💙 ஓவியம் 23

5.9K 213 10
                                    

இரண்டு வாரங்கள் எந்த மாற்றமும் இல்லாமல் அதன் போக்கில் கடந்தது. தீபன் நித்தி விஷயத்தில் அடுத்த கட்டமாக எப்படி முன்னேறுவது என்று யோசித்துக் கொண்டு இருந்தான். ஊருக்குப் போக இன்னும் ஒரு வாரம் இருந்தது.

"ஹாய் பையா, என்ன யோசனை? பாபி நியாபகமா?" என்று கேட்ட படி உள்ளே வந்தான் கேசவ்.

"டேய் கேசவ்! எப்படா ஊருக்கு போறோம்? இந்த வீக் என்ன ப்ளான்? அந்த பேபி ஃபுட்ஸ்க்கு கான்செப்ட் இன்னும் ரெடி பண்ணலை. க்ளையண்ட்ஸ் கிட்ட பேசி அவங்க ரெக்வொயர்மெண்ட்ஸ் என்னன்னு கேட்டுக்கோ. இந்த வாரம் லீலா பேலஸ்ல ஷீட் முடிச்சிடலாம். ஹால் புக் பண்ணிக்க. வெள்ளிக் கிழமை நைட் ஊருக்கு போய்டலாமாடா?" என்று சந்தேகமாக கேட்டவனிடம்

"கான்செப்ட்டை ரெடி பண்ணுங்க, அதுக்கு அப்புறம் எனக்கு 3 நாள் டைம் வேணும். ஸோ நாம கிளம்புறது எப்போன்னு நீங்க தான் சொல்லணும்!" என்றான் கேசவ்.

"ஏற்கனவே ப்ளான் போட்டு டிக்கெட்ஸ் எல்லாம் நீ ப்ளாக் பண்ணியிருப்பியேடா? எல்லா அப்டேட்டும் உன் பாபி கிட்ட தான் நான் கேட்டுக்கணுமா?" என்றவனை பார்த்து சிரித்தான் கேசவ்.

"பாபி கேட்டாங்க; சொன்னேன். அவ்வளவு அக்கறை இருந்தா நீங்களும் கேட்டிருக்க வேண்டியது தானே?" என்றவனிடம்

"கேசவ் வெறுப்பேத்தாத! சீக்கிரம் சொல்லு; எப்ப ஊருக்கு போறோம்?" என்ற தன் அண்ணனின் கோபக்குரலில் சற்றும் சளைக்காமல்,

"நீங்க கான்செப்ட்டை ரெடி பண்ணி நான் க்ரௌண்ட் வொர்க்ஸ் கம்ப்ளீட் பண்ணி, ஷீட் ஒழுங்கா முடிஞ்சு, ப்ரொட்யூஸர் ஓகே பண்ணின பிறகு ஊருக்கு கிளம்புறோம் பையா!" என்று கண்களில் குறும்புடன் கூறினான்.

"இரண்டு பேரும் கொஞ்சம் ஓவரா தான் பண்றீங்க! நல்லா வருவீங்கடா!" என்றான் தீபன் சிரிப்புடன்.

"ஆமா! லைஃப் லாங் உங்க கூடவே தான் பாபியும், நானும் வருவோம்!" என்றான் கேசவ் ஆழ்ந்த குரலில்.

"உங்க பாபி உனக்கு ஒரு கிஃப்ட் கொடுத்தாளே? அதை ஓப்பன் பண்ணிட்டியா, இல்லையா?" என்றான் தீபன்.

எந்தன் உயிர் ஓவியம் நீ✔Where stories live. Discover now