💝 ஓவியம் 29

6.5K 215 18
                                    

இன்று மாலை தீபனுக்கும், நித்திலாவிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. ராகேஷ் குப்தா நேற்று காலையில் மதுரைக்கு வந்து சேர்த்திருந்தார். தீபன் அவரை வரவேற்று, நித்திலாவை அவருக்கு அறிமுகப்படுத்தினான். கிட்டத்தட்ட தீபனின் அன்னை அம்ருதா தேவியின் சாயலில் கட்டுமஸ்தான தேகத்துடன், தீட்சண்யமான பார்வையுடன் இருந்தார். ஊஞ்சலை பார்த்ததும் கண் கலங்கி விட்டார். அவர் தங்கை அவரிடம் ஆசையாக கேட்டு வாங்கிக் கொண்ட பொருள் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறதே என்று நினைத்து மனமகிழ்ந்தார்.

நித்திலா அவரருகே சென்று அவர் கால்களில் பணிந்தாள். முதல் பார்வையிலேயே நித்திலாவை அவருக்கு மிகவும் பிடித்தது. அவளை ஆசிர்வதித்தவர், தன் பரிசாக உடைகள், நகைகள், இனிப்பு வகைகளுடன் ஒரு ஸ்டெதஸ்கோப்பை பரிசளித்தார். நித்திலாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. தீபன் தூரத்தில் நின்று அவள் மகிழ்ச்சியை ரசித்தான்.

"உனக்கு ரொம்ப தேவைப்படுற பொருள் ஒண்ணு வாங்கி கொடுக்கணும்னு தோணுச்சு நித்திலா பேட்டி! அதனால தான் இதை வாங்கிட்டு வந்தேன்" என்றார் புன்னகையுடன்.

"தேங்க்யூ பார் தி கிப்ட்ஸ் பிதாஜி!" என்று அவரை வணங்கினாள் நித்திலா.

கேசவ் தன் அண்ணனின் முதுகை சுரண்டினான். "என்னடா முகம் டல்லா இருக்கு? இன்னும் மது வரலையே? அதனால் தானே!" என்று சிரித்தவனிடம்

"பையா, ஹவேலில எவ்வளவு க்ராண்டா நடந்திருக்க வேண்டிய உங்க ஷாதி........." என்று புலம்பிக் கொண்டு இருந்தவனை வாயை பொத்தி வைத்து பெட்ரூமிற்குள் அழைத்து சென்றான் தீபன்.

"சுனோ கேசவ்! எத்தனை தடவை திரும்ப திரும்ப என்னை பேச வைக்கிற? ஷாதி எங்க நடக்குதுங்கிறது முக்கியம் இல்லடா. பட் இரண்டு பேரோட சம்மதத்துடன், மனநிறைவோட, காதலோட நடக்கணும். உங்க பாபியை ஃபேஸ் பண்ண முடியாம தான் காலையில இருந்து அவ பக்கத்தில போக முடியாம தவிச்சுட்டு இருக்கேன். ஜ்வல்லரி ஷாப்ல என்னை பார்த்து ஒரு லுக் கொடுத்தா; ஒரு நிமிஷம் துடிச்சிப் போயிட்டேன்டா! அவ கண்ணுல என்னை பார்த்தவுடனே காதலும், பாசமும் தான் தெரியணுமே தவிர வலியும், வேதனையும் தெரியக்கூடாது. அவ கிட்ட என்னோட அன்பை உணர்த்தும் வரைக்கும், அவ என்னை முழுமையா நம்புற வரைக்கும் நான் யாருங்கிற அடையாளம் அவளுக்கு தெரிய வேண்டாம். போகலாம் வா" என்றவனிடம்

எந்தன் உயிர் ஓவியம் நீ✔Where stories live. Discover now