~9~

133 10 1
                                    

அன்றைக்கு விக்ரமும், வருணும் பணிமுடிந்து வீடு திரும்ப அகிலன் நைட் ஷிப்ட்டுக்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.

வருண் சட்டையின் மேல் பொத்தானை கலட்டிவிட்டு சோபாவில் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்தான். விக்ரம் ப்ரிட்ஜ்ஜை திறந்து தண்ணீர் எடுத்துக் குடித்தபடியே அகிலனின் அறையே ஏறிட்டான்.

திறந்த கதவு வழியாக அகிலனும் பார்த்துவிட
"என் கொடுமைய பார்த்திங்களாடா?" என்று புலம்பினாலும் ஆடையலங்காரம் சிகையலங்காரத்தில் குறை வந்திடாமல் அலங்கரிப்பதில் மும்முரமாக இருந்தான்.

மற்ற இருவரும் அகிலனை கொஞ்சமாக சீண்டிப்பார்க்க நினைத்தனர்.

"நைட் ஷிப்ட்னா பெரிசா யங் லேடிஸ் இருக்க மாட்டாங்கலேடா. யாருக்காக இவ்வளவு மேக்கப்?" கேட்டுக்கொண்டே வருண் அறையினுள் வர அவனை தொடர்ந்து விக்ரமும் சென்றான்.

"ஒருவேளை இந்துஜா மேடமை ட்ரை பண்றானோ என்னவோ. பிகஸ் அவங்க இன்னும் சிங்கிள் வுமன் தானே" இது விக்ரம்.

இந்துஜா அவர்களது சேனலில் செய்திப்பிரிவின் உதவி செயலாளர் மற்றும் பிரதான செய்தியாசிரியை. மிகவும் கண்டிப்பானவர். வயது அறுபதை எட்டியிருந்தாலும் இன்னும் மணமுடிக்கவில்லை. செல்வி இந்துஜாவாகவே சாதித்துக் கொண்டிருந்தார்.

"அவங்க வெறும் சிங்கிள் இல்லடா. மொரட்டு சிங்கிள்" என்ற அகிலனின் பதிலுக்கு வருண்

"அதனால்தான் ஹேவி மேக்கப் போடுற போல?"

"டேய் என்னங்கடா இன்னைக்கு ரெண்டு பேரும் சேர்ந்து என்னை செய்றீங்க. உங்க வாய்க்காகவே அடுத்த வேலன்டைன்குள்ள ஒரு பொண்ணை லவ் பண்ணி காட்டுறன் பாருங்க" என்று சவால் விடுத்தான் அகிலன்

உடனே விக்ரம்
"நீ பண்ணுவ ஓகே. நீதான் டெய்லி ஒருத்திய பண்றியே. விஷயம் அதில்ல. பதிலுக்கு அவங்களும் லவ் பண்ணனும்ல"

"சரியா சொன்ன மச்சி!" வருண் விக்ரமுக்கு ஹைபை கொடுத்தான். அதில் கடுப்பான அகிலன்

என் பாதையில் உன் கால் தடம் Where stories live. Discover now