💙 ஓவியம் 16

6.7K 224 3
                                    

நித்திலாவின் கண்களில் கண்ணீரை பார்த்த தீபனுக்கு தாங்க முடியவில்லை.

"ஷ்! நிது என்னடா இது? எவ்ளோ ஹேப்பியான மொமண்ட்! இப்போ போய் கண்கலங்கலாமா? நீ ஒரு அழுமூஞ்சின்னு எங்கிட்ட சொல்லியிருக்க! ஆனா இப்டியா
ஹாப்பி மொமெண்ட்ஸ்லயும்
கண்ணீர் விடுறது? வேண்டாம் கண்ணம்மா!" என்று அவளை தேற்றி அவன் கைக்குட்டையை அவளிடம் நீட்டினான் தீபன். அவள் சிறிது நேரத்தில் சமாதானம் ஆகி "தீபு எனக்கு மதர் கிட்ட பேசணும்!" என்றாள்.

"பேசு நிது; இப்போ ஃப்ரீயா இருப்பாங்களா?" என்றவனிடம் தலையசைத்து விட்டு அவள் மதரை அழைக்கப் போனாள்.

"நி...நிது......நான் கொஞ்ச நேரம் கீழே இறங்கி வெயிட் பண்ணட்டுமா?" என்று அவளிடம் அவளுக்குத் தனிமை தரும் நோக்கத்தில் கேட்டான் தீபன்.

"உங்களுக்கு தெரியாத ரகசியம் ஒண்ணும் நான் மதர் கிட்ட பேசப் போறதில்லை தீபு. நீங்களும் என் பக்கத்தில தான் இருக்கணும். சரியா?" என்று அவனிடம் சொல்லி விட்டு மதரை மொபைலில் அழைத்து லவுட்ஸ்பீக்கரில் போட்டாள் நித்திலா.

"ஹலோ.... காட் ப்ளஸ் யூ மை சைல்ட்! என்னடா காலையில பிஸியா? இப்போ கூப்பிட்டு இருக்க? சாப்பிட்டியாடா?" என்று கேட்டவரிடம்

"மதர் குட் ஆப்டர்நூன் மதர். காலையில கொஞ்சம் வெளியே போகிற வேலை இருந்தது. இனிமேல் தான் மதர் லன்ச்" என்றவள் அதற்கு மேல் பேச தயங்கவும் மதர் சிரித்துக் கொண்டார்.

"தீபன் நல்லாயிருக்காரா நித்தி? அவருடைய மும்பை ஆஃபிஸ் மேனேஜர், ஆடிட்டர், லாயர் மூணு பேரும் இரண்டு நாளைக்கு முன்னால நம்ம ஹோமுக்கு வந்திருந்தாங்க. தீபனோட சொத்து விவரங்க, அவர் கம்பெனி ஷேர் வேல்யூஸ், அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட், அவருடைய ப்ளட் ரிப்போர்ட் முதற்கொண்டு எல்லா டீடையில்டு ரிப்போர்ட்ஸும் கொண்டு வந்திருந்தாங்க. தீபனை உனக்கு பிடிச்சிருக்குன்னு உன்னோட தயக்கத்திலேயே எனக்கு தெரிஞ்சுடுச்சு. எல்லா விஷயத்தையும் ரொம்ப அழகா கன்வின்ஸ் பண்ணிடுறாரு நித்தி! உங்க கல்யாணத்துக்கு என்னோட பரிபூரண சம்மதமும், ஆசிர்வாதங்களும் கிடைக்கும். இதை ரெண்டு நாள் முன்னாடியே நான் உன் கிட்ட சொல்லி இருப்பேன். ஆனால் சீக்கிரமே நீ என்கிட்ட தயங்கி நிக்குற சந்தர்ப்பம் வரும்னு எனக்கு தெரியும். அப்ப உன்னை கில்டியா ஃபீல் பண்ண வைக்க வேண்டாம்னு தான் வெயிட் பண்ணினேன் நித்தி!" என்றார் மதர் சிரிப்புடன்.

எந்தன் உயிர் ஓவியம் நீ✔Where stories live. Discover now