💙 ஓவியம் 27

6.4K 225 16
                                    

ராகேஷ் குப்தா மதியம் ஒரு முறை தீபனை அழைத்தார். "சக்ரா, இன்னிக்குல இருந்து பத்தாவது நாள் ஒரு முஹுர்த்தம் இருக்கு. இல்லைன்னா ஒரு மாசம் கழிச்சு ஒரு முஹுர்த்தம் இருக்குன்னு பண்டிதர் சொன்னார். முதல் முஹுர்த்தம் உனக்கு ஓகேவா? ஷாதி அரேன்ஜ்மெண்ட்ஸ் பண்ணிடுவியா? டிரஸ், ஜ்வல்ஸ் எல்லாம் நித்திலாவிற்கு நம்ம சீதனமாக தரணும். தெரியும்ல? நான் ஷாதிக்கு இரண்டு நாள் முன்னாடி வந்துடுறேன். தனியா எல்லா வேலைகளையும் பார்க்க ரஜத்க்கு கஷ்டமா இருக்கும். நீ நித்திலாவை கூட்டிட்டு இங்கே டென் டேஸ் வரணும். நீ ஏற்கெனவே எனக்கு ப்ராமிஸ் பண்ணியிருக்க. நியாபகம் இருக்குல்ல?" என்றார் ராகேஷ் குப்தா.

"ஷ்யுர் மாமாஜி, ஒரு டென் டேஸ் ப்ளான் பண்ணிட்டு ஜோத்பூர், புஷ்கர், பைக்கானீர், உதய்ப்பூர் எல்லா ப்ளேஸஸும் நித்திக்கு காட்டணும். அவ ரொம்ப என்ஜாய் பண்ணுவா. கம் அஸ் சூன் அஸ் பாஸிபிள் மாமாஜி, ஐ'ம் ஈகர்லி வெயிட்டிங் ஃபார் யூ!" என்றான் தீபன்.

"ஈகர்லி வெயிட்டிங் ஃபார் ஷாதின்னு சொல்லு சக்ரா!" என்று தன் மருமகனிடம் சொன்னவர் சிரிப்புடன் போனை வைத்தார்.

தீபன் குளித்து உடை மாற்றிக் கிளம்பி கீழே வந்த போது நித்திலாவும் கீழே வந்திருந்தாள். தலைக்கு குளித்து, அடர்ந்த நீல நிறப் புடவையில், அதே நிறத்தில் குந்தன் செட் நகைகளை போட்டு சின்ன நீல நிற பொட்டு வைத்து கூந்தலில் மல்லிகை சூடி தேவதை போல் நின்றாள். தீபன் அவளருகில் சென்று அவளை அணைத்துக் கொண்டான்.

"என்ன தீபு!" என்றவளிடம் "யு ஆர் அ ஸ்டன்னிங் ப்யூட்டி நிது டார்லிங்" என்றான் முணுமுணுப்பாக.

"நம்ம இப்போ பெட்ரூம்ல இல்லை தீபு! ஹாலில் நின்னுட்டு இருக்கோம். கல்யாணத்துக்கு அப்புறம் கீழே வந்துட்டா ஒழுங்கா பிஹேவ் பண்ணனும். இப்போ இருந்து ப்ராக்டிஸ் பண்ணுங்க. முதல்ல என்னை விடுங்க!" என்றாள் நித்திலா அவசரத்துடன்.

"இன்னும் 8 டேஸ் டைம் தான் டாக்டர் மேடம். உங்க சிங்கிள் லைஃப நல்லா என்ஜாய் பண்ணிக்கோங்க. அதுக்கு அடுத்த நாள் என்கேஜ்மெண்ட். அப்புறம் மேரேஜ். குட் நியூஸ் சொல்லப் போறோம். ஹக் பண்ணிட்டு சொல்லலாம்னு நினைச்சா ரொம்ப பண்றீங்க?" என்று கேட்ட படி அவளிடம் இருந்து விலகியவனை நித்திலா அணைத்துக் கொண்டாள்.

எந்தன் உயிர் ஓவியம் நீ✔Where stories live. Discover now