💙 ஓவியம் 42

6K 216 42
                                    

தீபனும், கேசவும் மதுமதியின் வீட்டை அடைந்த பத்து நிமிடங்களில் ராகேஷ் குப்தாவும், ராமநாதனும் வீட்டிற்கு வந்தார்கள். கேசவ் தன் அண்ணனிடம்,

"பையா மாமாஜியை எதுக்கு வரச் சொன்னீங்க? நாமளே பேசியிருக்கலாம்ல?" என்றவனை கோபத்துடன் முறைத்தான் தீபன்.

"வாயை மூடிட்டு சும்மா இருந்தன்னா, எல்லாம் கரெக்ட்டா நடக்கும். எப்படி வசதி?" என்று கேட்ட தன் அண்ணனின் வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாமல் அமைதியாக ஓர் ஓரமாக சென்று அமர்ந்தான் கேசவ்.

மதுவின் அண்ணன் மகேஷ் அனைவரையும் வரவேற்றான். மதுவின் அப்பா சேகர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. அம்மா கல்யாணி இல்லத்தரசி, மகேஷ், அவன் மனைவி காவ்யா இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். அவர்களின் குழந்தை ராகுல்.

தீபன் தன் மாமாவிடம் பேசுமாறு கண்ணசைக்கவும் ராகேஷ் குப்தா சேகர், மகேஷ் முன்பு அமர்ந்தார். ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்.

"தீபனும், கேசவும் என் தங்கையோட பிள்ளைங்க ஸார். அவனோட லைஃப்ல அவனை புரிஞ்சிக்கிட்ட மதுமதி அவனுக்கு மனைவியா வந்தா எங்க எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கும். பணம் நிறைய இருந்தாலும், எங்களுக்கு இருக்குற சொந்தங்களை விரல் விட்டு எண்ணிடலாம். உங்க பொண்ண கேசவ்க்கு கல்யாணம் பண்ணித் தர்றது முழுக்க முழுக்க
உங்களோட முடிவு தான். யோசிச்சு சொல்லுங்க!" என்றார் கைகூப்பி.

யோசனையுடன் அமர்ந்து இருந்த சேகரிடம், "ஸார் ஒண்ணும் யோசிக்க வேண்டாம்! உங்க பொண்ணு உங்க வீட்ல எவ்வளவு சந்தோஷமா, சுதந்திரமா இருந்தாளோ அதே மாதிரி தான் அங்கயும் இருப்பா. நான் அங்க என் பொண்ணை கட்டிக் கொடுத்த அப்பாங்குறதுனால சொல்றேன். உங்க பொண்ணு ரொம்ப குடுத்து வச்ச பொண்ணு; சீக்கிரம் முஹுர்த்தம் பாருங்க!" என்றார் ராமநாதன்.

தீபன் மகேஷின் கையில் ஒரு கவரை கொடுத்தான். "மிஸ்டர் மகேஷ்.... இதுல கேசவோட பாஸ்போர்ட், ட்ரைவிங்க் லைசென்ஸ், 6 மாச பாங்க் ஸ்டேட்மெண்ட் எல்லாம் இருக்கு. ஒருவேள நீங்க தேர்டு பார்ட்டி ஏஜெண்ட்ஸ் மூலமா அவன பத்தி காரெக்டர் வெரிஃபிகேஷன் ஏதாவது வாங்கணும்னா, அப்போ
நீங்க விசாரிக்க இது தேவைப்படும். 2 நாள்ல உங்க கிட்ட இருந்து நல்ல பதிலா எதிர்பார்க்கிறோம்!" என்றான்.

எந்தன் உயிர் ஓவியம் நீ✔Where stories live. Discover now