💕 ஓவியம் 49

7.1K 212 41
                                    

நிச்சயம் முடிந்து அரண்மனை தோட்டத்தில் கேசவும், மதுவும் அமர்ந்து இருந்தனர். மதுமதி அழுது அழுது கண்களை செந்நிறத்தில் மாற்றி இருந்தாள்.

கேசவ் அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டு, "எதுக்குடா குட்டிமா உன்னை இவ்வளவு கஷ்டப்படுத்திக்குற? என்ன விஷயம்னு சொன்னா தானே தெரியும்? ப்ளீஸ் நீ அழாதம்மா, எனக்கு கஷ்டமா இருக்குடா!" என்றான் பரிவுடன்.

"மச்சி நம்ம மேரேஜ் ஆனதுக்கு அப்புறம் நம்ம ரெண்டு பேரும் எப்பவுமே இந்த ஊர்ல தான் இருப்போமா?" என்று கேட்டவளிடம் மறுப்பாக தலையசைத்து விட்டு,

"நம்ம பையா வீட்ல மதுரைல தான் இருப்போம்டா! இதுக்கு தான் இவ்வளவு நேரம் அழுதியா?" என்றான் சிறு சிரிப்புடன்.

"ம்! எனக்கு எங்கப்பா, அம்மா, மகேஷ், அண்ணி, ராகுல் இவங்களை எல்லாம் விட்டுட்டு இருக்கணும்னு நினைச்சாலே ரொம்ப அழுகையா வருது. ப்ளீஸ் கேசவ் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நான் எங்க வீட்லயே இருந்துக்கட்டுமா?" என்று கெஞ்சலுடன் கேட்டவளிடம்

"எனக்கு ஒரு சூப்பர் ஐடியா தோணுது மது, நீ உன் வீட்லயே இரு, நான் பையா வீட்லயே இருந்துக்கறேன். இவ்வளவு கிராண்டா பையா ஷாதி அரேன்ஜ்மெண்ட்ஸ் பண்ணி இருக்காங்க பாரு, அதுவும் தேவையில்லைன்னு சொல்லிடலாம், நீ நீயாவே இரு! நான் நானாவே இருக்கேன். ரெண்டு பேமிலியும் ஷாதிங்குற பேருல வேஸ்ட் பண்ற மணியாவது சேவ் ஆகும்!" என்றான் ஒரு மாதிரியான குரலில்.

மதுமதி கேசவிடம், "கேசவ் கோபமா இருக்கியா?" என்றாள் சற்று பயத்துடன்.

ஆனால் அவன் அமைதியாக புன்னகைத்து, "இல்லம்மா! உன்னை கொஞ்சம் ஸ்பெஷலா கேர் எடுத்து தான் பார்த்துக்கணும். ஏன்னா நீ தான் ஒரு கழண்ட கேஸ்னு எனக்கு தெரியுமே?" என்று கூறியவனுக்கு சரமாரியாக குத்துக்கள் விழுந்தது. அதை அநாயாசமாக சமாளித்தவன்,

"இவ்வளவு நாள் மைல்டா லவ் பண்ணிட்டு இருந்தோம். இனிமே கொஞ்சம் நெக்ஸ்ட் ஸ்டேஜ்க்கும் போகலாமா ஹனி?" என்று இழுத்தவனிடம்

எந்தன் உயிர் ஓவியம் நீ✔Where stories live. Discover now