுந்த் கடத்திக்கொண்டு வந்து காவல் வைத்திருக்கும் இடம் லோனாவாலா. மலைகளும் கானகங்களும் சூழ்ந்த இப்பகுதி சுற்றுலாவுக்குப் பெயர் போனது.

அங்கே ரவீந்திரனும் சுகேந்திரனும் ஓய்வுக்கு வரும் போது தங்குவதற்காக வாங்கிப் போட்ட வில்லாவில் தான் முகுந்தும் மித்ரவிந்தாவும் தங்கியிருந்தனர்.

சகல வசதிகளும் கொண்ட முழுக்க முழுக்க மரத்தினாலான வில்லா அது. வில்லா நடு கானகத்தில் அமைந்திருந்தது. அதிலிருந்து சாலைக்குச் செல்லும் மார்க்கம் முகுந்துக்கு மட்டுமே தெரியும்.

மித்ரவிந்தாவை அங்கே அழைத்து வரவேண்டுமென்ற எண்ணம் உதயமான பிறகு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தவன் இஷிதாவிடம் அதை தெரிவித்து தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டான். அவளிடம் தனது காதல் கதையைக் கூறி சம்மதிக்க வைத்திருந்தான்.

பின்னர் நடந்தேறிய அனைத்தையும் நாம் அறிவோம். இப்பொழுது மித்ரவிந்தா என்ன செய்கிறாள் என்று பார்ப்போமா?

சிட்டவுட்டில் கிடந்த மரச்சாய்வுநாற்காலியில் அமர்ந்து அந்த வில்லாவிலிருந்து சாலைக்கு ஏதாவது வழி செல்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் இப்போது இருப்பது அந்த வில்லாவின் மேல்தளத்தில். காற்று சற்று வேகமாக வீசியது. கண்கள் மொத்த கானகத்தையும் அலசி ஆராய்ந்தன. ஆனால் வழி தான் பிடிபடவில்லை.

சோர்ந்து போய் மாடியிலிருந்து கீழ்த்தளத்துக்கு வந்தவள் முகுந்த் இல்லை எனவும் அவனைத் தேடினாள்.

மெதுவாக கிச்சன் பக்கம் சென்றவள் அவன் எதையோ சமைத்துக் கொண்டிருப்பதை பார்த்தாள்.

முகுந்தின் பார்வை கிச்சனின் வாயிலில் நிற்கும் மித்ரவிந்தாவின் பக்கம் திரும்பியது.

"ப்ரஷ் பண்ணி ஃப்ரெஷாயிட்ட போல. காபி போடவா? உனக்கு ஸ்க்ராம்பில்டு எக் பிடிக்குமா ஹனி?"

அவள் பதில் சொல்லவில்லை.

"உனக்குப் பிடிக்கலைனா சொல்லு. வேற ப்ரேக்பாஸ்ட் செய்யுறேன்"

என் தோளில் சாய்ந்திட வாWhere stories live. Discover now