💙 ஓவியம் 43

6.2K 210 25
                                    

நால்வரும் மதுவின் வீட்டில் இருந்து கிளம்புவதற்கு இரவு எட்டு மணி ஆகி விட்டது. நித்திலா வராண்டாவில் அமர்ந்து வாசலையே பார்த்து கொண்டு இருந்தாள். தீபன் அவளிடம் மதுவை பெண் கேட்பதற்கு மதுவின் வீட்டுக்கு சென்று கொண்டு இருக்கிறோம் என்று அவளிடம் ஏற்கனவே சொல்லி விட்டான். அதனால் என்ன பதில் சொன்னார்களோ என்ற பதட்டமும் இணைந்து கொண்டது.

இவ்வாறாக இருக்கையில் பைக்கும், காரும் வீட்டிற்குள் நுழைந்தது. அனைவரின் மகிழ்ச்சியான முகங்களை கண்டதும் நித்திலா கேசவிடம் சென்றாள். "கங்கிராட்ஸ் கேசவ், விஷயம் ஸ்மூத்தாகிடுச்சுல்ல? ஹேப்பியா?" என்றாள் குறுஞ்சிரிப்புடன்.

"இன்னும் ஒன்றரை மாசத்துல கல்யாணம்னு பிக்ஸ் பண்ணியிருக்காங்க. உங்களுக்கு ஓகேவா பாபி? தேங்க்யூ சோ மச் பாபி!" என்றான் கேசவ் புன்னகையுடன்.

"சூப்பர்! ஆனா எனக்கு எதுக்கு தேங்க்ஸ் சொல்றீங்க? உங்க பையாவுக்கு சொல்லுங்க! ஒரு வழியா மேரேஜ்க்கு பெர்மிஷன் வாங்கிட்டீங்க. எனக்கு ஒரு ட்ரீட் வேணும். தருவீங்களா?" என்றவளிடம்

"இது மது உங்களுக்கு கிப்டா குடுத்தா பாபி, உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க; கண்டிப்பா அதை வாங்கி தர்றேன்!" என்றான் கேசவ்.

"இந்த கிப்ட் ரொம்ப அழகா இருக்கு. அவளுக்கு தேங்க்ஸ் சொல்லிடுங்க. மதுவோட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க கேசவ். அவ உங்க கூட இருக்கணும்னு ஆசைப்படுவா இல்லையா? ஸோ நீங்க உங்களோட வொர்க் டைமிங்கை கொஞ்சம் கம்மி பண்ணிட்டு அவ கூட கொஞ்சம் ஜாலியா ரவுண்ட்ஸ் அடிங்க. இது தான் எனக்கு நீங்க குடுக்குற ட்ரீட். மதுமதியும், நீங்களும் ஹாப்பியா இருந்தா எனக்கு சந்தோஷமா இருக்கும்!" என்றவளிடம்

"ஷ்யுர் பாபி, மதுவை நான் பத்திரமா பார்த்துப்பேன். அவளை சந்தோஷமா வச்சுக்கிறேன்!" என்றான் கேசவ்.

ராகேஷ் குப்தா மற்றும் ராமநாதனிடம் சற்று நேரம் பேசி விட்டு நித்திலா தன் அறைக்குள் வந்தாள். தீபன் தன் தலைக்கு தன் கையை முட்டுக் கொடுத்து ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

எந்தன் உயிர் ஓவியம் நீ✔Where stories live. Discover now