💙 ஓவியம் 10

7K 254 6
                                    

"லஷ்மிமா; ரொம்ப பசிக்குது. டிஷ் ரெடி பண்ணி டைனிங் ஹால்ல அரேன்ஜ் பண்ணுங்க. 5 மினிட்ஸ்ல ப்ரெஷ் ஆகிட்டு வந்துடுறோம்!" என்று அவர்களிடம் சொல்லிய தீபன் நித்திலாவை கூட்டிக் கொண்டு தன் அறைக்குள் வந்தான்.

கதவின் அருகிலேயே நின்று "வெல்கம் ஹோம். வெல்கம் டு அவர் பெட்ரூம் மை ஹைனஸ்!" என்று இடை வரை குனிந்து வலது கையை மடித்து வணக்கம் செலுத்தினான்.

"என்ன எனக்கு ஆளாளுக்கு ஒரு பில்ட் அப் கொடுக்கிறீங்க? நான் ஜஸ்ட் நித்தி, அப்டி கூப்டுங்க போதும்.....!" என்று புன்னகையுடன் சொன்னவளிடம் முடியாதென தலையசைத்து,

"அது எப்டி போதும்? ட்ரையின்ல வர்றப்ப என்னை இரிடேட் பண்ணியே; அப்போ நான் உங்கிட்ட என்ன சொன்னேன்?" என்று கேட்ட தீபன் அவளருகில் அமர்ந்து கொண்டான். அவன் பார்வை வெட்கத்தை வரவழைக்க, "என்னமோ பண்ணுவேன்னு சொன்னீங்க தீபு...!" என்றவளுக்கு அவன் அருகில் அமர்ந்து கொண்டு இருப்பது தயக்கமாக இருந்தது.

வெளியே செல்ல முயற்சி செய்தவளை தடுத்தவன், "நான்  பண்ண நினைச்சதை இன்னும் செஞ்சு முடிக்கல; அதனால நிது பேபி அப்புறமா கீழே போகலாம்!" என்று சொல்லி விட்டு அவளை  தன் உடம்போடு இழுத்து அணைத்தான்.

"என்ன பண்றீங்க தீபு.....? உங்களை ரொம்ப நல்லவர்னு நினைச்சேன்!" என்று சலித்துக் கொண்ட நித்திலாவிடம்,

"லாலிபாப்...... நான் உன்னைத் தவிர எல்லா பொண்ணுங்க கிட்டயும் ரொம்ப நல்லவன் தான். ஆனா உன் கிட்ட என்னால நல்லவனா இருக்க முடியாது. காட் இட்!" என்று சொல்லி விட்டு அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். அவளின் அஞ்சிய பார்வையில் கவரப்பட்டு அவளின் கன்னங்களின் வழுவழுப்பை பெரு விரல்களால் வருடி ரசித்தவன், அவள் கன்னங்களில் அழுத்தமான முத்தத்தை வைத்தான். தீபன் தன் வாழ்வில் நித்திலாவை அணைக்கும் வரை பெண்மையை உணர்ந்தது இல்லை. தேவை ஏற்பட்டால் மட்டுமே பெண்களுடன் பேசக் கூட செய்வான். அதனால் பெண்களின் நிழல் கூட தன்னை தீண்டாத ஒரு கற்புள்ள ஆண்மகன் தன்னுடைய மனம் கவர்ந்த பெண்ணிடம் இப்போது மயங்கி நின்றான்.

எந்தன் உயிர் ஓவியம் நீ✔Where stories live. Discover now